கம்யூனிஸ்டுகளை நீங்கள் புறங்கையால் வெறுமனே ஒதுக்கி விடாதீர்கள் எம்மைப் போன்றோர்க்கு அது பெரும் வலி தருகிறது
சிலர் அவரை காந்தி என்றனர் ஜோதிராவ் பூலே என்றனர் சிலர் அம்பேத்கர் என்றனர். ஆனால் எல்லோரும் அவரை கம்யூனிஸ்ட் என்று முடித்தனர் .
இந்திய இடதுசாரி இயக்கத்தின் ஒப்பற்ற தலைவர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் மத்திய குழு உறுப்பினரும் மக்களுக்கான பாதையை தேர்ந்து எடுத்து மார்க்சிஸ்ட் கட்சியில் தன்னை முழு நேர ஊழியராக இணைத்து கொண்டவரும். மகாராஷ்டிர மாநிலம் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பழங்குடியினர்கள் சங்கத்தின் தலைவருமான தோழர் குமார் சிரால்கர் காலமானார்.
நாசிக்கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் அக்டோபர் 2 அன்று இறந்துவிட்டார். தோழர் குமார் சிரால்கர் 2019ஆம் ஆண்டிலிருந்தே புற்று நோயால் பாதிக்கப்பட்டு அதற்கெதிராகப் போராடிக் கொண்டிருந்தார்.
புகழ் பெற்ற ஐஐடியில் படித்து பொறியாளராக இருந்த தோழர் குமார் சிரால்கர் தன் வேலையை விட்டுவிட்டு 1970களின் முற்பகுதியில் வடக்கு மகாராஷ்டிராவில் பழங்குடியினரை அணிதிரட்டும் வேலையைத் துவக்கினார். அவசர நிலைக் காலத்தில் சிறைப்படுத்தப்பட்டு பல கொடுமைகளை எதிர் கொண்டவர் . 1980 களின் முற்பகுதியில் விவசாயத் தொழிலாளர்களை அணிதிரட்டத் தொடங்கினார். மகாராஷ்ட்ர மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். வெகு காலம் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் இணைச் செயலாளராக இருந்தார். மகாராஷ்ட்ராவில் சிஐடியு-வுடனும் நெருக்கமாகப் பிணைப்பினைக் கொண்டிருந்தார். மகாராஷ்ட்ரா கரும்பு விவசாயிகளின் அவல நிலை குறித்து ஆய்வினைச் செய்திருக்கிறார்.
மார்க்சிய சித்தாந்தத்தில் ஆழமான புரிதல் உள்ள தோழர் குமார் சிரால்கர், இயக்கத்தில் ஒரு வலுவான வர்க்கப்பார்வையுடன் சித்தாந்தப் போராட்டங்களில் உறுதியுடன் நின்றார். இரண்டு புத்தகங்களை எழுதியிருக்கிறார். பல்வேறு அம்சங்கள் குறித்து பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார். தலித் துகள் மற்றும் பழங்குடியினர் நிலைமைகள் குறித்து ஏராளமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். மகாராஷ்டிரா சிஐடியு-விற்கு முன்னணி ஊழியர்களை வளர்த்தெடுப்பதில் அவர்களுக்குக் கல்வி கற்பிப்பதில் மிகவும் உதவியாக இருந்தி ருக்கிறார். ஓர் உறுதியான புரட்சியாளரான குமார் சிரால்கர் எளிமையிலும் எளிமையான தோழர். அவர் உடல் நலிவுற்றிருந்த சமயத்தில்கூட கிராமத்தில் பழங்குடியினருடனேயே தங்கி இருந்தார். ஆதிவாசி மக்களின் நலனுக்காக. தன்னுடைய 25 வது வயதில் அவர்களுடன் ஒன்று இனைந்தவர் இறுதி மூச்சு வரை அவர்களுடன் வாழ்ந்து மறைந்தார்.
அவர் உடல் வைக்கப்பட்டு இருந்து இடத்தில் இரத்த சொந்தம் சிலர் தான் ஆனால் வர்க்க சொந்தமாக பத்தாயிரத்திற்க்கும் அதிகமான ஆதிவாசி மக்கள் தான். அதில் பெரும் பகுதினர் பெண்கள். அவர் மீண்டும் வர மாட்டார் என்றாலும் குமார் பய்யா எழுந்து வா என்று அப் பெண்கள் ஆழது கொண்டு இருந்தனர். அங்கு சோகம் பொதுவாக இருந்தாலும் இழப்பு ஒவ்வொருக்குமானது. இறுதி சடங்குகள் செய்ய வேண்டிய தருணம், பிறப்பால் பிராமணர் அவர் எரிக்க வேண்டிய சூழலில் அங்கிருந்த ஆதிவாசி மக்கள் அவர் எங்களவர். அவரை எங்கள் முறைப்படி புதைக்க வேண்டும் என்றனர். பிறகு என்ன அதற்கான ஏற்பாடுகள் நமது கட்சி நடத்தும் பி.டி. ரணதிவே பள்ளியில் நடந்தன.
