20வது புதுச்சேரி பிரதேச மாநாட்டு தீர்மானங்கள்.

சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கிட வேண்டும்

மத்தியில்  ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு  சிறப்பு மாநில அந்தஸ்தை தாமதமின்றி வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இந்திய ஒன்றியத்தில் 1975 ல் 4 லட்சம் மக்கள் தொகைக் கொண்ட சிக்கிம் , மற்றும் 9 லட்சம் மக்கள் தொகைக்கொண்ட அருணாசலப் பிரதேசம், 1987 ல் 7 லட்சம் மக்கள் தொகை கொண்ட மிசோரம் ஆகியவற்றிற்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இறுதியாக கோவா விற்கும் மாநில அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கிறார்கள்.  30 சட்டமன்ற  உறுப்பினர்களும், 1 நாடாளுமன்ற உறுப்பினரையும் கொண்ட பகுதியாக புதுச்சேரி உள்ளது. என்றாலும் இன்று வரையில் மாநிலத்தின் முன்னேற்றம், மக்கள் நலனுக்கான சட்டம் இயற்றும் அதிகாரம், நிதி நிர்வாகம், ஆட்சி நிர்வாகம் ஆகியவற்றில் முடிவெடுக்கும் அதிகாரம் புதுச்சேரி அரசுக்கு இல்லை. மாறாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஓப்புதலையே எதிர்நோக்கி இருக்க வேண்டியுள்ளது. மாநிலத்தின் ஆண்டு பட்ஜெட் கூட மத்திய அரசின் ஓப்புதல் பெற்றுத் தாக்கல் செய்யப்படுகிறது. மேலும் புதுச்சேரி அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்களின் பணியிடங்களை புதுச்சேரி இளைஞர்களை கொண்டே நிரப்பும் வகையில் புதுவைக்கென்று தனியாக பணித்தேர்வாணையம் அமைக்கவும் உரிமையில்லாத நிலை தொடர்கிறது. மொத்தத்தில் புதுவை அரசு அதிகாரமற்ற அரசாக உள்ளது.மாநில அரசின் கடன் 4400 கோடியாக உயர்ந்துள்ளது. இத்தொகைக்கு ஆண்டுக்கு ரூ 400 கோடி வட்டியாக கட்டப்படுகிறது. மத்திய அரசு மானியமாகக் கொடுக்கும் தொகை வட்டிக்காக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதனால் மாநில அரசின் வளர்ச்சித் திட்டங்கள் நிதியின்றி முடங்கிப்போயுள்ளது.

பிரெஞ்சிந்திய விடுதலைக்குப்பிறகு இந்திய ஒன்றியத்துடன் புதுச்சேரி இணைக்கப்பட்ட போது நடுவணரசின் 2 ஐந்தாண்டு திட்டங்கள் நிறைவுறும் நிலையில் இருந்தன. ஆகவே, மத்திய அரசு புதுச்சேரிக்கு 10 ஆண்டுகளுக்கான நிதி உதவியுடன் கூடிய சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கிட வேண்டும் எனவும்  மாநில அரசின் கடன்தொகையை தள்ளுபடி செய்ய வெண்டுமெனவும் இம்மாநாடு கோருகிறது.

பால்கொள் முதல் விலையை ரூ.20 ஆக உயர்த்துக. மாட்டுத்தீவனம் அனைவருக்கும் மானியத்துடன் வழங்குக

நமது மாநில மக்களுக்கு தேவையான பால் ஒரு லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் ஆகும். ஆனால் அரசின் முறையற்ற நடவடிக்கைகளால் பால் உற்பத்தி பாதி அளவே உற்பத்தி ஆகிறது. மேய்ச்சல் நிலம் இன்மை கறவை மாட்டுத் தீவன விலையேற்றம் பராமரிப்புச் செலவு கூடிவரும் நிலையில் பால் உற்பத்தியை அதிகரிப்பது இயலாத ஒன்று. எனவே நம் மாநிலத்திற்கு தேவையான பால் உற்பத்தியைப் பெருக்க லிட்டர் ஒன்றுக்கு ரூ.20 ஆக உயர்த்த வேண்டும். உயர்த்தும் தொகையை கூட்டுறவு மூலமாக அரசு மானியமாக வழங்க வேண்டும். மேலும் கூட்டுறவு கொள்முதலில் fat கணக்கீட்டு முறைகேட்டால் லிட்டர் ஒன்றுக்கு சராசரியாக ரூ.11 என்ற அளவில்தான் கிடைக்கிறது. பால் கொள்முதல் விலையை உயர்த்துவது மட்டுமல்லாமல் fat கீட்டு முறைகேட்டை களைய வேண்டுமெனவும் மாட்டுத் தீவனம் மானியத்துடன் பாகுபாடின்றி அனைத்து பால் உற்பத்தியாளர்களுக்கும் வழங்க வேண்டுமெனவும் சிறுபண்ணை பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய மானியத் தொகையை உடனே வழங்க வேண்டும் எனவும் கடன் தொகையின் வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் இம்மாநாடு கோருகிறது.

வீடற்ற மக்களுக்கே புறம்போக்கில் குடியிருப்பவர்களுக்கு மனைப்பட்டா வழங்கு :

காலம் காலமாய் சொந்த வீடின்றி பல நிலைகளில் மக்கள் அல்லல்பட்டுவருகிறார்கள். அரசு திட்டம் அறிவித்தபடி முறைகேடின்றி வீட்டுமனைப்பட்டா வழங்கி இருந்ததால் வீடற்ற பிரச்சனை பெருமளவு தீர்க்கப்பட்டிருக்கும். ஆட்சியாளர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள்
ஆதரவாளர்களுக்கு முறைகேடாக வழங்கியதாலே இத்திட்டம் நிறைவேறவில்லை. நகர்புறத்தில் அடுக்குமாடி குடியிருப்புத் திட்டமும் ஏட்டளவிலே உள்ளது. மனைப்பட்டா வழங்க வீட்டு மானியம் வழங்க ஒரு பகுதி லஞ்சமாக வாங்கப்படுகிறது. முறைகேடுகளின்றி பாரபட்சமின்றி ஒவ்வொரு ஆண்டும் மனைப்பட்டாவும் மானியமும் வழங்கியிருந்தால் வீடற்ற அனைவருக்கும் பயன் கிடைத்திருக்கும். எனவே முறைகேடுகள் இன்றி உரிய ஏழை மக்களுக்கு வீட்டு மனை கிடைக்க புறம்போக்கு இடத்தில் குடியிருப்போருக்கும் பட்டா கிடைக்க, மானியம் கிடைக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் இம்மாநாடு கோருகிறது.

நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு நிலம் வழங்குக

நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்படும் நிலங்கள் ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றும் கூடுதலாக தலித் மக்களுக்கு அரசால் நிலம் விலைகொடுத்து வாங்கப்பட்டு வழங்கப்படும் என்று அரசு அறிவித்த அறிவிப்பு ஏட்டளவில் உள்ளது.

நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் மீது பல வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளை அரசு விரைந்து முடிக்க போதுமான நடவடிக்கை இல்லை. எனவே அரசு இந்த மெத்தனப்போக்கினை கைவிட்டு வழக்குகளை விரைந்து முடித்து ஏழை விவசாயிகளுக்கும் கூடுதலாக நிலம் கொள்முதல் செய்து தலித் மக்களுக்கும் நிலம் வழங்க வேண்டும் என்றும் இம்மாநாடு கோருகிறது.

மேலும் அரசு புறம்போக்கு நிலங்களில் காலம்காலமாய் பயிர் செய்துவரும் கரையாம்புத்தூர் தலித் ஏழை விவசாயிகளுக்கு அவ்விடத்தை பட்டா செய்து கொடுக்க வேண்டுமெனவும் இம்மாநாடு கோருகிறது.

புதுச்சேரி மாநில விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்து தரமான ரேஷன் அரிசியை வழங்குக

மாநிலத்தில் நெல் உற்பத்தி செய்த விவசாயிகள் நெல்லை அடிமாட்டு விலைக்கு தரவேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.1100 குறைந்த பட்ச விலையாவது கொடுக்கப்பட வேண்டும் என மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இந்த குறைந்தபட்ச விலையைவிட கூடுதலாக விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் மாநில அரசு ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் திறந்தது. கூடத்தின் அதிகாரிகளும் வியாபாரிகளும் கூட்டாகச் சேர்ந்து நெல்லை மிக மிகக் குறைந்த விலைக்கு வாங்கும் கொள்ளை நடைபெறுகிறது. குறைந்த விலைக்கு வாங்கிய நெல்லை வியாபாரிகள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்று கொள்ளை இலாபம் அடிக்கிறார்கள். அரசின் குறைந்தபட்ச நிர்ணய விலை ரூ.1100ஐ விடக்குறைவாக ஒரு குவிண்டால் நெல்லை ரூ.800க்கு கொடுக்க விவசாயிகள் கட்டாயப்படுத்தி கொள்முதல் செய்யப்படுகிறது. நெல் உற்பத்தி செய்வதற்கான செலவு ஆண்டுக்காண்டு கூடுதலாகிக் கொண்டிருக்க நெல் விலையோ குறைந்துகொண்டே வருகிறது. உற்பத்தியும் குறைந்து வருகிறது.

இது மாநிலத்தின் உணவுத்தட்டுப்பாட்டை உருவாக்கும் எனவும் உணவுக்கு வெளிமாநிலத்தை எதிர்பார்த்து நிற்கும் நிலைக்கு தள்ளப்படும் எனவும் இம்மாநாடு எச்சரிக்க விரும்புகிறது.

எனவேஇ நமது மாநிலத்திற்கு ரேஷன் அரிசிக்கு தேவையான நெல்லை அரசே நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் ஒழுங்கு முறை விற்பனைகூடத்தில் அரசின் நிர்ணய விலையைவிட கூடுதலாக விவசாயிகளுக்கு விலை கிடைக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இம்மாநாடு கோருகிறது.

புதுச்சேரி பி.ஆர்.டி.சி நிர்வாக சீர்கேடுகளை களைந்து பேருந்துகளை முழுமையாக இயக்குக :

மாநில மக்களின் பயன்பாட்டிற்காகவும் அரசு வேலைவாய்ப்பிற்காகவும் தொடங்கப்பட்ட புதுச்சேரி போக்குவரத்து கழகம் (பிஆர்டிசி) இன்று நிர்வாக சீர்கேடுகளால் அரசின் அலட்சிய போக்கால் இன்று சீரழிந்து கிடக்கிறது. தனியார் பேருந்து உரிமையாளர்கள் பெரும் இலாபம் ஈட்டுகிறபோது அரசு கழகம் நஷ்டத்தில் இயங்குகிறது. இதற்கு அரசின் நடவடிக்கைகளே காரணமாகிறது.

பி.ஆர்.டி.சியில் 77 பேருந்துகளை இயக்க வழித்தட உரிமை பெற்று உள்ளது. ஆனால் தற்போது முப்பதுக்கும் குறைவான பேருந்துகளே இயக்கப்படுகிறது. 50க்கு மேற்பட்ட பேருந்துகள் டெப்போவில் பராமரிப்பின்றி நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் அனைத்து கிராமப்புறங்களுக்கும் பேருந்துகளை இயக்க 50 பேருந்துகள் வாங்க 80 சதவீத மானியமாக 17 கோடி வழங்கப்பட்டது. மத்திய அரசின் நிதி இதில் 20 சதவீதம் மட்டுமே. நிதியிருந்தும் இத்திட்டத்தின் கீழ் காலம் கடந்தே 26 பேருந்துகள் வாங்கப்பட்டன. எஞ்சிய 24 பேருந்துகள் தயார் நிலையில் ஒன்றரை ஆண்டுகளாக நின்ற நிலையில் துருப்பிடித்து வருகிறது. வாங்கிய பேருந்துகள் பழைய தடத்திலேயே இயக்கப்படுகிறது. இதுதான் திட்டத்தை நிறைவேற்றும் புதுவை அரசின் இலட்சணம்.

