புரட்சிகரப் பாதையில் அரை நூற்றாண்டு மார்க்சிஸ்ட் கட்சியின் பொன்விழா ஆண்டு (1964 – 2014)

Red flagபுரட்சிகரப் பாதையில் அரை நூற்றாண்டு மார்க்சிஸ்ட் கட்சியின் பொன்விழா ஆண்டு (1964 – 2014)

 இந்திய விடுதலைக்குப் பிறகு, இந்திய பெருமுதலாளித்துவ வர்க்கப் பிரதிநிதிகளை காங்கிரசும், பாஜக இதர கட்சிகளைச் சேர்த்து அதிகாரத்தில் இருந்து வந்துள்ளன. ஆனால், கட்சிகள் மாறினாலும், வர்க்க அதிகாரம், அவற்றின் கொள்கைகள் மாறவில்லை. அதிகாரத்தில் உழைக்கும் வர்க்கம் அமர வேண்டும். இந்திய பிரச்சனைக்கான ஒரே தீர்வு மக்கள் ஜனநாயகப் புரட்சி. அத்தகு புரட்சி, உழைக்கும் மக்களால் நிகழ்த்தப்படும் சரித்திர மாற்றம். தொடர்ச்சியான உழைக்கும் வர்க்கங்களின் போராட்டங்கள், புரட்சிகர சிந்தனை உணர்வை வளர்த்தெடுத்து புரட்சிக்கு வழிவகுக்கும். எனவே, இந்தப் போராட்ட இயக்கங்களை மார்க்சிஸ்ட் கட்சி இத்தகு தடைகளை எதிர்ப்பட்டாலும் அவைகளை தகர்த்து முன்னேறிடும். இதுவே கட்சி உருவான பொன்விழா ஆண்டில் ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் மேற்கொள்ள உறுதிப்பாடாகும்.

 அன்றைய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் கடும் சித்தாந்த விவாதத்திற்கு அடிப்படையாக இருந்த முக்கிய கேள்வி, இந்திய புரட்சியை முன்னெடுத்துச் செல்கிற வர்க்க அணி எத்தகையது? சிபிஐ தேசிய ஜனநாயக அணி என்ற கருத்தாக்கத்தை முன்வைத்தனர். “தேசியஎன்ற கருத்தில் அனைத்து வர்க்கங்களும், (தேசிய முதலாளித்துவ வர்க்கங்கள் உட்பட) உள்ளடக்கியதாக இருந்ததால் மார்க்சிஸ்ட்கள் எதிர்த்தனர். இந்த கருத்து மோதல்தான் சரியான கருத்திற்கு இட்டுச் சென்றது. மார்க்சிஸ்ட் கடியின் செயல்பாடுகளை அஸ்திவாரமாக அமைவது எது? ஒரே சொற்றொடரில் இதனை அடக்கிடலாம். “மக்கள் ஜனநாயக அணி”. கட்சியின் அன்றாட அசைவுகள் அனைத்தும் இந்த அணி உருவாக்க வேண்டுமென்ற இலட்சியத்தை நோக்கியே அமைந்துள்ளது.

 இந்திய சமூகத்தை பகுப்பாய்வு செய்து, மக்கள் ஜனநாயக அணியில் அங்கம் வகிக்கும் வர்க்கங்களை விளக்குகிறது மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம். தொழிலாளி வர்க்கம், நிலமற்ற, ஏழை விவசாயிகள், நடுத்தர விவசாயிகள், பணக்கார விவசாயிகள், நடுத்தர வர்க்கங்கள், அறிவுஜீவிகள் உள்ளிட்ட வர்க்கப் பிரிவினை கொண்ட்தாக இந்த அணி அமையும். இந்தப் பகுதி மக்களை அன்றாட இயக்கங்கள் மூலம் புரட்சியை நோக்கிய உணர்வு மட்டத்தை உயர்த்தும் அபராத செயல்பாட்டில் மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் செயல்பட்டுவருகின்றனர். மக்கள் ஜனநாயக அணி மார்க்சிஸ்ட் கட்சி உயிர்நாடியாக இலட்சிய நடைமுறையாக விளங்குகிறது.

