சீராணம்பாளையம் தியாகி பழனிசாமி

இடுவாய் ஊராட்சியில் மிக சிறிய கிராமம் தான் சீராணம்பாளையம். இங்கு உழவு தொழில் மற்றும் நெசவு தொழில் செய்யும் மக்கள் வாழும் கிராமம். இதில் சுமார் இருநூறு வாக்காளர்கள் கொண்ட அழகிய கிராமம்.

இதில் உழவு தொழில் செய்யும் மக்களின் நான்கு குலம் தான் அனைவரும். இதில் பெரும்பான்மையான மக்கள் ஒரு குலம். அந்த குலமக்களின் முதல்தலைமுறை
சிரங்ககவுண்டன் அவரின் இராண்டாம் வாரிசு தான் தியாகிபழனிசாமியின் அப்பா. அந்த கிராமத்தில் புதுகாடு வகையறா அவர்களின் குடும்பம். அந்த வகையறாவில் தியாகிபழனிசாமி யின் பெரியப்பா ராமசாமி தான் முதல் ஊராட்சி மன்ற உறுப்பினர். அதற்கு அடுத்து தோழர் அ.ப. ஊராட்சி மன்ற உறுப்பின்ர் (இவர்கள் இருவரும் போட்டியின்றி தேர்வு.)

அதற்கு பிறகு கடைசியாக நடத்த தோதல் தவிர அனைத்து முறையும் சி.பி.எம் சார்பில் வேட்பாளர் வெற்றி. தோழர் ஈஸ்வரன். முதல் ஊராட்சி உறுப்பினர் ராமசாமியின் மகன் தோழர் நடராஜ் ஆகியோர் தேர்வு. இந்த சூழலில் உழவு தொழில் சரியில்லாத காரணமாக அப்போதயை அனைவரும் சலவை பட்டறை தொழிலுக்கு செல்லுகிறார்கள். அப்படி சென்ற அனைவரும் AITUC அதற்கு பின் CITU வில் உறுப்பினர். இப்படிப்பட்ட நிலையில் தியாகி பழனிசாமி திருநிலகண்டர் நிட்டிங் என்ற பனியன் ஆலையில் கைமடிக்க சென்றுவருகிறார். ஊரில் உள்ள மற்ற இளைஞர்களை விட மிகவும் துடிப்பான இளைஞர் தான் பழனிசாமி.

வெங்கடாசலகவுண்டர்-பழனாத்தாள்(இவர் தியாகி ரத்தினசாமியின் பெரியம்மா)
தம்பதிக்கு முத்த வாரிசு தான் தியாகிபழனிசாமி.  இவருக்கு ருக்குமணி என்ற தங்கை உண்டு.(இன்று வரை அவர் சி.பி.எம்.ஆதரவாக உள்ளார் ) தியாகிபழனிசாமி சுகந்திரம் பெற்று 14 ஆண்டுகள் கழித்து 15.8.1962 அன்று பிறந்தார். பனைமரம் உள்ளிட்ட எந்த மரமாக இருத்தாலும் உடனே ஏறுவதில் வல்லவர்.

1978 ஆண்டில் நடந்து  திருப்பூரில் மாநாட்டை முன்னிட்டு அதற்கு அலங்காரம் வளைவு ஓன்று பெரியாண்டிபாளையம் பிரிவில் அமைக்கபட்டது. கட்டி முடித்து சில நாளில்
அதன் உச்சியில் கட்டிய கொடி அடித்த காற்றில் சாய்ந்து விட்டது. இதை அந்த வழியாக வேலைக்கு சென்று திருப்பி வந்த தியாகி பழனிசாமி  உடனே மேலே ஏறி சரி செய்தார். எதற்கும் பயம் இல்லா இளைஞர் தான் தியாகி பழனிசாமி.