கடலூர்இ விழுப்புரம் செல்லும் பயணிகள் தனியார் பேருந்தில் நிற்பதற்கு கூட இடம் இல்லாமல் அவதியில் பயணிக்கிறார்கள். நிர்வாக அதிகாரிகளின் லஞ்ச முறைகேடுகளும் பி.ஆர்.டிசிக்கு பணிக்கு அமர்த்தப்பட்ட 189 பேருக்கு வேலை வழங்ப்படாமலும் பிஆர்டிசி நிர்வாகம் அவல நிலையில் இருக்கிறது. மக்கள் போக்குவரத்திற்கு பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள்.

எனவேஇ பி.ஆர்.டி.சி உரிமம் பெற்ற பேருந்துகளை முழுமையாக இயக்க வேண்டும். மத்திய அரசு திட்டத்தின் கீழ் கிராமப்புறம் அனைத்திற்கும் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் எனவும்இ  பணி உத்தரவு வழங்கப்பட்ட ஊழியர்களுக்கு வேலை வழங்க வேண்டும் எனவும்இ  ஊழல் முறைகேடு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்இ பிஆர்டிசி நிர்வாகத்தை காப்பாற்ற வேண்டும் எனவும் இம்மாநாடு கோருகிறது.

பள்ளி மாணவர்கள் செல்லும் இலவச பயணப் பேருந்துகளை அரசே இயக்குக :

புதுச்சேரி மாநிலத்தில் பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்ல இலவச பேருந்து திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டம் பள்ளி மாணவர்களுக்கென கொண்டு வரப்பட்டு தனியார் பேருந்து முதலாளிகள் கொள்ளையடிக்கும் திட்டமாக மாறிவிட்டது. தனியார் முதலாளிகள் தங்களிடம் ஓடாமல் இருந்த பேருந்துகளை புதுப்பித்து முதலாளிகளும் ஆள்வோர்களும் கூட்டு கொள்ளையடிக்கிறார்கள்.

புதுச்சேரியில் 55 பேருந்துகளும் காரைக்காலில் 14 பேருந்துகளுமாக 69 பேருந்துகள் மாணவர்களுக்காக இயக்கப்படுகிறது. இதற்கு அரசு மாதத்திற்கு 35 இலட்சம் ரூபாய் வாரி வழங்குகிறது. ஒரு பேருந்துக்கு சுமார் மாதம் ரூபாய் 50இ000 வழங்கப்படுகிறது. இது ஒரு அநியாய கூட்டுக் கொள்ளை. ஒரு பேருந்தில் அதிக பட்சம் 150 மாணவர்கள் பயணம் செய்யக்கூடும். 150 மாணவர்கள் தனியார் பேருந்தில் கட்டணம் செலுத்தி பயணம் செய்தாலே மொத்தக் கட்டணம் ரூபாய் 25 ஆயிரத்திற்கு மேல் இல்லை. ஆனால்இ இலவச பேருந்துகளை இயக்கும் முதலாளிகளுக்கு இரட்டிப்பாக வாரி வழங்கப்படுகிறது. இதிலும் பல பேருந்துகள் பல நாட்கள் ஓடாது. உரிமம் பெறாத தகுதியற்ற ஓட்டுநர்களால் பராமரிப்பற்ற இந்த பேருந்துகள் பல விபத்திற்குள்ளாகியும் வருகிறது. சில மாணவர்கள் விபத்தில் இறந்துள்ளார்கள். இது பள்ளி மாணவர்களுக்கான திட்டமில்லை. தனியார் முதலாளிகளும் ஆள்வோர்களும் கொள்ளையடிக்கும் திட்டமாகும். இதை இம்மாநாடு கண்டிக்கிறது.

எனவேஇ பள்ளி மாணவர்களைக் காப்பாற்ற அரசுப் பணம் கொள்ளை போவதை தடுத்து நிறுத்த இலவச பள்ளி மாணவர்கள் பேருந்துகளை பிஆர்டிசி நிர்வாகம் இயக்க வேண்டுமெனவும் பள்ளி மாணவர்கள் பயண நேரம் தவிர இடைவெளி நேரங்களில் பொது மக்கள் போக்குவரத்திற்கு இப்பேருந்துகளை இயக்க வேண்டுமெனவும் இம்மாநாடு கோருகிறது.

கிராமப்புற நூறு நாள் வேலைத்திட்டத்தை முழுமையாக அமுல்படுத்துக :

கிராமப்புறத்தில் வேலையின்மையை போக்க விவசாய வேலைகளின்றி கிராமப்புறத்திலிருந்து மக்கள் வெளியேறுவதை தடுக்க கிராமப்புறத்தினை பாதுக்காக்க இடதுசாரிகளின் முயற்சியால்இ வற்புறுத்துதலால் தேசிய கிராமப்புற நூறு நாள் வேலைத் திட்டம் கொண்டுவரப்பட்டது.

இத்திட்டம் 2006 ஏப்ரல் முதல் அமுலுக்கு வந்தது. புதுச்சேரி மாநிலத்தில் 2009ல்தான் அமுலுக்கு வந்தது. இன்று வரை மாநிலத்தில் சராசரி 35 நாட்களே வேலை தரப்படுகிறது. புதுச்சேரி 2009-10 நிதியாண்டில் இத்திட்டத்திற்கு 4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டும் திட்டத்திற்கு செலவிடப்பட்வில்லை. ஆள்வோர்கள் இதைப்பற்றி கவலையும் படவில்லை. வேலை செய்த நாட்களுக்கும் முறையாக சம்பளமும் கொடுக்கப்படவில்லை.

திட்டம் தொடங்கிய போது மத்திய அரசு 800கோடி ரூபாய் ஒதுக்கியது. நடப்பு நிதியாண்டில் இத்திட்டத்திற்கு 40இ000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் கிராமப்புற மக்கள் ஓரளவுக்கு பயனடைந்துள்ளார்கள் என்றும் கிராமப்புற வேலையில்லா மக்களுக்கு இது பயன்பட்டுள்ளது என்றும் ஆய்வறிக்கை கூறுகிறது. மத்திய அரசு இத்திட்டத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்கியும் புதுவை அரசு இத்திட்ட வேலையை குறைத்து வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் விளைநிலம் குறைந்து கிராமப்புற மக்களின் வாழ்க்கை சீரழிந்து வரும் நிலையில் நிதியிருந்தும் 100 நாள் வேலை திட்டத்தை முழுமையாக நிறைவேற்றாமல் கிராமப்புற மக்களுக்கு இவ்வரசு துரோகம் இழைத்து வருகிறது. இதை மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.

