தோழர் பிரபாகர் சான்ஸ்கிரி நூற்றாண்டு படைப்பாற்றல் மிக்க பாட்டாளித் தலைவர்


2021 செப்டம்பர் 25 தோழர் பிரபாகர் சான்ஸ்கிரியின் நூறாவது பிறந்த நாள். 1921 செப்டம்பர் 25இல் பிறந்த அவர் 2009 மார்ச் 9 அன்று காலமான போது இடதுசாரி இயக்கங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மகாராஷ்டிர சிஐடியு போன்ற அமைப்புகள் தங்களுடைய அசாதா ரண தலைவர்களில் ஒருவரை இழந்து நின்றன. 1941இல் தனது இருபதாவது வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த சான்ஸ்கிரி தன்னுடைய எண்பத்தியேழு ஆண்டு கால வாழ்க்கை யில் அறுபத்தியெட்டு ஆண்டுகளை மிகவும் முன்மாதிரியான அர்ப்பணிப்புடன் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கென்று கழித்திருந்தார். அந்தக் காலகட்டத்தின் பெரும்பகுதியில் கட்சி, சிஐடியு முன்னணித் தலைவர்களில் ஒருவ ராக அவர் இருந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மகாராஷ்டிரா மாநில செய லாளர், கட்சியின் மத்திய குழுவின் முன்னாள் உறுப்பினர், முன்னாள் மாநிலத் தலைவர், சிஐடியு மாநில பொதுச் செயலாளர், சிஐடியு முன்னாள் அகில இந்திய துணைத் தலைவர், மாநிலக் கட்சியின் ஜீவன்மார்க் என்ற வார இத ழின் முன்னாள் ஆசிரியர், சட்டமன்ற உறுப் பினர், பின்னர் சட்ட மேலவை உறுப்பினர் என்று நீண்டகாலம் அவர் சேவையாற்றி வந்தார். மார்க்சியம்-லெனினிசம் மீது அவருக்கிருந்த நம்பிக்கை இறுதி வரை அசைக்க முடியாததாக இருந்தது.

மதிப்புமிக்க கருத்தியல் பங்களிப்பு

சான்ஸ்கிரி ஒரு படைப்பாக்க மார்க்சிய சிந்தனையாளர் ஆவார். அனுச்யா அந்தரங்கட் (அணுவின் உள்ளே), மனவாச்சி கஹானி (மனிதனின் கதை), டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் – மார்க்சிய மதிப்பீடு, சார்வாக் முதல் மார்க்ஸ் வரை என்று புதிய முயற்சியில் உரு வான அவரது நான்கு புத்தகங்கள் மகாராஷ்டிரா வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அவற்றில் பெரும்பாலானவை பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு நாட்டின் பெரும் பகுதிகளைச் சென்றடைந்தன. விவாதத்தில் உள்ளவற்றை ஆக்கப்பூர்வமாக மார்க்சிய நிலை ப்பாட்டில் இருந்து தன்னுடைய புத்தகங்களில் அவர் பகுப்பாய்வு செய்திருந்தார். அந்தப் புத்த கங்கள் மூலம் சமகால இடதுசாரி ஆர்வலர்களை கருத்தியல் ரீதியாக வளர்த்தது மட்டுமல்லாமல், அடுத்த தலைமுறைகளுக்குத் தேவையான புதையலையும் அவர் விட்டுச் சென்றார். அவர் 1989 முதல் 2009 வரை ஜீவன்மார்க் வார இதழின் ஆசிரியராக இருப தாண்டுகளாக இருந்துள்ளார். அவர் எழுதி வந்த தலையங்கங்களும், தற்போதைய நிகழ்வுகளின் மீதான விமர்சனங்கள் என்ற பத்தியும் மிகவும் பிரபலமானவை. மிகவும் எளிமையான அவரது எழுத்துக்கள், துல்லியமாக, காரசாரமாக இருந்தன. அந்த இருபதாண்டுகள் உலகில், நம் நாட்டில், மாநிலத்தில் மாபெரும் மாற்றங்க ளையும் சவால்களையும் கண்டிருந்த கால கட்டமாகும். சோசலிசம் தொன்னூறுகளின் ஆரம்பத்தில் கிழக்கு ஐரோப்பா, சோவியத் யூனியனில் சரிவைக் கண்டது. சந்தேகத்திற்கு இடமின்றி அந்தச் சரிவு சோசலிசத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாகவே இருந்தது. முதலாளித்துவ சித்தாந்தவாதிகள் உடனடியாக சோசலிசத்திற்கு எதிராக தங்களுடைய பிரச்சாரத்தைத் துவங்கி னர். அப்போது மார்க்சியத்தின் செல்லுபடித் தன்மையைத் தீவிரமாக ஆதரித்து ஜீவன்மா ர்க்கில் பல கட்டுரைகள், தலையங்கங்களை சான்ஸ்கிரி எழுதினார்.

