பாசிஸ்ட் முசோலினிக்கு முடிவுரை எழுதிய கம்யூனிஸ்டுகள்

பெனிட்டோ முசோலினிஏறத்தாழ 21 ஆண்டுகள் இத்தாலியை முள் முனையில் நிறுத்தி வைத்திருந்த பெனிட்டோ அமில்கார் அன்டிரியா முசோலினி  (ஜுலை 29, 1883 – ஏப்ரல் 28, 1945) ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள், 1945ம் ஆண்டு உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருந்த நாட்கள்…

தனியுரிமை முதலாளித்துவத்தின் தேய்ந்த நிலையே பாசிசம்

தனது ஆட்சிக்கு இறுதி நாட்கள் நெருங்கி விட்டது என்பதை புரிந்து கொண்ட முசோலினி, தனது மனைவி Clara Petacci உட்பட ஏறத்தாழ பதினைந்து உதவியாளர்களோடு, நாட்டை விட்டு தப்பி ஓடிக்கொண்டிருக்கும் போது, 1945, ஏப்ரல் 27ம் தேதி, போராடிக்கொண்டிருந்த ஒரு கம்யூனிஸ்ட் கட்சி குழுவிடம் சிக்கிக்கொண்டனர்…

Audisioஇவர்களை, ஒரு மறைவிடத்தில் அடைத்து வைத்து விட்டு, மறு நாள், 1945ம் ஆண்டு ஏப்ரல் மாதம்28ம் தேதி, கொடிய சர்வாதிகாரி என்று உலகமே அச்சத்துடன் பார்த்த, முசோலினி, அவரது மனைவி Clara Petacci, இவர்களோடு வந்த உதவியாளர்கள் அனைவரையும், கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்: Walter Audisio என்பவர் சுட்டுக் கொன்றார்….

முசோலினியை சுட்டுக் கொன்றது யார் என்று பல்வேறு ஊகங்கள் இருந்தாலும், அவனை சுட்டுக் கொன்றது Walter Audisio என்ற கம்யூனிஸ்ட் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது….

Mas 38சுட்டுக் கொல்லப்பட்ட முசோலினி, அவனது மனைவி உட்பட அவனது உதவியாளர்கள் ஆகியோரின் உடல்களை, Fifteen Martyr’s Square என்ற சதுக்கத்திற்கு கொண்டு சென்றனர்..
இந்த சதுக்கத்திற்கு ஒரு சிறப்பு உண்டு வரலாற்றில்….

ஆமாம்….

இதற்கு, சில ஆண்டுகளுக்கு முன்பு தான், முசோலினியின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக போராடிய விவசாயிகள் பதினைந்து பேரை இந்த இடத்தில் தான் தூக்கிலேற்றி கொன்றது சர்வாதிகார ஆட்சி….

MussoliniFifteen Marty’s Square சதுக்கத்திற்கு கொண்டு வரப்பட்ட முசோலினி, அவனது மனைவி, அவனது உதவியாளர்கள் ஆகியோரின் உடல்கள், அங்கே தலை கீழாக கட்டி தொங்க விடப்பட்டது; இந்த உடல்கள் மீது கற்களை எறிந்து தங்களது வெறுப்பை உமிழ்ந்தனர் பொது மக்கள்….

வரலாறு, எப்போதும், தொடர்ந்து, சர்வாதிகாரிகளை வாழ வைத்ததில்லை…

பொருளாதார சமத்துவம், வர்க்கமற்ற சமூகம் உருவாக கம்யூனிசம் தன் போராட்டத்தைத் தொடங்கியபோது அதற்கு நேர் மாறான அமைப்பாக உருவானது பாசிசம். சகல அதிகாரமும் கொண்ட ஒரு சர்வாதிகாரியால் ஆளப்படும் கடுமையான சட்டங்களையும் கொள்கைகளையும் பாசிசம் கொண்டிருந்தது. இத்தாலியில் பிறந்து, அங்கேயே இறந்து போன பாசிசக் கொள்கைகள் இன்றும் பல நாடுகளில் மறைமுக அரசியலாகத் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

Leave a Reply