பல்லவி :
எப்பா, எப்பா சூரப்பா, நீ கேளப்பா
அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடுறியே ஏனப்பா?
கூலிய வாங்கி சம்பளம் வாங்கிப் பாரப்பா
கூழுக்கும் மிஞ்சல, பாலுக்கும் பத்தல ஏனப்பா?
(எப்பா…எப்பா)
சரணம் ;
மாசம் பிறந்ததும் உனக்கு மயக்கம் பிறக்குது
ஒண்ணாம் தேதி தான் உனக்கு உலகம் விடியுது
பத்துக்கு ஒண்ணாக் கடனக்கட்டி
வாங்குன பொருளுக்குத் தவண கட்டி
மளிகைக் கடையில் சிட்டையக்கட்டி
வாடகை கட்டி வட்டியக்கட்டி
வட்டிக்கும் மேல துட்டக்கட்டிப் பார்த்தியா – உனக்கும்
ரெண்டாம் தேதி மாசக்கடைசி ஆச்சுதா?
(எப்பா… எப்பா)
மோட்டார் பைக்குல ஒனக்கு பிரேக்குப் புடிக்கல – புள்ள
காலேஜூ பீசுக்கும் உனக்கு காசு மிஞ்சல
புதுசா ஒரு லோனு வாங்கப் போனியா? – அங்கே
சிபிலு ஸ்கோரு பத்தாதுண்ணு நின்னியா?
(எப்பா…. எப்பா)
நாளுக்கு நாளு ஏறுதே பெட்ரோலு பில்லு
மாசா மாசம் கூடுதே கேஸ்க்கும் பீசு
கச்சா எண்ணெய் கொறஞ்சாலும் பெட்ரோல் கூடுது
அதானி, அம்பானி கல்லாக்கட்ட அரசாங்கம் வரியப் போடுது
கலால் வரி, கந்துவரி கண்ணக்கட்டுது
அரசாங்கம் சொல்லும் காரணம் எல்லாம் நெஞ்ச முட்டுது
(எப்பா… எப்பா)
அகவிலைப்படி பஞ்சப்படி ஏதாச்சும் உண்டா?
வருசா வருசம் இன்கிரிமெண்டும் ஏதாச்சும் உண்டா?
சம்பளக் காசும் ஏழு வருசமா ஏறல – ஆனா
அதானிக்காக வரி கட்டுறதில ஒரு குறையில்ல
(எப்பா… எப்பா)
அஞ்சு வருசம் புள்ள படிச்சு
அதுக்கும் மேல பையன் படிச்சு
வேலைக்குப்போனா தீருமா நம்ம வேதனை
அதுவரைக்கும் எப்படிப் போகும் இந்த ரோதனை
வரியக்கட்டி, வட்டியக்கட்டி, வாயக்கட்டி வயித்தக்கட்டி
கண்ணக்கட்டி மல்லுக்கட்டிப் பொழைக்குற
ஒழச்சு, ஒழச்சுக் கரை சேர நீயும் துடிக்குற
உன்னைய உறிஞ்சு உறிஞ்சு கொள்ளையடிச்சு
உனக்கு வரிஞ்சு வரிஞ்சு வரியப்போட்டு
உலகத்துக்கே பணக்காரனாகப் பார்க்குறான்…
அவன் ஒண்ணா நம்பர் யோக்கியனா நடிக்குறான்
அதானி ஒண்ணா நம்பர் யோக்கியனா நடிக்குறான்
மோடி ஒண்ணா நம்பரு யோக்கியனா நடிக்குறான்…
பாடலாசிரியர் : சக்தி சூர்யா
__________________________________________________________________
ஆனை விற்கும் வர்த்தகர்
———————————————————————————————–
ஆனை விற்கும் வர்த்தகராம்-நம்மை
ஆளுகின்ற உத்தமராம்
சேனைக்கெல்லாம் அதிகாரி- இந்த
சீமை வலம் வரும் உபகாரி (ஆனை)
சட்டம் பல போட்டிடுவார் -பல
சதுராட்டம் ஆடிடுவார்
ஒற்றை மொழிக் கொள்கையென-மற்ற
மொழி அழிக்க முனைந்திடுவார்
(ஆனை)
அ ஆ பழகும் முன்னே
பொதுத்தேர்வு என்றிடுவார்
அப்பனது தொழிலைத் தானே
சொப்பனத்தில் நினைக்கச் செய்வார்
(ஆனை)
