திரிபுரா மாநில சட்டமன்ற தேர்தல் முடிந்து மார்ச் 2 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பாஜக பெற்ற வாக்கு கடந்த தேர்தலை விட 10 விழுக்காடு வீழ்ந்துள்ளது. கடந்த தேர்தலில் 44 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக கூட்டணி, இம்முறை 33 தொகுதியில் தான் வெற்றிபெற முடிந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை முழுமை பெறு வதற்கு முன்னதாகவே பாஜகவினர் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளைச் சார்ந்த, காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ஊழியர்கள் மீது கொலை வெறித்தாக்கு தலை துவங்கினார்கள். ஊழியர்கள் மட்டு மல்ல, மேற்கண்ட கட்சிகளை ஆதரித்த வாக்கா ளர்களையும் குறி வைத்து தாக்கினார்கள். இப்போதும், இத்தகைய தாக்குதல் தொடர்ந்து நடக்கிறது. எதிர்க்கட்சிகளைச் சார்ந்தவர்களின் வீடுகள், கடைகள், கட்சி அலுவலகங்கள் குறி வைத்து கொளுத்தப்பட்டு வருகின்றன. ஆயி ரத்திற்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடைபெற்றுள் ளன. இதில் 3 பேர் உயிர் பறிக்கப்பட்டுள்ளது. பாஜகவினரின் வன்முறை தாக்குதல்கள் பற்றிய ஓரிரு சம்பவங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன. தாக்கப்பட்டுள்ள ஒருவர் துயரத்துடன் கொடுத்த வாக்கு மூலம்:
“நான் திரிபுரா மாநிலத்தில் வசிக்கிறேன். நான் ரப்பர் தொழில் செய்து வருகிறேன். சட்ட மன்ற தேர்தல் முடிவுக்கு பின் பாஜக வெறி யர்கள் எனது கடையை முழுவதுமாக எரித்து விட்டார்கள். அதில் விற்பனைக்காக வைத்திருந்த ஆறு முதல் ஏழு லட்சம் ரூபாய் மதிப்புடைய ரப்பர் பொருட்கள் எரிந்து போயின. என்னுடைய மகன் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி வருகிறான். தேர்வுக்கு முதல் நாள் கடை எரிக்கப்பட்டது. அடுத்த நாள் தேர்வின் போது எனக்கு படித்தது எதுவும் நினைவுக்கு வரவில்லை, கடை எரிந்தது மட்டும் தான் என் கண்முன்னே இருக்கிறது என்று மிகவும் பாதித்த மனதோடு கூறினான். அந்த நிகழ்வு பெரிதும் அவனை பாதித்துள்ளது. பிற பாடத் தேர்வுகளை எப்படி எழுதப் போகிறான் என்ற கவலையில் நாங்கள் உள்ளோம். கடையை மீண்டும் கட்டிக் கொள்ளலாம், இழப்பை பற்றி கவலைப்படாதே என்று நாங்கள் சமாதானம் கூறினாலும் அவன் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. பழைய நிலைக்கு திரும்ப முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.”
விடியலுக்காக காத்திருக்கிறோம்
பாதிக்கப்பட்ட மற்றுமொருவர் கொடுத்த வாக்கு மூலம்: “நான் திரிபுரா மாநிலத்தில் உதய்ப்பூர் நகருக்கு அருகே உள்ள ஊரக பகுதியில் வசிப்பவன். சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பின் எனது வீடு, வீட்டு வாசலில் இருந்த காய்கறிக் கடை அனைத்தையும் பாஜக குண்டர்கள் எரித்துவிட்டனர். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்த லின் போது நான் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சா ரத்திற்காக கொடிகளையும் போஸ்டர்களை யும் ஒட்டியதுதான் குற்றம் என்று கூறி இத்தாக்குதலை நடத்தினார்கள். இப்போது வீடு எரிக்கப்பட்டதால் நான் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள என் சகோதரியின் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளேன். எனது மனைவியும் நான்கு மாத குழந்தை யும் தனது தாயாருடன் வேறு வீட்டில் உள்ளனர். அவர்களுக்கு அங்கு ஆபத்து இல்லை. ஏனெனில் மனைவியின் தந்தையும் தாயாரும் பாஜக ஆதரவாளர்கள். என்னை குறி வைத்து கொலை செய்வ தற்காக தேடிக் கொண்டிருக்கிறார்கள். நான் தலைமறைவாக இருக்கிறேன். எரிந்த எங்கள் வீட்டுக்கு அருகே உள்ளவர்கள் எனது பெற்றோருக்கு புகலிடம் கொடுத்து உணவு கொடுத்து காப்பாற்றி வருகின்றனர். எனது தந்தையை தினமும் அடிப்பதும் மிரட்டுவதும் நடந்து வருகிறது. எனது வயது முதிர்ந்த தந்தை, தாயை பார்க்க வேண்டும் என ஆசை யாக உள்ளது அவர்களை விட்டுவிட்டு வந்து விட்டேன் என்ற கவலையும் உள்ளது. மீண்டும் எனது தாய் தந்தையுடன் வசிக்க வேண்டும். எரிந்த என் வீட்டை உருவாக்க வேண்டும்.” இவ்வாறு கூறியவாறே கதறி அழுகிறார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரிபுரா தோழர்களின் நிலை இது தான்.