 மார்க்சியத்தில் அரசு என்கிற அதிகாரம் செலுத்தும் அமைப்பு பற்றிய தனியான பார்வை உண்டு. எல்லாருக்கும் பொதுவான அரசு என்ற பழமையான பார்வை தவறானது. அரசு ஆளுகிற வர்க்கத்தின் கருவியாக செயல்பட்டு வர்க்க ஒடுக்குமுறை நிகழ்த்துகிறது. முதலாளித்துவ அமைப்பில் அமைகிற வர்க்கங்கள் பெரும்பான்மை மக்களின் உழைப்பைச் சுரண்டுவதற்கும், தனது இலாபம், மூலதனக் குவியலுக்கும் அரசு பயன்படுகிறது. முதலாளித்துவ அதிகாரத்தை எதிர்ப்போரை ஒடுக்குவதற்கும் அரசுபயன்படுகிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தில் தேசத்தின் அரசு பற்றிய நிர்ணயிப்பு மிக முக்கியமானது. அரசின் செயல்பாடுகளில் எந்த வர்க்கங்களின் அதிகார கட்டுப்பாடு நிலவுகிறது என்பதில் தெளிவு இருக்கவேண்டும்.

 மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய அரசு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசு என்று அழுத்தமாக குறிப்பிடுகிறது. அத்துடன் மேலும் துல்லியமாக, இதற்கு பெருமுதலாளித்துவ வர்க்கங்களின் தலைமை உள்ளது என்பதையும் அந்நிய நிதிமூலதனக்கூட்டு இதில் உள்ளது என்பதையும் அழுத்தந்திருத்தமாக குறிப்பிடுகிறது. இந்த நிர்ணயிப்பு கருத்துப் போராட்டம் நடந்து உருவானது.

 இந்த அணியில் திரண்டு வரவேண்டிய வர்க்கங்கள் இன்றுள்ள நிலையில் முதலாளித்துவ சிந்தனைச் செல்வாக்கிலும், அமைப்புக்கிடையான செல்வாக்கிலும் இருந்து வருகின்றனர். இந்த சேர்மானத்தை கலைத்து, அவர்களை மக்கள் ஜனநாயக அணிக்குகொண்டு சேரவேண்டிய முக்கிய நீடித்த, தொடர்ச்சியான, சோர்வுற்ற அடுக்கடுக்கான முன்முயற்சிகள் நீண்டகாலம் தேவைப்படுகிற கடமை இது.

 இது இரண்டு வகையில் மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் முயற்சித்து வருகின்றனர். ஒன்று, பாரம்பரியமான உத்தியான ஐக்கிய முன்னணி கட்டுவது, இரண்டு கட்சி உறுப்பினர்கள் வெகுஜன அமைப்புகளில் செயல்படுவது.

 இந்த இரண்டு நடைமுறைகளிலும் நீண்ட அணுபவம், கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு உண்டு. அவ்வப்போது தவறுகள் விவாதிக்கப்பட்டு சரிசெய்யப்பட்டுள்ளன.

 விடுதலைக்காலத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் சேர்ந்து போராடினர். ஐக்கிய முன்னணியின் உத்தி அடிப்படையில் இந்த ஒற்றுமை பல்வேறு முரண்பாடுகள் இருந்தபோதும் நீடித்து, விடுதலை இலட்சியம் வெற்றிபெரும் நிலை உருவானது. ஆனால், காங்கிரஸுடன் ஒத்துழைப்பு நீட்டித்து,ம் நேரு அரசாங்கத்தை ஆதரிக்க அன்றைய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஒரு பிரிவினர் முனைப்பு காட்டினர். இது கடும் விவாதத்தை எழுப்பியது. விவாதம் பல சித்தாந்தப் பிரச்சனைகளை உள்ளடக்கியதாக இருந்தது. மக்கள் ஜனநாயக அணி கட்டுகிற புதிய தேவை அடிப்படையில் ஐக்கிய முன்னணி உத்தி கடைபிடிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட்கள் கருதினர். இதற்கான அடிப்படை காங்கிரஸ் எதிர்ப்பு நிலைபாட்டிலிருந்து செல்ல அவர்கள் வலியுறுத்தினர். பல்வேறு வகைகளில் சிதறண்டுள்ள உழைக்கும் வர்க்கங்களை மக்கள் ஜனநாயக அணியை நோக்கித் திரட்டுவதற்கு சிறந்த செயல்பாட்டுக் கருவியாக ஐக்கிய முன்னணி உத்தி அமைந்துள்ளது. ஆனால் இதர பெரிய கட்சிகளுடன் கோட்பாடர்ற அதிக நெருக்கம் அல்லது பிற சக்திகளிடமிருந்து தனிமைப்பட்டு நிற்பது ஆகிய தவறான அணுகுமுறைகள் இதில் இருந்தால், அதில் பலன்கள் கிடைக்காதது மட்டுமல்லாதது, இயக்க வளர்ச்சியிலும் தேக்கம் ஏற்படும். எதிர்காலத்தில் ஐக்கிய முன்னணி கலையில் கட்சி தேர்ச்சி பெற வேண்டும் என்பது 50 விழா ஆண்டு பொன்விழா உறுதிப்பாடாக அமையும்.

