இந்திய நாட்டின் பொருளாதார மற்றும் மக்கள் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என்ற கோஷத்துடன் பிரதமர் மோடி ஜூன் 30 நள்ளிரவில் சரக்கு மற்றும் சேவை வரி எனும் புதிய வரி வதிப்பு திட்டத்தை இந்திய நாட்டில் அமல்படுத்துவதாக நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இந்திய நாடு முழுவதும் ஒரு பொருளுக்கு பலமுனை வரிகள் மற்றும் மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறான வரிகள் என்று இருந்ததை சீர்த்திருத்தம் என்கிற பெயரால் இன்றைக்கு ஜிஎஸ்டி என்று ஒரு பொருளுக்கு ஒரே வரி அறிவித்துள்ளது. இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பு திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இருக்கும். விலைவாசி குறையும் மற்றும் மறைமுகவரிகளின்பால் நடைபெறும் கொள்ளை, பதுக்கல், வரி ஏய்ப்பு தவிர்க்கப்படும், நிறுவனங்களிடையே போட்டி உருவாக்கப்பட்டு விலைகள் குறையும் என்று அரசு அறிவித்து, மிகப்பிரம்மாண்டமான முறையில் விளம்பரப்படுத்தியது. ஆனால், ஜிஎஸ்டி அமல்படுத்தியநாள் முதல் மக்கள், குறிப்பாக தொழிலாளர்கள், வர்த்தகர்கள், சிறு, குறு, மத்திய தர வணிகர்கள் என்று பெரும்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது மறைமுக வரிகளில் சீர்த்திருத்தம்.
இதனால் மத்திய, மாநில அரசுகளின் கருவூலங்கள் நிறையுமே ஒழிய சாதாரண மக்களின்பிரச்சனைகள் தீராது, தீரவுமில்லை. பெரும்முதலாளிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏற்கெனவே அரசுக்கு நேர்முக வரிகள், கார்ப்பரேட் வரி அதாவது தற்போதுள்ள 28 சதவீதத்திலிருந்து 25 சதவீதத்திற்கும் குறைக்க வேண்டும் என்று கூப்பாடு போடுகின்றனர். அதன் ஒரு பகுதியாகத் தான் இந்த சீர்த்திருத்தம் இருக்கலாம் என்று பரவலாக முற்போக்கு பொருளாதார அறிஞர்கள் கூறி வருகின்றனர். இதன் காரணமாகத்தான் பெரும் நிறுவனங்கள் மற்றும் ஊடகங்கள் இதை ஆதரித்து வருகின்றனர்.ஒரே வரி என்று அறிவித்துவிட்டு இன்றுநான்கு அடுக்கு வரி 5 சதவீதம், 12சதவீதம்,18 சதவீதம், 28 சதவீதம் அமல்படுத்தப்பட்டுள்ளது. வசூலாகும் வரியில் மாநில அரசுக்கும் பங்கு சேரும். ஆனால், மாநில அரசுகள் இனிமேல் மாநிலத்தில் நேரடியாக வரி விதிக்க முடியாது. தனது மாநிலத்தில் ஏற்படும் இயற்கை பேரிடர் மற்றும் நலத்திட்டங்களுக்கு நிதி தேவை எனில் மத்திய அரசிடம் கையேந்தி நிற்கும் அவலம் ஏற்படும். இந்த வரி வளையத்திற்குள் இந்தியாவில் உள்ள பெரும்பாலான பொருட்களை இணைத்துள்ளது அரசு.
