டாக்டர் நார்மன் பெத்யூன்

“டாக்டர் நார்மன் பெத்யூன் கதை ஒரு சர்வதேசிய போராளியின் உயிர்ப்பும் அர்ப்பணிப்பும்”

நார்மன் பெத்யூன் கனடாவின் புகழ்பெற்ற நெஞ்சக அறுவைச் சிகிச்சை மருத்துவராகத் திகழ்ந்தார். அது மட்டுமல்லாமல், அவர் ஓர் ஓவியர், கவிஞர், ராணுவ வீரர், விமர்சகர், ஆசிரியர், விரிவுரையாளர், மருத்துவ எழுத்தாளர் மற்றும் கோட்பாட்டாளராகவும் விளங்கினார். அவர் 1930களில் கொள்கைப்பிடிப்புள்ள கம்யூனிஸ்டாக உருவெடுத்தார். அது அவரை ஸ்பெயின் மற்றும் சீன யுத்தமுனைக்கே இட்டுசென்றது.
..
1937 ஜூலையில் சீன- ஜப்பான் யுத்தம் தொடங்கிய ஆறு மாத காலத்தில் அவர் சீனாவை வந்தடைந்தார். அப்பொழுது வடக்கு சீனாவை , ஜப்பான் ஆக்கிரமித்திருந்தது. பெத்யூன் யெனானை அடைந்து மா சே துங்கைச் சந்தித்தார். ஸ்பெயின் நாட்டு யுத்தத்தில் கிடைத்த அனுபவங்களை அவர் மாவோவிடம் எடுத்துக்கூறினார். மாவோ, உடனடியாக ஒரு நடமாடும் அறுவைச்சிகிச்சை அமைப்பை உருவாக்கும்படி பெத்யூனைக் கேட்டுக் கொண்டார். அது முதல் வடக்கு சீனாவின் உட்பகுதியில் அமைந்த யுத்தமையத்தில் மையத்திற்கே சென்றார்.
..
அங்கே அவர் இரண்டு வருடங்கள் பணியாற்றினார். சில நேரங்களில் நாற்பது மணி நேரம் கூடத் தொடர்ந்து தூக்கம் இல்லாமல் அறுவைச்சிகிச்சை செய்தார். இந்த அசாதாரணமான அர்ப்பணிப்புத் திறனால் அவருடைய புகழ் சீனா முழுவதும் சென்று அடைந்தது.
..
எப்படிப்பட்ட புகழினை பெத்யூன் அவர்கள் பெற்று இருந்தார்கள் என்பதை அறிய படைவீரர்கள் போரிடும் போது எழுப்பிய முழக்கங்களே சாட்சி ….
..
தாக்குங்கள் !நமது காயப்பட்டவர்களைப் பராமரிக்கப் பெத்யூன் நம்மூடன் இருக்கிறார்!
தாக்குங்கள் ! பெத்யூன் நம்மூடன் இருக்கிறார்!
தாக்குங்கள் ! பெத்யூன் நம்மூடன் இருக்கிறார்!
..
பெத்யூன் காயப்பட்டவர்களை கவனித்தது, பெத்யூனை பாதுகாப்பாளர்கள் கவனித்தது பற்றி அறிய ஒரு சம்பவம்
..
சூ குங் கன் என்ற கிராமத்தில் எதிரிகள் நெருங்கிவிட்ட சூழ்நிலையில் அறுவைச்சிகிச்சை மேற்கொண்டு இருந்த பெத்யூனை தாங்கள் கிளம்புங்கள் மற்றவர்கள் மீதி காயம்பட்டவர்களை பார்த்துக்கொள்வார்கள் என்று பாதுகாப்பாளர் கிங் எடுத்துக்கூறினார். அதனை எப்பவும் போலவே அலட்சியப்படுத்திவிட்டு பெத்யூன் அறுவைச்சிகிச்சை மேற்கொண்டு இருக்கையில் அவர் பின்னாலே கிங் நின்று கொண்டு இருந்தார். இதனை பின்னர் பார்த்து “இங்கே ஏன் காத்துக் கொண்டு இருக்கிறீர்கள்?” என்று பெத்யூன் கேட்டார்.
..
அப்போது கிங் “பாய் சூ என் தை பூ! (நார்மன் பெத்யூன் மருத்துவர்)” என்று துயருடன் அழைத்தார். “நான் தான் இங்கு உங்கள் பாதுகாப்புக்குப் பொறுப்பு, உங்களை ஏதாவது குண்டு தாக்கினால், நான் உங்களுக்குப் பின் நின்ரால், நானும் உங்களுடன் சேர்த்து அடித்துச் செல்லப்படுவேன். அப்போது கூட உங்களைச் சீக்கிரமே இந்த இடத்தை விட்டு அகலும்படி வற்புறுத்திச் சொல்லவில்லை என்று குற்றம் என் மீது சாட்டப்பட்டாலும், ஒருவரும் நான் மட்டும் பாதுகாப்பான இடத்தில் நின்று கொண்டு, உங்களை ஆபத்தில் சிக்க வைத்ததாகச் சொல்ல முடியாது அல்லவா?”
..
இந்த தாக்குதல் இடத்தில் மட்டும் 69-மணி நேரத்தில் 115 அறுவைச்சிகிச்சைகள் பெத்யூன் செய்து முடித்தார்.
..
இதே போல ஒரு முறை அறுவைச்சிகிச்சை செய்துகொண்டுருந்த இடத்திலிருந்து பத்து நிமிடத் தொலைவில் ஜப்பான் படை முன்னேறிக்கொண்டிருந்த ஒர் அழுத்தமான நிலையில் அறுவைச்சிகிச்சைக் கத்தி வெட்டியதைத் தொடர்ந்து செப்டிசீனியாவால் பாதிக்கப்பட்டு பெத்யூன் உயிர்நீத்தார்.
..
முதன் முறையாக மருத்துவத்தையும், நவீன துப்புரவு முறையையும் எண்ணற்ற சீனக் கிராமங்களுக்குக் கொண்டு வந்து, அதைப் பல குகைகளிலும், பல மருத்துவமனைகளிலும் நிர்மாணித்ததுடன் பல மருத்துவப் பள்ளிகளையும் நிறுவியவர் பெத்யூன். ஆகவே சீன மக்கள் அவரது இறப்பைப் பெரும் துக்கத்துடன் நினைவு கூர்ந்தார்கள்.
..
“எந்த மனிதனின் இறப்பைக் காட்டிலும் அவரது இறப்பிற்காக நாங்கள் அதிகம் இரங்குகிறோம்.” என்று கூறிய மா சே துங் தனது நாட்டு மக்களுக்குச் சொன்னார்:

