கார்ப்பரேட்-இந்துத்துவா கூட்டு அடுத்து என்ன செய்யும்?

இந்துத்துவா “தேசியவாதம்” காலனிய எதிர்ப்பு தேசிய வாதத்தைப் போல பொருளாதாரத்தை புரிந்து கொள்வதில்லை. அதற்கான காரணம் எளிமையா னது. காலனிய எதிர்ப்பு தேசியவாதத்தின் மையப்புள்ளியாக இருப்பது காலனியம் எவ்வாறு சுரண்டுகிறது என்ற புரிதலா கும். ஆகவேதான், அது காலனிய ஆட்சியாளர்களுக்கும் அதற்கு முந்திய ஆட்சியாளர்களுக்கும் இடையிலான வேறு பாட்டை உணர்ந்திருந்தது: காலனியத்திற்கு முன்பிருந்த ஆட்சியாளர்கள், விவசாயிகளிடமிருந்த உபரிகளை கையகப்படுத்தி அதனை உள்நாட்டிலேயே செலவழித்ததால், வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. காலனி ஆட்சியா ளர்களோ, விவசாயிகளிடமிருந்து உபரியை அபகரித்து அதன் பெரும்பகுதியை வெளிநாடுகளுக்கு அனுப்பியதன் விளைவாக உள்நாட்டு வேலைவாய்ப்பை அழித்தொழித்த னர். இந்துத்துவா இந்த அடிப்படை வேறுபாட்டை அழித் தொழித்து முகலாயர்களையும், ஆங்கிலேயர்களையும் ஒரே தட்டில் வைக்கிறது, ஏனெனில் அதற்கு பொருளாதாரத்தைப் புரிந்து கொள்ள இயலாது. ஒரு நகைமுரண் என்ன வென்றால் இதுவே அதன் (இந்துத்துவா) பலமாகும்.

நாசக் கூட்டணியின் அடிப்படை என்ன?
நவீன தாராளமய முதலாளித்துவம் தனது ஆற்றலை இழந்துள்ள நிலையில், கார்ப்பரேட்-நிதிமூலதன-சுய நலக்குழுக்களுக்கு ஒரு தத்துவார்த்த முட்டுக்கட்டை தேவைப் படுகிறது. இதற்கு முன்பு இருந்த கோஷங்களைப் பயன்படுத்த முடியாது; உதாரணமாக, உயர் ஜிடிபி வளர்ச்சிக்கான வாக்கு றுதி, அதன் விளைவாக ஏற்படவிருக்கும் அனைவருக்குமான நன்மை பயக்கும் விளைவுகள் போன்றவை. வளர்ச்சி விகி தங்கள் மந்தமாகும்போது இந்த கோஷங்கள் எடுபடா. அரசின் கொள்கைகளை இந்த சுயநலக்கும்பல்களுக்கு ஆதரவாக திருப்பும் அதே நேரத்தில், கீழேயிருந்து இதற்கு எதிராக கிளர்ச்சிகள் ஏற்படாமல் தடுக்க புதிய அணுகுமுறைகள் தேவைப்படுகிறது, அதனை இந்துத்துவா வழங்குகிறது. இதுவே தற்போது நாட்டை ஆளும் கார்ப்பரேட்-இந்துத்துவா கூட்டணியின் அடிப்படையாக உள்ளது. தற்போது இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு அடிப்படையான காரணமே, நவீன தாராள மயத்தின் முரண்பாடுகள்தான். பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி போன்ற பெருந்தவறுகள் அதன் விளைவுகளை அதி கப்படுத்தின. இந்துத்துவா ஆட்சியாளர்கள் ஒரு வேளை பொ ருளாதார ஆர்வத்துடன் நாட்டின் பொருளாதார கட்ட மைப்பில் சிறு மாற்றங்களை செய்து, தற்போதுள்ள நெருக்கடி யிலிருந்து மீள்வதற்கு முயற்சித்தாலும், கார்ப்பரேட்டுகளுக்கு ஓரளவுக்குத்தான் பயனிருக்கும். ஆனால் அப்பொழுது இந்த கூட்டணி வெடித்து பிளவுபட்டிருக்கும். எனவே, பொரு ளாதார விஷயங்களில் இந்துத்துவாவின் அறியாமைதான். அது கார்ப்பரேட்டுகளோடு நன்றாக நிலைபெறுவதற்கும், இவர்களது கூட்டணி தொடர்வதற்கும் பயன்படுகிறது. இந்த அணுகுமுறையில் மாற்றம் என்பது, காலனிய எதிர்ப்புப் போராட்டங்களின் வழி வந்த கொள்கைகளிலிருந்து பிறழ்ந்திருப்பது ஆகும். காலனிய எதிர்ப்பு அரசியலின் விளைவாக ஒவ்வொரு அரசியல் இயக்கமும் போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கு நிவாரணங்களை அறி வித்துக் கொண்டிருந்தன என்பதிலிருந்து, தற்போது ‘அதி தீவிர தேசியவாதம்’ என்ற நிலைக்கு வந்துள்ளது. இது காலனிய எதிர்ப்பு தேசியவாதத்தோடு மிகச்சில பொதுவான அம்சங்களை மட்டுமே கொண்டுள்ளது. இந்த ‘அதிதீவிர தேசியவாதம்’ மக்களின் வாழ்வாதரப் பிரச்சனைகளை பெரும் பாலும் புறந்தள்ளுகிறது. இந்த ‘அதிதீவிர தேசியவாதம்’ ஐரோப்பாவில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் உச்சாணியில் இருந்த அதிதீவிர தேசியவாதத்தை மீண்டும் கேட்பது போலுள்ளது.