எனவேஇ 100 நாள் வேலை திட்டத்தை முழுமையாய் அமுல்படுத்த வேண்டுமெனவும்இ நாட்கூலி ரூ.150ஆக உயர்த்தி வழங்கவேண்டுமெனவும் இம்மாநாடு கோருகிறது.

விளை நிலத்தை பாதுகாக்க உரிய சட்டமியற்றுக :

மாநிலத்தின் விளை நிலத்தில் பாதிக்கு மேல் குறைந்துவிட்டது. உணவு தானிய உற்பத்தியும் குறைந்து வருகிறது. இது நமது மாநிலத்தில் பேரபாயத்தை உருவாக்குமென்பதை ஆள்வோர்கள் உணர்ந்ததாக தெரியவில்லை. ரியல் எஸ்டேட் வணிகர்கள் விளை நிலங்களை வாங்கி விலைமனைகளாக மாற்றி வருகிறார்கள். விலை மனைகளாக மாற்றப்பட்டுள்ள பல இடத்தில் பத்தாண்டுகளுக்கு மேலாக வீடும் கட்டாமல் பயிர் சாகுபடியும் இல்லாமல் தரிசுகளாகவே இருக்கிறது. மாநிலத்தில் சாலையோர நிலங்கள் கண்ணுக்கெட்டிய வரையில் விலைமனைகளாக மாற்றப்பட்டு தரிசாகவே உள்ளது.

புதுச்சேரியில் 32000 ஹெக்டேர் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருவதாக அரசு கூறுகிறது. நடப்பாண்டில் 15000 ஹெக்டேர் மட்டுமே பயிர் சாகுபடி செய்வதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றது. காரைக்காலில் 15000 ஏக்கர் குறுவை சாகுபடி செய்து வந்த நிலை மாறி இந்த ஆண்டு வெறும் 3000 ஏக்கர் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நமது மாநிலத்தின் தேவை போக வெளி மாநிலங்களுக்கு நெல் கொடுத்து வந்த நிலை மாறி இன்று வெளி மாநிலங்களிலிருந்து அரிசி தருவிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. விளை நிலம் குறைந்ததால் விவசாய தொழிலார்களுக்கும் வேலை வெகுவாக குறைந்துவிட்டது. இந்த பேரபாய நிலையை தடுக்க வேண்டுமெனில் விளை நிலங்கள் குறைவதை தடுக்க வேண்டும். விலை மனை வணிகத்தை தடுத்து நிறுத்த வேண்டும். விளை நிலங்களை பாதுகாக்க உரிய சட்டத்தை இயற்ற வேண்டுமென இம்மாநாடு கோருகிறது.

விவசாய விளை பொருட்களுக்கு உரிய விலை வழங்குக – நெல்லுக்கு ரூ.1500 – கரும்புக்கு ரூ.3000 வழங்குக :

மாநிலத்தில் விவசாய உற்பத்தி குறைவதற்கு பிரதான காரணம் விளை பொருட்களுக்கு அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதரவு விலை கூட கிடைக்காததால் நெல்லுக்கு அரசின் கொள்முதல் நிர்ணய விலை குவிண்டாலுக்கு ரூ.1100. ஆனால் விவசாயிகளுக்கு கிடைப்பதே ரூ.750. கரும்புக்கு அரசு அறிவித்துள்ள கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.2150. ஆனால் விவசாயிகள் கைகளுக்கு கிடைப்பதோ ரூ.1500 மட்டுமே. இடுபொருட்களின் விலையேற்றம் ஒருபுறம்இ விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதது ஒரு புறம் என விவசாயிகள் அல்லல் உறுகிறார்கள். விவசாயம் கைவிடப்படுகிறது.

அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலான விலை கிடைப்பதற்காகத்தான் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அரசால் திறக்கப்பட்டது. ஆனால் விற்பனை கூட அதிகாரிகளும் வியாபாரிகளும் கூட்டு சேர்ந்து நெல் விலையை திட்டமிட்டு குறைத்து வாங்குகிறார்கள். சர்க்கரை ஆலையில் விலை மோசடிஇ உரிய காலத்தில் வெட்டு உத்தரவு வழங்காமல் காலம் தாழ்த்துவது என கரும்பு விவசாயிகளின் வாழ்க்கையை  நிர்வாகம் கசப்பாக்கி வருகிறது.

எனவேஇ நெல் உற்பத்தியை பெருக்கவும், விவசாயிகளை பாதுகாக்கவும் அரசே நேரடி நெல் கொள்முதல் செய்ய வேண்டுமெனவும்இ குவிண்டாலுக்கு ரூ.1500 வழங்க வேண்டுமெனவும்இ கரும்புக்கு உரிய காலத்தில் வெட்டு உத்தரவு,எடை மோசடியற்ற தன்மை உருவாக்கி டன்னுக்கு ரூ.3000 வழங்கவேண்டுமெனவும் இம்மாநாடு கோருகிறது.

பாசிக் நிறுவனத்தில் உரம், விதை தட்டுப்பாடின்றி வழங்கு, பாசிக் நிறுவனத்தில் மதுபான கடைகளை மூடு:

விவசாயிகள் விளைவித்த பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதது ஒருபுறம்இ தேவையான உரம்இ விதை கிடைக்காதது மறுபுறம். மத்திய அரசின் கொள்கைகளால் உரத்தின் விலை இரண்டு மடங்காகி விவசாயிகளை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. விவசாயிகள் உரம், விதை தட்டுப்பாடின்றி மானிய விலையில் கிடைப்பதற்காக தொடங்கப்பட்ட பாசிக் நிறுவனத்தில் உரம், விதை, பூச்சி மருந்து கிடைப்பதில்லை. விவசாயிகளுக்காக தொடங்கப்பட்ட பாசிக் நிறுவனம் இப்போது மதுபான விற்பனை, துணி விற்பனை மட்டுமே செய்யும் நிறுவனமாக மாறிவிட்டது. விவசாயிகளை அரசு கைவிட்டுவிட்டது. விவசாயிகள் பலமடங்கு விலை கொடுத்து உரம், விதை, பூச்சி மருந்துகளை தனியார் கடைகளில் வாங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதுவும் வெளிமாநிலத்திற்கு சென்று வாங்கும் கொடுமை. இதை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.

