பல ஆண்டுகள் பணியாற்றிய ஒப்பந்த மருத்துவர்களை பணிநிரந்தரம் செய்திடுக.

பத்திரிகை செய்தி

11.12.2015

 பல ஆண்டுகள் பணியாற்றிய ஒப்பந்த மருத்துவர்களை பணிநிரந்தரம் செய்திடுக.

 

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 8 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை ஒப்பந்த அடிப்படையில் சுமார் 150 மருத்துவர்கள் பணியாற்றிவருகிறார்கள். நீண்ட காலம் அரசு மருத்துவமனைகளில் தொடர்ச்சியாக பணியாற்றி வரும் மருத்துவர்களை அரசு நிர்வாகம் தொலைபேசி அழைப்பு மற்றும் தொலைபேசி குறுந்தகவல் மூலம் பணிக்கு வரவேண்டாம் என்று பணிநீக்கம் செய்வது மருத்துவர் சமூகத்தை இழிவுப்படுத்துவதோடு சட்டத்தை மீறிய நடவடிக்கையாகும். புதுச்சேரி அரசு மற்றும் சுகாதாரத்துறையின் மருத்துவர்களை இழிவுப்படுத்தி பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கட்சி கடுமையாக கண்டிக்கிறது.

 பல ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய மருத்துவர்கள் தங்களின் பணிநிரந்தரம் செய்யப்படும் என நம்பினார்கள். அர்ப்பணிப்போடு பணியாற்றினார்கள். நிரந்தர தன்மை கொண்ட பணியில் நீண்டகாலம் பணித்தொடர்ச்சியோடு பணியாற்றி வரும் மருத்துவர்களை பணி நிரந்தரம் செய்ய அரசு முயற்சிக்காமல் மாறாக மத்திய அரசுப் பணி தேர்வானையம் யூபிஎஸ்சி மூலம் மருத்துவர்களை தேர்வு செய்து பணியில் அமர்த்துவது கடும் கண்டனத்திற்குரியதாகும்.

 ஆகவே, மாநில அரசு நீண்டகாலம் பணியாற்றிய கல்லூரி பேராசிரியர்களை யூபிஎஸ்சி மூலம் பணிநிரந்தரம் செய்ததைப் போல தமிழகத்தில் ஒப்பந்த மருத்துவர்களை நிரந்தரம் செய்தது  போல நீண்டகாலம் பணியாற்றிவரும் ஒப்பந்த மருத்துவர்களை பணிநிரந்தரம் செய்திட வேண்டும். அரசு மருத்துவப் பணியை நம்பி வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ள ஒப்பந்த மருத்துவர்களை பணிநிரந்தரம் செய்திடவும் அரசு மருத்துவமனைகளில் காண்ட்ராக்ட் முறையில் தொடர்ந்து பணியாற்றிவரும் உதவி செவிலியர்களையும் பிற பணிகளைச் செய்துவரும் பணியாளர்களையும் அரசு நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் 2000 நோயாளிகளுக்கு 1 மருத்துவர் என்ற தன்மையில் மருத்துவர்களை நியமித்திடவும், மாநில முதல்வர் தலையிட வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேசக்குழு கேட்டுக் கொள்கிறது. அதுவரையில் ஒப்பந்த மருத்துவர்களை தொடர்ந்து பணிசெய்திட உரிய பொறுத்தமான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுகிறோம். 

இவண்

 

ஆர். இராஜாங்கம்

பிரதேச செயலாளர்

Leave a Reply