கேள்விக்குறியில் புதுச்சேரி நீராதாரம்

ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் வெள்ளம் ஏற்பட்டு வீணாககடலில் கலந்து பாழாவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். மழைநீரை சேமிக்க அரசு பேசிக்கொண்டிருக்கிறதே ஒழியநீரை பாதுகாத்து நிலத்தடி நீரை பெருக்க ஒரு சிறு துரும்பைக் கூட கிள்ளவில்லை. கட்டிடங்களில் விழும் மழை நீரை சேமிக்கதிட்டங்கள் இருக்கிறதே ஒழிய இதிலும் எந்த முன்னேற்றமும் இல்லை.

புதுச்சேரி மாநிலத்திற்கு வருகின்ற ஆறுகளெல்லாம் தமிழகத்தின் வடிகாலாகவே உள்ளது. இந்த ஆறுகளில் வருகின்ற நீரைக்கூட முறைப்படுத்தி பாதுகாத்திட விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பயன்படுத்திட எந்ததிட்டமும் இல்லை. நமக்குரிய காவிரி தண்ணீர் பங்கை புதுச்சேரி மாநில அரசு கெட்டு பெற்றதாக சரித்திரம் இல்லை. இதனால் காரைக்காலில் விவசாயம் நான்கில் ஒரு பங்காக குறைந்து விட்டது. மழைக்காலத்தில் வருகின்ற காவிரி நீரை சேமிக்க காரைக்கால் பகதிகளில் ஏரிகள் வெட்டவேண்டும் என்றகோரிக்கை மீது தொடக்கத்தில் ஒன்றிரண்டு ஏரிகள் வெட்டி அரைகுறையாய் திட்டம் நிற்கிறது. காரைக்கால் பகுதியில் ஏழு ஆறுகள் ஓடியும் மழைக்கால நீர்வந்தும் பாதுகாத்து பயன்படுத்திட அரசிடம் எந்த அக்கரையும் இல்லை. இதனால் விவசாயம் பாழாகி விவசாய வேலைகளும் குறைந்துவரும் ஆபத்தை பற்றியும் அரசுக்கு எந்த வித எச்சரிக்கை உணர்வும் இல்லை.

புதுச்சேரி பெரிய ஏரியான உசுட்டேரியில் இருந்து விவசாயத்திற்கு பயன்பட்டகாலம் மலையேறிவிட்டது. வீடூர் அணையிலிருந்து சங்கராபரணி ஆற்றில்வரும் நீரைபாதுகாக்க தடுப்பணைகள் திட்டமிட்டுகட்டி சேமிக்க முயற்சிகள் இல்லை. கட்டப்பட்ட ஒன்றிரண்டு தடுப்பணைகளை பராமரிக்கவும் இல்லை. சாத்தனூர் அணையிலிருந்து நமது மாநிலத்திற்கு நீரை பெற பிரெஞ்சு அரசு ஒப்பந்தம் உள்ளது. இந்த ஒப்பந்தமும் ஏட்டளவிலே உள்ளது. சாத்தனூர் அணையிலிருந்து நமது அரசால் கட்டப்பட்ட சொர்ணாவூர் அணைக்குவரும் நீரைமுறைப்படுத்தி பயன்படுத்திட அரசுக்கு அக்கரை இல்லை. சொர்ணாவூர் அணையிலிருந்து பங்காருவாய்க்கால் வழியாக பாகூர் ஏரிக்கு நீர்வாய்க்கால்களை தூர்வாரி பராமரிப்பு செய்தால் ஒவ்வொரு ஆண்டும் பாகூர் ஏரி நிறைந்து வழியும். ஆனால் அபரிமிதமான மழைக்காலங்களில் மட்டுமே ஏரி நிரம்புகிறது. பாசன வாய்க்கால் பராமரிப்பு ஏதும் செய்திட அரசு நிதி ஏதுவும் ஒதுக்குவதில்லை. இப்படி நமது மாநிலத்திற்கு வருகின்ற நீரைக்கூட சேமிக்ககூரிய திட்டங்கள் இல்லாததால் இருக்கின்ற வேளாண்மையும் படிப்படியாக குறைந்து வருகிறது. புதுச்சேரியில் உள்ள அனைத்து ஏரிகளையும் பாரம்பரிய முறையில் கிராமப்பாசன அமைப்புகள் மூலமாக சீரமைத்த திட்டம் கைவிடப்பட்டள்ளது.

எனவே காரைப்பகுதியில் நீரை சேமிக்க புதிய ஏரிகளை வெட்டவும். புதுச்சேரி பகுதிகளில் பாசன வாய்க்கால் கிராம பாசனசங்கங்கள் மூலம் சீரமைத்து நீரைபாதுகாக்கவும் நிலத்தடி நீரை பெருக்கவும் அரசு செயலாற்றி விவசாயிகளை வேளாண்மையை, குடிநீர் ஆதாரத்தை பெருக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.

Leave a Reply