இந்தியாவை நாசமாக்கும் பிஜேபி, மோடி ஆட்சி ! இன்னும் நீடிக்கலாமா ? அதை அனுமதிக்கலாமா?
மாநில உரிமை மீட்போம்
புதுச்சேரி மக்கள் நலன் காப்போம்! செப்டம்பர் 20 முதல் 26 வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்
200 கிலோ மீட்டர் பிரச்சார நடைப் பயணம்.
செப்டம்பர் 20 காலை 8 மணிக்கு தோழர் வா. சுப்பையா சதுக்கத்தில் (நெல்லிதோப்பு அரசியல் தலைமை குழு உறுப்பினர் தோழர். ஜி. ராமகிருஷ்ணன் அவர்கள் தொடங்கி வைத்து பங்கேற்க உள்ளார்.
ஒன்றிய மோடி அரசு, தேசத்தையும்,மக்கள் வாழ்வையும் நாசமாக்கி உள்ளது. அதனுடைய கார்ப்பரேட் ,கூட்டு களவாணி கொள்கையினை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் வகையில் செப்டம்பர் மாதம் மக்கள் சந்திப்பு இயக்கங்களை நடத்திட கட்சி முடிவு செய்துள்ளது.
புதுச்சேரியில் ஆளும் என் .ஆர் காங்கிரஸ் -பாஜக அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது, தங்களின் சுயநலத்திற்காக மாநில உரிமை மற்றும் மக்கள் நலன்களை அழித்து வருகிறது. ஆகவே ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளின் முதலாளித்துவ, வகுப்புவாத கொள்கைகளின் விளைவாக புதுச்சேரி அபாயகரமான கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.
எனவே இந்தியாவில் இருள் மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம், மாநில உரிமை மீட்போம் ,புதுச்சேரி மக்கள் நலன் காப்போம் என்ற முழக்கத்தை முன்வைத்து நடைபயண இயக்கத்தை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு புதுச்சேரி மக்கள் முழு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.









