ஆட்சியாளர்களின் அடக்குமுறையை எதிர்த்து போராட சி.எச்.பாலமோகனன் போன்ற தலைவர்கள் இன்றைக்கு தேவைபடுகிறார்கள் என்று நினைவேந்தல் நிகழ்வில் புகழாரம்.
புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தின் முன்னால் கௌரவத்தலைவர் சி.எச்.பாலமோகனலானின் முதம் ஆண்டு நினைவேந்தல் நிழ்ச்சி ஓட்டல் ஜெயராமில் நடைபெற்றது.
சம்மேளன பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில், புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் க.லட்சுமிநாராயணன், சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் ஆர்.சிவா, சிஐடியூ தமிழ்மாநில துணைப்பொதுச்செயலாளர் வி.குமார், புதுச்சேரி மூத்த தொழிற்சங்க தலைவர் தா.முருகன், அரசு ஊழியர் சம்மேளன அறக்கட்டளை தலைவர் கே.முருகன், சம்மேளன கௌரவ தலைவர் பிரேமதாசன், தலைவர் ரவிச்சந்திரன், சம்மேளன நிர்வாகிகள் சீத்தாராமன், கீதா, கிறிஸ்டோபர் உட்பட திரளான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு மறைந்த தலைவரின் திருவுருவபடத்திற்கு மலர் தூவி, புகழ் அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய தலைவர்கள், நாம் போராடி பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இன்றைக்கு உள்ளோம். ஊழியர்களின் ஊதிய உயர்வுக்கு மட்டும் பாலமோகனன் போராட வில்லை. அவர் ஏற்று கொண்ட கொள்கைக்கு உட்பட்டு தொழிற்சங்க பணிகளோடு, ஏழை எளிய மக்களை பாதிக்கும் ஆட்சியாளர்களின் அடக்கு முறைகளை எதிர்த்து சமரசமற்ற போராட்டத்தை நடத்தினார். இன்றைக்கு ஒன்றியத்தில ஆட்சி செய்யும் பாஜக ஆட்சியின் அடக்குமுறைகளை எதிர்த்து போராடும் வகையில், பாலமோகனன் போன்ற தலைவர்கள் தேவைபடுகிறாரகள். இவ்வாறு நினைவேந்தல் நிகழ்வில் தலைவர்கள் பேசினார்கள்.