அந்த காலகட்டத்தில் நம் நாட்டிலும் இரண்டு முக்கியமான மாற்றங்கள் நிகழ்ந்தன. ஒருபுறத்தில் காங்கிரஸ் அரசு 1991இல் ஏகாதிபத்திய உலகமயமாக்கலின் புதிய தாராள மயக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கத் தொடங்கி யது. மறுபுறம் ஆர்எஸ்எஸ், விஎச்பி, பாஜக போன்ற வகுப்புவாத சக்திகள் தாங்கள் மேற்கொண்ட அயோத்தி ராமர் கோவில் பிரச்சாரம், 1992 டிசம்பர் 6 அன்று பாபர் மசூதியை இடித்தது போன்ற செயல்பாடுகளால் நாடு முழுவதும் வகுப்புவாத ஊடுருவலைத் தூண்டி தங்கள் செல்வாக்கைப் பெருக்கிக் கொண்டன. ஜீவன்மார்க் இதழ் மற்றும் பல்வேறு துண்டுப் பிரசுரங்கள் மூலம் அந்த இரட்டைச் சவால்கள் மீது மிகப் பரந்த தாக்குதலை தொடங்கிய சான்ஸ்கிரி அந்த இரண்டு மாற்றங்களுக்கும் எதிராக தங்களுடைய எதிர்ப்பை வலுப்படுத்து மாறு கட்சியினருக்கும், அனைத்து இடதுசாரி களுக்கும் அழைப்பு விடுத்தார். சான்ஸ்கிரியின் ஆய்விற்கான மற்றுமொரு சிறப்புப் பொருளாக இந்தியாவில் உள்ள சாதி அமைப்பு இருந்தது. சான்ஸ்கிரி அது குறித்து விரிவாகப் படித்து ஆழ்ந்த சிந்தனைகளைக் கொண்டிருந்தார். தோழர்கள் பி.டி.ரணதிவே, இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் ஆகியோரின் சாதி குறித்த படைப்புகளை முன்னோக்கி எடுத்துச் சென்றதன் மூலம் சான்ஸ்கிரி மகாராஷ்டிராவில் சாதி, சமூகப் பிரச்சனைகளில் கட்சியின் அணுகு முறையை மாற்ற உதவினார். இந்தியாவில் உள்ள தேசிய இனங்கள் குறித்தும் சான்ஸ்கிரி ஆய்வு செய்தார். மகாராஷ்டிராவின் சிறந்த முற்போக்குவாதிகளான சத்ரபதி சிவாஜி, மகாத்மா ஜோதிராவ் பூலே, டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் உள்ளிட்ட மற்றவர்கள் மீதான மார்க்சிச மதிப்பீட்டை கட்சியும், இடதுசாரிகளும் செய்து அவர்களின் மாண்புகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதை அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்

