பிரெஞ்சு புரட்சிக்கு வித்திட்ட பாஸ்டில் சிறை தகர்ப்பு தினம் இன்று.

மனித குல வரலாற்றில் ஜூலை14, 1789 மிகவும் முக்கியமான ஒரு தினமாகும். பாரிஸ் நகர மக்கள் பாஸ்டில் சிறைக் கதவுகளை உடைத்து அரசியல் கைதிகளை விடுவித்த தினம். பிரெஞ்சு புரட்சியின் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் இது ஒன்றாகும்.

1789 இல் அரங்கேறிய பிரெஞ்சு புரட்சி முக்கியத்துவம் வாய்ந்த நவீன கால புரட்சியாகும். அனைத்து மக்களும் சமம் என்று அது முழங்கியது. “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்” என்ற முழக்கங்களை முன்வைத்தது. இது மானுட சிந்தனை வரலாற்றில் ஒரு மிகப் பெரிய முன்னேற்றம். ஆகவே, இன்றும் நம்மைப் போன்ற ஜனநாயக இயக்கங்கள் பிரெஞ்சு புரட்சியையும் , அதன் நிகழ்வுகளில் ஒன்றான பாஸ்டில் சிறை தகர்ப்பு நாளையும் நினைவு கூறுகிறோம்.

அதே சமயம் பிரெஞ்சு புரட்சியின் வரம்புகளையும் வர்க்கத்தன்மையையும் நமது ஆசான்கள் மார்க்சும், எங்கல்சும், லெனினும் சரியாகவே சுட்டிக்காட்டினார்கள்.

“பிரெஞ்சு புரட்சி ஒடுக்கப்பட்ட போதிலும், வரலாற்றை படிக்கும் ஒவ்வொருவரும் அதை வெற்றிகரமானதேன்றே கருதுகின்றனர். இந்த பிரெஞ்சு புரட்சி பூர்ஷ்வா ஜனநாயகம் மற்றும் பூர்ஷ்வா சுதந்திரத்திற்கு அடித்தளம் இட்டது.” என்று கூறினார் லெனின்.

“பிரெஞ்சு புரட்சி ஒரு பூர்ஷ்வா புரட்சி என்பதி ஐயமில்லை. அதனுடைய தன்மை பூர்ஷ்வா அடிப்படையில் அமைந்தது. பூர்ஷ்வா தன்மை கொண்டதாக இருந்ததால், சமூகத்தின் உழைக்கும் மக்களை அது சுரண்டலிலிருந்து விடுவிக்க வில்லை.” என்று தெளிவாக சொன்னார் மார்க்ஸ்.

பாஸ்டில் தினம்-பின்னணி

பாஸ்டில் சிறை என்பது பாரிஸ் நகரின் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு கோட்டை மட்டுமல்ல. அந்நாட்டின் பிரதான சிறையும் ஆகும். அரசியல் கைதிகளை அடைக்கும் இடம் என்பதுடன் மன்னராட்சியின் அடையாளமாகவும் அது கருதப்பட்டது.

1688 முதல் 1783வரை பிரான்சும் பிரிட்டனும் ஐந்து நீண்ட போர்களில் ஈடுபட்டன. இதன் விளைவாக அரசு கஜானா காலியாகி இருந்தது. அரசின் வரிக் கொள்கையால் ஏற்கனவே கடும் சுமையால் பாதிக்கப்பட்டிருந்த மக்கள் மீது அரசு மேலும் கடும் சுமையை ஏற்றியது.

16ம் லூயி மன்னனின் வரிக்கொள்கையை எதிர்த்த நிதி அமைச்சர் ஜாக் நேக்கர் மக்கள் மத்தியில் பிரபலமானார். அன்று மக்கள் மூன்று பிரிவாக (Three Estates) பிரிக்கப்பட்டிருந்தனர்.

அரசகுடும்பம் , அதன் ஆதரவாளர்களான பெரும் நிலக் கிழார்கள் ரோமன் கத்தோலிக்க ஆலயத்தின் குருக்கள், அதிகாரம் செலுத்துவோர்,சிறு வணிகர்கள், விவசாயிகள், உழைப்பாளிகள் என சாதாரண மக்கள்.

பிறப்பு அடிப்படையில் அனைத்து சலுகைகளும் தீர்மானிக்கப்பட்டதால், ஏழைகள் முன்னேற வழியே இல்லாத சூழல் நிலவியது. சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால், மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். மன்னன் 19.5.1789 அன்று பொது குழுவை கூட்டினான். மூன்றாம் பிரிவு[மக்கள்] தேசிய அசெம்பிளியை உருவாக்குவதாக அறிவித்தனர்.

