மனித குல விடுதலைக்கான தீர்வைச் சொன்னது மார்க்சியம். மார்க்சியத்தை ரஷ்ய மண்ணின் தன்மைக்கேற்ப அமல்படுத்தி போல்ஷ்விக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் நடத்திய புரட்சியில் வெற்றி கண்டார் லெனின். மாபெரும் மக்கள் புரட்சியின் மூலம் உருவாக்கப்பட்ட சோஷலிச சோவியத் யூனியனைப் பாதுகாத்தார் ஸ்டாலின். லெனின் உருவாக்கிய சோஷலிச சோவியத்துக்கு எதிராக இருந்த ஏகாதிபத்திய வாதிகள், கட்சிக்குள்ளேயே இருந்த எதிர்ப்புரட்சி சக்திகள், முதலாளித்துவ முகவர்களின் பலவகைப்பட்ட சந்தர்ப்பவாதங்களுக்கு எதிராகப் போராடி அவற்றையெல்லாம் முறியடித்து சோஷலிசத்தையும் மார்க்சிய லெனினியத்தையும் பாதுகாக்கும் அரணாக வும் அவற்றுக்குச் செயல் வடிவம் கொடுக்கும் சிற்பியாகவும் திகழ்ந்தார் ஸ்டாலின்.
லெனின், ஸ்டாலின், மாவோ குறித்த மார்க்சியத் திரிபுவாதிகளின் மதிப்பீடுகள் யாவும் அவர்களைக் கொடூரமா னவர்களாகவும் சர்வாதிகாரர்களாகவுமே காட்டுகின்றன. உழைக்கும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் பக்கம் நின்றவர்களை வெறுமனே சர்வாதிகாரிகள் என முத்திரை குத்திக் கொச்சைப் படுத்துவதோடு, அவர்களைப் பற்றிய அவ தூறைப் பரப்பிவிடுவது முதலாளித்துவ வர்க்கத்தின் சிந்தனை முறை. இச் சிந்தனமுறை, மார்க்சியத்தின் பேரால் இயங்கிக் கொண்டிருக்கும் அறிவு ஜீவிகளிடமும் இருந்து கொண்டு தானிருக்கிறது. இத்தகைய அறிவு ஜீவிகள் மார்க்சியத்தின் பக்கம் நிற்கிறோம் என்னும் பேரில் உழைக்கும் பாட்டாளி வர்க்க நலனுக்கு எதிராக செயல்படு கிறார்கள். மார்க்சியத்தின் அடிப்படையையே தெரிந்து கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள்.
பாட்டாளி வர்க்க நலனில் அக்கறை கொண்டு பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டத்தோடு சோஷலிசப் புரட்சியை நிகழ்த்திக் காட்டியவர்கள் லெனின், ஸ்டாலின், மாவோ ஆகிய மகத்தான தலைவர்கள். இவர்கள் மார்க்சியத்தின் பக்கம் நின்றார்கள். பாட்டாளி வர்க்கத்தின் பக்கம் நின்றார்கள். புரட்சியின் பக்கம் நின்றார்கள். இதன் காரணமாகவே ஏகாதிபத்தியச் சார்பாளர்கள், உடைமை வர்க்க முதலா ளித்துவச் சிந்தனை முகவர்கள், மார்க்சியத் திரிபுவாதிகள், எதிர்ப்புரட்சி சக்திகள் போன்றோர் லெனின், ஸ்டாலின், மாவோ பற்றிய தவறான மதிப்பீடுகளையும் அவதூறுக ளையும் கட்டவிழ்த்து விட்டனர். அதிலும் குறிப்பாக ஸ்டாலின் மீதான அவதூறுகள் திட்டமிட்டு உருவாக்கப் பட்டுப் பரப்பப்பட்டன. உண்மையில், ஸ்டாலின் மார்க்சியத்தின் பக்கமே நின்றிருக்கிறார். அதாவது, ஸ்டாலினின் புரட்சிகர நடவடிக்கைகளும் சிந்தனைகளும் மார்க்சியத்திற்கும் சோஷலிச சமூக அமைப்பிற்கும் பெரும் பங்களிப்பாக அமைந்திருந்தன. அவர் உண்மையில் ஒரு மகத்தான பாட்டாளி வர்க்க ஜனநாயகவாதி.
