புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கும் முடிவை முறியடிப்போம்

புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின்
முடிவை போராட்டத்தின் மூலம் மக்கள் முறியடிப்பார்கள் அரசு ஊழியர் சம்மேளன தலைவர் பால மோகனன் சூளுரை

மின்துறை தனியார்மயம்

புதுச்சேரி மின்துறை தனியார்மயமாக் கப்படுமானால் பொதுமக்களுக்கு சேவை நோக்கோடு செயல்பட்டு வரும் மின்துறை லாப நோக்கோடு மட்டுமே செயல்படும் என்பதால் விவசாயம் மற்றும் குடிசை போன்றவற்றுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் தடைப்படும். மேலும் அடித்தட்டு, நடுத்தர மக்கள் மற்றும் வணிகர்கள் பெறுமளவில் பாதிக்கப்படுவதோடு 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட புதுச்சேரி அரசு மின்துறை பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலன் பாதிக்கப்பட்டு அரசு ஊழியர் என்ற அந்தஸ்தை இழக்கும் நிலை ஏற்படும்.

மின்துறையில் மொத்தமுள்ள 5,00,000 மின் சந்தாதாரர்களில், 3,75,000 பேர் வீட்டு உபயோக மின் இணைப்புகளாகும். வீட்டு உபயோக மின் பயனிட்டாளார்களிடம், மின்சார கொள்முதல் விலையான ரூபாய் 5.60 ஐ காட்டிலும் குறைவான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அரசு துறையாக இருப்பதனால் மக்களுக்காக அரசு இதை செய்கிறது ஆனால் தனியார்மயமாக்கப்பட்டால், கொள்முதல் விலையோடு லாபம் சேர்த்து ஒரு யூனிட்டின் விலை 8 ரூபாய்க்கு மேல் வசூலிக்கப்படும் நிலை ஏற்படும். தற்பொழுது மின்துறையானது வருடத்துக்கு சராசரியாக ரூபாய் ஐம்பது கோடி வரியில்லாத வருவாயாக அரசு கருவூலத்திற்கு மின்துறையின் லாபத்தின் மூலமாக கிடைக்கின்றது. மின்துறை தனியார்மயமாக்கப்பட்டால் இந்த வருவாய் எல்லாம் தனியாருக்கு போய் சேரும் மேலும் புதுச்சேரி அரசு மின்துறையில் பணிபுரியும் 3000 புதுச்சேரி அரசு ஊழியர்களின் பணியிடங்கள் முற்றிலும் ஒழிக்கப்படும். படித்து வேலைக்காக இளைஞர்களின் வேலைவாய்ப்புகளும் பறிபோகும் அபாயம் ஏற்படும்.

இந்தியாவிலுள்ள யூனியன் பிரதேசங்களிலேயே குறைவான மின் இழப்போடு, அதிக லாபம் ஈட்டக்கூடியதாக புதுச்சேரி மின்துறை திகழ்கிறது. புதுச்சேரி மின்துறை தனியார்மயமாக்கப்படுமானால் பொதுமக்களிடம் வசூலிக்கப்பட்ட வருவாய் மற்றும் புதுச்சேரி அரசின் நிதியுதவியின் மூலமும் உருவாக்கப்பட்ட பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அரசின் சொத்துக்கள் தனியார் வசமாகும்.மின்சாரம் என்பது பொதுபட்டியலில் வருவதால் மத்திய அரசு மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது. எனவே தான், புதுச்சேரி மின்துறையை தனியார் மயம் ஆக்கும் மத்திய அரசின் முடிவுக்கு, முந்தைய காங்கிரஸ் அரசு எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், புதுச்சேரி சட்டமன்றத்தில் புதுவை அரசின் மின்சாரத்துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை திருப்பப்பெற வேண்டும் என்று கடந்த 22-07-2020 அன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் உரிமைகளை தட்டிப்பறிக்கும் வகையில், அமைச்சரவை தீர்மானத்தை புறந்தள்ளிவிட்டு, மத்திய அரசு தன்னிச்சையாக புதுச்சேரி மின்துறையை தனியார் மயம் ஆக்கும் நடவடிக்கையை எடுத்து வருவது கண்டனத்துக்குரியது.