நிதி மூலதனத்தின் புதிய அணுகுமுறையை எப்படி எதிர்கொள்வது?
இத்தகைய மாற்றம் இந்திய அரசியலில் இதற்கு முன் கண்டிராதது. ஆகவேதான், எதிர்க்கட்சிகள் இந்தளவிற்கு முடங்கிக் கிடக்கின்றன. இடதுசாரிகள் பழைய அணுகு முறைக்கு பழக்கப்பட்டு இருந்ததால், சற்று ஸ்தம்பித்து நின்றன. தற்போதுதான் புதிய புதிய போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்க தொடங்கியுள்ளன. காங்கிரசைப் பொறுத்த வரையில், பழைய அணுகுமுறையில் தொடர்வதா அல்லது, எவ்வளவு தயக்கங்கள் இருந்த போதிலும், புதிய அணுகுமுறை யான இந்துத்துவா அதிதீவிர தேசியவாதத்தை கடைப் பிடிப்பதா என்ற முடிவை எடுக்க முடியாமல் திணறுகிறது. அணுகுமுறையில் ஏற்பட்ட இந்த மாற்றத்தின் முக்கி யத்துவம், சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தெளிவாக வெளிப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சி இதற்கு முன் நடைபெற்ற தேர்தல்களில் தனது தளத்தை இழந்திருந்தது. மேலும், பலமான விவசாய இயக்கம், அந்த ஆட்சி தொடர்வ தையே அச்சுறுத்திக் கொண்டிருந்தது. ஆனால், புல்வாமா மற்றும் பாலகோட் தாக்குதல் போன்ற அதிதீவிர தேசிய வாத அணுகுமுறையைப் பலப்படுத்தி, தனது ஆயுளை நீட்டித் திருக்கச் செய்துள்ளது. எந்த விவசாயிகள் தேர்தலுக்கு சில காலம் முன்பு தில்லியில் உள்ள அரசுக்கு எதிராக நடைப்பய ணம் மேற்கொண்டார்களோ, அவர்களே அந்த அரசு தொடர வாக்களித்தனர். அணுகுமுறையில் ஏற்பட்ட இந்த மாற்றம், கார்ப்ப ரேட்-நிதிமூலதன- சுயநலக்குழுக்களுக்கு மிகுந்த பயனுள்ள தாக உள்ளது என்பதை சமீபத்திய நிகழ்வுகள் புலப்படுத்து கின்றன. அரசியலமைப்புச் சட்டம் 370 மற்றும் 35ஏ ஆகிய வற்றை நீக்கி, ஜம்மு-காஷ்மீரை வலுக்கட்டாயமாக இணைத்துக் கொண்ட சந்தடி சாக்கில், அதையொட்டி கிளப்பி விடப்பட்ட இந்துத்துவ அதிதீவிர தேசியவாதத்தின் பின்னணி யில், அரசு கார்ப்பரேட் வரி குறைப்பின் மூலமாக 1.45 லட்சம் கோடி ரூபாய், பொருளாதார நெருக்கடியைப் போக்கிட என்று மேம்போக்காக தெரிவித்து, கார்ப்பரேட்களுக்கு சலுகை அளித்துள்ளது. அரசின் பொதுப்பணத்திலிருந்து, கார்ப்ப ரேட்டுகளின் பாக்கெட்டுகளுக்கு தாராளமாக அள்ளிக் கொடுத்ததை எதிர்த்து, நாம் எதிர்பார்த்ததைப் போல் ஒரு சில எதிர்க்கட்சிகளாவது தெரிவித்த கருத்துகள், காஷ்மீரில் இந்துத்துவா சக்திகள் பெற்ற “வெற்றி” கொண்டாட்டங்களின் ஓசையில் கரைந்து போயிற்று.

