இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
பத்திரிக்கை செய்தி:
————————————————
சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் பதவி நீக்கம் சட்டமன்ற அலுவல் விதிக்கு எதிரானது.
————————————————
புதுச்சேரி முதலமைச்சர் அறையில் சபாநாயகருக்கும், நேரு என்கிற குப்புசாமி சட்டமன்ற உறுப்பினருக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தால் சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் பதவியில் இருந்த திரு நேரு என்கிற குப்புசாமி எம்எல்ஏ நீக்கம் செய்யப்பட்டுள்ளர். இச்செயல் சட்டமன்ற அலுவலக விதிக்கு எதிரானதாகும். சபாநாயகர் திரு செல்வம் அவர்கள் வானளாவிய அதிகாரம் படைத்ததாவராக நடந்து கொள்வது அவர் வகிக்கும் பதவிக்கு அழகு அல்ல.
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற விதிகள் படி, பேரவை கூட்டங்கள் முடியும் வரையில் ஒவ்வொரு ஆண்டும் குழுக்கள் தேர்ந்தெடுக்கப்படும். இந்தக் குழுக்கள் அடுத்த பட்ஜெட் காலம் வரையில் அதாவது ஓராண்டு பதவிக்காலம் கொண்டதாக இருக்கும். தன்னிச்சையாக சபை தலைவரால் நியமிக்கப்படும் நியமனம் அல்ல, அவ்வாறு 2024 ஆகஸ்டு நடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் திரு நேரு என்கிற குப்புசாமி எம்.எல்.ஏ தலைமையில் உறுதிமொழி குழு தேர்வு செய்யப்பட்டு 08.08.2004இல் அரசாணை வெளியிடப்பட்டது இந்த நிலையில் தனிப்பட்ட மற்றும் அரசியல் காரணங்களுக்காக 21.10.2024 உறுதிமொழி குழுவின் தலைவர் நீக்கப்பட்டு புதிய குழு அமைக்கப்பட்டுள்ள வரம்பு மீறிய செயலை செயல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
சட்டப்பேரவைத் தலைவர் அரசியல் சார்பற்றவராக, சட்டப்பேரவை மாண்பு மற்றும் மரபுகளை பின்பற்றப்பட வேண்டும். ஆனால் நடைமுறையில் பாஜக கட்சி மற்றும் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, முதல் முதல்வர் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு அனைத்திலும், தலையிடுவது புதிய அறிவிப்புகளை வெளியிடுவது, என தன் வகிக்கும் பதவிக்கு இழுக்க ஏற்படுத்தி வருகிறார். மாநில முதல்வர் இது குறித்து கவலைப்பட்டதாக தெரியவில்லை. பாஜக கூட்டணி ஆட்சியில் எதுவும் நடக்கும் என்ற மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். சட்டப்பேரவையில் அங்கம் வகிக்கும் முதல்வர், அமைச்சர்கள், சபைத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான அதிகார வரம்பை ஒழுங்கு படுத்திட மாநில முதல்வர் உரிய தலையீடு செய்ய வேண்டுகிறோம்.
சட்டப்பேரவை தலைவர் தான் வகிக்கும் பொறுப்புக்கு ஏற்றவாறு நடந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். மேலும் சட்டமன்ற அலுவலக விதிக்கு எதிராக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுதிமொழி குழு தலைவர் பதவி நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
இப்படிக்கு
இரா.இராஜாங்கம்,
மாநில செயலாளர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) > செய்திகள் > பிரதேச செயற்குழு > ஊடக அறிக்கை Press release > புதுச்சேரி சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் பதவி நீக்கம் சட்டமன்ற அலுவல் விதிக்கு எதிரானது.
புதுச்சேரி சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் பதவி நீக்கம் சட்டமன்ற அலுவல் விதிக்கு எதிரானது.
posted on