தொழிற்கல்விக்கூடத்திலே -கீதை
உபதேச வகுப்புகளாம்
ஆராய்ச்சி மாணவரெல்லாம்-இனி
ஆயக்கலைகளை அறிய செய்வார்
(ஆனை)
ஒற்றைச் சொல்லால் ஒரே வார்த்தை
ஒரே நாடு ஒரே மொழியாம்
கொல்லைப்புறம் வந்தமொழிதான்-அது
சேர்ந்தாரைக் கொல்லும் மொழி தான்
(ஆனை)
ஒரே நாடு ஒரே தேர்தல்
ஓயாது முழங்கிடுவார்
செங்கோலைக் கையில் ஏந்தி
மன்னவராய் மாறிடுவார் (ஆனை)
மூன்றாம் மொழி படித்தால்
முழுவதுமாய் வேலை வாய்ப்பு -மொழி
முகமூடி போட்டுக் கொண்டு
மாய வலை விரிக்கின்றார் (ஆனை)
பாவப்பட்ட சனங்களெல்லாம் – ஏதும்
புரியாமல் தவிக்குதடா-பாழும்
கிணற்றினிலே விழும் முன்பே தோழா!
புதுப் பாதைதனைக் காட்டிடடா!
(ஆனை)
பாடலாசிரியர் கு. மணி
__________________________________________________________________
சாதியெனும் தாழ்ந்தபடி
நமக்கெல்லாம் தள்ளுபடி
தன்னன னாதினம்
தன்னானே- தன
தன்னன னாதினம்
தன்னானே
தன்னன னாதினம்
தன்னானே-தன
தன்னன னாதினம்
தன்னானே
கும்மியடித் தமிழ்நாடு முழுவதும்
அன்பு ததும்பிட கும்மியடி
நம்மைப் பிடித்த சாதிகள் போயின
நன்மை கண்டோமென்று கும்மியடி
நன்மை கண்டோமென்று கும்மியடி (கும்மியடி)
சாதியால் மனிதரைக் கூறுபோட்ட
வன்குணம் கொண்டவர் மாய்ந்துவிட்டார்
பிறப்பை வைத்து மக்களைப் பிரிக்க
முனைந்த மனிதர் தலைகவிழ்ந்தார்
முனைந்த மனிதர் தலை கவிழ்ந்தார் (கும்மியடி)
பேதத்தை வளர்த்த சாதியை ஒழித்து
சமத்துவம் காண கூடிவந்தோம்
மனிதருக்குள்ளே உயர்வுதாழ்வு
இல்லையென்று சொல்லி கும்மியடி
இல்லையென்று சொல்லி கும்மியடி (கும்மியடி)
பள்ளிக்கு வந்தோம் படிக்கவந்தோம்
படித்ததால் தெளிவு பெற்று வந்தோம்
பெற்ற தெளிவினை பெற்றோருக்கும்-ஊரில்
சுற்றோருக்கும் கூடி சொல்ல வந்தோம்-ஊரில்
சுற்றோருக்கும் கூடி சொல்ல வந்தோம் (கும்மியடி)
பெண்ணும் ஆணும் சரிநிகரென்று
கற்றதை இங்கு சொல்ல வந்தோம்
ஒன்றுபட்டு வாழ்ந்திடவேயிங்கு
அன்பையும் அறிவையும் வளர்க்கவந்தோம்
அன்பையும் அறிவையும் வளர்க்க வந்தோம் (கும்மியடி)
கூடிவந்தோம் சிறார் கூடிவந்தோம்
கோடிக்கரங்க ளிணைந்து வந்தோம்
கற்கவேண்டிய கல்வியை நாங்கள்
கற்று இங்கே நிதம் கூடிவந்தோம்
கற்று இங்கே நிதம் கூடிவந்தோம் (கும்மியடி)
சாதியின் பெயரால் மதத்தின் பெயரால்
மோதல்க ளெங்கும் நடக்க விடோம்
புவிதனில் ஒன்றாய் வாழ்ந்திடுவோமென்று
உரக்கச் சொல்லி கும்மியடி- சேர்ந்து
உரக்கச் சொல்லி கும்மியடி (கும்மியடி)
தோழர்களாகிய பு. பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு, பேரா. க. கணேசன், சென்னை வே. மணி, புலவர் சு. பழநிசாமி ஆகியோரின் கூட்டு முயற்சியில் தயாரான பாடல்.