எதிர்மறைத் தாக்கத்தையே ஏற்படுத்தும் வரிச்சலுகை
உண்மையில், கார்ப்பரேட்டுகளுக்கான இந்த வரிச் சலுகை பொருளாதார நடவடிக்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும், அதன் காரணமாக வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தி ஆகியவற்றில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்பதும் நிச்சயம் என்றாலும், இந்த கருத்து அரிதாகவே சொல்லப்பட்டது. வரிச் சலுகைகள், ஏற்கனவே அதிகமாக இருக்கிற நடப்புக் கணக்கு பற்றாக் குறை மூலம் வழங்கப்படாமல், (அவ்வாறு செய்தால் சர்வதேச நிதி மூலதனத்திடமிருந்து தனிமைப்படுவோம் என்பதால் அரசு அவ்வாறு செய்ய விருப்பப்படவில்லை.) உழைக்கும் மக்களின் வளங்களிலிருந்து அரசு கிள்ளி எடுத்துள்ளது. இப்படிக் கிடைத்த வருவாயை கார்ப்பரேட் முதலாளிகள், தங்களுக்கு கிடைத்த கூடுதல் வருவாயாக பாவிப்பார்கள். அதை பகிர்ந்தளிக்காத லாபமாக வைத்துக் கொள்கிறார்கள். எனவே, இத்தகைய வரிச் சலுகைகள், புதிய முதலீடுகளாக மாறாது. ஆகவே, ஒட்டுமொத்த கிராக்கி சரிவடையும், அதன் மூலம் நெருக்கடிகள் முற்றும். மேலும் என்ன நடக்கும் என்றால், ஒட்டுமொத்த கிராக்கியில் ஏற்படும் வீழ்ச்சி, பொருளா தாரத்தின் கீழ்நோக்கிய சுழற்சியின் வேகத்தை அதிகரிக்கும்.

வருமான வேறுபாடு
இந்த நெருக்கடியின் தோற்றுவாய் எதுவென்றால், பிரம்மாண்டமான அளவில் பெருகிய வருவாய் அசமத்துவ நிலை ஆகும். இது நவீன தாராளமயப் பொருளாதாரத்தின் விளைவே ஆகும். இது இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் ஏற்பட்ட நிலை. விவசாயிகள், தொழிலாளர்கள், கைவினைஞர்கள், மீனவர்கள் என உழைக்கும் மக்களின் வருவாய் பங்கை குறைத்து அதனை கார்ப்பரேட்-நிதிமூல தன-சுயநலக் குழுக்களை நோக்கி திருப்பியது. அவ்வாறு செய்வதன் மூலம் ஏற்படும் கிராக்கி சுருக்கம் என்பது அவ்வப் போது, ஒட்டுபிளாஸ்திரி வேலைகளால் சமாளிக்கப்பட்டது. அவை பெரும்பாலும், விலை குமிழ்கள் மூலமாக இந்தியா விலும், உலக நாடுகளிலும் சமாளிக்கப்பட்டது. ஆனால், அத்தகைய காரணிகள் இல்லாத போது, நெருக்கடிகள் வெளிப் படுகின்றன. நரேந்திர மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஜிஎஸ்.டி ஆகியன இந்த நவீன தாராளமய முதலாளித்துவ கட்ட மைப்பின் காரணமாக எழுந்துள்ள நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்துகின்றன. தற்போது இந்த நெருக்கடிக்கான தீர்வாக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை வருவாயை மேலும், உழைக்கும் மக்களிடமிருந்து கார்ப்பரேட் பக்கத்திற்கு மடைமாற்றுகிறது. எது இந்த நெருக்கடிக்கு முழுமுதல் காரண மோ அதனையே அரசு மீண்டும் செய்துள்ளது. ஆனால், அரசு எந்தளவுக்கு தனது இந்துத்துவா அதிதீவிர தேசிய கோஷங்களை கொண்டு செல்வதில் வெற்றி பெறுகிற தோ அதுவரையில் அது பொருளாதாரத்தில் தான் செய்த தவறு களிலிருந்து மக்கள் கவனத்தை திசை திருப்ப முடியும். உண்மையில் கேள்வி இதுதான், எவ்வாறு அரசு தனது அதிதீவிர தேசிய கோஷங்களை வெற்றிகரமாக மக்களிடம் கொண்டு செல்ல முடிகிறது என்பதாகும். அதற்கு பல்வேறுபட்ட காரணங்கள் இருந்தாலும், மக்க ளின் மனங்களில் பரவலாக ஏற்படுத்தப்பட்டுள்ள அச்சம் மற்றும் பாதுகாப்பின்மை ஆகியவற்றை யாரும் குறைத்து மதிப்பிடக்கூடாது. அரசின் மீதான எந்த விமர்சனம், அல்லது தவறுகளை எடுத்துரைப்பது எல்லாம் ‘தேசத்துரோக’ மாக முத்திரை குத்தப்படுகின்றன யார் மீது வேண்டுமானா லும் அவதூறுகளும் இழிவும் வழக்குகளும் ஏவப்படலாம் என்ற நிலை, காவல்துறை அந்த சமயங்களில் வேறு பக்கம் பார்த்துக்கொண்டிருப்பது; இந்த சூழலில் ஊடகங்கள் கிட்டத் தட்ட முழுமையாக இந்துத்துவா அதிதீவிர தேசியவாதத்திற்கு மூலதனமாக மாற்றப்பட்டு, ஒரே ஒருபக்க செய்திகள் மட்டுமே மக்களுக்கு அளிக்கப்படுகின்றன. பெரும்பாலான மக்கள் அதனை மட்டுமே உண்மை என்று நம்புவது குறித்து ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