எனவே, விவசாயிகளின் பாசிக் நிறுவனத்தில் உரம், விதை, பூச்சி மருந்துகள் தட்டுபாடின்றி மானிய விலையில் வழங்க வேண்டுமெனவும் பாசிக் நிறுவனத்தில் மதுபான கடைகளை மூட வேண்டுமெனவும் இம்மாநாடு கோருகிறது.

மக்கள் அனைவருக்கும் உணவு கிடைக்க தேசிய உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றி அமுல்படுத்துக

நாட்டில் 80 சதவீதம் மக்கள் நாள் ஒன்றுக்கு ரூ.20ஐ விட குறைவாகவே வருவாய் உடையவர்களாக இருக்கிறார்கள் என அர்ஜுன் சென் குப்தா அறிக்கை கூறுகிறது. மக்கள் தொகையில் 40 சதவீதத்திற்கு மேல் வறுமை கோட்டிற்கு கீழே அல்லாடுகிறார்கள் என மற்றொரு ஆய்வு கூறுகிறது.

விவசாயம் சீரழிந்துஇ கிராமப்புற மக்கள் உணவிற்காக வேறு வேலை தேடி அலைகிறார்கள். இந்தியாவில் 18 வயதுக்கு உட்பட்டவர்களில் பாதி பேர் சத்துணவின்றி நோயுடன் வாழ்வதாக ஐ.நா அறிக்கை கூறுகிறது. ஒட்டுமொத்த பெரும் பகுதி இந்தியா பசியோடு தவிக்கிறது. இந்நிலையில் அரசு கிடங்குகளில் உள்ள தானியங்கள் எலிகளுக்கே உணவாகுகிறது. மக்கிப் போனாலும் கவலையில்லைஇ ஆனால் பசியுற்ற மக்களுக்க் இல்லை உணவு என்ற கவலையற்ற போக்கில் ஆள்வோர்கள் ஆட்சி புரிகிறார்கள். உச்ச நீதிமன்றம் இடித்துரைத்த பின்னும் ஆள்வோருக்கு சுரணையில்லை.

பசியுற்ற மக்களுக்கு உணவு வழங்கவேண்டுமென பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் தயாரிப்பதற்காக குழுவும் அமைக்கப்பட்டு அறிக்கை தரப்பட்டும் கிடப்பில் கிடக்கிறது. சரியான திட்ட ஆலோசனைகளை மார்க்சிஸ்ட் கட்சி தந்துள்ளது.

எனவேஇ மானிய விலையில் கூடுதல் தானியம் ஏழை எளிய மக்களுக்கு கிடைக்கவும்இ சத்துணவற்ற சிறுவர்களுக்கும்இ கர்ப்பிணிகளுக்கும் உணவு பாதுகாப்பு கிடைக்கவும்இ தேசிய உணவு பாதுகாப்பு திட்ட மசோதாவை நிறைவேற்றி அமுல்படுத்த வேண்டுமென இம்மாநாடு கோருகிறது.

புதுச்சேரி பிரதேசத்தில் மக்கள் பங்கேற்புடன் கூடிய ஏரி புனரமைப்பு திட்டத்தினை மீண்டும் துவக்க கோரி:

கடந்த 1996 முதல் 2008 வரை புதுச்சேரி பிரதேசத்திலுள்ள 84 ஏரிகள், குளங்கள் மற்றும் கண்மாய்கள் புனரமைப்பு மற்றும் பராமரிப்பு பணியினை மக்கள் பங்கேற்புடன் ஏரி சங்கங்கள் அமைக்கப்பட்டு ஐரோப்பா யூனியன் நிதியும், புதுவை அரசின் நிதியுமாக சுமார் 15 கோடி ரூபாய் செலவில் ஏரிகள் புனரமைக்கப்பட்டன. இதன் காரணமாக மிகப்பெரிய வெள்ளம் வந்தபோதும் புதுச்சேரியில் விவசாய நிலங்களும் மக்களும் பாதிக்கப்படாமல் இருந்தனர். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக பராமரிப்பு மற்றும் புனரமைப்பு பணிகள் செய்யப்படாததால் ஏரிகளும், குளங்களும், கண்மாய்களும் சீரழிந்துள்ளதோடு, குறைந்த மழைக்கே பயிர்களும் விவசாய நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவேஇ மக்கள் பங்கேற்புடன் கூடிய ஏரி சங்கங்கள் தலைமையில்  ஏரி புனரமைப்பு திட்டத்தினை தொடங்க வேண்டும்.

கல்வி உரிமைச் சட்டத்தை உடனடியாக புதுச்சேரியில் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி:

மத்திய அரசு கடந்த 2009ஆம் ஆண்டு அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டத்தினை கொண்டுவந்தது. நான்கு ஆண்டுகள் கழித்தும் புதுச்சேரியில் அதை அமுல்படுத்தாமல் இருப்பதோடுஇ அந்த சட்டத்தை இருட்டடிப்பு செய்யும் நோக்கத்தோடு தனியார் பள்ளிகளுக்கு சாதகமான அணுகுமுறையினை கைகொண்டிருப்பதை இம்மாநாடு கண்டிக்கிறது.

எனவே, உடனடியாக இந்த சட்டத்தினை நடைமுறைக்கு கொண்டு வருவதோடு, அருகமை பள்ளி கோட்பாட்டின் அடிப்படையில் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களை இலவசமாக ஏழை மாணவர்களுக்கு வழங்குவதோடு, அனைவருக்கும் கல்வி திட்டத்தில் நடைபெறும் ஊழல் மற்றும் முறைகேடுகளை தடுத்து பள்ளிக்கு வராத தனியார் தொழிற்சாலைகள் மற்றும் உணவகங்களில் குழந்தை தொழிலாளர்களாக பணியாற்றுவோரையும் பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கையையும் புதுவை அரசின் கல்வித்துறை மேற்கொள்ள வேண்டும்.

