உழைக்கும் வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்ற அடிப்படையான பண்பு மாற்றம், அதற்கு முந்தைய சமூகத்தில் சிறு சிறு மாற்றங்கள் – தனி நபர், மனித உறவுகள், உற்பத்தி முறைகளில்- நடப்பதன் மூலம் சாத்தியமாகிறது. அத்தகைய பண்பு மாற்றங்கள் படிப்படியாக நிகழ்வதில்லை. அவை அதி விரைவாக திடுதிடுப்பென்று நிகழ்கின்றன. அதனால் சமூக மாற்றம் சமரச, சமாதான வழியின் மூலம் சாத்தியம் என்று சொல்லும் திரிபுவாதிகளின் கோட்பாட்டை இது மறுக்கிறது. சிறு சிறு அளவு மாற்றங்களால் வந்தடைந்ததும் பண்பு மாற்றம் ஒரு புரட்சியாக வெடிக்கிறது.
வேதியல் உதாரணங்கள்: வெவ்வேறு அளவில் சேரும் போது வெவ்வேறு பண்புடைய சேர்மங்கள் உருவாகின்றன. உதாரணமாக இரண்டு ஆக்சிஜன் அணுக்கள் ஆக்சிஜன் வாயுவாகவும், மூன்று ஆக்சிஜன் அணுக்களை கொண்ட பொருள் ஓசோனாகவும் இருக்கின்றன. இரண்டுக்கும் பெரிதும் வேறுபட்ட பண்புகள் இருக்கின்றன. நிறத்திலும் தன்மையிலும் ஓசோன் ஆக்சிஜனிலிருந்து வேறுபட்டிருக்கிறது. ஆக்சிஜன் – நிறமற்றது, இரண்டு இரட்டையாக்கப்படாத எலக்ட்ரான்களை கொண்டிருக்கிறது. தண்ணீரில் நன்கு கரையும்.
சமுதாயத்தின் வரலாற்றுடனும் பாட்டாளி வர்க்க கட்சியின் நடைமுறை வேலைகளுடனும் இந்த கோட்பாடுகளை பொருத்திப் பார்க்க வேண்டும். உலகின் எல்லா பொருட்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்றால் மனித வரலாற்றில் சமுதாய அமைப்புகளையும் இயக்கங்களையும் எப்படி மதிப்பிட வேண்டும்? என்றும் மாறாத கோட்பாடுகள் அல்லது முன் முடிவுகளுடனோ வரலாற்றை அணுகக் கூடாது. குறிப்பிட்ட சமுதாய அமைப்பும் அதோடு தொடர்புடைய சமுதாய இயக்கமும் தோன்றுவதற்கு காரணமான நிலைமைகளை ஆராய வேண்டும்.
இந்தியாவில் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த சீர்திருத்த வாதிகளை இந்த கண்ணோட்டத்துடன் அணுகலாம். ஆனால் சோவியத் சோசலிச குடியரசுகளின் காலத்திலோ, சீனாவிலோ ஒரு முதலாளித்துவ குடியரசு வேண்டும் என்று சொல்வது பிற்போக்கானதாகும். எதுவுமை நிலைமை, காலம், இடம் இவற்றைப் பொறுத்துதான் இயங்குகின்றன. சோவியத் யூனியனில் ஸ்டாலின் காலத்துக்குப் பிறகும் சீனாவில் மாவோ காலத்திற்கு பிறகும் திரிபுவாதிகள் கம்யூனிசத்தை நோக்கிய சோசலிச போராட்டத்தை கைவிட்டு முதலாளித்துவ அமைப்பை நிறுவியிருக்கிறார்கள்.
நிலப்பிரபுத்தும் நீக்கப்பட்டு முதலாளித்துவம் உருவானது போல முதலாளித்துவம் நீக்கப்பட்டு சோசலிசம் உருவாவதும், அதிலிருந்து கம்யூனிசம் உருவாவதும் சாத்தியமே. சமுதாயத்தில் தற்போது ஆதிக்கம் செலுத்தினாலும் வளர்ச்சி அடையாத எதிர்காலம் இல்லாத பிரிவுகளை ஆதாரமாக கொள்ளக் கூடாது. எந்த பிரிவு வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறதோ, எதிர்காலத்தை உருவாக்குவதாக இருக்கிறதோ அதன் அடிப்படையிலேயே வரலாறு வளர்ச்சி அடையும்.
