மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளராக எஸ்.ராமச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில 24வது மாநாடு தொண்டர்கள் அணிவகுப்புடன் கொட்டும் மழையில் சனிக்கிழமை வில்லியனூரில் துவங்கி ஞாயிற்றுக்கிழமை மாலை வரை நடைபெற்றது.தோழர் சீதாராம் யெச்சூரி நினைவரங்கத்தில் துவங்கிய மாநாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் துவக்கி வைத்து பேசினார். தமிழ் மாநில செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன், தமிழ் மாநிலக் குழு உறுப்பினர் ஆறுமுகநயினார் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்கள். கடந்த மூன்று ஆண்டுகால வேலை அறிக்கை மாநில செயலாளர் ஆர். ராஜாங்கம் வாசித்தார். அதனைத் தொடர்ந்து வரவு செலவு அறிக்கை மாநில செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் தாக்கல் செய்தார்.
எஸ்.ராமச்சந்திரன் தேர்வு
தொடர்ந்து நடைபெற்ற மாநாட்டில் பிரதிநிதிகள் விவாதத்திற்கு பிறகு புதிய மாநில செயலாளராக எஸ். ராமச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டார். மேலும் புதிதாக 30 நபர்கள் கொண்ட புதிய மாநில குழுவும், மாநில செயற்குழு உறுப்பினர்களாக ராமச்சந்திரன், ராஜாங்கம், சுதாசுந்தர்ராமன் பெருமாள் , தமிழ்ச்செல்வன், சீனுவாசன்,கொளஞ்சியப்பன்,பிரபுராஜ் , கலியமூர்த்தி, சத்தியா ஆகிய 10 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.