ஏறத்தாழ 509 உணவுப் பொருட்களை இணைத்து முதல் முறையாக வரி விதித்து விலைகள் குறையும் என்று அறிவிக்கப்பட்டது. கடலை மிட்டாய்க்கும் 5 சதவீதம் வரிவிதிக்கப்பட்டுள்ளது.காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரு பொருளுக்கு ஒரே வரி என்று தம்பட்டம் அடித்த மத்திய அரசு, ஜிஎஸ்டி அமல்படுத்திய 15 நாட்களில் மாநிலத்திற்கு மாநிலம் வெவ்வேறான விலைகள் நடைமுறையில் உள்ளது. உதாரணத்திற்கு உப்புக்கு வரி இல்லை என்று குறிப்பிடப்பட்டது. ஆனால் 1 கிலோ உப்பின் விலை அந்தமானில் ரூ.14.00, உ.பி.18.00, சென்னை ரூ.18.00, ஒடிசாவில ரூ.17.00, 10 கிலோ ஆட்டா மாவு பெங்களூரில் ரூ.420, திருவனந்தபுரத்தில் ரூ.440, தமிழகத்தில் ரூ.339, ரின் சோப்புக்கட்டி, சண்டிகரில்- ரூ.10, ஒடிசாவில் ரூ.10, ராய்ப்பூரில் ரூ.4.75, எல்.ஈ.டி. டிவி விலைதமிழகத்தில் ரூ.14200, கேரளாவில் ரூ.13500, ஒடிசாவில் 13,000. ராய்ப்பூரில் ரூ.12,220இல் என விற்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பாரம்பரிய தொழில்களான தீப்பெட்டி, பட்டாசு, ஜவுளி, விசைத்தறி, பீடி,முந்திரி, தோட்டம் ஆகிய தொழில்கள் பெரிதும்பாதிப்புக்குள்ளாகிள்ளன. இந்தியா முழுவதும் குறிப்பாக மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், கான்பூர், சூரத், காசியாபாத்,பெங்களூர், தமிழ்நாடு மற்றும் பல பகுதிகளில் உள்ள சிறு ஜவுளி உற்பத்தியாளர்கள், சிறு விசைத்தறி உரிமையாளர்கள், வர்த்தகர்கள், ஜவுளி வணிகர்கள் என லட்சக்கணக்கானோர் ஜவுளி தொழில் மற்றும் அவை சார்ந்த தொழிலுக்கு அநியாய வரி விதிப்பை கண்டித்து கடந்த ஜூலை ஒன்று முதல் போராட்டக் களத்தில் உள்ளனர்.குறிப்பாக ஜவுளி தொழில், அதை சார்ந்து இருக்கின்ற விசைத்தறி, சாயம் ஏற்றுதல், வார்பிங், மடித்தல், ஸ்டென்டிரிங், பிளிச்சீங் எனஅனைத்து சிறு தொழில்களுக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது.
முன்பு ஜவுளியின் மூலப்பொருளான நூல் கொள்முதல் செய்வதற்கு மட்டும்தான் 5 சதவீதம் வரி என்றுஇருந்தது. தற்போது மோடி அரசு மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து சார்பு தொழில்களுக்கும் 5 சதவீதம் மற்றும் 18 சதவீதம் என வரி விதித்துதொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.ஒரு கிலோ நூல் விலை ரூ.235 என்று கொள்முதல் செய்யப்பட்டு சைசிங் செய்திட ரூ.30ஆகும். அதற்கு ஜிஎஸ்டி 18 சதவீதம் வரிவிதிக்கப்பட்டுள்ளது. தறி நெய்தலுக்கு -கூலிரூ. 53.16 என்றால் அதற்கு ஜிஎஸ்டி 18 சதவீதம்,பிளீச்சிங் கூலி ரூ.25 என்றால் 18 சதவீதம் பிரிண்டிங் 18 சதவீதம் வரி, ஸ்டென்டரிங் 8 சதவீதம், காலண்டரிங்- 18 சதவீதம், மடித்தலுக்கு18 சதவீதம் என புதியதாக வரிகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சார்பு தொழில்களுக்கு இது நாள்வரை வரி இல்லை. இவ்வளவு வரி செலுத்திபொருள் உற்பத்தி விலை கூடுதலாக்கப்படுகிறது. இதனால் ஜவுளி தொழிலை சார்ந்துள்ள தற்போதுள்ள தொழில்கள் அழிந்துபோகக்கூடிய நிலை ஏற்படும். ஒரு விசைத்தறி தொழிற்சாலையில் சாயம் ஏற்றுதல், வார்ப்பிங், ஸ்டென்டிரிங், பிளிச்சிங் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டால் அதாவது நூல் இழையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் துணிகளுக்கு ஜிஎஸ்டி வரிஎன்பது 5 சதவீதம் மட்டும் தான், அதுவும் அதன்முதலாளி முதலீட்டு வரி (ஐn ஞரவ வயஒ ஊசநனவை) அரசிடம்செலுத்தி அதை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். அதே சிறு தொழிலாக தனியாக ஒருவர் செய்தால் அதற்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான தொழில்கள் அழியக்கூடிய நிலை ஏற்படும். மேலும், இந்த நடவடிக்கை பெரும் பகாசுர நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்ட உதவக்கூடிய திட்டம்என்று குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள சிறு விசைத்தறி உரிமையாளர் தெரிவிக்கிறார்.அதே போன்று படித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள், முதலாளிகளிடம் நூல் எடுத்து தனது வீட்டில் தறி வைத்துவீட்டுத்தொழிலாக செய்து வருபவர்களுக்கு ஜிஎஸ்டி வரி என்பது 5 சதவீதம் போடப்பட்டுள்ளது. முன்பு இந்த வகையான தொழில்கள் சேவை பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தது. ஆகையால் 30.06.2017 வரை வரி இல்லை.
