தோழர் நமச்சிவாயம் இயற்கை எய்தினார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி வில்லியனூர் இடை கமிட்டிக்கு உட்பட்ட கரிக்கலாம்பாக்கம் கிளை உறுப்பி னர், புதுச்சேரியின் மூத்த தோழருமான ஆ.நமச்சிவாயம் (வயது75) திங்களன்று கால மானார். மார்க்சிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்காக வும் வர்க்க வெகுஜன இயக்கங்களில் முதல்நபராக பங்கேற்றவர் தோழர் நமச்சி வாயம். செம்மலர், மார்க்சிஸ்ட் இதழ்கள் விற்பனையிலும் தீக்கதிர் விநியோகத்திலும் தடம் பதித்தவர். அன்னாரின் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பேரிழப்பு என்று கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் எஸ்.ராமச்சந்திரன் வெளி யிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி யுள்ளார்.

அஞ்சNamachivayamலி கரிக்கலாம்பாக்கத்தில் வைக்கப்பட்டி ருந்த அவரது உடலுக்கு சிபிஎம் புதுச்சேரி மாநிலச் செயலாளர் எஸ்.ராமச்சந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் ஆர். ராஜாங்கம், வெ.பெருமாள்,கொளஞ்சியப்பன், தமிழ்ச்செல்வன்,  மாரிமுத்து இடைக் குழுச் செயலாளர்கள் ராமமூர்த்தி, ஜோதிபாசு, கிளைச்செயலாளர் சண்முகம், உறுப்பினர்கள் மாநிலக்குழு, இடைக் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது இறுதி நிகழ்ச்சி கரிக்கலாம்பாக்கம் மயாகத்தில்நடைபெற்றது.

என்றும் நினைவில் தோழர் ஏஎன்.

புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் கிராமத்தில் நாவிதர் குடும்பத்தில் (1949)ல் பிறந்து முடிதிருத்தும் தொழில் சாவு வீடுகள் தொடங்கி சுடுகாடுவரை செய்யும் சடங்குகளை செய்த போதிலும், கரிக்கலாம்பாக்கத்தில் இடது சாரி இயக்கம் அறிமுகமாகும் முன்பே தோழர் நமச்சிவாயம் தனது இளமைக் காலத்தில் ஏழைக் குழந்தைகளுக்கு மாலை வேலைகளில் கல்வி கற்பித்தவர்.அறிவொளி இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டவர்.

கம்யூனிஸ்ட் இயக்கம் கரிக்கலாம்பாக்கத்தில் அறிமுகமாகும் போதே (1982) தன்னை அதில் இணைத்துக் கொண்டு மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தந்தவர்.  கட்சி நடத்தும் அனைத்து இயக்கங்களிலும் முதல் ஆளாய் பங்கெடுத்து வருபவர்.
புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் நடக்கும் கட்சியின் போராட்டங்கள் மாநாடுகள் என அனைத்தும் தோழர் இல்லாமல் நடந்ததில்லை.

ஊர் விலக்கம் செய்யப்பட்டாலும் செங்கொடியை கைவிடாதவர்.

ஊரின் பொது பிரச்சனைகளுக்கு கட்சியின் சார்பில் வைக்கப்பட்ட தட்டியை எடுக்க ஊரில் உள்ள ஆதிக்க வர்க்கம் சொன்ன போதும் அதை கேட்காமல் இருந்தால் ஊர் விலக்கம் செய்யப்பட்டார். அதை எல்லாம் முறியடித்து கட்சியின் செங்கொடியை பாதுகாத்தவர்.

ஓய்வின்றி உழைத்தவர்

ஆண்டுதோரும் டிசம்பர் 25 ல் வெண்மணி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த தவறியதில்லை. கட்சியின் நடைபயணமா வீடுவீடாக சென்று நிதி வசூலா தேர்தல் கால வேலைகளா போஸ்டர் ஒட்டுவது துண்டறிக்கை தருவது என எல்லா வேலைகளையும் தனது சொந்த குடும்ப வேலையைப்போல செய்து வந்தவர்.

மாணவர் வாலிபவர் மாதர் தொழிற்சங்கம் எழுத்தாளர் சங்கம் அறிவியல் இயக்கம் என அனைத்து செயல்பாடுகளுக்கும் தனது பங்களிப்பை ஆதரவை எப்போதும் உற்சாகமாக வழங்கிவந்திருப்பதை அனைத்து தோழர்களும் அறிவர்.

செம்மலர் மார்க்சிஸ்ட் துளிர் போன்ற கட்சியின் இதழ்கள் விற்பனையிலும் தீக்கதிர் வினியோகத்தில் அதன் அடையாளமாக விளங்கியவர்.

புயல் அடைமழை பனி என எதனையும் பொருட்படுத்தாமல் காலை 6 மணிக்குள்ளாக தீக்கதிரை தோழர்களிடம் சேர்த்துவிடுபவர்.

இன்னும் தோழர் நமச்சிவாயத்தைப்பற்றி சொல்வதற்கு என்னற்ற செய்திகள் முட்டி மோதுகின்றன.

இயக்கமாய் வாழ்ந்தார் என சொல்ல கேட்டிருப்போம். தற்காலத்தில் அந்த வார்த்தைக்கு உதாரணமாய் வாழ்ந்தவர் நம் தோழர் ஆ.நமச்சிவாயம்.

செங்கொடி இயக்கம் உள்ளவரை தோழர் அவரது பணிகள் மூலம் என்றென்றும் நினைவுகொள்ளப்படுவார். அன்புத்தோழருக்கு புரட்சிகர வீரவணக்கத்தோடு விடைகொடுப்போம்.

வி.ஞானசேகர்
கரிக்கலாம்பாக்கம்.

 

Leave a Reply