சான்ஸ்கிரி ஒருபோதும் வெறுமனே மார்க்சியக் கோட்பாட்டாளராக மட்டுமே இருந்தவ ரில்லை. அவர் ‘மார்க்சியம் செயல்படுவதற்கான வழிகாட்டி’ என்ற லெனினின் கருத்தை முழுமை யாக உள்வாங்கிக் கொண்டிருந்தார். அத னால்தான் 1940களின் முற்பகுதியில் சுதந்திரப் போராட்டத்தில் பிரிட்டிஷ் காவலர்களின் கொடூர மான லத்திகளை எதிர்கொண்ட அனைத்திந்திய மாணவர் மன்றத்தின் ஆர்வலராக தனது அர சியல் வாழ்க்கையை அவர் தொடங்கினார். மிகச் சிறந்த மாணவராக இருந்த போதிலும், மார்க்சி சத்தின் மீது கொண்ட ஈடுபாட்டால் எம்எஸ்சி முடித்த வுடன் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியரா னார். அதன் பிறகு தனது பாதையிலிருந்து அவர் ஒருபோதும் பின்வாங்கியதே இல்லை. மும்பை ஜவுளித் தொழிலாளர்கள், சம்யுக்தா மகாராஷ்டிரா இயக்கம் (அப்போது பிரிக்கப்படாத கம்யூனிஸ்ட் கட்சியின் மும்பை கமிட்டி செயலாள ராக இருந்தார்), கோவா விடுதலைப் போராட்டம், திருத்தல்வாதத்திற்கெதிரான கசப்பான உள்-கட்சி போராட்டம் போன்ற பல போராட்டங்கள் மற்றும் பிரச்சாரங்களில் சான்ஸ்கிரி முன்னணி யில் இருந்தார். 1962-66 வரை மகாராஷ்டிரா மற்றும் நாடு முழுவதும் உள்ள முன்னணி கம்யூ னிஸ்டுகள் பலருடன் சிறையில் அடைக்கப் பட்டார். சிவசேனாவுக்கு எதிர்ப்பு, பாண்டுப் தொழி லாள வர்க்கத்தினரிடையே சிஐடியு அமைப்பை நிறுவுதல், சியட் தொழிலாளர்களின் தீவிர போராட்டங்கள், பீட், புனே மாவட்டங்களில் நடைபெற்ற விவசாயிகள், விவசாயத் தொழி லாளர்களின் போராட்டங்கள், நெருக்கடி நிலைக்கு எதிரான போராட்டம், மராத்வாடா பல்கலைக்கழகத்திற்கு டாக்டர் அம்பேத்கரின் பெயரிடலுக்கான போராட்டம், மாநில சட்ட மன்றம், சட்ட மேலவைப் பணிகள், வறட்சி மற்றும் நிலம் குறித்த போராட்டங்கள், குடிசைப் பகுதி மக்க ளின் போராட்டங்கள், படேகரு கிருதி சமிதி உரு வாக்கம், ஜனசக்தி கூட்டுறவு கடன் சங்கம் உரு வாக்கம், உலகமயமாக்கல் மற்றும் வகுப்பு வாதத்திற்கு எதிரான பிரச்சாரங்கள், என்ரான் கம்பெனியை வெளி யேற்றுவதற்காக நடத்தப்பட்ட வெற்றிகர மான கூட்டுப் போராட்டம் மற்றும் இடதுசாரி கள், மதச்சார்பற்றவர்களுக்கிடையிலான ஒற்றுமையை உருவாக்குவதற்கான தொடர் முயற்சிகள் என்று சான்ஸ்கிரி பல முனைகளில் இயங்கி வந்தார்.

தோழர் எஸ்.ஒய்.கோல்கட்கர் 1964 முதல் 1983 வரை மகாராஷ்டிராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதலாவது மாநிலச் செய லாளராக இருந்தார். அவருக்குப் பிறகு அந்தப் பொறுப்பில் 1983 முதல் 1986 வரை தோழர் அகல்யா ரங்கநேகர் இருந்தார். இதுவரை யிலும் அவரே நாட்டின் ஒரே மாநில பெண் செயலாளராக இருந்தவர். அவர் உடல்நலக் குறைவு காரணங்களால் தனது பொறுப்பி லிருந்து விலகினார். சான்ஸ்கிரி 1986இல் மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அவர் மேற்கொண்ட முக்கியமான முன்முயற்சிகளில் ஒன்றாக 1991 ஜனவரியில் நாசிக்கில் நடத்தப்பட்ட கட்சியின் மாநில அமைப்பு ரீதியான கூட்டம் அமைந்தது. அந்தக் கூட்டம் மகாராஷ்டிராவில் கட்சியின் தேக்க நிலைக்கான வரலாற்றுக் கார ணங்களை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை யும் பரிந்துரைத்தது. சான்ஸ்கிரி 2005ஆம் ஆண்டு வரை கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்தார். பின்னர் வயது மற்றும் உடல்நலம் குறித்த காரணங்களினால் அவர் பொறுப்பி லிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டார். கட்சி ஆசிரியராக மகாராஷ்டிரா முழுவதும் கட்சி செயல்பாட்டாளர்களை உருவாக்குவதில் சான்ஸ்கிரி முக்கியப் பங்கு வகித்தார். மார்க்சியம் மற்றும் பிற பாடங்கள் குறித்து கட்சியின் மாண வர்-இளைஞர் ஆர்வலர்களுக்கு பல ஆண்டு களாக அவர் நடத்தி வந்த ஆய்வு வகுப்புகள், மகாராஷ்டிராவில் ஒரு புதிய தலைமுறை கம்யூனிஸ்ட் பணியாளர்கள் உருவாக உதவிகர மாக இருந்தது.

