கர்நாடகா மக்கள் அளித்த தீர்ப்பில் புதுவை முதல்வர் பாடம் கற்க வேண்டும் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும். – சிபிஎம்

தென்னிந்தியாவின் கறையாக பிஜேபி கூட்டணி ஆட்சி புதுச்சேரி மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது.

bjpoutபாஜக கட்சிக்கு அரசியல் நேர்மையும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையும் எப்போதும் இருந்ததில்லை. எதிர்க்கட்சி மாநில அரசுகளைப் பலவீனப்படுத்தி ஆட்சியை கைப்பற்றுவது ,கூட்டணி கட்சிகளை பலவீனப்படுத்தி சொந்த பலத்தைப் பெருக்கிக் கொள்வதிலும் வஞ்சகமும், துரோகமும் கொண்ட ஆக்டோபஸ் போன்றது.

கர்நாடக மக்கள் சட்டமன்றத் தேர்தலில் பாஜக-வைத் தீர்மானகரமாக நிராகரித்திருக்கிறார்கள். பாஜகவிற்கு இந்தத் தோல்வி, பாஜக அரசாங்கத்தின் ஒட்டுமொத்த தவறான ஆட்சி மற்றும் ஊழலின் விளைவாகும். மேலும் கர்நாடகா மக்கள் அளித்த இந்த தீர்ப்பானது , பிரதமர் மோடியே தேர்தல் பிரச்சாரத்தின் போது மேற்கொண்ட விஷத்தைக் கக்கிய மதவெறிப் பிரச்சாரத்தை மக்கள் நிராகரித்திருப்பதையும் காட்டுகிறது. மக்கள் மத்தியில் பாஜக ஆட்சிக்கு எதிராக இருந்த கடும் எதிர்ப்பு உணர்வு, சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் பெரும் வெற்றியுடன் வெற்றிபெற வாய்ப்பளித்திருக்கிறது.

cpim puducherryஒன்றிய மதவெறி, கார்ப்பரேட் கூட்டுக் களவாணித்தனத்தின் மொத்த உருவமான பாஜக  2016 முதல் 2021 வரை ஆட்சியிலிருந்த புதுச்சேரி திரு நாராயணசாமி அரசை அனைத்து வகையிலும் தடுத்து நிதி ஒதுக்காமலும் ஏமாற்றியது. கிரண்பேடியோ மக்கள் நலத் திட்டங்களை முடக்கி வைத்ததோடு போட்டி அரசை நடத்தி புதுச்சேரியின் வளர்ச்சியை ஐந்தாண்டுக்கு நிறுத்தியே வைத்து விட்டார். சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியும் கவிழ்க்கப்பட்டது.

Rangasamyதிரு.என்.ரங்கசாமி தான் எப்படியாவது முதல்வராக இருந்தால் போதும்  மக்களைப் பற்றிக் கவலைப்படாமல், புதுச்சேரி எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் மக்கள் விரும்பாத பாஜக கட்சியோடு கூட்டணி வைத்து இல்லாத கட்சியை உருவாக்கக் காரணமாகிவிட்டார்.இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள பதவி வெறியும் பிடித்த மக்கள் சொத்தை கொள்ளை அடித்து வைத்திருந்த சில சட்டமன்ற உறுப்பினர்களையும் கொலை கொள்ளை வழிப்பறி ஆள் கடத்தல் நில அபகரிப்பு போன்ற கொடும் குற்றங்களைச் செய்த ரவுடிகளையும் பிஜேபி கட்சியில் சேர்த்து ஒரு ஓட்டுக்கு பத்தாயிரம் ரூபாய் வரை கொடுத்து அதன் மூலம் 6 சட்டமன்ற உறுப்பினர்களை புதுச்சேரியில் பெற்று விட்டது. மேலும் சுயேட்சையாக வெற்றி பெற்றவர்களை பணம் கொடுத்தும் பதவி ஆசை காட்டியும் தங்களது ஆதரவாளராக மாற்றி ரங்கசாமியை மிரட்டி வருகிறது.

புதுச்சேரியின் மக்கள் சொத்தான மின்துறை விற்க, பஞ்சாலைகளை விற்க, சர்க்கரை ஆலையை விற்க, கூட்டுறவு நிறுவனத்தின் இடங்களை விற்க, கடற்கரையை இயற்கை வளங்களை கார்ப்பரேட்களிடம் அடகு வைக்க, பிஜேபி. என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசு துடிக்கிறது.அரசு இயந்திரத்தை, கல்வித்துறையை காவிமயமாக்கி மதவெறி நிகழ்ச்சியை நேரடியாக  அரங்கேற்றத் தொடங்கியுள்ளது. ரேஷன் கடைகளை மூடி வைத்துள்ளது, ஆயிரக்கணக்கான அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு ஆண்டு கணக்கில் சம்பளம் இல்லாமல் நிறுத்தி வைத்துள்ளது. நன்றாக இயங்கிக் கொண்டிருந்த பிஆர்டிசி நிறுவனத்தை கூட மூட பார்க்கிறது. அமைதியான புதுச்சேரியில் கூடுதலாக 500 ரெஸ்ட்ரோ பார்களை உருவாக்கி மக்கள் நிம்மதி கெடுத்துள்ளது.

தென்னிந்தியாவின் கறையாக புதுச்சேரியில் மட்டும் தற்போது கூட்டணியில் இருப்பது புதுச்சேரி மக்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறது. போராட்டப் பாரம்பரியமும் மதங்களைக் கடந்த மக்கள் ஒற்றுமை நிலவும் புதுச்சேரி மக்களின் பாரம்பரியத்தை பாதுகாக்க பிஜேபி கட்சியைப் புதுச்சேரியில் இருந்து அகற்றுவோம். திரு என். ரங்கசாமி அவர்கள் பிஜேபி கூட்டணியிலிருந்து இருந்து உடனே விலகி வெளியேற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.

இரா.இராஜங்கம்
புதுச்சேரி மாநில செயலாளர்

Leave a Reply