மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச 22வது மாநாடு-2017

????????????????????????????????????

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச 22வது மாநாடு பாகூரில் தியாகி தாண்டவசாமி நினைவரங்கத்தில் சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் 31 பேர் கொண்ட புதிய பிரதேசக்குழு தேர்வு செய்யப்பட்டது. செயலாளராக ஆர்.ராஜாங்கம் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். பிரதேச செயற்குழு உறுப்பினர்களாக ஆர்.ராஜாங்கம், வெ.பெருமாள், ஜி.ராமசாமி, எஸ்.ராமச்சந்திரன், த.தமிழ்ச்செல்வன், என்.பிரபுராஜ், வே.கு.நிலவழகன், சத்தியா, சீனிவாசன், வின்சென்ட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  மாநில மாநாட்டிற்கான 5 DSC_0230பிரதிநிதிகளும் தேர்வு செய்யப்பட்டனர். நிறைவாக மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், “ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி மக்களின் வளர்ச்சிக்கு அன்றாடம் பல்வேறு போராட்டங்களை நடத்திவரும் நிலையில், இன்றைக்கு மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ள துணைநிலை ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.

எனவே இதற்கான போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்துவதோடு, அனைத்து ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து பரந்துபட்ட மேடை அமைத்துப் போராட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.IMG_5761

புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெறவேண்டும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். புதுச்சேரியின் விவசாயத்தை முன்னேற்றவும்,புதிய தொழிற்சாலைகள் துவங்குவதற்கு அனைத்து நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளவேண்டும் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

IMG_5780மாநாட்டையொட்டி ஞாயிற்றுக் கிழமை மாலை பாகூர் கடை வீதியில் செந்தொண்டர் பேரணி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கான சிறப்புக் கருத்தரங்கம், கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இக்கருத்தரங்கத்திற்கு பிரதேசச் செயலாளர் ஆர்.ராஜாங்கம் தலைமை தாங்கினார். மத்தியக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர் வெ.பெருமாள், பிரதேசக்குழு உறுப்பினர் தா.முருகன், பாகூர் கொம்யூன் செயலாளர் த.தமிழ்ச்செல்வன் ஆகியோர் பேசினர்.

Leave a Reply