மாவீரன் ஹோ சி மின்

statue-of-ho-chi-minh-can-tho-vietnamபிரெஞ்சு ஏகாதிபத்தியத்தை வீழ்த்தி வியட்நாமுக்கு கிடைத்த விடுதலையை அமெரிக்கா கம்யூனிச எதிர்ப்பு என சொல்லிக்கொண்டு உலகப்போரில் செலுத்திய குண்டுகளை விட அதிகம் செலுத்தி பறிக்க முயன்றது அமெரிக்கா. அப்பொழுது மக்களை வழிநடத்தி கொரில்லா போர் முறையால் நாட்டை வெற்றிப்பாதை நோக்கி அழைத்து சென்ற நிஜத்தலைவன் ஹோ சி மின் (Hồ Chí Minh மே 19, 1890 – செப்டம்பர் 2, 1969)

வியட்நாம் நெடுங்காலம் மன்னர் ஆட்சிக்கு உட்பட்டு இருந்த தேசம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில்  1890-ல் ஹோ சி மின் பிறந்தபோது வியட்நாம் பிரான்ஸ் காலனி ஆதிக்கத்தில் இருந்தது. 1911-ல் பிரஞ்சு கப்பலில் சமையல்காரராக பணியாற்றுவதற்காக நாட்டை விட்டுச் சென்றபோது அவர் பதின் பருவத்தை கடந்து சில ஆண்டுகளே ஆகியிருந்தது. ஆனால் விரைவிலேயே பிரஞ்சு காலனி ஆதிக்கத்திற்கு எதிராக உலகத்தின் அபிப்ராயங்களை அணி திரட்ட வேண்டியத் தேவை தனக்கு உள்ளது எனப் புரிந்து கொண்டார்.

அவர் ஃபிரான்சில் ஒரு பத்திரிகை ஆசிரியராக இருந்தார், மாஸ்கோவுக்கு பலமுறை பயணம் செய்த ஹோ சி மின் சீனாவில் 1930-1940களில் நன்றாக வளர்ந்து கொண்டிருந்த சீன புரட்சியில் பங்கெடுத்தார். அவரது புரட்சி செயல்பாடுகளுக்காக சீனாவில் கைது செய்யப்பட்டார். ஆனால் ஹோ சி மின் தனது நாட்டுக்கு சுதந்திரம் கிடைப்பதில் முழு கவனமும் செலுத்தினார். 

உலகப்போர் சமயத்தில் நாஜிக்களின் பொம்மை அரசாங்கம் நாட்டை ஆண்டது ;பின் அங்கிருந்து ஆட்சி ஜப்பானுக்கு பாஸ் ஆனது. பிரான்ஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்க படைகளை அனுப்பியது. அங்கிள் ஹோ காட்டிய வழிகாட்டுதலில் தீர்க்கமாக மக்கள் போராடினார்கள். கூடவே சோவியத் ரஷ்யாவின் உதவியும் சேர்ந்து கொண்டது. 1945-ல் சுதந்திரம் கிடைத்தது நாடு வடக்கு வியட்நாம், தெற்கு வியட்நாம் என பிரித்து கொல்லப்பட்டது.

போர்களத்தில் வீரதீர படையினராகவும், கவரக்கூடிய தலைவராகவும் அவர் விளங்கினார். 3 பெரிய படைப்பிரிவுகளான பிரான்ஸ், ஜப்பான், அமெரிக்காவுக்கு எதிராக நடத்திய போரில் வியட்நாமின் கம்யூனிஸ்ட் படையை அவர் வழிநடத்தினார். எல்லா போரிலும் வியட்நாம் வென்றது. எல்லா சிக்கல்களுக்கும் எதிராக அவர் பெற்ற வெற்றிகளுக்காக தேசிய சின்னமாக விளங்குகிறார். 20 ஆண்டுகளாக நடைபெற்ற ரத்த கறை படிந்த போருக்கு பின்னர், வியட்நாமை தவிர வேறு எந்த நாடும் வல்லரசான அமெரிக்காவை போரில் தேற்கடித்தது கிடையாது. 

அங்கிள் ஹோ என அழைக்கப்பட்ட ஹோ சி மின் பேசினாலே மக்கள் கண்ணீர் விட்டார்கள்; அவரின் சிந்தனை மக்களை ஒன்றிணைந்த வியட்நாமை உருவாக்க வேண்டும் என்கிற எண்ணத்தை வார்த்து எடுத்தது. அமெரிக்கா யார் இவர் என்று பார்த்தது; கம்யூனிஸ்ட் என்று தெரிந்தது .படைகளை அனுப்பிக்கொண்டே இருந்தது. எளிய மக்களின் வீடுகளில் போய் ஹோ சி மின் ஆதரவு திரட்டினார் ; கொரில்லா போர் முறையை பின்பற்றினார்கள் .

