புதுச்சேரி மாநில விவசாய நிலைமை

மாநிலத்தில் விவசாயத்தை பாதுகாக்க உற்பத்தியைப் பெருக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததினால் விவசாயிகள் நம்பிக்கை இழந்தநிலையில் உள்ளார்கள்.

மாநிலத்தில்மொத்தவிளைநிலப்பரப்பு 42000 ஹெக்டேர்நிலத்தில் இருந்து தற்போது சுமார் 18000 ஹெக்டர் ஆக குறைந்துள்ளது. புதுச்சேரியில் 2004-2005 ஆம் ஆண்டில் நெல் உற்பத்தி 56507 டன்னாக இருந்தது. 2010 -2011 ல் 21688 டன்னாக குறைந்து விட்டது. காரைக்கால் பகுதியில்நிலை இதைவிடமோசம். இந்தகுறைவான உற்பத்திக்குகாரணம் விளை நிலங்கள் ரியல் எஸ்டேட் ஆகமாறியதே. விளை நிலங்களைப்பாதுகாக்க அரசுஎந்தமுயற்சியும் எடுக்கவில்லை. ரியல்எஸ்டேட் ஆன நிலங்களில் வீடுகளும் கட்டப்படாமல் உற்பத்தியும் ஆகாமல் வெறும் காடுகளாக காட்சியளிக்கிறது. இந்தநிலை இன்னும் மோசமடையக்கூடும். விவசாய இடுபொருட்களின் விலைஉயர்வு, விளைபொருளுக்கு விலையின்மை, வங்கிகடன் வசதியின்மை போன்ற காரணங்களால் விவசாயம் லாபமற்ற தொழிலாக மாறி விவசாயத்தை விவசாயிகள் கைவிடும் நிலையே விளைநிலங்கள் ரியல் எஸ்டேட் ஆகமாறி வருவதற்கு காரணமாகும்.

கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும் கரும்புக்குரிய விலை தொகையை ஆலைநிர்வாகம் இரண்டாண்டுகள் வரை நிலுவை வைத்துள்ளது. கரும்புக்குரிய நியாய விலையும் இல்லை. அரசு அறிவிக்கும் விலையும் கிடைப்பதில்லை. அரியூர் சர்க்கரை ஆலை நிர்வாகமோ, எல்.ஆர்.பாளையம் சர்க்கரை ஆலையின் விலையை விட குறைவாகவே கொடுக்கிறது. நெல்மட்டுமல்ல கரும்பு விவசாயிகளும் விவசாயத்தை விட்டுவெளியேறும் நிலைஉள்ளது. அளவுக்கதிமான நிலங்கள் கல்லூரிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. சுமார் 1500 ஏக்கர் நிலத்தை பொருளாதார மண்டத்திற்கு ஒதுக்கி தரிசாகவே 20 ஆண்டுகளாக கிடக்கிறது.அரசின்திட்டமற்றகொள்கைக்கு இது உதாரணம்.