குவாண்டம் இயற்பியல் பொருட்களின், சிந்தனையின் இயக்கவியல் பற்றிய அதிக பட்ச ஆதாரம். அறிவியலுக்கு அப்பாற்பட்ட பல விஷயங்கள் உலகத்தில் நிறைந்திருக்கின்றன என்று கருத்து முதல்வாதம் சாதிக்கிறது. இயக்கவியல் வழியில் தொடர்ந்து ஆராய்ச்சி செய்தால் இயற்கையின் இயக்கங்களை படிப்படியாக இறுதி வரை புரிந்து கொண்டே போகலாம் என்பது பொருள் முதல் வாதம்.
மின்னல் என்னவென்று புரியாத வரை பிரம்மம், அது மேகங்களுக்கிடையேயான மின் ஊட்டப்பட்ட துகள்களின் இடைவினை என்று தெரிந்த பிறகு அது அறிவு ஆகி விடுகிறது. அலிஜரின் என்ற சாயப் பொருள் ஒரு தாவரத்திலிருந்து கிடைக்கிறது. ஆனால், அதை செயற்கை முறையில் நிலக்கரியிலிருந்தும் தயாரிக்க முடிகிறது. கோப்பர் னிகர் சூரிய மண்டலம் பற்றி சொன்ன அனுமானம் நிரூபிக்கப்படும் வரை வெறும் கருத்தாகவே இருந்தது.
நமது விருப்பத்தின் அடிப்படையிலோ, திறமையின் அடிப்படையிலோ அவை தீர்மானிக்கப்படக் கூடாது. சமுதாயத்தின் தேவைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும். உலகம் அறியப்படக் கூடியது, இயற்கையின் இயக்க விதிகளை நாம் புரிந்து கொள்ள முடியும் என்றால் சமுதாய இயக்க விதிகளும் புரிந்து கொள்ளக் கூடியவையே. அந்த திசையில் முன்னேறுவதுதான் அறிவியல் அணுகுமுறை. சமூக தோற்றங்கள் சிக்கலாக இருந்தாலும் அவற்றையும் இயற்கை அறிவியல்கள் போல வரையறுக்கப்பட்ட கறாரான அறிவியலாக கற்றுக் கொண்டு செயல்பட முடியும்.
வரலாற்றின் வெவ்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு சமுதாயக் கருத்தக்களும், கொள்கைகளும், கண்ணோட்டங்களும் அரசியல் அமைப்புகளும் இருக்கின்றன. அடிமை சமுதாய முறையும், நிலப்பிரபுத்துவ முறையும், முதலாளித்துவ முறையும் வெவ்வேறு வகையானவற்றை கொண்டிருக்கின்றன. அவற்றை விளக்குவதற்கு குறிப்பிட்ட அமைப்புகளின் பண்புகளை வைத்து ஆய்வு செய்யக் கூடாது அவற்றை உருவாக்கிய சமுதாய மாற்றத்தையும் நிலைமைகளையும் கொண்டு விளக்க வேண்டும். ஒரு சமுதாயத்தின் பொருளாயத வாழ்வின் அடிப்படையில்தான் கருத்துக்களும் கண்ணோட்டங்களும் நிறுவனங்களும் உள்ளன.
இப்படி சொல்வதன் மூலம் கருத்துக்களும் கொள்கைகளும், கண்ணோட்டங்களும் நிறுவனங்களும் சமுதாய வாழ்க்கையை பாதிப்பதே இல்லை என்று சொல்ல முடியுமா? இவை எங்கிருந்து தோன்றுகின்றன என்பதைத்தான் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். அவை சமுதாய வாழ்வில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன என்பதை வரலாற்று பொருள் முதல்வாதம் மறுக்கவில்லை. சமூகக் கருத்துக்களிலும் கொள்கைகளிலும் வெவ்வேறு வகைப்பட்டவை உண்டு.