__________________________________________________________.
மலரட்டும் நாளை நமதாக
நமது சிந்தனைகள் ஒன்றாக
உயரே உயிராடும் கொடி கீழே
ஒன்றாவோம் ஒரு நதி போலே
பழைய விதிகளை உடைத்துத் தீர்க்க
ஆர்த்தெழட்டும் ஒரு புதிய தலைமுறை
உதிக்கட்டும் ஒரு புதிய காலை
வசந்தமாகட்டும் நம் நாளை
கைகோர்க்க பலம் பெருகிடுமே
அதுவரை ஓயாதிருக்கட்டும் போராட்டமே
மாற்றங்கள் தருவது பரிணாமமே
எனும் புரிதல் இங்கு பெருவரமே
பயமும், பசியும், கண்ணீரும்,
காலாவதியாகும் தந்திரம்
புத்தாக்கம் ஒன்றினால் மாத்திரம்
என்று சொல்லித்தரும் கம்யூனிசம்
தோழர்களாய் நாம் ஒன்றாகினோம்
உலகம் புரட்டிட வந்தோம்
பூமி முழுதும் ஒலிக்கும்
எங்கள் செங்குரலின் சப்தம்
பழையது எல்லாம் மாறும்
நாளை நமதாய் விடியும்
நமதாகும் காலமது
எல்லாம் பொதுவாகும் விதி மாறாது
ஶ்ரீரசா
________________________________________________________________
அடேங்கப்பா… அடேங்கப்பா ஆண்டவா
ஈசா மர்மதேசக் கதையக் கொஞ்சம் தோண்டவா? – உனக்குப்
பெரிய பெரிய சிலைய வெச்சான் தாண்டவா – அதுல
கூத்தடிச்ச ஆளு யாரு காட்டவா?
(அடேங்கப்பா)
விடிய விடிய நடந்துச்சுப்பா பலவகை கூத்து
அதுல சாராயமும் கஞ்சாப் புகையும் கலந்தது சோக்கு
ஆங்கிலத்துல கொதப்புவாரு ஐயா அருள்வாக்கு – அதுல
வரிசை கட்டி நிக்குதுப்பா கார்ப்பரேட்டு பேக்கு
யானைத் தடம், புலிகள் தடம் அத்தனையும் லூட்டு –
பெரிய பெரிய மந்திரிமாரும் சேர்ந்துட்டான் கூட்டு
அர்த்த ஜாமப் பூஜையின்னா அதுக்கொரு ரேட்டு
ஐயா ஒத்தக்காலு நடனம் ஆடி பாடுறான் பாட்டு
(அடேங்கப்பா)
படிச்ச புள்ளைங்க படிப்பெல்லாம் போச்சு
மொட்டையடிச்சு மொட்டையடிச்சு பித்துக்குளியாச்சு
பெத்தவங்க மனசு எல்லாம் தத்தளிச்சுப் போச்சு – அங்கே
ஈசா மகளுக்கும் பேஷா கல்யாணம் ஆச்சு…
கன்னிப்பொன்னுங்கல்லாம் பல காணாமப் போச்சு
காடு, மலையெல்லாம் இப்போ சுடுகாடா ஆச்சு
எத்தனை எத்தனை கேசுங்க, அதை எண்ண முடியல
அத்தனை அத்தனை கேசுமே ஈசா காலுக்கடியில…
அவன் தாடி வளர்ந்துச்சே, அந்தக் காடு வளர்ந்துச்சா?