கம்யூனிஸ்ட்களுக்கு பிறப்பு அடையாளம் அல்ல. வாழும் வாழ்க்கை தான் அடையாளம் அவருடன் அவரின் தோள் பையும் சேர்ந்து புதைக்கப்பட்டது. அத்துடன் ஆதிவாசி மக்களின்
முறைப்படி வேக வைத்த அரிசியும் வெல்லம் கலந்த தண்ணீரும் தெளிக்கப்பட்டது.
இரங்கல் கூட்டத்தில் பேசியவர்கள் தான் அவரை , காந்தி, ஜோதிராவ் பூலே, அம்பேத்கர் அவர்களுடன் ஒப்பீட்டு பேசினார்கள். ஆனால் அனைவருக்கும் இறுதியில் அவர் மகத்தான கம்யூனிஸ்டு என்று வரையறைத்தனர்.
பேசும் போது ஒருவர் குறிப்பிட்டார். ஒரு நாள் தோழர் குமார் ஒரு ஜோடி பழைய செருப்பு கேட்டு உள்ளார்கள். கேட்டவரிடம் ஒரு பிஞ்ச செருப்பு இருந்து உள்ளது, அவர் புது செருப்பு வாங்கி தருவதாக சொல்லியும் அந்த பழைய ஜோடியை பல மாதமாக பயன்படுத்தி உள்ளார் அவ்வளவு எளிமை.
1971ல் தன்னுடைய 25 வது வயதில் அந்த ஆதிவாசி கிராமத்தில் பணியாற்ற வந்து நாராயண தக்கர் என்பவரின் வீட்டில் தங்கியுள்ளார். அப்போது நாராயணனுக்கு 17 வயது. பின்னர் அவர்கள் குடும்பத்தின் ரேஷன் கார்டில் அவர் பெயர் சேர்க்க பட்டது. அதன் பின்னர் வாக்காளர் அடையாள அட்டை ஆதார் எல்லாம் நாராயணன் வீட்டு முகவரி தான். இரங்கல் கூட்டம் நடந்து கொண்டு இருந்த போது உணர்ச்சி பெருக்குடன் இருந்த நாராயணன் அங்கிருந்து செல்வதை யாரும் கவனிக்கவில்லை . அன்று இரவு நெஞ்சு வலி ஏற்ப்பட்டு , சிறிது நேரத்தில் நாராயணன் அவர்களும் இறந்து விட்டார். பிறப்பால் பிராமணராக பிறந்து உயர் கல்வி படித்து வசதி , வாய்ப்புகளை புறம் தள்ளி ஆதிவாசின் ஒலை குடிசையில் , தரையில் படுத்து உறங்கி. கப்ப கிழங்கை உண்டு 50 ஆண்டுகளுக்கு மேலாக குடும்பத்தில் ஒருவராக மாறிய போராளி தோழர் குமார் சிரால்கர் மறைவை நாராயணன் அவர்களால் தாங்க முடியவில்லை.
கம்யூனிஸ்ட்களுக்கு அடையாளம் பிறப்பு அல்ல வாழும் வாழ்க்கை அது உழைப்பாளி மக்களுக்கான வாழ்க்கை உதிரம் சிந்தும் வாழ்க்கை ஒப்பற்ற வாழ்க்கை தோழர் குமார் போன்றவர்களின் வாழ்க்கை.
இதுபோன்ற தோழர்களின் தியாகத்தால்தான் ஆளும் வர்க்கத்தாலும், அடையாள அரசியல் நடத்தி வரும் பிழைப்புவாதிகளாலும் எப்போதும் கம்யூனிஸ்டுகளை தோற்கடிக்க முடியால் தொடர்ந்து தோல்வி அடைகின்றனர்.
