ஒடிசாவின் விடுதலை வீரர் தோழர் பகபதி சரண் பாணிக்ரஹி

Bhagwati Panigrahiதோழர் பகபதி சரண் பாணிக்ரஹி பிறந்த தினம் இன்று.

ஒடிசாவின் புகழ் பெற்ற எழுத்தாளரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் மற்றும் முதல் செயலாளரும், பகபதி சரண் பாணிக்ரஹி பிரிக்கப்படாத புரி மாவட்டத்தின் பாலிபட்டானாவில் உள்ள பித்வநாத்பூர் கிராமத்தில் 01-பிப்-1907 அன்று பிறந்தார்.

பூரி மாவட்ட பள்ளி மற்றும் சத்யபாடி பானா பித்யாலயாவில் தனது ஆரம்பக் கல்வியை முடித்த பிறகு, பகபதி தனது பொருளாதார ஆனர்ஸில் ராவென்ஷா கல்லூரியில் பட்டமும், அதே பாடத்தில் பாட்னா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். பின்னர் ராவன்ஷாவில் சட்டக் கல்வியையும் பெற்றார்.

பகபதி சரண் தனது இலக்கிய வாழ்க்கையில் சுமார் 12 சிறுகதைகளை எழுதினார். அவரது குறிப்பிடத்தக்க சிறுகதைகளில் ஒன்று ‘சிகார்’. கதை ஒடிசாவின் பழங்குடி சமூகங்களின் வாழ்க்கையையும், ‘சாஹுகர்கள்’ மற்றும் ஆங்கிலேயர்களின் சுரண்டலையும் அடிப்படையாக கொண்டது. இக்கதை 1976 ஆம் ஆண்டில் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான மிருணாள் சென் என்பவரால் திரைப்படமாக எடுக்கப்பட்டது – 2016 ஆம் ஆண்டில், இதே கதையை அடிப்படையாகக் கொண்டு ஒடியா மொழி நாடகமும் எழுதப்பட்டு அரங்கேற்றப்பட்டது. பகபதியின் மற்ற கதைகள்: ‘மீமான்ஷா’, ‘ஜங்கிலி’, ‘ஆரம்பா’, ‘ஓ சேஷா’, ‘ம்ருத்யுர சேதனா’, ‘ஜீவனரஹ் சமாதி’, ‘பஞ்சிதா’, ‘சமயதிதா’, ‘ஜாதா’, ‘மிஸ்ரங்க கோபா’ மற்றும் ‘மஜ்லிஷ்’.

நவம்பர் 1935 இல், அனந்த பட்நாயக் மற்றும் பிறருடன் இணைந்து, ‘நபாயுக சாகித்ய சம்சத்’ (இளைஞர் இலக்கியச் சங்கம்) என்ற இலக்கிய அமைப்பை உருவாக்கினார். மிக விரைவில் அது பிரபலமானது மற்றும் நவீன ஒடியா இலக்கியத்தில் புதிய சிந்தனைகளை வளர்ப்பதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது. 1936-ல் அத்துனிகா என்ற பத்திரிகையைத் தொகுத்து வழங்கினார்.

பகபதி, தனது இளமை பருவத்திலும், அரசியல் வாழ்க்கையின் தொடக்கத்திலும், மகாத்மா காந்தியின் அரசியல் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டார். பின்னர் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் இணைந்தார். அவர், குரு சரண் பட்நாயக் மற்றும் பிரணாநாத் பட்நாயக் ஆகியோருடன் சேர்ந்து, 1 ஏப்ரல், 1936 அன்று ஒடிசாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கினார். கட்சியின் முதல் மாநிலச் செயலாளராக பகபதி தேர்வு செய்யப்பட்டார். அவர் இறக்கும் வரை கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கதின் முதன்மை செயல்பாட்டாளராக இருந்தார். இந்திய விடுதலைக்காக போராடியதற்காக ஆங்கிலேயர்களால் காவலில் வைக்கப்பட்ட தோழர்  பகபதி அக்டோபர் 23, 1943 சிறையிலேயே சித்திரவதை செய்து கொல்லப்பட்டார்.

Leave a Reply