ஈசா யோகாவினாலே ஏதும் நன்மை வெளஞ்சுச்சா?
(அடேங்கப்பா)
இத்தனை இத்தனை கேவலம் இங்கே நடக்குது சாரு
இவன் வந்து சேர்ந்ததும் கெட்டுப்போச்சு ஊரு.
இந்தக் கஞ்சாக்குடிக்கிய வளர்த்தது யாரு?
அம்மாவாசைக்கு அங்கே வருவான் பாரு.
அம்பத்தாறு இன்ச்சுன்னு அவருக்கு இன்னோரு பேரு
(அடேங்கப்பா)
_________________________________________________________________
செங்கொடியே எம் கொடியே,
எங்கள் செங்கொடியே
போராடும் எம் கரங்களுக்கும்
புது பலம் தரும் கொடியே
நாடுயர மக்கள் வாழ்வுயர
நீ பறக்கணும் செங்கொடியே
பாடுபடும் உழைப்பாளர்களின்
உயிர் மூச்சே செங்கொடியே
(செங்கொடியே)
புன்னப்புராவும் வயலாரும்
வங்கத் தோழர்கள் பல நூறும்
வெண்மணித் தீயில் மடிந்தோரெல்லாம்
உந்தன் அசைவின் வரலாறே
மதுரை நகரிலே மாநாடு
மகத்துவம் மிகுந்த மாநாடு
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநாடு
மக்கள் புரட்சியின் மகத்துவம் காணும்
மாண்பினைச் சொல்லும் மாநாடு
(செங்கொடியே)
சுதந்திரம் பெற்றும் வாழ்விழந்தோம்
சொத்து சுகங்களை நாம் இழந்தோம்
சூத்திரராக வதைபட்டோம்
சொந்த நிலத்திலே அடிமைகளாகி
சோத்துக் கனவுடன் தான் அலைந்தோம்
(செங்கொடியே)
இழந்த உடைமையை மீட்டெடுக்க
இடதுசாரியின் பாதையிலே
மதுரை மண்ணிலே அணிவகுத்து
மார்க்சிஸ்ட் கட்சியின் கொடிப்பிடித்து
புரட்சியின் பாதையை வடிவமைப்போம்
புது யுகம் காண படையெடுப்போம்…. (செங்கொடியே)
பாடலாசிரியர் : சி.எம்.குமார்
_________________________________________________________________
மலரட்டும் நாளை நமதாக
நமது சிந்தனைகள் ஒன்றாக
உயரே உயிராடும் கொடி கீழே
ஒன்றாவோம் ஒரு நதி போலே
பழைய விதிகளை உடைத்துத் தீர்க்க
ஆர்த்தெழட்டும் ஒரு புதிய தலைமுறை
உதிக்கட்டும் ஒரு புதிய காலை
வசந்தமாகட்டும் நம் நாளை
கைகோர்க்க பலம் பெருகிடுமே
அதுவரை ஓயாதிருக்கட்டும் போராட்டமே
மாற்றங்கள் தருவது பரிணாமமே
எனும் புரிதல் இங்கு பெருவரமே
பயமும், பசியும், கண்ணீரும்,
காலாவதியாகும் தந்திரம்
புத்தாக்கம் ஒன்றினால் மாத்திரம்
என்று சொல்லித்தரும் கம்யூனிசம்
தோழர்களாய் நாம் ஒன்றாகினோம்
