கம்யூனிஸ்ட்டுகள் பின்வாங்குவதில்லை-ஜூலியஸ் பூசிக்

செக்கோஸ்லேவேகியாவில் உதித்த ஜூலியஸ் பூசிக் தமது 12ஆம் வயதிலேயே இலக்கியங்களைப் படைத்தவர்.

செக்கோஸ்லேவேகியா கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் சங்கத்தில் பணியாற்றியவர். பத்திரிகையாளர் போராளி என திகழ்ந்த பன்முகத் தன்மை வாய்ந்தவர்.

1929 ஆம் ஆண்டு நடைபெற்ற சுரங்கத் தொழிலாளர்களின் வீரஞ்செறிந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுச் சமர் செய்தவர்

ணஇரண்டாம் உலகப் போரில் நாஜிகளின் எதிர்ப்பு முன்னணியில் முனை முகத்து நின்றவர். அவரது வீரமிக்க செயல்பாடுகளால் கொதித்த நாஜிகள் 1942 ஏப்ரல் 24இல் கைதுசெய்யப்பட்ட அவர். தோழர்களைக் காட்டிக்கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு மிகவும் கொடூரமானமுறையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். ஆயினும் அவரிடமிருந்து ஒருவார்த்தைகூட வெளிவரவில்லை.

சிறையிலிருந்தபோதே ‘தூக்குமேடைக் குறிப்புகள்’ எனும் உலகப் புகழ் வாய்ந்த நூலை எழுதினார். சிறையில் கொடுமைப்படுத்தப்பட்ட போதிலும் மனந்தளராது துணிவுடன் எதிர்கொண்ட மகத்தான கம்யூனிஸ்டாக விளங்கினார்.

இறுதியில் அவர் 1943 செப்டம்பர் 8 அன்று கெஸ்டபோ சிறையில் 40ஆவது வயதில் தூக்கிலிடப்பட்டார். ஜூலியஸ் பூசிக்கிற்கு 1950ஆம் ஆண்டு ‘சர்வதேச சமாதானப் பரிசு’ வழங்கப்பட்டது. புகழ் வாய்ந்த ஜூலியஸ் பூசிக் சிறந்த கம்யூனிஸ்டாக வாழ்ந்ததனால்தான் வரலாற்றில் நிலைத்து நிற்கிறார்.

அவர் கம்யூனிஸ்ட் குறித்து கூறுவதைக் கேளுங்கள்….

“கம்யூனிஸ்ட்டுகளாகிய நாங்கள் மனிதனை நேசிக்கிறோம். மனிதத் தன்மையுள்ள எதுவும் எங்களுக்குப் புறம்பானதல்ல. மிகச் சாதாரண மனித இன்பங்களின் மதிப்பையும் நாங்கள் அறிவோம். அவற்றிலும் நாங்கள் மகிழ்ச்சி காண முடியும். எனவே தான், மனிதன் உழைப்பை மனிதன் பறிக்கும் அராஜக அமைப்பின் கொடுமைகளிலிருந்து, அதாவது, பயங்கரப் போரின் துன்ப துயரங்கள், வேலையில்லாத் திண்டாட்டம் ஆகிய கொடுமைகளிலிருந்து விடுவிக்கப்பட்டு, மகிழ்ச்சியும் நிறைவும், ஆரோக்கியமும் சுதந்திரமும் உள்ள மனிதனுக்கு, இந்தப் பரந்த உலகில் ஒரு இடம் அளிப்பதற்காக, எங்கள் சுகபோகங்களைத் தியாகம் செய்ய நாங்கள் ஒரு போதும் தயங்குவதில்லை.

லாபம், லாபம், மீண்டும் லாபம்! இதையே குறிக்கோளாகக் கொண்ட ஒரு அமைப்பு, மக்களுக்கிடையே நேச உறவு நிலவுவதற்குப் பதிலாக, பண உறவையே அடிப்படையாகக் கொண்ட ஒரு அமைப்பு, மக்களுக்கிடையே நேச உறவு நிலவுவதற்குப் பதிலாக, பண உறவையே அடிப்படையாகக் கொண்ட ஒரு அமைப்பு, மனிதனைக் காட்டிலும் பணத்திற்கே அதிக மதிப்பைத் தருகிற ஒரு அமைப்பு மனிதத் தன்மை அற்றதாகும்.

மனிதனை நேசிக்கிற ஒரு மனிதனுக்கு ஒரு கம்யூனிஸ்டுக்கு, மக்களின் மனிதத் தன்மை பறிக்கப்படுகின்ற பொழுது, சும்மா இருக்க உரிமை உண்டா? இல்லை.

எனவேதான், நிறைவும் சுதந்திரமும் பண்பும் பொருந்திய மனிதனுக்காகப் போராடுவதில், தங்கள் முழு வலிமையை பயன்படுத்தவோ, தியாகம் செய்யவோ கம்யூனிஸ்டுகள் பின் வாங்குவதில்லை!”

ஜுலியஸ் பூசிக்கின் நினைவு நாளில் அவரின் கூற்றுப்படி சிறந்த கம்யூனிஸ்டாகத் திகழ்வதைவிட கம்யூ னிஸ்ட்டுகளுக்கு வேறென்ன உயர்வைக் கொடுக்கும்?

இதுதான் என் உயில். துயரத்தின் தூசியைக் கண்ணீர் கரைத்துவிடும் என்று நினைத்தால், சிறிது நேரம் அழுங்கள். ஆனால் வருத்தப்படாதீர்கள், நான் மகிழ்ச்சியாக வாழ்ந்தேன், மகிழ்ச்சிக்காகச் சாகிறேன், என் சமாதியில் துக்க வேதனையை நிறுத்துவது கொடுமையாகும்.

ஜூலியஸ் பூசிக் –Julius Fučík (23 February 1903 – 8 September 1943) நினைவு தினம் இன்று.

September 8th – the International Day of Journalists’ Solidarity – it is marked since 1958, when the 4th Congress of the International Organization of Journalists was held in Bucharest. It is confined to the day of execution of the Czech anti-fascist journalist Julius Fucik by Nazis on September 8, 1943.

Julius Fucik was a Czechoslovak journalist and communist at the forefront of the anti-Nazi resistance. He was imprisoned, tortured, and executed by the Nazis.

Since early 1941, he was a member of the illegal Central Committee of the Communist party of Czechoslovakia. He provided handbills and tried to publish the Communist Party newspaper Rudé Právo under the Nazi occupation. On 24 April 1942 he and six others were arrested in Prague by the Gestapo.

First, Fučík was detained in Pankrác Prison in Prague where he was also interrogated and tortured. In this time arose Fučík’s “Notes from the Gallows” , which was written on pieces of cigarette paper and smuggled out by sympathetic prison warders. The book describes events in the prison since Fučík’s arrest and is filled with his hope for a better – Communist future.

“We may speak various languages, but there is no difference in the blood of proletariat”, Julius Fucik.
“There’s no other force that keeps capitalism alive but your blindness. There is no force that will preserve capitalism alive if you recover your sight”, Julius Fucik.

Leave a Reply