தொழிலாளி வர்க்கத்தின் தலைவர்

சிஐடியுவின் தலைவராக மிகுந்த இன்னல் களுக்கிடையில் பல ஆண்டுகளாக பாண்டுப் சிஐடியு மையத்தை (மும்பை ஷ்ராமிக் சங்) கட்டியெழுப்பிய சான்ஸ்கிரி மகாராஷ்டிராவில் தொழிற்சங்க இயக்கத்திற்கு வழிகாட்டினார். விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் களின் பிரச்சனைகளையும் நன்கு அறிந்திருந் தது சான்ஸ்கிரியிடமிருந்த தனித்தன்மையாகும். 1992ஆம் ஆண்டு ‘விவசாயிகளை முன்னிறுத்து கின்ற பணிகள்’ என்ற தலைப்பில் மிகச்சிறந்த தீர்மானம் ஒன்றை வரைந்து, அதனை கட்சியின் மாநிலக் குழு விவாதத்திற்கு அனுப்பி வைத்தார். அந்தப் பிரச்சனை குறித்த மத்தியக் குழுவின் தீர்மானங்களுடன், அவரால் கொண்டு வரப்பட்ட அந்த தீர்மானம் மகாராஷ்டிராவில் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் இயக்கத்திற்கு வழிகாட்டத் துணையாய் இருந்தது. தொழிலாளர் – விவசாய ஒற்றுமை குறித்து அவருக்கிருந்த அர்ப்பணிப்பு கிராமப்புற ஏழைகளுக்கான பல போராட்டங்களில் அவர் எடுத்த முயற்சிகளில் பிரதிபலித்தது. அது பல ஆண்டுகளுக்கு முன்பாக அவர் எடுத்த மற்றொரு முடிவிலிருந்தும் மிகத்தெளிவாகத் தெரிய வருகிறது. மகாராஷ்டிராவில் கட்சியின் விவசாய முன்னணியில் இருந்த முழுநேர ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக சிஐடியு பாண்டுப் மையம் ஒவ்வொரு வருடமும் கட்சியின் மாநிலக் குழுவிற்கு மிகப் பெரிய தொகையைத் தருகின்ற புதிய நடைமுறையை அவர் தொடங்கி வைத்தார். இன்றைக்கும் அந்த நடைமுறை தொடர்கிறது. மும்பையில் உள்ள தனது அன்புக்குரிய பாண்டுப் மையத்தின் மீது அவர் சிறப்புக் கவனம் செலுத்தி வந்தார். அந்த மையத்தில் கட்சி மற்றும் சிஐடியு தோழர்களைக் கொண்ட திறமையான தலைமைக் குழுவை அவர் உருவாக்கினார்.

சான்ஸ்கிரியின் எளிமையான வாழ்க்கை, போராடும் இயல்பு, ஆழ்ந்த படிப்பு, கடினமான உழைப்புத் திறன், தொண்டர்கள் மீதான அவரது அக்கறை இவையனைத்தும் பின்பற்றப்படுவதற்குத் தகுதியானவையாகும். அவருடைய வாழ்க்கையின் இறுதி நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில், கடுமையான உடல்நலப் பிரச்சனைகள் இருந்தபோதிலும், ஒருபோதும் யாரிடமும் அவர் அதுகுறித்து புகார் செய்திடவில்லை. அவரது வாழ்நாள் முழுவதும் அவருடைய மனைவியும் தோழருமான சுமன் சான்ஸ்கிரி உறுதியுடன் அவருக்கு ஆதரவாக இருந்து வந்தார். அவரது குடும்ப உறுப்பினர் களும் அதே போன்ற ஆதரவுடன் இருந்தனர். கடந்த பத்தாண்டுகளில் மகாராஷ்டிராவில் ஏறக்குறைய மூத்த கட்சித் தலைவர்கள் அனை வரையும் நாம் இழந்து விட்டோம். சுதந்திரப் போராட்டம் என்ற களத்தில் உறுதியுடன் நின்ற, காங்கிரஸ் ஆட்சியின் தீவிர அடக்குமுறையைத் தைரியத்துடன் எதிர்கொண்ட, தீவிரமான உள்கட்சிப் போராட்டத்தைக் கடந்து வந்த, மார்க்சிசம்-லெனினிசம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி மீது எல்லையற்ற நம்பிக்கை கொண்டி ருந்த அந்த மூத்த தலைமுறை இப்போது நம்மிடையே இருக்கவில்லை. அடுத்த தலைமுறையினருக்கான பொறுப்பை அது பெரிதும் அதிகரித்திருக்கிறது. நாம் அனைவரும் தோழர் பிரபாகர் சான்ஸ்கிரியின் நூறாவது பிறந்த நாளையொட்டி மரியாதைக்குரிய அஞ்சலியை அவருக்குச் செலுத்துவோம்! தோழர் பிரபாகர் சான்ஸ்கிரியின் நினைவாக அவருக்கு நமது செவ்வணக்கம்…

அசோக் தாவ்லே

பீப்பிள்ஸ் டெமாக்ரசி, அக். 3)
தமிழில் : பேரா. தா. சந்திரகுரு

Leave a Reply