புதுச்சேரி மாநில 24வது  மாநாடு கொட்டும் மழையிலும் எழுச்சியோடு தொடங்கியது.

Cpim 24th Puducherryஅகில இந்திய அளவில் பாஜக விற்கு மாற்று சக்தியை உருவாக்க  மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும் என்று ஜி. ராமகிருஷ்ணன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  புதுச்சேரி மாநில 24வது  மாநாடு தொண்டர்கள் அணிவகுப்புடன் கொட்டும் மழையில் சனிக்கிழமை வில்லியனூரில் நடைபெற்றது.
மாநாட்டு ஊர்வலத்திற்கு செயற்குழு உறுப்பினர் தமிழ்ச் செல்வன் தலைமை தாங்கினார். மூத்த தலைவர் சுதா சுந்தரராமன்  பேரணியை துவக்கி வைத்தார் . அதனைத் தொடர்ந்து
கட்சியின் புதுச்சேரி நகர கமிட்டி  சார்பில் செயற்குழு உறுப்பினர் கலியமூர்த்தி தலைமையில், ஜூலை 30 தியாகிகள் நினைவு சுடர் மாநாட்டு அரங்கத்திற்கு கொண்டுவரப்பட்டது. அதனை மூத்த தோழர் முருகன் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து பாகூர் கமிட்டி  செயலாளர் சரவணன் தலைமையில் தோழர் சீதாராம் யெச்சூரியின் நினைவு சுடர் கொண்டுவரப்பட்டது அதனை மாநில குழு உறுப்பினர் ஜி. ராமசாமி பெற்றுக் கொண்டார். உழவர்கரை  கமிட்டியின் செயலாளர் ராம்ஜி தலைமையில் கொண்டுவரப்பட்ட மாநாட்டு கொடியை மூத்த தோழர் பி. கலியபெருமாள் பெற்றுக்கொண்டார். தோழர் என். சங்கரய்யா நினைவு கொடிக்கம்பம் மண்ணடி பட்டு கமிட்டி செயலாளர் அன்புமணி தலைமையில்  கொண்டுவரப்பட்டது அதனை மாநாட்டு வரவேற்பு குழு தலைவர் ஞானசேகரன் பெற்றுக்கொண்டார்.
மாநாட்டு கொடியை மூத்த தோழர் தா.முருகன் ஏற்றி வைத்தார்.
 தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர்  தோழர் சீதாராம் யெச்சூரி நினைவரங்கத்தில் துவங்கிய  போது மாநாட்டிற்கு மாநில செயற்குழு உறுப்பினர் வெ.பெருமாள் தலைமை தாங்கினார்.
 மாநாட்டை துவக்கி வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில்,
“மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே அரசு இருந்தால் டபுள் என்ஜின் அரசாக இருக்கும் என்று பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்தார். டபுன் என்ஜின் அரசால் மக்களுக்கு நன்மை இல்லை- கெடுதல் தான். மத்திய, மாநிலத்தில் ஒரே அரசாக இருப்பதால் புதுச்சேரி மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி பரிசோதனை கூடமாக மாற்றப்பட்டுள்ளது.
ரேஷன்கடைகளை மூடியது, மின்துறை தனியார் மயமாக்குதல், ப்ரீபெய்டு மின் மீட்டர் பொருத்துதல், மின்கட்டணத்தை அதிகரித்தல் ஆகியவை உதாரணங்கள். எம்எல்ஏக்கள், எம்பிக்கள் இருப்பதை விட மக்கள் பிரச்சினைகளுக்கான போராடுவதே அரசியல் கட்சிகளுக்கு முக்கியம். மக்கள் பிரச்சினைகளை மத்திய பாஜக அரசு கவனம் செலுத்தவில்லை. கார்ப்பரேட் அதிபர்களுக்கு வரியை மட்டும் ரத்து செய்கிறார்கள் எனவே அகில இந்திய அளவில் பாஜகவை தோற்கடிக்க மாற்று சக்தியை உருவாக்குவதே மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும் என்று குறிப்பிட்டார்.
என்.குணசேகரன்
மார்க்சஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன்
 பிரதிநிதிகளின்  மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.இந்திய மக்களை பிளவுபடுத்தும் ஆர்எஸ்எஸ்,பாஜகவின் முயற்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து எதிர்த்து வருகிறது. தமிழகத்திலும், புதுச்சேரியிலும் அத்தகைய  முயற்சியை  மக்கள் முறியடிக்க இந்த மாநாட்டில் அதற்கான போராட்டத்தை வகுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மாநாட்டில் கட்சியின் தமிழ் மாநில குழு உறுப்பினர் ஆறுமுக நயினார்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் அ.மு.சலீம் சிபிஐ,எம்.எல் கட்சியின் மாநில செயலாளர் சோ. பாலசுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
புதுச்சேரி மாநில செயலாளர் ராஜாங்கம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள்   பங்கேற்றனர். தொடர்ந்து இன்று ஞாயிற்றுக்கிழமை வரை மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில்  புதுச்சேரி மாநில புதிய செயலாளர் உள்ளிட்ட புதிய மாநில குழு உறுப்பினர்கள்  தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Img 20241130 111634Img 20241130 Wa0563Cpim 24th Puducherry2மாநாட்டு பேரணியில் இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் சுபாஷ் சந்திரபோஸ் பகத்சிங் ஜான்ச

Leave a Reply