புதுவையில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சீரழிக்கும் போக்கினை கைவிட கோரும் தீர்மானம்

நமது நாட்டில் இன்று 95 இலட்சத்திற்கும் மேற்பட்ட சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலானவை பெண்களை மையப்படுத்திய குழுக்கள். புதுவையில் 17000 சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. பெண்களின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் தொடங்கப்பட்ட குழுக்கள் தற்போது அரசியல் காரணங்களுக்காகவும்இ வங்கிகள் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் அளிக்கும்போது எந்த வரைமுறையின்றியும்இ போலி ஆவணங்க்ளை தயார் செய்தும் மற்றும் லஞ்சம் பெற்றுக் கொண்டு கடன் அளித்து வருவதும் அதிகரித்து வருவதோடுஇ முகவரியற்ற அமைப்புகள்இ சர்வதேச நிறுவனங்கள்இ தவறான தகவல்களையும் வாக்குறுதிகளையும் கொடுத்து சுய உதவிக்குழுக்கள் தொடங்கி பின் அப்படியே விட்டு விட்டு சென்றுவிடுவது தொடர்கதையாகின்றது.

எனவேஇ புதுவை அரசு இவற்றை கண்காணிப்பதோடுஇ முறைப்படுத்திடவேண்டுமெனவும்இ அவர்களுக்கான கடனுக்கான வட்டி விகிதத்தை 4 சதவீதமாக குறைக்க வேண்டுமெனவும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

சட்ட ஒழுங்கினைப் பாதுகாக்க கோரி:

புதுச்சேரி மாநிலம் கொலைக்களமாக மாறி வருகிறது. 2006லிருந்து 2008 வரை 93 படுகொலைகள் நடந்துள்ளது. சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ரங்கசாமி தலைமையில் ஆட்சி ஏற்பட்டது. ஆனால்இ படுகொலைகள் இன்னும் அதிகமாகி வருவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

ரங்கசாமி அவர்கள் ஆட்சிக்கு வந்தபின் 2011 மே 15 தேதிக்குபின் இன்று வரை 34 படுகொலைகள் ஆறு மாத காலத்தில் நடந்துள்ளன. வாகன திருட்டு உட்பட சமூக குற்றங்கள் ஆயிரத்தை எட்டியுள்ளது. ரவுடிகள் அரசுக்கு சவால் விடும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியாததால் பல அப்பாவிகளும் கொலை செய்யப்படுகிறார்கள். சிறைச்சாலைக்கு உள்ளேயும் ரவுடிகளின் ராஜ்ஜியம். சிறைச்சாலைக்குள்ளிருந்தே ஆள் வைத்து மிரட்டி பணம் பறிக்கப்படுகிறது. திருட்டு கொள்ளையர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை காவல் துறையினரே பங்கு போட்டு கொண்ட விவரமும் வெளிவந்துள்ளது. இது காவல் துறையினருக்கும்இ ரவுடிகளுக்கு உள்ள நெருக்கத்தினை காட்டுகிறது. ஒட்டுமொத்தமாக சட்ட ஒழுங்கினை பாதுகாக்க கையாலாகாத அரசே புதுச்சேரியில் தொடர்ந்து வருகிறது. ரவுடிகளின் மிரட்டலின் அடிப்படையில் காவல் துறையில் புகார் கொடுத்தும்இ புகார் பதிவு செய்யப்பட மறுக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் உரிய நடவடிக்கை முன்னெச்சரிக்கையாக எடுக்கப்பட்டிருந்தால் சில கொலைகள் நடைபெறாமல் தடுத்திருக்க முடியும். நடைபெறும் கொலை குற்றங்களில் ஓரிரு தொழில் முறை கிரிமினல்களோடு புதிதாக இளைஞர்களும் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். இது மிகவும் கவலை அளிப்பதாகவும்இ அச்சமூட்டுவதாகவும்இ மாநில அமைதிக்கு சவால் விடுவதாகவும் உள்ளதென்பதை புதுச்சேரி அரசிற்கு இம்மாநாடு சுட்டிகாட்ட விரும்புகிறது.

மக்கள் பேராதரவுடன் காங்கிரஸ்-திமுக அரசுக்க் எதிராக தேர்தலில் வெற்றி பெற்று புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள முதல்வர் ரங்கசாமி அவர்கள் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும்இ காவல் துறையை ஒழுங்குபடுத்தவும்இ புதுவை மாநில மக்களை பாதுகாக்கவும்இ உடனடியா நடவடிக்கைகளை எடுக்க இம்மாநாடு கோருகிறது.

வில்லியனூர் கொம்யூனுக்குட்பட்ட அரியூர் கிராமத்தில் தலித்துகளுக்கு கட்டி முடிக்கப்பட்டுள்ள தொகுப்பு வீடுகளை உடனே வழங்குக

வில்லியனூர் கொம்யூனுக்குட்பட்ட அரியூர் கிராமத்தில் தலித் மக்களுக்கென சுமார் 50 தொகுப்பு வீடுகள் 2010ல் கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையிலுள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களின் வீடு ஆசை வெறும் கனவாகவே உள்ளது. ஆண்டுகள் இரண்டு கழிந்த பின்னரும் இதுவரை எவருக்கும் அவ்வீடுகள் வழங்கப்படவில்லை. இதனால் அந்த வீடுகளின் பராமரிப்பு என்பது இல்லாமல் மிக மோசமாக வருகிற்து. மேலும் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் அவை மாறிவருவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதை இம்மாநாடு மிகக் கவலையோடு பார்க்கிறது.

எனவே, புதுவை அரசு உடனடியாக அத்தொகுப்பு வீடுகளை தலித் மக்களுக்கு வழங்கவேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.

காரைக்கால் – நாகூர் இடையேயான அகல ரயில்பாதையை உடனே துவங்க வேண்டும்.

காரைக்கால் – நாகூர் இடையேயான 11 கிலோமீட்டர் அகல ரயில்பாதை திட்டம்இ திட்டப்பணிக்காக மத்திய அரசு சுமார் 100 கோடி ரூபாய் வரை ஒதுக்கியுள்ளது. ஆனால் அதற்கான பணிகள் மெத்தனமாக நடைபெற்றுவருவதை இம்மாநாடு கண்டிக்கிறது. காரைக்காலுக்கு மத்திய அமைச்சர்கள் வருகிறபோதெல்லாம் இம்மாதம் அல்லது அடுத்த மாதம் ரயில் போக்குவரத்து துவங்கப்படும் என வெற்று அறிவிப்புகளை அள்ளி வீசி விட்டு செல்வது என்பது வாடிக்கையாகிவிட்டது.

