தனி மனிதனின் கண்ணியத்தையும், சமுதாயத்தில் சமத்துவத்தையும் நிலைநாட்ட விழையும் எவருக்கும் மனக்கிளர்ச்சியைத் தூண்டும் உள்ளத் வாழ்க்கை வாழ்ந்தவர் அண்ணல் அம்பேத்கார். மகாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தில் அடக்கு முறைக்கு ஆட்பட்டு காலங்காலமாகச் சுரண்டப்பட்டு வந்த மிகவும் ஏழ்மையான மகார் இனத்தில் 1891 ஏப்ரல் 14-ஆம் நாள் அம்பேத்கார் பிறந்தார். தனது அயராத முயற்சியாலும் தளராத உழைப்பாலும் முன்னேறிய அவர், இந்திய அரசியலமைப்பின் சிற்பி என போற்றப்படுகிறார். சுதந்திர இந்தியாவின் முதலாவது சட்ட அமைச்சரான பெருமையும் அவருக்கு உண்டு.
இந்திய அரசியலமைப்பை உருவாக்குவதில் அவர் ஆற்றிய பங்கை உலகமே வியந்து போற்றுகிறது. ‘பெரும்பான்மை மக்களுக்குப் பெருமளவு நன்மை’ கிடைக்கின்ற விதத்தில் அவர் அடிப்படை அமைத்துத் தந்தார். சாதி, நிறம், இனம் ஆகிய காரணங்களைக் காட்டி மக்களிடையே வேற்றுமை நிலவியதை எதிர்த்து அவர் நிகழ்த்திய போராட்டங் கள் எண்ணற்றவை.
சாதியைக் காரணம் காட்டி நிலவிய தீண்டாமைக் கொடுமையால் நேரிடையாக அவர் பாதிக்கப் பட்டதால், அக்கொடுமையின் கடுமையை அவர் உணர்ந்திருந்தார். சொகுசான வாழ்க்கை வாழ்ந்தவ ரல்லர் அவர்: புரையோடிப் போயிருந்த சமூகக் கொடுமைகளை எதிர்த்துப் போராடிய தீரர் அவர்.
வறுமையிலும் ஏழ்மையிலும் உழன்றபோதிலும் கல்வியில் தீவிர அக்கறை காட்டிய அவர், பல கல்வி உதவித் தொகைகளைப் பெற்றார். இந்தியா, ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் பொருளாதாரம், சமூகவியல், வரலாறு. அரசியல், விஞ்ஞானம், சட்டம் போன்ற துறைகளில் பயின்று பல பட்டங்களைப் பெற்றார். கல்வி போதகராக தனது வாழ்க்கையைத் துவங்கிய அண்ணல், பின்னர் வழக்குரைஞர் ஆனார். இந்தியச் சுதந்திரப் போராட் டத்தில் ஈடுபட்ட அவர், மனித உரிமைகளின் பாதுகாவலராக மட்டுமின்றி அவற்றை உருவாக்கிய காரணகர்த்தாவாகவும் திகழ்ந்தார். சாதி முறையை அறவே அழித்து, தீண்டாமையைப் பூண்டோடு அழித்து அனைவருக்கும் அரசியல், சமூக, பொருளா தாரத் துறைகளில் சம உரிமையைப் பெற்றுத் தருவதே அவரது வாழ்வின் இலட்சியமாக இருந்தது.
சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு அடர் ஆளப்பட்ட நலிந்த பிரிவு மக்களுக்கு அவர்களுடைய நிலையைப் பற்றி எடுத்துரைத்து அவர்களிடையே விழிப் புணர்ச்சியை ஊட்டினார். சாதிச் கொடுமைகளால் மனிதனின் நிலை கீழிறங்கி, இந்து சமுதாயத்தில் எதிர்மறையான பிரிவினைப் போக்குகள் எழுந்ததை அவர் கட்டினார்.
இந்த விஷயங்கள் குறித்து நலித்த பிரிவு மக்கள் நமது ஆற்றலையும் ஒற்றுமையின் வலிமையையும் உணரத் தூண்டியவர் அவர். ‘கற்பி. ஒன்றுசேர். போராடு’ என்பதே அவரது தாரக மந்திரமாக இருந்தது. 1924-ஆம் ஆண்டில் புறககணிக்கப்பட்டவர்கள் நலச்சங்கம் என்ற அமைப்பை அவர் தோற்றுவித்தார். அடக்கி ஆனப் பட்ட பிரிவினரின் பேராயக் கூட்டங்களுக்கு அவர் தலைமை வகித்தார். அம்மக்களின் அரசியல் பிரிவாக சுதந்திரத் தொழிலாளர் கட்சியையும், பின்னர் ஆதி திராவிடர் இனக் கட்டமைப்பையும் துவக்கினார். 1927-ஆம் ஆண்டிலிருந்து அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களையும் அவர் நடத்தத் தொடங்கினார். பொதுக் குளத்திலிருந்து தாழ்த்தப்பட்ட மக்களும் குடிநீர் பெறும் உரிமைக்காக சுமார் பத்தாயிரம் பேர் பங்கு கொண்ட சௌதார் குளம் சத்தியாகிரகப் போராட்டத்தை அவர் தலைமை ஏற்று நடத்தினார். புனே பார்வதி ஆலய சத்தியாகிரகம், நாசிக் கலாராம் ஆலய சத்தியாகிரகம் ஆகியவற்றில் தாழ்த்தப் பட்ட மக்களுக்கு வழிபாட்டு உரிமை வேண்டி அவர் தலைமையில் போராட்டங்கள் நடைபெற்றன.
தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக உரத்த குரலெழுப்பிப் போராடிய அம்பேத்கார், அவர்களது கோரிக்கைகளை எழுத்துப் பூர்வமாக பல்வேறு கமிட்டி களுக்கும் கமிஷனர்களுக்கும் அனுப்பியிருக்கிறார். சௌத்பரோ கமிட்டி, சைமன் கமிஷன், வட்ட மேை மாநாடு, கேபினட் மிஷன், அரசியலமைப்புக் குழுவின் சிறுபான்மையினர் துணைக்குழு ஆகியவற்றுக்குத் தாழ்த்தப்பட்ட மக்களின் எண்ணக் குமுறல்களை எழுத்தாக்கித் தந்தார் அவர்.
கல்விக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும். ராணுவம், கடற்படை போன்றவற்றில் எவ்விதத் தடையுமின்றி ஆட்சேர்ப்புக்கு செய்ய வேண்டும் என்றும் அவர் கோரினார். சட்ட மன்றங் களிலும், அரசுப் பணிகளிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டுமென்று அவர் போராடிக் கொண்டே இருந்தார். இட ஒதுக்கீட்டுக் கொள்கை வேண்டும் என்றும் அதன்மூலம் புறக்கணிக்கப்பட்ட மக்களின் நலன் பேணப்பட வேண்டும் என்றும் அவர் தொடர்ந்து கோரி வந்தார்.
1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் நாள் இந்திய அரசியல் சாசனம் பிரகடனப்படுத்தப்பட்ட போது இந்தக் கோரிக்கைகள் அணைத்துக்கும் ஓர் உருவம் கிட்டியது. அடக்கப்பட்ட மக்களின் உரிமைப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி, அரசிய லமைப்பில் அவர்களது உரிமைக்கு இடம்பெற்றுத் தந்த பெரும் பணியை அவரன்றி வேறு யாரும் செய்து இருக்க முடியாது.