கீழூர் வாக்கெடுப்பு

புதுச்சேரியை பிரெஞ்சி ஏகாதிப்பத்தியவாதிகள் பல ஆண்டுகள் ஆண்ட போதும் அவர்களுக்கு எதிரான போராட்டமும் தொடங்கிவிட்டது. குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரியில் தொடங்கியது முதல் சுதந்திர போராட்டமும் தொழிலாளர் உரிமைக்கான இயக்கமும் வீருநடைபோட்டன.

Puducherry52.jpg1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி இந்தியா விடுதலை பெற்ற போது புதுவையிலும் பிரெஞ்சு அரசுக்கு எதிராக விடுதலை போராட்டங்கள் தீவிரமடைந்தன.  கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் மக்கள் தலைவர் தோழர் வ.சுப்பையா நடத்தி தொடர் போரட்டத்தின் விளைவாக  ஆட்சி அதிகாரம் மாறபோகிறது என்பதை அறிந்த அதுவரை பிரெஞ்சி ஆட்சியாளர்களுக்க ஆதரவாக இருந்த  குபேர், முத்துக்குமாரப்ப ரெட்டி யார், வெங்கடசுப்பா ரெட்டியார், முத்துபிள்ளை, உள்ளிட்ட தலைவர்களும் , புதுச்சேரி தொழிலாளர் வர்க்கமும் போராட்டங்கள் தீவிரமாகின. புதுவையின் விடுதலைக்கு முதலில் உதவ இந்திய அரசு மறுத்தது .  அதனால் புதுவை தொழிலாளர் வர்க்கம் தாமாகவே நெட்டப்பாக்கம், பாகூர் உள்ளிட்ட பகுதிகளை விடுதலை பெற்ற பகுதிகளாக அறிவித்தனர்.

இதனிடையே வியாட்நாமில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் புரட்சி புயலில்  பிரெஞ்சுபடைகள் தோல்வியை தழுவின. இதனால் அந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு பிரான்சு தள்ளப்பட்டது. இதனால் 1954-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பிறகு பிரான்சின் மனநிலையில் மாற்றங்கள் உருவானது.  இந்தியாவுடன் இணைய புதுவை தலைவர்கள் விருப்பம் தெரிவித்தனர். சுதந்திரம் பெற்ற பகுதிகளாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் இந்திய தேசியக்கொடியையும் ஏற்றினார்கள். Kizhur Declaration Monument

பிரதமர் நேருவும் சில சமயோசிதமான நடவடிக்கைகளில் இறங்கினார். இதைத்தொ டர்ந்து புதுச்சேரியை இந்தியாவுடன் இணைக்க 1954-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 13-ந்தேதி பிரான்சு அரசு ஒப்புக் கொண்டது. இதற்கான வாக்கெடுப்பு அக்டோபர் 18-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் 1950-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அனைவரும் வாக்களிக்க தகுதி பெற்ற வர்களாக அறிவிக்கப்பட்டனர்.

அதாவது 1950-ல் நடந்த தேர்தலில் மொத்தம் 192 பேர் வெற்றி பெற்றிருந்தனர். அவர்களில் 14 பேர் மரணம் அடைந்திருந்தனர். மீதமுள்ள 178 பேர் வாக்களிக்க தகுதியானவர்களாக அறிவிக்கப்பட் டது. வாக்கெடுப்பு நடத்த கீழூர் தேர்வு செய்யப்பட் டது. அங்கே ஒரு கொட்டகை அமைக்கப்பட்டு வாக்குப்பதிவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வாக்குப்பதிவு மையத்தின் கிழக்கே பிரெஞ்சு ராணுவமும், மேற்கில் இந்திய ராணுவமும், சூழ்ந்தி ருந்தது. சுற்றிலும் பலத்த பாதுகாப்புக்கு இடையே 178 பேரும் வாக்களித்தனர்.

இந்திய ஒன்றியத்துடன் பிரெஞ்சிந்திய பகுதிகள் இணைய வேண்டுமா? என்று வாக்கெடுப்பில் கேள்வி கேட்கப்பட்டு அதற்கு 170 பேர் ஆம் என்று பதில் அளித்தனர். வாக்களித்தவர்களில் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற 8 பேர் மட் டுமே இல்லை என்று வாக்களித்தனர். இந்த வாக்கெடுப்பு வெற்றியை தொடர்ந்து புதுவை முழுவதும் விடுதலை கொண்டாட்டங்கள் தொடங்கின.

வாக்கெடுப்பு நடந்த இடத்தில் இந்தியாவுடன் இணைய ஆதரவாக வாக்களித்த 170 பேரின் பெயரும் பொறிக்கப்பட்டு கல்வெட்டும், வாக்கெடுப்பு நினைவு ஸ்தூபியும் அங்கு உரு வாக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 16- ந்தேதி இங்கு தேசியக்கொடியேற்றி கொண்டாட்டங்கள் நடந்து வருகிறது. இந்த பகுதியை ஏராளமான சுற்றுலா பயணிகளும் வந்து பார்த்து செல்கின்றனர்.

Puducherry3.jpg

Leave a Reply