புரட்சிகர நடவடிக்கைகள் மூலம் லெனின் உருவாக்கிய சோஷலிச ரஷ்யாவைப் பேணிப் பாதுகாத்ததோடு, பாட்டாளி வர்க்கத்திற்கு எதிரான முதலாளித்துவத்திற்கு முடிவு கட்டியவர் தோழர் ஸ்டாலின். மேலும் சோவியத் ரஷ்யாவில் உலகிலேயே முதலாவதும் மிகப் பெரியதுமான விவசாய கூட்டுப் பண்ணைகளை உருவாக்கியவர் ஸ்டாலின்தான். அதாவது விவசாயிகளுக்கு நிலத்தைப் பகிர்ந்தளித்து-அவர்களைக் கூட்டுறவு உற்பத்தியில் ஈடுபடச்செய்து உற் பத்திப் பொருட்களை அவ்விவசாயிகளே சந்தைப்படுத்தி விற்பனை செய்வதில் பெறக்கூடிய லாபத்தை உழைப்புக் கேற்ற ஊதியமாகப் பங்கீடு செய்து கொள்ளச் செய்து-மீதமுள்ள லாபத்தைச் சமூகத்தின் மற்ற பயன்பாட்டுக்குப் பயன் படுத்திக் கொள்வதுமான வழிமுறைகளால், விவசாயிகள் தற்சார்புடன் திகழ்வதற்கான உற்பத்தி முறையை சோவியத் நாடெங்கும் செயல்படுத்தி வெற்றி கண்டவர் ஸ்டாலின். மேலும், வேலைக்கு உத்தரவாதம், அனைத்து குடிமக்க ளுக்கும் சமூகப் பொருளாதாரப் பாதுகாப்பு, எழுத்தறி வின்மை முழு நீக்கம் போன்ற பயன்களுடன் கூடிய உலகின் முதல் சோஷலிச அமைப்பு சோவியத் ரஷ்யாவில் மேலும் வளர்த்தெடுக்கப்பட்டது என்றால் அது ஸ்டாலினால்தான்.
இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் உலக பாசிச பயங்கரவாதியான ஹிட்லரை எதிர்த்த போராட்டத்தைத் தீரமுடன் வழி நடத்தி வெற்றி கண்டவர் ஸ்டாலின். இவரு டைய பெரு முயற்சியாலும் வழிகாட்டுதலாலும்தான் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் விடுதலை பெற்றதோடு சோஷலிச நடுகளாகவும் மலர்ந்தன. மேலும் முதலாளித்துவச் சீர்கேடுகளால் சோஷலிச நாடுகள் சீர் குலைவதைத் தவிர்க்கும் வகையில் சோஷலிச நாடுக ளோடு முதலாளித்துவ நாடுகள் அண்டுவதைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டவர் ஸ்டாலின்தான்.
சீனா, கியூபா, பொலிவியா, வியட்நாம், கொரியா, கம்போடியா போன்ற நாடுகள் விடுதலை பெறுவ தற்கான புரட்சிகரப் போராட்டங்கள் அனைத்திற்கும் பேருதவி புரிந்தது மட்டுமல்லாமல், ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் அனைத்துப் பிற்போக்கு அரசியல்வாதிகளுக்கு எதி ரான போராட்டத்தில் புரட்சியாளர்களுக்கு வழிகாட்டியாய்த் திகழ்ந்து புரட்சிகர வரலாற்றின் முன்னணியில் நின்றவர் ஸ்டாலின். சுருங்கக் கூறின் உலகின் மூன்றிலொரு பகுதி நாடுகள் சோஷலிச முகாமாக மாறி, ஏகாதிபத்திய நாடு களுக்குச் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தார் ஸ்டாலின்.
பாட்டாளி வர்க்க சர்வதேசியத் தன்மை கொண்ட வெளி யுறவுக் கொள்கையைப் பின்பற்றுவதற்கு சோவியத் அரசுக்கும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தலைமை தாங்கியவர் ஸ்டாலின். உலகம் முழுவதும் மனிதர்கள் இருக்குமிடமெல்லாம் மார்க்சியமும் – லெனினியமும் போய்ச் சேரவேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் புரட்சி கரத் தத்துவ நூல்கள், புரட்சிகர இலக்கியங்கள், சோஷலிச சமூக அமைப்பு குறித்த நூல்கள் மார்க்சிய அடிப்படையி லான வரலாற்று நூல்கள் என மார்க்சியக் கல்வி தொடர் பான அனைத்தும் உலகின் பெரும்பாலான மொழிக ளில் மொழிபெயர்க்கப்பட்டு மாஸ்கோ முன்னேற்றப் பதிப்ப கத்தால் வெளியிடப்பட்டது ஸ்டாலின் காலத்தில்தான்.
வாழ்க நீ எம்மான் !
(தோழர் ஸ்டாலின் பிறந்தநாள் – டிசம்பர் 18)
– பெரணமல்லூர் சேகரன், தீக்கதிர்