ஆனால், மோடி அரசு இந்த பிரிவினருக்கு வரி விதித்து அந்த இளைஞர்களின் எதிர்காலத்தை நாசமாக்கியுள்ளது.ஆண்டுக்கு 20 ரூபாய் லட்சம் வரை வியாபாரம் செய்தால் வரி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நூல் கொடுப்பவர்கள் ஊருக்கு ஒரு முதலாளி அல்லது இரண்டு பேர்இருப்பர் அப்படி இருக்கும் போது இவர்கள் கட்டும் வரியின் சுமையை தொழிலாளி, ஜாப் ஒர்க் செய்பவர்கள் மீது தான் சுமத்துவார்கள். அதனால் சிறு தறியாளர்கள் பாதிப்பு என்பது கூடுதலாகும்.ஜவுளி உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள் ஆகியோருக்கு முதலீட்டுக்கு உரிய லாபம் கிடைக்கவில்லை எனில், அவர்கள் உற்பத்திசெய்த பொருளின் விலையை உயர்த்துவார்கள் அந்த சுமை நுகர்வோர் மீது ஏற்றப்படும். அல்லது அந்த சுமையை தொழிலாளர்கள் கூலி மற்றும் இதர பலன்களில் வெட்டுவார்கள்.
ஆனால் ஒரு முதலாளி தனது லாபத்தை உயர்த்த முதலாளித்துவ தத்துவப்படிமேலே குறிப்பிட்டுள்ள இரண்டு நடைமுறைகளையும் அமல்படுத்துவார். ஆக இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பால் சாதாரண மக்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது உறுதி. தமிழகத்தில், வர்த்தகர்கள் தொழிலாளர்கள் பங்கேற்கும் பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இந்த அரசு இவர்களின் கோரிக்கைகளை தீரக்க செவிமடுக்கவில்லை. மத்திய அரசிடம் எடுத்து சொல்லப்படும் என்று கூறுகிறார்கள். உண்மையில் இந்த மாநில அரசினால் எதுவும் செய்யமுடியாத நிலை, ஏனெனில் இனி இந்தியாவில் வரி விதிக்கவோ அல்லது குறைக்கவோ இனி மாநில அரசுக்கு அதிகாரத்தில் இல்லை. அதுமோடி தலைமையிலான ஜிஎஸ்டி ஆளுமை கவுன்சில் கையில் உள்ளது.சாதாரண மக்களிடமிருந்து வரி என்ற பெயரில் கொள்ளை, ஹோட்டலுக்கு சென்றுசாப்பிட்டால் அதிக வரி, ஹோட்டல் உரிமையாளரோ எனது லாபத்தைவிட அதிக வரி செலுத்துகிறேன் என்கிறார்.‘எனது மூதலீட்டிற்கு கிடைக்கும் லாபத்தைவிட மோடிக்கு வரி செலுத்துவது தான் அதிகம். அதாவது ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் கொள்முதல் விலை ரூ.206.17 என்றால் இதற்கு மாநிலவரி 14 சதவீதம், மத்திய வரி 14 சதவீதம் என 28 சதவீதம் வரியாக ரூ.57.92 செலுத்தி 264.04க்குவாங்கி அதை ரூ.285.00 விற்க வேண்டும்.
ஆகஎன்னுடைய லாபம் வெறும் 20.96 ரூபாய் மட்டும் தான். ஆனால் நான் ரூ.57.92 ஜிஎஸ்டியாக செலுத்துகிறேன்’ என ஒரு பல சரக்கு வியாபாரி குமுறுகிறார். இந்த ஜிஎஸ்டி எனும் மந்திரக்கோல் பெரும்கார்ப்பரேட்டுகள், செல்வந்தர்கள், நிலப்பிரபுக்கள் அவர்களுக்கான மூலதன திரட்டலுக்குஉதவக்கூடிய வகையில் தான் அமைந்துள்ளது.மூன்று மாதத்திற்குள் அனைத்தும் சரியாகிவிடும் என்று மத்திய அமைச்சர்கள் கூறுகிறார்கள், ஆம். அப்படித்தான் பணமதிப்பு இழப்புநடவடிக்கைக்கும் கூறினார்கள். என்ன நடந்தது.
உயிர்ப்பலிகளும், தற்கொலைகளும், தொழில் மற்றும் விவசாயத் தொழில் நலிவு தான் ஏற்பட்டது.பணமதிப்பு இழப்பு நடவடிக்கை, உண்ணும்உரிமைக்கு தடை, கால்நடை விற்பனைக்கு தடை, ஜிஎஸ்டி மூலம் வாழ்வாதாரத்திற்கு முட்டுக்கட்டை என மோடி மக்களை வாட்டி வதைக்கிறார்.இதை எதிர்த்து நடைபெறும் மக்களின் தொடர் போராட்டங்களை ஒன்றிணைத்து, அனைத்து பகுதி மக்களையும் திரட்டி நெடும் போராட்டங்களாக நடத்தினால் தான் மத்திய அரசை நிர்ப்பந்திக்க வைத்து மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடியும்.
கே.சி.கோபிகுமார்.
நன்றி : தீக்கதிர்.