சமுதாயத்தின் பொருளாயத வளர்ச்சியின் தேவைகளை அவை எவ்வளவு சரியாக பிரதிபலிக்கின்றனவோ அவ்வளவுக்களவு அவற்றின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது. புதிய கருத்துக்களும் கொள்கைகளும் எப்போது உருவாகின்றன? சமுதாயத்தின் பொருளாயத வளர்ச்சி புதிய கடமைகளை முன் வைக்கும் போது அவை உருவாகின்றன.
சமுதாயத்தின் பொருளாயத வளர்ச்சியை சரியாய் பிரதிபலிக்கும்படியான ஒரு முற்போக்கான கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருப்பதுதான் மார்க்சிய லெனினியத்தின் வலிமைக்கும் உயிர்த்துடிப்புக்கும் தோற்றுவாய் ஆகும்.
அமெரிக்காவை விட சீனாவின் மக்கள் அடர்த்தி அதிகமாக இருந்தாலும் அமெரிக்கா சமூக வளர்ச்சியில் முன்னணியில் இருக்கிறது. பெல்ஜியம் அமெரிக்காவை விடவும் சோவியத் யூனியனை விடவும் 20 மடங்கு அதிகம் மக்கள் அடர்த்தி கொண்டிருந்தும் அமெரிக்க சமூக அமைப்புக்கோ, சோவியத் யூனியனின் சமூக அமைப்புக்கோ மாறுவதற்கு அதற்கு பல காலம் பிடிக்கும்.
இந்த உற்பத்தி முறைகள்தான் சமூகத்தின் நிறுவனங்களையும் மேல் கட்டுமானத்தையும் தீர்மானிக்கின்றன. மனிதனின் வாழ்க்கை முறை எப்படி இருக்கிறதோ அப்படித்தான் அவனது சிந்தனையும் இருக்கிறது. இது தனி மனிதருக்கும் பொருந்தும், சமூகத்துக்கும் பொருந்தும். சமுதாய வளர்ச்சியின் வரலாறு என்பது உற்பத்தி முறை எப்படி வளர்ந்தது என்பதன் வரலாறுதான்.
மனிதனின் எண்ணங்களையும், கண்ணோட்டங்களையும், கருத்துக்களையும் மட்டும் துருவிப் பார்த்துக் கொண்டிராமல் அந்த குறிப்பிட்ட கால கட்டத்தில் சமுதாயம் எந்த உற்பத்தி முறையைக் கொண்டிருந்ததோ அந்த உற்பத்தி முறையை ஆராய்ந்து பார்க்க வேண்டும். உதாரணமாக சோழர் குலத்தின் வரலாற்றை ஆய்வு செய்யும் போது, இராஜஇராஜ சோழன் தஞ்சையில் பெரிய கோவிலை கட்டினான் என்று படிப்பது வரலாறு ஆகாது, அந்த காலத்தில் நிலவிய சமூக உற்பத்தி உறவுகள், உற்பத்தி சக்திகள் இவற்றில் நிகழ்ந்த மாற்றங்களைப் பற்றி படிப்பதுதான் அறிவியல் பூர்வமான வரலாறு ஆகும். பாட்டாளி வர்க்க கட்சி உற்பத்தியின் வளர்ச்சி விதிகளைப் பற்றியும் சமுதாயத்தின் பொருளாதார வளர்ச்சி விதிகளைப் பற்றியும் அறிவு பெற்றிருக்க வேண்டும்.
ஆனால் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி உற்பத்தி உறவுகளை சார்ந்திருப்பதில்லை. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கேற்ப உற்பத்தி உறவுகள் மாறாமல் நீண்ட காலம் இருக்க முடியாது. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியின் மட்டத்துக்கும் தன்மைக்கும் ஏற்ப உற்பத்தி உறவுகள் முன்னேறி தீர வேண்டியிருக்கிறது. அப்படி உற்பத்தி உறவுகள் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கேற்ப மாறாமல் இருந்தால் உற்பத்தி சக்திகள் அழிக்கும் நிலைமை ஏற்படுத்தப்படும். மேல் கட்டுமானமாக விளங்கும் அரசுகளுக்கிடையே நடக்கும் போர்கள் உற்பத்தி சக்திகள் அழிவதில் போய் முடிகின்றன.
8. கொல்லனின் துருத்தி, மண்பாண்டத் தொழில்