உற்பத்திசெய்த நெல்லைக்கூட அரசுகொள்முதல் செய்வதில்லை. அரசின் ஒழுங்குமுறை விற்பனைக்கூடமும் வியாபாரிகளின் கொள்ளைச்சந்தையாக மாறிவிட்டது. உழவர்களுக்காக தொடங்கப்பட்ட உழவரகங்கள் பாதிக்குமேல் மூடப்பட்டு செயலிழந்து போய்விட்டது. விவசாயிகளுக்காக தொடங்கப்பட்ட பாசிக் நிறுவனம் சாராயம் விற்கும் மையமாகிவிட்டது. விவசாய இடுபொருட்கள் எதுவும் அரசால் வழங்கப்படுவதில்லை. தேவையான உரம் கிடையாது. மின்கட்டணம் உயர்ந்துவிட்டது. நிலக்குறைவால் மின்மோட்டார் பயன்பாடு பாதியாகக் குறைந்துவிட்டது. காவிரிநீர் காரைக்காலுக்கு 6 டிஎம்சி தண்ணீர் கிடைக்க அரசு ஒருதுரும்பைக் கூட அசைக்கவில்லை. நமக்குரிய காவிரிநீரைப்பெற இதுவரை ஆண்ட ஆட்சியாளர்கள் எந்தமுயற்சியம் எடுக்கவில்லை. வெள்ளம்வந்தால் காரைக்காலுக்கு காவிரிநீர் என்ற நிலைதான்உள்ளது. காரைக்காலில் சமுதாய ஆழ்குழாய் கிணறுகள் பயனற்று போய்விட்டது. நெல்லுக்கும், பயிறுவகைகளுக்கும் அரசு அறிவித்த ஊக்கத்தொகை கிடைப்பதில்லை.விவசாய ஆராய்ச்சிப்பண்ணை, விதைஆராய்ச்சிமையம், வேளாண் கல்லூரி என்றிருந்தும் மண்ணுக்கேற்ற புதியரகவிதைகள் ஏதும் உற்பத்தி செய்து வழங்கவில்லை. வெளிமாநில தனியார் நிறுவனங்களில் இருந்து தரமற்ற விதைகளே அரசால் வழங்கப்படுகிறது.

விவசாயத்திற்கான நீர் ஆதாரங்கள் அற்ற நிலையில் மாநிலத்தில் விவசாயத்திற்கு பயன்பட்டு வந்த உசுட்டேரி, பாகூர் ஏரியும் பராமரிப்பு இன்றியும், விவசாயத்திற்கு பயன்படுத்தும் நோக்க மின்றியும் போய்விட்டது. ஏரிகள் சுற்றுலாவுக்கும், மீன் வளர்ப்புக்கு மட்டுமே என்பது அரசின் கொள்கையாகிவிட்டது.காரைக்காலில் போதுமான நீர்இருந்தும் பாதுகாக்க எந்ததிட்டமும் இன்றி ஏரிகள் வெட்டப்படாமலும் வெட்டப்பட்ட ஒன்றிரண்டு எரிகளை பாசனத்திற்கு பயன்படுத்தும் திட்டம் இன்றியும் அரசு உள்ளது. ஓட்டுமொத்தமாக விளை நிலப்பாதுகாப்பு, நீர்ப்பாதுகாப்பு, விவசாய விளைபொருட்களுக்கு விலையின்மை அரசின் எந்த திட்டமும் விவசாயத்திற்கு இல்லாமை எந்த உதவிமானியமும், கடன்வசதியும் இன்மைஎன புதுச்சேரி மாநில அரசு விவசாயத்தை நிர் மூலமாக்கி வருகிறது. விவசாயிகள் நம்பிக்கை இழந்துள்ளார்கள். விவசாயிகளுக்கு ஓரளவுகை கொடுத்து வந்த பால் உற்பத்தியும், தீவனவிலை உயர்வு, மேய்ச்சல் நிலம் இன்மையால் இந்த உபதொழிலும் நம்பிக்கை இழந்துவருகிறது. பயிர்பாதுகாப்பு திட்டம் ஏட்டளவிலே உள்ளது. விவசாயிகளுக்கு பலகோரிக்கைகள் இருந்தும் விவசாயிகளை திரட்டவோ போராடவோ விவசாயசங்கங்கள் முனைப்புகாட்டவில்லை. அரசியல்கட்சிகள் ஒவ்வொன்றிற்கும் விவசாயப்பிரிவு சங்கங்கள் இருந்தும் விவசாயிகள் பிரச்சனையில் தலையிடுவது குறைந்துபோய்விட்டது. இத்தகைய சூழலில் நமது விவசாயச்சங்கமும் நடத்துகின்ற போராட்டங்களில் தொய்வே காணப்படுகிறது. கொந்தளிப்பான சூழலில்உள்ள விவசாயப்பிரச்சனைகள் மீதுகட்சி இடைக்கமிட்டிகள் ஆழ்ந்துகவனித்துதிட்டமிட்டு தலையிட்டால்அன்றி இந்நிலையில் மாற்றம் ஏற்படாது.

Leave a Reply