வருகிற எல்லா அமெரிக்க அதிபரும் போரை நிறுத்துவதாக அறிவித்து விட்டு தொடர்ந்து போர் செய்துகொண்டே இருந்தார்கள் . இரண்டாம் உலகப்போரில் போடப்பட்ட குண்டுகளை விட அதிக எண்ணிக்கையில் மக்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. ஹோ சி மின் எங்கே போனார் என்றே தெரியவில்லை ,அவ்வப்பொழுது தோன்றுவார் ;தொடர்ந்து ஊக்கப்படுத்திக்கொண்டே இருந்தார்

புத்த பிக்குகள் அமைதியாக பெட்ரோலை ஊற்றிக்கொள்வார்கள்; ஒற்றை தீக்குச்சி உரசல். மவுனமாக் எந்த சப்தமும் இல்லாமல் இறந்து போவார்கள். உலகை இந்த காட்சி உலுக்கியது என்றால் அதன் மனசாட்சியை கலங்க வைத்தது நேப்பாம் வெடிகுண்டு வீசப்பட்டு எல்லாரையும் இழந்து நிர்வாணமாக கண்ணீரோடு ஓடிய சிறுமியின் கதறல். வெட்ட வெட்ட முளைத்துக்கொண்டே இருந்தார்கள் கொரில்லாக்கள். அமெரிக்க மக்கள் பேக்கப் என்று தலையில் அடுத்து சொல்லிவிட்டார்கள்

இன்று வெட்டுக்கிளிகள் யானையுடன் சண்டைபோடுகிறது. ஆனால் நாளை யானையின் குடல் பிடுங்கியெறியப்படும்’’ என்று சொன்னது உற்சாகப்படுத்த மட்டுமல்ல,.. உண்மையில் நடந்தேறியது. அமெரிக்க வல்லரசினை மண்ணைக் கவ்வச் செய்தவர் வியட்நாம் விடுதலை இயக்கத்தின் மகத்தான தலைவர் தோழர் ஹோசிமின்.

1930ல் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கியது முதல் தனதுஇறுதி நாள் வரை மார்க்சிய லெனினியப் பாதையில் உறுதியாக நின்றுஅதுதான் அத்தனை செயல்களுக்கும் அடிப்படையான தத்துவம்,வளரும் சமூக விஞ்ஞானம், பிரச்சனைகளின் தீர்வு அதில் தான் உள்ளது என்பதை உரக்கச் சொல்லி அதன் அடிப்படையில் புரட்சியின் பாதை என்ற புத்தகத்தை வியட்நாமின் புரட்சிக்கான கட்டமைப்பு குறித்து எழுதினார். அது தான் இன்று வரை வியட்நாம் கம்யூனிஸ்ட்களின் அடிப்படையான நூலாகப் போற்றப்படுகிறது.

உண்மையாய் இருத்தல், போற்றுதல் என்ற இரண்டு நல்லொழுக்கங்களில் ஹோசிமின் உறுதியாக இருந்தார். அடுத்தடுத்த தலைமுறைக்கு கற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்றார்.  வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி இந்த கோட்பாடுகளைத் தாங்கி நிற்கிறது. நாட்டுக்கும், மக்களுக்கும் உண்மையுடனும் நடந்து கொள்வது முதல் கடமை. ஒவ்வொருவருக்கும் பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள் உண்டு. அவர்களிடத்தில் அன்பு செலுத்த வேண்டும், உயர்வாக மதிக்கவேண்டும், ஏனெனில் உங்களுக்கு வாழ்வு அமைத்துக் கொடுத்தவர்கள் அவர்கள். இது இரண்டாவது கடமை. இந்த கோட்பாட்டை வியட்நாமியர்கள் உறுதியாகப் பின்பற்றி நிற்கின்றனர்.

அதனால் தான் வெட்டுக்கிளிகளால் யானையின் குடலைப் பிடுங்கி எறிய முடியும் என்று நம்பிக்கையோடு யுத்தகாலத்திற்கு மட்டுமல்ல; எதிர்காலத்திற்கும் சேர்த்து சொன்னார் ஹோசிமின்.  டெல்லி மற்றும் கொல்கத்தாவில் ஒரு சாலைக்கு இந்திய அரசால் ஹோ சி மின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஆசிய நாடுகளில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி எவ்வாறு கட்டப்படவேண்டும், ஒரு கம்யூனிஸ்ட் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கான அரிச்சுவடி ஹோசிமின்னிடம் இருந்துதான் கற்க முடியும். ஏனெனில், ஹோ-சி-மின்னின் புரட்சி வாழ்க்கை மார்க்ஸியத்தை அடிப்படையாகக் கொண்டது. முரணற்றது. மார்கஸியம் ஹோசிமின்னின் எளிமையான தூய வாழ்வு மூலம் புதிய பரிணாமத்தை அடைந்தது.