A Funeral and a Death
Kumar Shiralkar (1948 – 2022)
It was a moment hard to define. Kumar’s inert body lay around which his Adivasi and non-Adivasi near ones had gathered in huge numbers, traveling overnight from far and near. Adivasis, among whom he had spent half a century, were not ready to accept the fact. Women wailed asking in unison, Kumarbhau, parat ya ; Brother Kumar, please come back. In that sea of tens of hundreds, a large section of women among them, only one or two were his direct blood relations. In that collective mourning almost everyone also felt the pain of the loss individually. The air was filled with a tangible sense of poignancy as well as with some kind of intangible energy, the seeds of which, the person at rest, had sown in them. Was that inert body the soul and I, standing beside, mere body? Before I could suppress that unsettling thought, Jaysing Mali, Kumar’s close confidante for decades, began to speak in the mike he held in his trembling hands. “Comrade … “, and he paused. Was he groping for the right word, unsure of what he was going to say? One suspected. No, he was not referring to Kumar. The word comrade is both singular and plural in Marathi. Jaysing was addressing us. “Now is the time to bid farewell to Kumarbhau.” He had not been able to overcome his initial hesitation. Then he gathered more than right words and continued, “we are now going to perform the last rites. We had planned for cremation. But all the Adivasis collected here said, he is one of us. We will perform our traditional rites. We have therefore decided that …”, now his words were measured, tone firm, “we will bury, not cremate Kumar.”
I was stunned. Honestly, it took quite a moment for me to digest what he was saying. “Please, don’t misunderstand, he belonged to us,” Jaysing said with finality.
All readily agreed, of course. We had all taken a huge cultural leap. The collective began to move towards the assigned place in the ground of the Com. B. T. Randive High School. A six-seven feet deep pit was already dug. Kumar’s body, after a few rounds around the pit in the slogans of Lal Salam, was placed inside it. It was symbolically fed with cooked rice and water mixed with jaggery. The latter would be an alcoholic drink for those born Adivasi. A compromise was made for Kumar. Each of us turned our back to him and put a handful of soil in the pit. What will he grow into?
Kumar was born a Brahmin. He did not die a Brahmin. His parental house must have been part orthodox part progressive. A lot of secularization has taken place in the way those kind of people live. Kumar’s funeral set me thinking. No Brahmin, orthodox or otherwise, Maharashtrian at least, would be buried after death. I haven’t heard of any instance where such a wish was ever made or carried out. One would wish to donate the body for medical education and experiment. That wish is not frowned upon much. This final act of burying Kumar is an act of solidarity steeled in the furnace of struggle. That would not be steeled if Kumar had carried his cultural baggage along with him.
Kumar had an ancestral house in the town of Miraj which boasts of both practising enviable Hindu-Muslim amity and playing up intermittent episodes of communal strife. Kumar’s house was located in the Brahmin quarters. After he joined the movement to fight the oppression of the Adivasis in Nandurbar district and gradually began turning that fight into a war to overthrow the system that begets various kinds of oppression and exploitation, he began shedding all the baggage given to him by custom. He sold the ancestral house and bought a small flat for his mother. He occasionally visited it in normal times (a rarity for Kumar) and took leave from the Party (he was a wholetimer) to nurse her in time of need. He had to again take leave from party work to take care full time of his elder sister who was being treated in a sanatorium. All the attendant agonies and travails were strictly his personal affair. The pains and problems of others too he made his personal affair. He wanted to minimize whatever belonged to him, he was a person with few needs.
Once in a visit to our house he asked me for an old chappal I didn’t use. His was badly broken. He had used it till the point it was useless to call one anymore. I offered to buy a new one. He flatly refused and threatened to go away bare feet. I surrendered.
As I sat listening to those speeches, I mulled over a thought. What kind of memorial could we build to cherish his memory? Museum of personal assets was out of the question. You don’t leave anything personal behind, the Adivasi culture apparently demands. His backpack was placed beside his body and with him buried.
Kumar was briefly married. It must have been one of the shortest marriages ever. Once I poked him about it. “Arrey, you need to waste too much time, I have better things to do,” he said simply. In the condolence meeting all the speakers tried piece him together from whatever they had got from him. Some saw Gandhi in him, some saw Phule and still some others Ambedkar. But all agreed, he was a communist to the dot.
A museum was a superfluous idea. Every house in those Adivasi hamlets is a museum of everything that he has left behind. Orhan Pamuk has written a novel called a Museum of Innocence. Every house in that area is a museum of Kumar’s memories.
We all left in the evening. This morning a comrade sent me a message. Young Kumar having decided to bind his fate with that of these Adivasis began living since 1971 in the house of Narayan Thakare. The then seventeen year Narayan immediately became a comrade in arms and Kumar became a member of the Thakare family. That became his address. Kumar’s name entered the Thakare ration card. The address on the Aadhar and voting cards too was that of the Thakares.
As Kumar’s body lay in wake, seventy odd years old Narayan was listening to the condolence speeches. Nobody noticed Narayan leave. At midnight Narayan had a massive heart attack and he passed away.
Red Salute, Comrade. Uday Narkar
Secretary, CPI(M) Maharashtra State Committee