அரசு மருத்துவக்கல்லூரி அங்கீகாரத்தை விரைந்து பெற்றிட, செண்டாக் மாணவர் சேர்க்கை வெளிப்படைத்தன்மையோடு நடைபெறுவதை உறுதி செய்க

புதுச்சேரி மாநிலத்தில் தனியார் சுயநிதி மருத்துவ, பொறியியல் உள்ளிட்ட படிப்புக்கு ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கை 2014 ஜூன் 24, 25ல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவக்கல்லூரி வழக்கம் போல அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் அங்கீஇகாரம் கிடைக்காமல் தள்ளிபோயுள்ளது. இதனால் 24, 25 தேதிகளில் நடைபெறும் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் அரசு மருத்துவக்கல்லூரிக்கான மாணாவர் சேர்க்கை தேர்வு நடைபெறுமா, முதல் தரப்பட்டியலில் இடம் பெறும் மாணவர்களுக்கு அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்குமா என்பதை மாநில அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

அரசு, தனியார் சுயநிதி மருத்துவ, பொறியியல் கல்லூரிகளுக்கு ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் 157 மாணாவர்கள் விளையாட்டு இடஒதுக்கீடு பிரிவின் கீழ் மனுசெய்துள்ளனர். இதில் தகுதியான விளையாட்டு வீர்ர் பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒதுக்கீடு கிடைப்பதை மாநில அரசு, செண்டாக் குழுவும், உயர்கல்வித்துறையும் உறுதிப்படுத்தெ வேண்டும். விளையாட்டு பிரிவுக்கான இட ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுத்திட விளையாட்டு தகுதி சான்றுகளை ஆராய்ந்து வெளிப்படைத்தன்மையோடு மாணவர் சேர்க்கை நடைபெறுவதை உறுதிப்படுத்திட வேண்டும்.

மாநில முதல்வர் தலைமையில் நடைபெற்ற தனியார் சுயநிதி மருத்துவ கல்வி  நிறுவன்ங்களின் அதிகாரிகள் கூட்டத்தில் 265 மருத்துவ படிப்புக்கான இடங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார். ஆனால் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மதச்சிறுபான்மை நிறுவனம் என்பதால் அரசு இடஒதுக்கீடு அளிக்க மறுத்துள்ளது. இதில் உண்மை நிலைக்குறித்து மாநில முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும். மேலும் மதச்சிறுபான்மை, மொழிச்சிறுபான்மை என்ற பெயர்களில் உள்ள கல்வி நிறுவன்ங்கள் சம்மந்தப்பட்ட சிறுபான்மையினர் மாணவர்களுக்கு எத்தனை சதவீதம் இடம் ஒதுக்கப்படுகிறது என்ற விபரத்தையும் உயர்கல்வித்துறை மாநில மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

புதுச்சேரி மாநிலத்தில் தனியார் சுயநிதி மருத்துவக்கல்லூரிகள் துவங்க திமுக ஆட்சியில் அனுமதியளித்து கால்கோல் நாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சியில் தாராளமாக தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.தனியார் கலி நிறுவனங்கள் அனுமதிபெறும் போது 50 சத அரசு இடஒதுக்கீடு அளிக்க ஒப்புக்கொண்டன. ஆனால் எந்த தனியார் மருத்துவக்கல்லூரிகளும் 50 சத இடஒதுக்கீட்டை வழங்கவில்லை மொத்தத்தில் 32 சத அளவில்தான் தனியார் மருத்துவக்கலி நிறுவனங்கள் அரசு இடஒதுக்கீட்டை அறிவித்துள்ளன. நடப்பு கல்வியாண்டில் முந்தைய ஒதுக்கீடு பெறுவதிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளன.

மாநில அரசு தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரி நிர்வாகங்களிடம் பேச்சுவார்த்தை என்ற பெயரில் இடஒதுக்கீட்டை கெஞ்சிப்பெறுகிறது. ஆகவே மாநில அரசு தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 50 சத இடஒதுக்கீட்டை பெற அரசு மருத்துவகல்லூரிக்கான அங்கீகாரம் பெற போர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மார்க்சிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேசக்குழு கேட்டுக்கொள்கிறது

இவண்

வெ,. பெருமாள்

பிரதேச செயலாளார்

Leave a Reply