 பல்வேறு தரப்பட்ட மக்களின் இயக்கங்களை உருவாக்குவதர்கான விரிந்த தளங்களாக, தொழிற்சங்கம், விவசாய சங்கம் உள்ளிட்ட வெகுஜன அமைப்புக்கள் உள்ளன. முதலாளித்துவ அமைப்புகளின் செல்வாக்கில் உள்ள மக்களை முதலாளித்துவ சமூக அமைப்புக்கு எதிராக செயல்படவைக்கும் வாய்ப்பாக வெகுஜன அமைப்புக்கள் இருப்பதால் இதில் கம்யூனிஸ உறுப்பினர்கள் செயல்பட வேண்டுமென்பது மார்க்சிஸ்ட் கட்சி நிலை.

 துவக்க காலங்களில் இந்தக் கோட்பாட்டிலும் பெரும் கருத்துமாறுபாருகள் நிலவின. இதர முதலாளித்துவ கட்சிகளுக்கு உள்ளது போன்று கட்சியின் பிரிவுகளாக வெகுஜன அமைப்புகளை நட்த்த வேண்டுமென்ற தவறான கருத்து நிலவியது. இக்கருத்துக்கு எதிராக கட்சிக்குள் விவாதம் நீடித்து வந்தது.

 1978 ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சி சால்க்கிய சிறப்பு ஸ்தாபன மாநாட்டில் வெகுஜன அமைப்புக்கள் பற்றிய மார்க்சிய லெனினியக் கோட்பாடுகளை கட்சி வரையறுத்தது. பிறகு அடுத்ததடுத்துக் கிடைத்த அனுபவங்கள் அடிப்படையில் வெகுஜன அரங்கங்களின் செயல்பாடுகளை மேம்படுத்துவதர்கான ஆவணங்கள் உருவாக்கியது.

 வெகுமக்களை வென்றெடுக்கும் வகையில் முன்முயர்சிகளை மேற்கொள்வது, அமைப்புக்களை ஜனநாயகரீதியாக செயல்படுத்துவது என்ற புரிதல் உருவாக்கப்பட்டு வெகுஜன அமைப்புக்கள் செயல்பட்டு வருகின்றன.

 எனினும் செல்வாக்கு தளத்தை வீச்சாக விரிவுப்படுத்துவது, முற்போக்கு, இடதுசாரி அரசியல் கருத்துக்களுக்கு ஆதரவாக வெகுஜன உறுப்பினர்களின் சிந்தனையை மேம்படுத்துவது, போன்றவற்றில் முன்னேற்றம் காண வேண்டியுள்ளது.

 அரசியல், தத்துவார்த்த, ஸ்தாபனத் துறைகளில் பல்வேறு பிரச்சனைகளில் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சிக்குள் தொடர்ந்து கருத்துவேறுபாருகள் இருந்து வந்தன. இந்த சித்தாந்த மோதல்கள் மேலும் மேலும் உண்மையான, சரியான கருத்துக்களுக்கு வந்தடைய உதவியது.

 கடும் கருத்து விவாதங்கள், மோதல்கள் இருந்த வரலாற்றினை கம்யூனிஸ்டுகள் மறைத்திட விரும்பவில்லை. ஏனென்றால் அவை மார்க்சிய லெனினிய த்ததுவத்தை இந்திய நிலைமைகளுக்கு ஏற்ப அமலாக்குவதில் ஏற்பட்ட சர்ச்சைகள், தனிப்பட்ட குரோத விரோதத்தால் ஏற்பட்டவை அல்ல. அவை இந்திய வர்க்க சமூகத்தை புரிந்துகொண்டு புரட்சியை முன்னெடுத்துச் செல்ல நடத்தப்பட்ட விவாதங்கள்.

 இதனால்தான், கருத்து மோதல்கள் கொண்ட வரலாற்றுப் பின்னணியில் இருந்தபோதிலும், இப்போது சிபிஐ, சிபிஐஎம் கட்சிச் செயல்பாடுகள் அதிகரித்து, இந்தியாவிற்கு மாற்று இடதுசாரிகளே என்பதை எடுத்துரைக்கும் விதத்தில் ஒற்றுமை விரைந்து வருகிறது.

 

Leave a Reply