பெறுநர்
மாண்புமிகு உள்துறை அமைச்சர் அவர்கள்,
புதுச்சேரி அரசு,
புதுச்சேரி.
மதிப்பிற்குரியீர்
பொருள்:- இளைஞர்கள் மீது போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் திரு. சண்முகம் நடத்திய தாக்குதல் – I.R.P காவலர்கள் மற்றும் பலர் சேர்ந்து வழிமறித்து தாக்குதல் – போக்குவரத்து காவல் நிலையத்தில் வைத்து தாக்குதல் – நடவடிக்கை கோருதல் தொடர்பாக.
புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த சந்துரு, அவரது சகோதரர்கள் சரவணன், சசிக்குமார் ஆகியோர் நேரு வீதி, மிஷன் வீதி சந்திப்பில் துணிவியாபரம் செய்து வருகிறார்கள். சரவணக்குமார் வாங்கிவைத்திருந்த புதிய சட்டையை சசிக்குமார் எடுத்துக் கொண்டுவிட்டார். இதனால் 04.11.2010ல் மாலை சுமார் 6.00 மணியளவில் சசிக்குமாருக்கும் சரவணக்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. K. சந்துரு இரு சகோதரர்களையும் தடுத்து சமாதானப்படுத்தியுள்ளார். சசிக்குமார் தொடர்ந்து தகராறு செய்தார். இதனால் சந்துரு, சசிக்குமாரை பெரியக் கடை காவல் நிலையம் அழைத்துச் செல்ல முயன்றுள்ளார். அப்போது போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு. சண்முகம் என்னத் தகராறு என்று கேட்டுள்ளார். அது தொடர்பாக பெரியக்கடை காவல் நிலையம் செல்கிறோம் என சந்துரு சொல்லியுள்ளார். உதவி ஆய்வாளர் சண்முகம் அவர்கள் நான் கேட்பதற்கு நின்று பதில் பேசாமல் போற என்று திட்டியுள்ளார். அதற்கு சரவணன் பெரியகடை காவல் நிலையம் போறங்க என்று பதில் சென்னதுடன் அதற்கு ஏன் அசிங்கமா திட்டுறீங்க என்று கேட்டுள்ளார். நிதானமிழந்த உதவி ஆய்வாளர் தன் கையில் வைத்திருந்த வாக்கி டாக்கியால் சரவணன் மண்டையில் அடித்துள்ளார். இதனால் அவரின் பின்மண்டை உடைந்தது இரத்தம்; வெளியேறியது.
மேற்படி சம்பவத்தைத் தொடர்ந்தது எங்களுக்குள் உள்ள பிரச்சனையை போலிஸ் நிலையம்போய் தீர்த்துக்கொள்கிறோம் என்று சொல்லியபிறகு ஏன் அடிக்கிறிங்க என் சந்துரு கேட்டுள்ளார். நீங்க அடித்ததையும் காவல் நிலையத்தில் புகார் செய்கிறோம் என 3 சகோரதர்களும் பெரியகடை காவல் நிலையம் நோக்கி புறப்பட்டனர். பதட்டமடைந்த உதவி ஆய்வாளர் சண்முகம் I.R.P காவலர்கள் மற்றும் சிலரை ஆழைத்து கொண்டு வந்து காவல் நிலையம் சென்று கொண்டிருந்த இளைஞர்கள் 3 பேரையும் நேரு வீதியில் உள்ள ராஜேந்திரா டெக்ஸ்டைல்ஸ் அருகில் வழி மறித்து கடுமையாக தாக்கியுள்ளனர். பொது மக்கள் சிலர் தடுத்துள்ளனர்.தடுத்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் இந்த கொடுமையான தாக்குதல் நடத்தியிருப்பது கண்டனத்திற்கு குறியதாகும். மேலும் ஆத்திரம் அடங்காத SI சண்முகம் மற்றும் பல காவலர்கள் போக்குவரத்து காவல் நிலையத்திற்கு மூன்று இளைஞர்களையும் அழைத்துவந்து அங்கும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். சீருடையில் இருந்தவர்களும், சீருடையில் இல்லாத காவலர்கள் பலரும் லத்தியால் அடித்து கொடுரமாக தாக்கி கொலை செய்ய முயற்ச்சித்துள்ளனர். இந்த தாக்குதலில் சசிக்குமாரின் கண்புருவம் கிழிந்து அவரது கண்பாதிக்கப்பட்டுள்ளது. சந்துரு உள்ளிட்டு 3 இளைஞர்களுக்கும் உடல் முழுவதும் பலத்த ஊமை காயங்கள் ஏற்பட்டுள்ளது. சட்டம், மனித உரிமை அனைத்தும் மீறப்பட்டுள்ளது. கொலை வெறியோடு, மனிதத்தன்மையற்ற முறையில் நடந்துள்ள இந்தத் தாக்குதல் கவலையளிப்பதாகும், மேலும் தவறான முன்னுதாரணமாகும்.