வாழ்வாதாரங்கள் அழிப்பு
இவை மேற்கண்ட இருவரும் பத்திரிகை நிருபர்களுக்கு தொலைபேசி மூலம் கொடுத்த வாக்கு மூலமாகும். பாஜகவினர் தொடுத்து வரும் தாக்குதலுக்கு ஒரு நோக்கம் இருக்கிறது. எதிர்க்கட்சிகளை சார்ந்த செயல் வீரர்களின் ரப்பர் தோட்டங்கள், அறுவடைக்கு தயாராகி யுள்ள பயிர்கள் போன்ற வாழ்வாதாரங்களை அழிப்பதன் மூலம் அவர்களுடைய வாழ்க்கை யை நிர்மூலம் ஆக்கி வருகிறார்கள். ஆட்டோ ரிக்சாக்கள் மற்றும் வாகனங் களை அழிப்பதன் மூலம் அன்றாட வருவாயை அழிக்கிறார்கள். 2018ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த 5 ஆண்டுகளில் இத்தகைய முறையில்தான் வன்முறைகள் தொடர்ந்தன. மார்க்சிஸ்ட் கட்சியை சார்ந்த 25 பேர் படு கொலைகள் செய்யப்பட்டுள்ளார்கள். இத்தகைய வன்முறைக்குப் பிறகும் இடதுசாரிகள் – காங்கிரஸ் கட்சி 35 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார்களே என்ற ஆத்திரத்தில் தான் எதிர்க்கட்சிகளை அழிக்க பாஜக முற்பட்டுள்ளது. மேற்கண்ட கொலைவெறித் தாக்குதல் கள் ஆளும் பாஜகவின் திட்டமிட்ட வன்முறை தான். கொலை வெறி, வன்முறை சம்பவங் களை தடுத்து நிறுத்திடவும், வன்முறையாளர் கள் மீது நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜிதேந்திர சவுத்திரி ஆளுநரை சந்திக்க நேரம் கேட்ட போது அவர் மறுத்து விட்டார். ஆளுநரின் அணுகுமுறைக்கு பின்னணி உள்ளது. மாநில முதலமைச்சர் வன்முறை நடந்த சில இடங்களை பார்வையிட்டு எதிர்க்கட்சிகள் தான் வன்முறையில் ஈடுபடு கின்றன என பொய்யான அறிக்கைவிட்டுள் ளார்.
பாசிச பாணி வன்முறை
திரிபுராவில் பாஜக அரசு அதிகாரத்தை பயன்படுத்தி, ஆளும் கட்சி குண்டர்களை ஏவி விட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை முற்றாக அழித்திட பாசிச பாணியில் தாக்குதலை தொடுத்து வருகிறது. பாசிச பாணி வன்முறை வென்றதாக சரித்திரம் இல்லை. திரிபுராவில் பாஜக அரங்கேற்றியுள்ள வன்முறை ஒரு ஜனநாயகப் படுகொலை. இது அம்மாநிலத்தோடு நிற்காது. பாஜகவை எதிர்ப்பவர்களை பாஜக ஒன்றிய அரசு எப்படி எல்லாம் தாக்குகிறது என்பதை நாடு அறியும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளு மன்ற குழு தலைவர் எளமரம் கரீம் தலைமை யில் கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உள்ளிட்டு இடதுசாரிக் கட்சிகள், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 9 நாடாளு மன்ற உறுப்பினர்களை கொண்ட குழு திரிபுராவில் வன்முறை நடந்த பகுதிகளுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை தற்போது (மார்ச் 10, 11) சந்தித்து வருகிறது. பாஜகவின் வன்முறை – ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து , திரிபுராவில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க, மக்களைப் பாதுகாக்க நாடு முழுவதும் கண்டன இயக்கம் நடத்திட கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறைகூவல் விட்டுள்ளது. பாசிச சக்தியை வீழ்த்துவோம்! ஜனநாயகத்தை பாதுகாப்போம்.!