எனவேஇ மத்திய அரசு வரும் டிசம்பர் 21ஆம் தேதி சனிபெயர்ச்சி என்பதால் பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக ரயில் போக்குவரத்தினை துவங்கவேண்டுமெனவும்இ மேலும் காரைக்கால் – பேரளம் இடையேயான அகல ரயில் போக்குவரத்து பணிகளை உடனடியாக துவங்கவேண்டுமெனவும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

திருள்ளார் கோயில் நகர திட்டத்தை உடனே துவங்க வேண்டும்.

திருநள்ளார் கோயில் நகரத்தை விரிவுபடுத்துவதற்காக கோயில் நகர திட்டமாக உருவாக்குவதற்கு ஹட்கோ மூலம் சுமார் 215கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு மேல் கழிந்துள்ள நிலையில் ஒவ்வொரு சனிபெயர்ச்சி மற்றும் முக்கிய தினங்களின்போதும் நகரம் போதிய வசதிகளின்றி இருப்பதால் மக்கள் மிகுந்த அவதிக்க்குள்ளாகி வருவது வாடிக்கையாகி உள்ளது. கோயில் நகர திட்டம் செயல்படுத்தப்படாமல் இருப்பது மட்டுமல்ல அதற்கென ஒதுக்கப்பட்ட நிதிக்கான வட்டியை மட்டும் அரசு வருடந்தோறும் வீணே கட்டி வருகிறது. பொதுமக்களுக்கான திட்டத்தை வெறும் அரசியல் காரணங்களுக்காக அமுல்படுத்தாமல் மக்கள் வரிப்பணம் வீணாவதை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.

எனவேஇ மாநில அரசு திட்டமிட்டு உடனடியாக திருநள்ளார் கோயில் நகரத்திற்கு ஒதுக்கிய நிதியை பயன்படுத்தி அதற்கான பணிகளை காலதாமதமின்றி மேற்கொள்ள வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

சந்தை புதுக்குப்பத்தில் தலித்துகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் – உரிய நிவாரணம்இ நீதி விசாரணை கோரி:

அக்டோபர் மாத இறுதியில் சந்தைபுதுக்குப்பம் கிராமத்தில் ஆதிக்கசாதியினர் அங்கேயுள்ள தலித் மக்களின் மீதும், அவர்களின் வீடுகள் மற்றும் வாகனங்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளார்கள். அதில் சில தலித் மக்கள் படுகாயமடைந்துள்ளார்கள். ஆதிக்க சாதியினர் அவர்களுக்கு வேலையில்லை என்று கூறிவிட்ட நிலையிலும்இ ரேஷன் கடைக்கு செல்ல விடாமல் ஆதிக்க சாதியினர் தடுக்கின்ற சூழலிலும், தலித் மக்கள் வருமானம் இல்லாமல் பசியில் அல்லலுறுகிறார்கள். மோதலை நிகழ்த்திய ஆதிக்க சாதியினர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்காது, அவர்களை கைது செய்யாதது மட்டுமல்ல, தாக்குதலுக்குள்ளான தலித் மக்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியுள்ளது இம்மாவட்ட நிர்வாகம். இச்சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 15-20 நாட்கள் கழிந்துவிட்ட இந்நிலையில் கூட மாவட்ட ஆட்சியர் உட்பட்ட மாவட்ட நிர்வாகத்தினர் நேரடியாய் பார்வையிடாததும், அம்மக்களின் துயர் தீர்க்க ஆக்கபூர்வ நடவடிக்கை எடுக்காமல்இ அப்பட்டமான சாதி வெறியினருக்கு துணை நிற்பது என்பதை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.

எனவே, உடனடியாக பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு எல்லா உரிய நிவாரணமும் அவர்களிடம் சென்றடையவும், சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியின் கீழ் நியாயமான நீதி விசாரணை நடத்திடவும்,  சாதிய வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட ஆதிக்க சாதியினர் மீதும் தாக்குதலுக்குள்ளாகி அவதிப்பட்டு வரும் தலித் மக்களின் துயர் களைய எந்தவித நடவடிக்கையையும் எடுக்காத மாவட்ட நிர்வாகத்தினர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து, புதுவை பிரதேசத்தில் வருங்காலங்களில் இனி எந்த ஒரு இடத்திலும் இதுபோன்ற மோசமான சாதி மோதல் நிகழாது காக்க வேண்டும் எனவும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

வானவில்-பாரதி கூட்டுறவு பண்டகசாலை ஊழியர்கள் -குடும்பத்தினரை காப்பாற்றுக:

புதுச்சேரி அரசு கூட்டுறவுத்துறையின் கீழ் பாரதி கூட்டுறவு பண்டகசாலை மற்றும் வானவில் கூட்டுறவு பண்டகசாலை இரண்டுமே அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவோடு மிகச் சிறப்பாக இயங்கி வந்தன. சமீபகாலமாக தொழில்ரீதியான போட்டி, கூட்டுறவுத்துறை மற்றும் புதுச்சேரி அரசின் தேவையான கவனமின்மை காரணமாக இந்த நிறுவனங்கள் லாபகரமாக இயங்க முடியாத நிலையும் ஏற்படுத்தப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நிறுவனங்களில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் கொடுக்கப்படவில்லை. அந்த ஊழியர்கள் குடும்பங்கள் வறுமையில் வாடி வருகின்றனர். பல கட்ட போராட்டங்களையும்இ அரசின் கவனத்தை ஈர்க்க நடத்தியுள்ளனர்.