11.7.1789 நிதி அமைச்சர் மன்னரால், பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதன் பின் மன்னரின் ராணுவம் தங்களை தாக்கக்கூடும் என்ற அச்சத்தில், மக்கள் கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்துக் கொண்டு பாஸ்டில் சிறையை முற்றுகை இட்டனர். அந்த கலவரத்தில் பலர் உயிரிழந்தனர். இறுதியில் பாஸ்டில் சிறை மக்கள் வசம் வந்தது. இந்த சம்பவம் “மன்னராட்சியின் நிறமான வெள்ளையை மக்களின் நிறங்களான நீளமும், சிவப்பும் சூழ்ந்தது” என்று வர்ணிக்கப்பட்டது. இன்றும் அந்நாட்டின் கோடியில் அந்த
மூன்று நிறங்களும் இருப்பதை காண முடியும். 04.08.1789 அன்று நிலபிரபுத்துவம் ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, ‘மனித/குடிமக்களின் சாசனம்’ பிரகடனப்படுத்தப்பட்டது.

21.9.1792 அன்று பிரான்ஸ் குடியரசு என்று அறிவிக்கப்பட்டு லூயி மன்னன் கழுவிலேற்றப்பட்டான்.

கில்லட்டின்[கழுவேற்றப் பயன்படுவது], பிஜியன் குல்லாய் [விடுதலையின் அடையாளம்] நீலம் சிவப்பு வெள்ளை நிறங்களைக் கொண்ட கொடி, தேசிய கீதம் ஆகியவை பிரெஞ்சு புரட்சியின் அடையாளங்களாக கருதப்படுகின்றன.

பூர்ஷுவா புரட்சியின் எல்லைகள்
பிரெஞ்சு புரட்சி “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்” என்ற முழக்கங்களை ஒரு புறம் முன் வைத்தாலும், அந்நாட்டின் செல்வந்தர்கள், ஆளும் வர்க்கங்கள், கறுப்பின மக்களை அடிமைகளாக, அமெரிக்காவிற்கு அனுப்பிய வர்த்தக ஏற்பாட்டில் பங்குபெற்றது. பின்னர் ,19ம் மற்றும் 20ம் நூற்றாண்டுகளில் பிரெஞ்சு முதலாளித்துவம் ஏகபோக முதலாளித்துவமாக வளர்ந்து ஏகாதிபத்திய முகாமின் வலுமிக்க அங்கங்களில் ஒன்றாகவும் செயல்பட்டதையும் நாம் நினைவில் கொள்வோம். இந்தோ சீனத்தில், [வியத்னாம், லாவோஸ், கம்போடியா] , அல்ஜீரியாவில் இன்னும் பல ஆப்பிரிக்க , மேற்கு ஆசிய நாடுகளில் பிரெஞ்சு முதலாளி வர்க்கம் நடைமுறைப் படுத்திய சுரண்டலும், மனி த உரிமை படு கொலைகளும், ஒரு “பூர்ஷ்வா புரட்சியின்” வரலாற்று வரம்புகளை நமக்கு மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துகின்றன. இன்றும் பிரெஞ்சு ஏகாதி பத்தியம் உலகளவிலான சுரண்டலுக்கு பக்கபலமாக உள்ளது
சோசலிசமே மானுட விடுதலையை நனவாக்கும் பிரெஞ்சு புரட்சி மானுட விடுதலைக்கான நெடிய பயணத்தில் முக்கியமான மைல்கல். ஆனால், அப்பயணத்தை முன்பின் முரணற்று முன்னெடுத்து சென்று முழுமையான மானுட விடுதலையை சாதிப்பது தொழிலாளி வர்க்கத்தின் தலைமை யிலான சோஷலிச புரட்சியால் மட்டுமே நிகழும். பாஸ்டில் சிறை தகர்ப்பை மக்கள் எழுச்சி என்று போற்றுவோம். முதலாளி வர்க்கத்தின் ஆட்சியில் மானுட விடுதலை சாத்தியம் இல்லை என்ற தெளிவுடன் சோஷலிச புரட்சியை முன்னெடுத்து செல்லுவோம்.!

On July 14, 1789, revolutionaries stormed the Bastille prison, which had become a symbol of the monarchy’s dictatorial rule. The event became one of the defining moments in the French Revolution that followed, as it marked the beginning of the overthrow of the ancien régime.

Leave a Reply