ஆனால் உதவி ஆய்வாளர் சண்முகம் தான் செய்த தவறுகளை மறைத்திட ஏழை இளைஞர்கள் மீது பொய் புகார் அளித்து தப்பியுள்ளார். இது போன்ற நடவடிக்கை சணமுகத்திற்கு புதிதல்ல பல சம்பவங்களில் காவல்துறை அதிகாரி என்று ஆணவத்தோடு நடந்துகொண்டுள்ளர். சமீபத்தில் டெம்போ டிரைவரை தாக்கியது, 3 மாதத்திற்கு முன்னதாக மிஷன் வீதியில் சலூன் கடை உழியரை தாக்கியது எல்லாம் SI சண்முகத்திற்கு கைவந்த கலையாக உள்ளது. 3 இளைஞர்களை தாக்கிய சம்பவத்தில் SI சண்முகம் அவர்கள் தனது மேலதிகாரிகளுடைய ஓத்துழைப்போடு D.G.P. மற்றும் முதுநிலை கண்காணிப்பாளர்களுக்கு தவறான தகவல்கள் அளித்து உன்மை சம்பசத்தை மறைத்துள்ளதாகத் தெரிகிறது.
ஆகவே, தாங்கள் இச்சம்பவம் குறித்து நீதி விசாரனைக்கு உத்தரவிட வேண்டுகிறோம். பெரியகடை காவல் நிலையம் சென்ற 3 இளைஞர்களை வழிமறித்து லத்தியால் தாக்கியதுடன், போக்குவரத்து காவல் நிலையம் அழைத்துச்சென்றும் தாக்கிய SI சண்முகம் – I.R.P. காவலர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட காவலர்கள் மீது ஓழுங்கு நடவடிக்கை எடுத்து சட்டத்தையும் – மனித உரிமையையும் நிலைநாட்ட வேண்டுகிறோம். மேலும் சந்துரு, சரவணன், சசிக்குமார் ஆகியோர் மீது போடப்பட்ட பொய்வழக்குகளை ரத்து செய்ய வேண்டுகிறோம்.
சரவணன், சசிக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்ட தகவல் அவரது தயார் மற்றும் நெருங்கிய உரைவினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது சரவணன் மண்டையில் பழைய காயம் இருந்ததாக தகவல் குறிப்பிட்டு கையெழுத்து பெற முயற்ச்சிக்கப்பட்டுள்ளது. காவல் துறையால் கடுமையாக தாக்கப்பட்ட இளைஞர்கள் முன்று பேரையும் அரசு பொது மருத்துவமளையில் உள்ளிருப்பு நோயாளியாக சேர்ப்பதற்கு மருத்துவர்களுக்கு நிர்பந்தமும் அளிக்கப்பட்டுள்ளது. என்பதையும் தங்கள் கவனத்திற்கு கொண்டுவருவதுடன். நீதியும் – நியாயமும் கிடைத்திட வேண்டுகிறோம். சந்துரு அளித்த புகார்; மனு வழக்கு பதிவு செய்யவும் வேண்டுகிறோம்.
நன்றி.
இங்ஙனம்
(V. பெருமாள்)
செயலாளர்.
09.11.2010