சுற்றறிக்கை: 19.06.2017

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
புதுவை பிரதேசக்குழு

வணக்கம் நமது கட்சியின் பிரதேசக்குழுக் கூட்டம் 18.06.2017 அன்று தோழர் P. உலகநாதன் தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடைப்பெற்றது. மத்தியக் குழு உறுப்பினர் தோழர் : மு.டீ அவர்கள் கலந்து கொண்டு மாநிலக்குழு முடிவுகளை விளக்கிக் கூறினார் கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கபட்டனர்.
1.தீக்கதிர் சந்தா சேகரிப்பு
புதுச்சேரி பிரதேசத்தில் 200 தீக்கதிர் சந்தாக்களை உடனடியாக சேர்க்க வேண்டும் என்று மாநிலக்குழு கூறியுள்ளது இந்த எண்ணிக்கை நமது கட்சியினுடைய செயல்பாட்டுக்கு குறைவானதே சந்தா சேகரிப்பு இயக்கம் உழவர்க்கரை நகரகமிட்டிகளில் ஒரளவுக்கும் மற்ற இடங்களில் பலகீனமாகவும் நடைப்பெற்றுள்ளது.80 சந்தாக்கள் மட்டும் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இலக்கை எட்டும் வகையில் சந்தா சேகரிக்கும் பணியை மேலும் ஒருவாரம் நீடிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது செயற்க்குழு மற்றம் பிரதேசக்குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் அவசியம் 5 சந்தாக்களை சேர்க்க வேண்டும் இடைகமிட்டிகளில் இணைந்து சந்தா சேகரிப்பில் ஈடுபடவேண்டும் 25.06.2017 அன்று இறுதிபடுத்தப்பட்டு தீக்கதிர் சந்தாக்களை மாநில மையத்திற்;கு அனுப்பிவைக்க என முடிவு செய்யப்பட்டுள்ளது .
தீக்கதிர் வினியோகத்தில் உள்ள பிரச்சனையும் விவாதத்தின் முன்வைக்கப்பட்டுள்ளது தீக்கதிர் சந்தா சேகரிப்பு இறுதிசெய்யப்பட்டபிறகு விநியோகத்தை முறைப்படுத்துவதற்கான பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
2.மக்கள் ஒற்றுமைக்கான கருத்தரங்கம்
நாடு முழவதும் சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்கள் இந்துத்துவா வகுப்புவாத வெறியர்களால் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். வகுப்புவாத வலதுசாரி சக்திகள் மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். புதுச்சேரியில் இத்தகைய சூழல் உருவாகி உள்ளது. ஆகவே வகுப்புவாதத்துக்கு எதிராக மக்கள் ஒற்றுமையை வலியுறுத்துகிற வகையில் மக்கள் மேடை என்ற பெயரில் சிறப்புக்கருத்தரங்கம் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. மதச்சார்பற்ற எண்ணம் கொண்ட எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் ஆகியோர் கலந்துகொள்ளும் வகையில் இக்கருத்தரங்கம் நடைபெறும். இப்பணிகளை ஒருங்கிணைப்பதற்காக தோழர். எஸ்.ராமச்சந்திரன், சி.எச்.பாலமோகணன், என்.கொளஞ்சியப்பன், ஜெ.கிரு~;ணமூர்த்தி ஆகியோர்கள் உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. ஜுலை 16 ந் தேதி வாக்கில் இந்தக்கருத்தரங்கத்தை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
• 26.06.2017 சென்னை, தேனாம் பேட்டை காமராஜர் அரங்கில் தமுஎகச மற்றும் எஸ்.எப்.ஐ வின் தமிழர் உரிமை மாநாட்டுக்கு தோழர்கள் கலந்துகொள்ள ஒரு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்டணம் ஒரு தோழருக்கு ரூ 200 நகரக்கமிட்டி மற்றும் உழவர்கரை கமிட்டிகள் தலா 10 தோழர்களும் மற்ற கமிட்டிகள் குறைந்தபட்சம் 5 தோழர்கள் பேருந்தில் மாநாட்டுக்கு செல்வதற்கு உறுதிப்படுத்த வேண்டும்.
• விவசாயிகள் சங்கத்தின் புதுச்சேரி பிரதேச மாநாடு 24.06.17 ல் திருக்கனூரில் நடைபெற உள்ளது.
• மாதர்சங்கத்தின் பிரதேச மாநாடு 16.07.2017 அன்று புதுவையில் நடைபெற உள்ளது.
• கல்வி பிரச்சனைகளில் நாம் தொடர்ந்து மாணவர் மற்றும் பெற்றோர்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும். வாலிபர் சங்கம் மற்றும் மாணவர் சங்கம் சார்பாக இக்கோரிக்கைகளை வலியுறுத்தி இயக்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
• புதுச்சேரி கல்வி பாதுகாப்பு இயக்கம் சில ஆண்டகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. அதை மீண்டும் செயல்படுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
• புதுச்சேரி மாநிலத்தின் நிதி நெருக்கடியை போக்க மத்திய அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையோடு சேர்த்து புதுச்சேரி மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் புதுவை அரசு செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி தெருமுனைக்கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.
• நமது கட்சியின் நிலைபாட்டிலிருந்து மக்கள் வாழ்வாதார பிரச்சனைகளை போராடி தீர்வு காண்பதற்கு பொதுமக்களுக்கு விளக்கமிளிக்கும் வகையில் ஆயிரக்கணக்கான துண்டு பிரசுரங்கள் அச்சடித்து வினியோகிக்க வேண்டும்.

மேற்கண்ட முடிவுகளை சிறப்பாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
தோழமையுடன்
(இரா.ராஜாங்கம்)
செயலாளர்

Leave a Reply