“சாதராண மனிதர்கள் மேல் பெத்யூனுக்கு இருந்த கரிசனம் என்பது நாம் அவைவரும் அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடமாகும். நாம் அவரது இறப்பை நினைவு கூர்வது என்பது, அவரது ஆளுமை நம் மேல் எவ்வளவு ஆழமாகப் பதித்துள்ளது என்பதைக் காட்டுவதாகும். நாம் அனைவரும் அவரது சுயநலமற்ற உத்வேகத்தை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். மக்களுக்குப் பயனுள்ள தனிமனிதர்களாய் நாம் ஆவதற்கு இது ஒரு தொடக்கப்புள்ளியாக இருக்க வேண்டும். ஒரு தனி மனிதனுக்குப் பெரும் திறன் அல்லது குறைந்த திறன் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஒருவர் மக்களது நன்மைக்காகத் தனது சொந்தச் சுயநலத்தை விட்டுக் கொடுக்கத் தயாராக இருந்தால், அவர்தான் முக்கியமான மனிதராகவும், நேர்மையாளராகவும், நல்லொழுக்கம் மிக்கவராகவும் கருதப்படுவார்.”

டாக்டர் நார்மன் பெத்யூன் கதை  என்ற தலைப்பில்  சிட்னி கார்டன், டெட் ஆலென் எழுதி தமிழில் சொ. பிரபாகரன் மொழிபெயர்ப்பில்
சவுத் விஷன் வெளியிடாக வந்த புத்தகம் இவரை பற்றி மேலும் தெரிந்து கொள்ள உதவும்.

கனடாவின் நெஞ்சுக்கூட்டு  அறுவை சிகிச்சை முன்னோடி மருத்துவர்களில் ஒருவர் டாக்டர். நார்மன் பெத்யூன். மருத்துவராக மட்டுமல்லாது சிறந்த ஓவியக் கலைஞராகவும், அறுவைசிகிச்சைக் கருவிகளை வடிவமைத்தவராகவும் மிளிர்ந்தவர். ஸ்பெயின் போர்முனையிலும் சீனப் போர்முனையிலும் தன்னலம் கருதாது அச்சமின்றி பணிபுரிந்தவர். அவரது வாழ்க்கையையும், சிந்தனைகளையும் தொகுத்து வரலாற்று நூல் ஒன்றை ஒரு அற்புதமான நாவலாக எளிமையாகப் புரிந்துகொள்ளும் வகையில் எழுதியுள்ளனர்.

இது ஒரு மொழிபெயர்ப்பு நூல் என்பதை உணரமுடியாத வண்ணம் அழகுத் தமிழில் சொ. பிரபாகரன் அவர்கள் மொழிபெயர்துள்ளது நமக்கு கிடைத்தப் பரிசு.

பதிப்பகத்தார்கள் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி அடிக்குறிப்புகளில் ஏற்பட்டுள்ள பக்க எண் மாற்றங்களைத் தவிர்த்திருந்தால் படிப்பாளிக்கு சில சிரமங்களைத் தவிர்த்திருக்கலாம்.

நூலிலிருந்து சில வரிகள்…..

