பீகார் மாநிலத்தின் பூர்னியா தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் தோழர் அஜித் சர்க்கார் 1980லிருந்து 1998 வரை தொடர்ந்து 18 ஆண்டுகளாக மக்கள் ஆதரவோடு MLAவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து 4 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து சொந்த வீடுகூட இல்லாமல் அப்பழுக்கற்ற தலைவராக வாழ்ந்தவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நேர்மை, எளிமை ஆகிய பாரம்பரியம் மிக்க அரசியலின் பிரதிநிதியாக வாழ்ந்தவர். இவரைப்போலவே ஏற்கனவே தோழர்கள் சந்திரசேகர், மேகதோ, ஆகிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர்கள் நிலச்சுவான்தார்களால் படுகொலை செய்யப்பட்டனர். தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி சுமார் 30 ஆயிரம் ஏக்கர் நிலத்தை நிலபிரபுத்துவ கும்பலிடமிருந்து நிலத்தை கைப்பற்றி தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆதிவாசி மக்களுக்கு பகிர்ந்தளித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இதனால் ஆத்திரமடைந்த நிலச்சுவான்தார்கள் முதலாளிகளும் தேர்தல் மூலம் இவர்களை வீழ்த்த முடியாது என்பதால் இம்மூவரையும் படுகொலை செய்தனர்.
வீடற்ற ஆயிரக்கணக்கான மக்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுத்தவர் ஏராளமான மக்கள் பணிகள் செய்தமையால் தொடர்ந்து 18 ஆண்டுகாலம் எந்தவித விளம்பரம் ஆடம்பர செலவும் செய்யாமல் எதிர் வேட்பாளர்களை வெற்றி கொண்டவர்…
தோல்வியடைந்தோர் சும்மா இருப்பார்களா..?
நிலப்பிரபுத்துவ கும்பலின் ஆதரவாளர் லாலு பிரசாத் கட்சியின் பப்பு யாதவ் மக்கள் தலைவர் அஜித் சர்க்காரை, 1998 ஆம் ஆண்டில் இதே போன்ற ஒரு நாளில் கூலிப்படையை வைத்து சுட்டு கொலை செய்தான் அவர் உடலில் 107 துப்பாக்கி குண்டுகள் இருந்தன, எந்தளவு வெறியோடு கொலை செய்திருக்கிறார்கள்.
அஜித் சர்க்காரின் மரணத்திற்குப் பின்னணியில் இருந்தவர், அப்போது லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளம் (ஆர்.ஜே.டி.) கட்சியைச் சேர்ந்த பப்பு யாதவ் தேர்தலில் அஜித் சர்க்காரை வெல்லமுடியாது என்பதால் கொலை செய்யப்பட்டார். பிறகு வழக்கம்போல நீதிமன்றத்தின் மூலம் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு பிறகு குற்றமற்றவர் விடுதலை செய்யப்பட்டார்.
இந்திய வரலாறு முழுவதும் இந்திய கம்யூனிஸ்டுகள் இரத்தம் இந்திய நிலப்பரப்பெங்கும் சிந்தப்பட்ட உள்ளது. அநீதிகளுக்கு எதிராக நில உரிமையாளர்களுக்கு எதிராக, முதலாளித்துவ அதிகார வர்க்கத்துக்கு எதிராக ஏழை எளிய மக்களின் பாட்டாளி மக்களின் விவசாயிகளின் குரலாக இன்றைக்கும் ஓங்கி ஒலிப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குரலே.
மேலும் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.