புரட்சிகர அரசியலில் தேசிய விழிப்பும், வர்க்கப் போராட்ட நலன்களும், ஒருங்கிணைந்தது. அது பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தோடு பின்னிப் பிணைந்தது. இந்த மார்க்சிய கோட்பாட்டை வியட்நாமிய மக்களிக் வாழ்க்கையோடும் – மரபோடும் படைப்பாக்க ரீதியில் இணைத்து வெற்றி கண்டவர் ஹோ-சி-மின். அதற்கான புரட்சிக் கட்சியை அவர் கட்டியதுதான் வீர வியட்நாமின் ஆக்கத்துக்கு அடிப்படை. அவர் ஆசியாவுக்கு மட்டுமல்ல உலக முழுமைக்குமான கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சிற்பிகளில் போற்றுதலுக்குரியவர், கற்றறிதலுக்கான மாபெரும் ஆசான்.

சுமார் 150 ஆண்டுகள் காலனியாதிக் கத்தின் நுகத்தடியில் இருந்த ஒரு நாட் டிலிருந்து வந்தவன் என்ற முறையில், காலனிகளின் சுரண்டல் மற்றும் காலனி எஜமானர்களின் ஒடுக்குமுறைகள் எப் படி இருக்கும் என்பதெல்லாம் நாங்கள் புரிந்துகொண்டிருக்கிறோம். சோசலிசத் திற்கான போராட்டத்துடன் காலனியா திக்கப் பிரச்சனைகளையும் சரியாக இணைத்து, காலனியாதிக்கத்திலிருந்த நாடுகளில் விடுதலைக்கான பாதையைச் சரியாக அமைத்துத்தந்த கம்யூனிஸ்ட் தலைவர்களின் மத்தியில் தோழர் ஹோ சி மின் முதலாவதாவார்.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத் தில், மார்க்சியம்-லெனினியம் குறித்து சரி யான புரிதல் இல்லாத சமயத்தில், காலனி எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான சரியான தத்துவார்த்தத் திசைவழி தெரியாது தோழர் ஹோ சி மின்னும் தத்தளித்துக் கொண்டிருந்தது உண்மை. ஆனால், காலனியாதிக்கம் தொடர்பாக லெனினது ஆய்வுக் குறிப்புகளைப் படித்தபின்னர், இன்ப அதிர்ச்சிக்கு ஆளான தோழர் ஹோ சி மின், ‘‘இதுவே எமக்குத் தேவை, விடுதலைக்கான பாதை இதுவே’’ என்று உரத்துக் கூறினார்.

மார்க்சிய-லெனினியத்தை முழுமை யாகப் புரிந்துகொண்டதன் பின்னணி யில் வியட்நாமின் துல்லியமான நிலை மைகளை லெனினிய அடிப்படையில் ஆய்வு செய்து, காலனி எதிர்ப்புப் போராட் டத்திற்கான போர்த்தந்திரத்தையும் நடை முறை உத்திகளையும் தோழர் ஹோ சி மின் வடித்தெடுத்தார். தோழர் ஹோ சி மின்னின் பாரம்பரியத்தின் மிக முக்கிய அம்சங்களில், இது ஒன்று.

அடுத்த முக்கிய அம்சம், இதனை அடைவதற்காக புரட்சிகரமான கம்யூ னிஸ்ட் கட்சியைக் கட்டியதும், அதன் கீழ் மக்களை முழுமையாக அணிதிரட்டியது மாகும். மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்ந்த மக்களுக்கு மார்க்சிய-லெனி னியத்தின் அடிப்படைக் கூறுகளை விளக்கியதோடு மட்டுமல்லாமல், புரட் சித் தத்துவத்தின் அடிப்படையில் ஸ்தாப னத்தையும் உருவாக்கினார். கட்சியின் ஒற்றுமைக்கு அவர் மிகுந்த முக்கியத் துவம் கொடுத்தார். மத்தியக்குழுவிலி ருந்து அடிப்படைக் கிளைகள் வரை, கண் ணின் மணி போன்று கட்சியின் ஒற்று மையைக் கட்டிக் காத்திட வேண்டும் என்றார். இம்முயற்சியில் கட்சிக்குள் வந்த வலது, இடது திரிபுகளுக்கு எதி ராகப் போராட கொஞ்சம்கூட தயங்க வில்லை. ஹோ சி மின் வறட்டுத் தத்துவ வாதத்திற்கும் எதிரானவர். அவர் நடை முறை மூலமாகத் தத்துவத்தைச் செழு மைப்படுத்தினார், தத்துவத்தின் மூலமாக நடைமுறையை உருக்குபோன்று மாற் றினார்.

