புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்குவதை கண்டித்தும், தொடர்ந்து அரசு கட்டுப்பாட்டிலேயே மின்துறை இருக்க வலியுறுத்தி காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் உட்பட ஜனநாயக அமைப்புகள் சார்பில் மனித சங்கிலி இயக்கம் செவ்வாய்க்கிழமை (மே- 31) புதுச்சேரி முழுவதும் நடைபெற்றது. புதுச்சேரி காமராஜர் சிலை எதிரே நடைபெற்ற இயக்கத்தில் மதசார்பற்ற கட்சிகளின் தொண்டர்கள் தலைவர்கள் திரளாக பங்கேற்றனர்.