மேலும் காலதாமதம் செய்யாமல் புதுச்சேரி அரசு இந்த பிரச்சனையில் தலையிட்டு இந்த நிறுவனங்களுக்கு தேவையான நிதி உதவியும்இ லாபகரமாக நடக்க தேவையான தொழில்நுட்ப உதவிகளும் அளித்து இந்த நிறுவனங்களையும், நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர் குடும்பங்கள் வாழவும் வழிவகை செய்திடுமாறு புதுச்சேரி அரசினை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

புதுவை தமிழக பேருந்து கட்டண உயர்வினை கைவிடகோரி

மத்திய அரசு சாதாரண மக்கள் மீது பெட்ரோல் விலை உயர்வு, உரம் உள்ளிட்ட விவசாய இடுபொருள் உயர்வு போன்ற தாக்குதல்களை  தொடுத்துள்ள இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை ,டங்களை பெற்று ஆட்சிக்கு வந்த தமிழக அ.இ.அ.தி.மு.க அரசும் அதே மக்கள் விரோத பாதையில் சென்று அண்மையில் பேருந்து கட்டணங்கள் கிட்டத்தட்ட 75 முதல் 80 சதவீத அளவிற்கு உயர்த்தியுள்ளதை இம்மாநாடு கண்டிக்கிறது.

எனவே, சாதாரண மக்களின் இவ்வகையான தாக்குதலை தொடுக்காமல் பன்னாட்டு இந்நாட்டு முதலாளிகளுக்கு வழங்கப்படும் பல கோடி ரூபாய் சலுகைகளை குறைக்கவும், உயர்த்தப்பட்ட பேருந்து கட்டண உயர்வினை திரும்பப் பெறவும் இம்மாநாடு கோருகிறது.

தோழர் வி.பி.சிந்தன் சிலை நிறுவ கோரி :

தமிழகம், புதுவை பிரதேசத்தில் தொழில் வளம் பெருகவும், பெரிதாய் வேலைவாய்ப்பு கிடைக்கவும் காரணாமாயிருந்த பஞ்சாலைகளுக்கு 8 மணி நேர வேலைக்காக குரல் கொடுத்தவரும், பஞ்சாலை உள்ளிட்ட ஏராளமான தொழிற்சாலைகளின் தொழிலாளர்களின் உரிமைக்காகவும், ஊதிய பாதுகாப்பிற்காகவும், தொழிலாளி வர்க்கத்தினரின் பாதுகாவலனாய் இருந்து மறைந்த நம் தோழர் வி.பி.சிந்தன் அவர்களுக்கு புதுவை அரசின் சார்பில் புதுவையில் சிலை நிறுவவேண்டுமென இம்மாநாடு கோருகிறது.

வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வேலையும் –வேலையில்லா கால நிவாரணத்தை உடனே வழங்க கோரி :

புதுச்சேரியில் வேலை வாய்ப்பு கேட்டு 2,25,000 இளைஞர்கள் பதிந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 80 சதவீத அடிப்படையில் இந்தியாவிலேயே முதலிடமாய்இருக்கிறது. இருந்தாலும் வேலை வாய்ப்பு என்பது கொல்லைப்புற வழியாகவே கொடுக்கப்பட்டு வருகிறது.  அரசு உயர்நீதிமன்ற உத்தரவினையும் மதிப்பதில்லை. இந்த நிலையில் வேலையில்லாமல் இளைஞர்கள் தவறான பாதையில், குறுக்கு வழியில் பணம் காணும் நிலைக்கு தள்ளப்பட்டதால் புதுவையில் சமூக குற்றம் உயர்ந்து வருகிறது. இந்த நிலையை மாற்ற வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை நிவாரணம் வழங்க வேண்டுமெனவும், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகவே வேலையமர்த்த வேண்டுமெனவும் இம்மாநாடு கோருகிறது.

புதுச்சேரி அரசு உயர்கல்விக்கான வாய்ப்புகளை பெருக்கும் வகையில் அறிவிக்கப்பட்ட மாநிலப் பல்கலைக்கழகத்தினை உடனே துவக்க கோரி :

புதுச்சேரி பிரதேசத்தில் உயர்கல்விக்கான வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளது. தொழிற்படிப்புகள் தனியார்மயமாகிவிட்ட சூழலில், 12வது முடித்து கலைத்துறையில் படிக்க விரும்பும், இளைஞர்களுக்க்கு மிகக் குறைவாகவே வாய்ப்புகள் உள்ளன. புதுச்சேரியில் ஏற்கெனவே உள்ள பல்கலைக்கழகம் மத்திய பல்கலைக்கழகமாக, இருப்பதால் அதிலே 30 சதவீத, இடங்கள் மட்டுமே புதுச்சேரி மாணவர்களுக்காக ஒதுக்கபட்டுள்ளது புதுச்சேரி அரசு கடந்த 2004 ஆம் ஆண்டு மாநிலப் பல்கலைக்கழகம் துவங்கப்படட் உள்ளதாக அறிவித்து பாகூரில் நிலம் கூட ஒதுக்கப்பட்டுவிட்ட சூழ்நிலையில், இதுவரை அதில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இருக்கின்ற சொசைட்டி கல்லூரிகளில் போதிய பாடபிரிவுகள், இல்லாமலும் புதுச்சேரி பிரதேசத்தில் உயர்கல்வி என்பது குறைவாகவே உள்ளதால் சிலர் தமிழகத்தை நோக்கி சென்றும், பலர் தங்களது படிப்பினை 12வது நிறுத்தும் அவலமும் தொடர்கிறது.

எனவே, புதுச்சேரியில் உயர்கல்விக்கான வாய்ப்பினை பெருக்கும் வகையில் உடனே பாகூரில் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் மாநிலப் பல்கலைக்கழகம் துவங்கவும், இருக்கின்ற அரசு கல்லூரிகளில் பாடப்பிரிவுகள் மற்றும் கட்டமைப்பு வசதிகளை  அதிகப்படுத்தவும் வேண்டுமென இம்மாநாடு கோருகிறது.

அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தினை மருத்துவமனையாக மாற்றும் தமிழக அரசின் உத்தரவினை திரும்பப் பெற – புதுவை ரோமன் ரோலண்டு நூலகம் நவீனமயமாக்கல் – புதுவை கம்பன் கலையரங்க வாடகையினை குறைக்க கோரி:

தமிழக அரசு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்றம் செய்வது என முடிவு செய்து இருக்கிறது. அந்நூலகக் கட்டிடத்தை குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனையாக மாற்றம்