இந்த நிலையில் மங்கலம் சுற்று பகுதியில்.விசைத்தறி தொழிலாளர்களின் கூலி போரட்டம் திவிரம். இதில் பனியன் தொழிலாளியாக இருத்தாலும் அதற்கான ஆதரவு போரட்டம் CITU வழிகாட்டுதல் உடனே பணி .  ஜூன் 9  1979 ஆண்டு மங்கலம் சங்கிதா திரையரங்கில் இதயகனி திரைப்படம் பார்க்க ஊரில் உள்ள பத்திற்கு மேற்பட்ட இளைஞர்கள் திரைபடம் பார்க்க சென்றார்கள். படம் முடிந்து இரவு வீட்டுக்கு திருப்பு வழியில் கணபதிபாளையம் தாண்டி செட்டிபாளையம் இடையில் உள்ள (இன்னறய பெஸ்ட்காட்டன் மற்றும் அன்பு நகர் பகுதியில்) மறைத்து இருத்த அரிவாள் மற்றும் ஆயுதங்களை வைத்து இருத்த அ.இ.அ.தி.மு.க கொலை வெறி கூட்டம் அப்பாவி இளைஞர்களை வெறியுடன் துரத்தியது.

அதில் எருக்கம் செடி தட்டிவிட்டு கிழே விழுத்த நம்ம தோழர் பழனிசாமியை தலையில் இருபதுக்கும் மேற்பட்ட வெட்டுகள். (இதே போல் தான் தியாகி ரத்தினசாமி படுகொலை செய்யும் போதும் தலையில் இருபதிற்கு மேல் வெட்டுகள்) .இதே போல் தோழர் அ.ப.வின்.கடைசி தம்பியை பலமாக தாக்குதல் அவர் முச்சை இறுக்கி செத்தவராக நடித்தால் உயிர் தப்பினார்.

இளைஞர்கள் எல்லாம் ஊருக்கு பார்த்தால் பழனிசாமியும் கதிர்வேல் இல்லை உடனே
ஊரில் உள்ள அனைவரும் செட்டிபாளையம் பகுதியில் தேடிய போது பழனிசாமி குற்றுயிரும் குலையிருமாக உடனே அருகில் உள்ள சி.பி.எம் ஆதரவாளர் வீட்டில் தோழர் ராமசாமி அம்மா தன்னுடைய மகனை போல் மடியில் வைத்து போது அப்போது அவரின் உயிர் பிரிகிறது. (அதிக்க வார்க்க இனத்தை சேர்த்த மகனை தன்னுடைய மகனாக பாவித்து
எதற்கும் அச்சமால் மடியில் கிடைத்திய அந்த அம்மா முலம் சாதியை தூக்கிவிசபட்டது.)

அதன் பின் கருவம்பாளையம் கார் கோவித்துவின் கார் முலம் பெரிய ஆஸ்பத்திரியில் தியாகி பழனிசாமியின் உடல்.  அதற்கு பிறகு இன்னைறய மாவட்ட தலைமை அலுவலகத்தில் அஞ்சலி நிகழ்வு. அங்கிருந்து சுமார் பத்து மைல் நடத்தே
இறுதி ஊர்வலம் சுமார் பத்தாயிரம் கட்சி தொண்டர்கள் சீராணம்பாளையம் நோக்கி வந்தார்கள். அந்நிலையில் அவர் புதைக்கும் இடம் புதர் அடர்ந்து பாம்பு பல்லி வசிக்கும் மிக ஆழமான இடத்தை ஒரே நாளில் சுற்றியும் உள்ள தோட்டத்தில் உள்ள அனைவரும் மாட்டுவண்டி யுடன் வந்தார்கள் . மணல் முலமாக சமன்படுத்தபட்டது.

ஊரில் உள்ள பெண்கள் எல்லோரும் தண்ணிர் பிரச்சினை தலைவிரித்து ஆடும் நிலையில் வரும் தோழர்களுக்கு பல இடங்களில் தண்ணிர் வைத்தார்கள். ஆனால் செங்கொடி இயக்கத்தின் பலமான கோட்டையாக இருக்கும் சீராணம்பாளையம் இன்று எல்லா வசதியும் ஓரளவு பூர்த்தி யடைத்த கிராமாக இருக்க செங்கொடி தான் காரணம்.

ஆகவே வாழையடி வாழையாக..
தலைமுறை தலைமுறையாக..
நாங்கள் கம்யூனிஸ்டாக…
தியாகி பழனிசாமி ,தியாகி ரத்தினசாமியின் வாரிசுகள்.
தோழர் அ.ப வின் வார்ப்புகள் என திமிராக
மீண்டும் உறுதியாக நீச்சயமாக
இடுவாய் இடது பக்கம் நோக்கி..
இடது பக்கம் இடுவாய்…

Palanisamy

 

 

 

 

பதிவு -பாலசுப்பரமணியன்

Leave a Reply