மாமேதை லெனின் மறைந்தபோது கம்யுனிஸ்ட் கட்சியின் பெயரால் தோழர் ஸ்டாலின் எடுத்த சபதம் பின்வரும் அர்த்தஞ் செறிந்த சொற்றொடருன் தான் தொடங்குகிறது…
“கம்யுனிஸ்டுகளாகிய நாங்கள் தனி வார்ப்புக்கள்…
“நீ ஏன் கம்யூனிஸ்ட் ஆகிறாய்? “என்று கேட்பது ,
” நீ ஏன் வாழ்வை நேசிக்கிறாய்?” என்று கேட்பது போலத்தான்,
கம்யுனிஸ்ட்டுகளுடன் வராத ஒருவர் தனக்கே விரோதமாய்ப் போகிறார்.
“கம்யுனிஸ்ட் என்பவன் இனிய வாழ்க்கயை, மனித சுதந்திரத்தை, சுதந்திரத்திற்கான போர்க் குணத்தைப் பிரசாரம் செய்பவன்.
வாழ்க்கை என்பது வெறும் சுவாசத் துடிப்பில்லை. சுதந்திரம் இல்லாமல் வாழ்க்கையில்லை,போராட்டம் இல்லாமல் சுதந்திரம் இல்லை.
வாழ்க்கையிலிருந்தும் வரலாற்றில் இருந்தும் ஒதுங்கி விடாத இந்தப் பரிணாம வளர்ச்சி கம்யுனிஸம் என்று பெயர் தாங்கி நிற்கின்றது.
உணர்ச்சி என்பதும் சிந்தனை என்பதும் ஒரு தனிமனிதனின் சுய கண்டுபிடிப்பல்ல, சமூகப் பாதிப்புகளே அவ்வாறு வர்க்கத் தன்மையுடன் வெளிப்படுகின்றன. வர்க்கத் தன்மை என்பது மிக முக்கியம்.
ஒரு தனிமனிதனின் உணர்ச்சியோ, ஒரு தனிமனிதனின் தாராளமோ, ஒரு தனி மனிதனின் தியாகமோ சமூகப் பிரச்சனைகளுக்கு தீர்வாகிவிடாது.
சட்டங்கள், ஒழுக்கங்கள், தர்மங்கள் என்று ஆளும் வர்க்கங்கள் எழுப்பி வைத்துள்ள சிறைமதில்களின் நடுவே வாழ்ந்துகொண்டு தமது கண்ணீருக்கு/ பிரச்சனைகளுக்கு தற்காலிக வடிகாலான கடவுளைத் தேடிப்போகும் எமது பாட்டாளி அப்பாவிகளைக் கண்டு உங்களுக்கு கோபம் வருவது அவர்களின் அறியாமை மீதா? அல்லது இந்த சமூக கட்டமைப்பின் மீதா?
தனது சக மனிதர்களின் வாழ்வு தீப்பற்றி எரிவதைக் கண்டு கண்களை மூடிக்கொண்டு நாத்திகவாதம் பேசிக்கொண்டிருப்பதா?
நாம் கம்யுனிசம் சரியென்று சொல்வது எதனால்? மனிதநேயத்தினால் தான்!
மனிதர்களிடையே வாழ்ந்துகொண்டு மனிதர்ளை நேசிக்காமல் எப்படி வாழ்வது?
உலக மக்களின் விடுலைக்காக பிரச்சாரம் செய்வது எங்கள் கடமையும் உரிமையுமாகும்.