தற்போது, புதியதாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மின்துறை அமைச்சர் அவர்கள் கூட கடந்த 26-07-2021 அன்று மின்துறை தனியார் மயம் குறித்து பதில் அளிக்கும் போது, ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் நலளகளை கணக்கில் கொண்டு நல்ல முடிவு எடுக்கப்படும் என்று அறிவித்தார். ஆனால் அவற்றையெல்லாம் மீறி கடந்த. 03-12-221 அன்று மின்துறை நிர்வாகம் தனியார் மயபடுத்த உள்ளோம் என்பதை தெரிவிக்கும் விதமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மின்துறையை தனியார்மயமாக்குவதற்கு மத்திய அரசு கூறும் காரணம் அதிகமான மின் இழப்பு. ஆனால், தனியார் மயம் ஆக்கப்பட்ட இடங்களில் மின்இழப்பு என்பது தற்போதுவரை 15 சதவீதமாக உள்ளது. புதுவை மின்துறையின் மின்னிழப்பு (AT & C losses) 11 சதவீதமாக மட்டுமே உள்ளது. இது மற்ற மாநிலங்களை காட்டிலும் மிகக்குறைவு கொரோன காலக்கட்டத்தில் புதுவை அரசு மருத்துவமனைகள் தான் பொதுமக்களின் உயிர்களை காப்பாற்றியது. தனியார் மருத்துவமனைகள் அல்ல. அதுபோல் அரசு பேருந்துகள்தான் இயக்கப்பட்டன. தனியார் பேருந்துகள் எதுவும் பொது மக்களின் நலனுக்காக இயக்கப்படவில்லை. அதேபோல்தான் புதுவை மின்துறையானது அரசுத்துறையாக இருந்த தங்குதடையின்றி மின்சாரம் வழங்கினார்கள். கொரோனாகாலத்திலும் காரணத்தால்தான் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியினை செய்து மக்களின் நன்மதிப்பை பெற்றனர். மேலும் மின்கட்டணமும் சில மாதங்கள் கழித்துநாள் நாம் கட்டினோம். மின்துறை காரணத்தினால்தான் இது சாத்தியமாயிற்று. அரசு துறையாகவே: இருந்த

மேற்கண்ட சாராம்சங்களை கருத்தில் கொண்டு, அறிவிப்பு வெளியான நாள் முதல் புதுச்சோர் அரசு மின்துறை பொறியாளிகளும் தொழிலாளர்களும் தொடர்ந்து பலகட்ட போராட்டங்களை நொடாச்சியாக நடத்தி வருகின்றனா அஊழியர் சம்மேனைமும் தொடர்ந்து பொதுமக்களுக்கு ஊழியர்களுக்கும். பாதிப்பு ஏற்படுத்தும் தனியார்மயத்துக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து போராட்டம் நடத்தி வருகின்றது மத்திய அரசும், புதுவை அரசும் புதுவை மின்துறையை கார்ப்பரேசன்/தனியார்மயம் ஆக்கும் நடவடிக்கையினை திரும்பப்பெறப்படும் என்கிற அறிவிப்பு வரும் வரை போராட்டங்கள் தொடரும் என்று மின்துறை போராட்டக்குழுவினர் அரசுக்கு தெரிவித்துள்ளனர். மேலும் எதிர்வரும் 01-02-2022 அன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தை துவங்க உள்ளனர். மின்துறையின் சொத்தானது புதுச்சேரி மக்களின் சொத்து அதனை ஒருபோதும் தனியாரிடம் ஒப்படைத்து விடக்கூடாது. எதிர்காலத்தில் அனைத்துத்துறைகளையும் இனிமேல் புதுவையில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என்பது கேள்விக்குறியாகும்.

எனவே இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தங்களின் புதுச்சேரியில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் புதுச்சேரி மின்துறை பாதுகாக்கும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

சி.எச். பாலமோகனன்

2 Comments

  • Electricity theft complaint in puducherry
    Selvi thirumalai carbides Eb NO-HK24410724 no 133 nedungadu karaikal puducherry 609603 Vairavikulam Lime products EB.Numper HK24410717 nedungadu karaikal puducherry 609603
    Two compeney FULL ELECTRICITY THEFT i compland puducherry electricity department but no action 2023
    SE2 RAJESH SANYAL
    HOD puducherry electricity department
    Karaikal E Nirmal Kumar
    V v wost puducherry electricity department

  • Electricity theft complaint in puducherry
    Selvi thirumalai carbides Eb NO-HK24410724 no 133 nedungadu karaikal puducherry 609603 Vairavikulam Lime products EB.Numper HK24410717 nedungadu karaikal puducherry 609603
    Two compeney FULL ELECTRICITY THEFT i compland puducherry electricity department but no action 2023
    SE2 RAJESH SANYAL – 6 pedeshen
    HOD electricity department – 6 pedeshen
    Karaikal E Nirmal Kumar – 2 peteshen
    V v wost puducherry electricity department

Leave a Reply