காட்சி மயக்க வேலை
இத்தகைய கார்ப்பரேட் ஆதரவு- தொழிலாளர் விரோத வருவாய் பங்கீட்டை, ஒட்டுமொத்த கிராக்கி சுருக்கத்தின் விளை வான நெருக்கடியின் உச்சத்தில் செய்வது, எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்; அது, மறைக்க முடியாமல் சில காலம் கழித்து வெளிப்படும். ஆனால், அவ்வாறு வெளிப் படும் போது அதனை சமாளிக்க மேலும், அதிதீவிரமான மெகா இந்துத்துவா திட்டங்கள் அமல்படுத்தப்படும். மக்களை “அதிர்ச்சி மற்றும் பிரமிப்பில் (ஷாக் அண்ட் ஆ)” ஆழ்த்தி அதன் மூலம் அவர்களின் கவனத்தை பொருளாதாரத்திலிருந்து திசை திருப்பி அரசின் பொருளாதாரத் தோல்விகளை அவர்களின் பார்வையிலிருந்து மங்கச் செய்வதே அதன் நோக்கம். ஆனால், இது நாட்டிற்கு இரட்டிப்பு ஆபத்தை கொண்டு வரும். இந்துத்துவாவின் அதிதீவிர மெகா திட்டங்களான ஒரு நாடு, ஒரு மொழி அல்லது தேசிய குடியுரிமை பட்டியல் அல்லது குடியுரிமை திருத்த மசோதா ஆகியன மதச்சார்பற்ற ஜன நாயக அரசியல் மற்றும் சமூகம் ஆகியவற்றின் இருத்த லையே கேள்விக்குறியாக்கும். அதே சமயம் கார்ப்பரேட் ஆதரவு- உழைக்கும் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகள் பொருளாதாரத்தை மேலும் ஆழமான நெருக்கடிக்கு உள்ளாக்கும். அத்தகைய பொருளாதாரக் கொள்கைகள் மேலும் மேலும் “அதிர்ச்சி மற்றும் பிரமிப்பு” நடவடிக்கைகளுக்கு தூண்டுமென்பதால், நாடு ஒரு தீய சுழற்சியில் சிக்கிக்கொள்ளும், இந்த போக்கின் திசை வழியை மடை மாற்றினால் தவிர அது தொடரும்.

தி இந்து ஆங்கில நாளிதழ் (03-10-2019) கட்டுரை தமிழாக்கம் : தீக்கதிர் தூத்துக்குடி க.ஆனந்தன்

Leave a Reply