தோழர் ஹோ சி மின்னின் மற்றுமொரு மகத்தான பண்பு அவர் மக்களுடன் கொண்டிருந்த மாபெரும் பிணைப்புதான். தலைவர்கள் உட்பட அனைத்து முன்னணி ஊழியர்களும் மக்களுடன் வாழ வேண்டும், மக்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும், மக்களுக்காகச் சேவை செய்திட வேண்டும், அவர்கள் உணர்வு மட்டத்தை வளர்த்தெடுத்து அவர்களுக்குத் தலைமை தாங்கவேண் டும் என்று அடிக்கடி ஹோ சி மின் கூறு வார். இவ்வாறு அவர் மக்களிடம் வைத்தி ருந்த அபரிமிதமான நம்பிக்கைதான் புரட் சிகரப் போராட்டத்தின் அனைத்துக் கட்டங்களிலும் அவருக்கு வெற்றிகளை உத்தரவாதமாக்கின.

ஹோ சி மின் தன் வாழ்நாள் முழுதும் தன் உடலாலும் உள்ளத்தாலும் நாட்டிற் காகவும், புரட்சிக்காகவும், மக்களுக்காக வும் உழைத்தார். ஹோ சி மின் முன்னணி ஊழியர்களின் புரட்சிகர ஒழுக்கத்திற் கும், புரட்சிகர மாண்பிற்கும் அதிக அழுத் தம் கொடுத்தார். “நல்ல நடத்தையுடனும் நல்லொழுக்கத்துடனும் உள்ள முன் னணி ஊழியர்களிடம் மக்கள் மிகுந்த மரியாதையுடனும் நேசத்துடனும் இருப் பார்கள்,” என்று ஹோ சி மின் கூறுவார். அவர் மூன்று எதிரிகளை அடையாளம் காட்டினார். “முதலாளித்துவமும் ஏகாதி பத்தியமும் மிகவும் ஆபத்தான எதிரிகள். … மூன்றாவது எதிரி, தனிநபர்வாதம் ஆகும். இவர், மேலே குறிப்பிட்ட இரு எதிரிகளின் கூட்டாளியாவார் என்று ஹோ சி மின் கூறினார். “இத்தகைய மூன்று எதிரிகளுக்கும் எதிராக உறுதி யுடன் போராடுவதிலேயே புரட்சிகர நல்லொழுக்கம் அடங்கியிருக்கிறது” என்று தோழர் ஹோ சி மின் கூறினார்.

சமூகத்தை புரட்சிகரமாக மாற்றிய மைக்கும் போராட்டத்தில் தோழர் ஹோ சி மின் கற்றுத்தந்துள்ள புரட்சிகரப் பாரம்பரியங்கள் நமக்கு வழிகாட்டட்டும். “ஒவ்வொருவரும் போர்முனையிலும், பொருளாதார முனையிலும், அரசியல் அல்லது கலாச்சார முனையிலும் போராளிகளாக மாற வேண்டும்” என்று ஹோ சி மின் அன்று விடுத்த வேண்டுகோள், ஏகாதிபத்தியத்தின் தாக்குதலின் கீழ் உள்ள மூன்றாம் உலக நாடுகளில் வாழும் நம் ஒவ்வொருவருக்கும் இன்றைக்கும் பொருந்தக்கூடியதேயாகும்.

நம் முன் உள்ள பணி எளிதானதோ அல்லது மென் மையான மலர்ப்பாதையோ அல்ல என் பது உண்மைதான். தோழர் ஹோ சி மின் சொன்னதுபோன்று, “எதுவும் எளிதானது மல்ல, அதேபோன்று எதுவும் கடின மானதுமல்ல.” இவ்வாறு அவரது தத்து வார்த்த வெளிச்சத்தில் உறுதியான நம் பிக்கையுடன், வர்க்கமற்ற சமுதாயத்தை அமைப்பதற்கான போராட்டத்தில் நம்மை நாம் இணைத்துக்கொள்வோம்.

Leave a Reply