உலகம் புரட்டிட வந்தோம்
பூமி முழுதும் ஒலிக்கும்
எங்கள் செங்குரலின் சப்தம்
பழையது எல்லாம் மாறும்
நாளை நமதாய் விடியும்
நமதாகும் காலமது
எல்லாம் பொதுவாகும் விதி மாறாது
பாடலாசிரியர்
ரஞ்சித் விஸ்வநாதன்
………………………………………………………………………………………
பல்லவி :
வாங்கோ நிதியம்மா
வணக்கமுங்கோ நிதியம்மா
வந்தனம் வந்தனம் வந்தனமுங்கோ
வந்தனம் சொன்னோம் நிதியம்மா
(வாங்கோ)
நாட்டுக்குள்ள சென்னையின்னு நகரமிருக்குது
அந்த நகரத்துக்கு அருகிலேயே கடலுமிருக்குது
நவம்பருனு மாசம் வந்தா மழையும் அடிக்குது
தெருவெல்லாம் தண்ணி நின்னு ஊரே மிதக்குது
(வாங்கோ)
வேளச்சேரின்னு ஒரு ஊரு தெரியுமா?
அந்த ஊரே மிதக்குற ஒரு சேதி தெரியுமா?
தண்ணி வடியல; ஒரு வழியும் தெரியல
பாலத்து மேலக் கார நிறுத்தி படகுல போறோம்…
(வாங்கோ)
மெட்ரோ போட்டியே, ஒரு துட்டு தந்தியா?
பாலம் கட்டச் சொன்னே ஒரு பைசா தந்தியா?
பழவேற்காடு துறைமுகத்த அதானிக்குத் தந்த
எண்ணூரு துறைமுகத்துல மண்ணள்ளிப்போட்ட
(வாங்கோ)
பரந்தூருல ஏர்ப்போட்டக் கட்டச்சொன்னியே
பாவப்பட்ட ஜனங்களோட நெலத்த எடுத்தியே
ஒரே ஒரு ஏரோப்பிளேன் உங்கிட்ட இருக்கா?
பரந்தூரு ஏர்ப்போர்ட்டு அரசாங்கக் கணக்கா?
(வாங்கோ)
வருசா வருசம் புயல் வருதே வந்து பார்த்தியா? -அது
வாரிச்சுருட்டி கொண்டு போகுதே, ஏதாச்சும் கேட்டியா?
மெட்ரோவுக்கும் துட்டுக் கேட்டா முறைக்கிற
புயல் நிவாரணம் கேட்டாலும் பழிக்குற?
மாசா மாசம் வாங்குறயே வருமான வரி
தினந்தோறும் புடுங்குறயே ஜிஎஸ்டி வரி
அங்கங்கே டோலு வச்சு காசு புடுங்குற
அதானிக்கும் அம்பானிக்கும் சலுகை குடுக்குற
(வாங்கோ)
அரிசி வெல ஏறுதே ஆகாயம் மேல
வெங்காய விலை ஏறுதே வெசத்தப் போல
தக்காளி விலை மளிகை வெலை ஏறுது – அது
தாறுமாறா வீட்டு பட்ஜெட்டக் கிழிக்குது
வெலவாசி ஏறுதுன்னா உனக்கு விசுக்குன்னு கோபம்
வெங்காயம், பூண்டு திங்கமாட்ட அய்யோ நீ பாவம்
ஊறுகாப்போட்டும் கஞ்சி குடிக்க முடியல
உனக்கு வரியக்கட்டி வரியக்கட்டி மாளல….
(வாங்கோ)
எம்மா நிதியம்மா
எல்லாம் இங்கே சதியம்மா
எங்க விதியம்மா – இது
உங்களோட சதியம்மா….
பாடலாசிரியர் : சக்தி சூர்யா