மருத்துவர்கள் மக்களது ஆரோக்கியத்தை மேன்மைபடுத்துவதற்கு தங்களை அர்பணித்துக் கொள்ளவேண்டும். இந்த கருதுகோள்படி எத்தனை மருத்துவர்கள் இங்கே மருத்துவம் செய்கிறார்கள்? அப்படி இருப்பதற்கு அவர்களைக் குறைகூற முடியுமோ? முடியாது. அப்படிச் சொல்வதும் தப்பு. நமது நாட்டில் அனைத்து இடங்களிலும் நீர் வினியோகம், கழிவுச்சாக்கடைக் குழாய்கள், சுகாதாரம், மின்சாரம் மற்றும் மற்ற சேவைகளை எல்லாம் கேள்வி முறையில்லாலமல் முறையாக தரப்படவேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். ஆனால் அதை அடிப்படையான மருத்துவச் சேவையில் ஏன் சேர்த்துக் கொள்ளவில்லை. ஆமாம் சேர்த்துக் கொள்ளவில்லை. ஆனால் ஏன் அவைகளை சேர்த்துக்கொள்ளக் கூடாது? ஆரோக்கிய வாழ்க்கை வாழ்வதற்கான உரிமை பற்றி எங்கும் பேசப்படுவதில்லை. இன்னும் ஒரு கிலோ சர்க்கரையைத் தெருவின் மூலையில் உள்ள மளிகைக் கடையில் வாங்குவது போல்தான், இந்த மருத்துவச் சேவையையும் வாங்க வேண்டியுள்ளது. அதற்கு டாலர்களிலும் செண்டுகளிலும் பணம் கொடுக்க வேண்டியுள்ளது. தையல் கடையைப் போல அற்பத்தனமாகவும், திருப்தியுடனும் நாம் மருத்துவம் செய்வதற்குக் கடைகளைத் திறந்துக் காத்திருக்கிறோம். தையல்காரர் எப்படி ஒரு கோட்டுக்கு ஒட்டுப் போடுகிறாரோ, அப்படி மருத்துவர்கள் கையிலோ அல்லது காலிலோ ஒட்டுப் போடுகிறார்கள். நாம் மருத்துவத்தைச் செய்யவில்லை. அதற்குப் பதிலாக பணத்தைச் சேர்பதற்கான வியாபாரத்தை செய்கிறோம். தற்போது எது தேவை என்பதை நான் சொல்கிறேன். புதிய மருத்துவக் கொள்கை, உலக ஆரோக்கியப் பாதுகாப்புக்காகப் புதிய கொள்கை, மருத்துவர்கள் பணிபுரிவதற்கான பதிய கொள்கை…



(ரஷ்யாவில் நடந்த பிசியாலஜிகல் (Physiology) மாநாட்டில் கலந்துகொண்டபோது}

…..தனது விசாரணைய்யைத் தொடரும்போது அவரது உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. ஓய்வு வீடுகள், நேரடியான சானடேரியம் போன்றவற்றில் எங்குப் பார்த்தாலும் அவைகள்தான் அவர் பார்த்ததிலேயே மிகவும் ஆடம்பரமாக இருந்தது அரசு கொடுக்கும் சிகிச்சையில் தொழிற்சாலையிலுள்ள தொழிலாளர்களுக்கு முன்னுரிமை தரப்படுகிறது. ஆனால் இங்கே அவர் நாட்டிலோ எல்லாம் அப்படியே தலைகீழாக இருந்தது. இங்கே மருத்துவமனையிலும், சானடேரியத்திலும் அனைத்தும் கட்டணம் இல்லாமல் மருத்துவர் பார்க்கப் பட்டது. அதை அவர்கள் ஏழைகளுக்கு செய்யும் தர்மகாரியமாகச் செய்யவில்லை. மாறாக நோய்யுற்றவர்கள் வைத்தியம் பெறுவது என்பது அவர்களது உரிமையாக அங்கே நிலைநாட்டப்பட்டிருந்தது. சில நோய்களுக்கு தடுப்பு நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என் அதிர்காரபூர்வமாக அங்கு அறிவிக்கப் பட்டிருந்தது. அதில் குழந்தைகளுக்கு இளம்  வயதிலேயே டியூபர்குலின் சோதனை எடுத்துக் கொள்வதும் அவசியம் என ஆக்கப்பட்டிருந்து. இதைத்தான் அவர் தனது நாட்டில் செய்யவேண்டும் என ரொம்பநாளாக கத்திக் கொண்டிருக்கிறார்….

….. சமத்துவப்பட்ட மருத்துவமும், தனியார் மருத்துவம் செய்வதை தடுப்பதும் அல்லது கட்டுப்படுத்துவதும் மட்டுமே இந்தப் பிரச்சனைக்கான யதார்த்தமான தீர்வாய் இருக்க முடியும். நாம் இந்தக் கொள்ளை இலாபத்தை தனியார் பொருளாதார இலாபத்தை மருத்துவத்திலிருந்து நீக்குவோம். கொள்ளயடிக்கும் பேரசையுணன் செயற்படும் தனி நபர்களிடம் இருந்து இந்தப் புனிதமான மருத்துவத் தொழிலைக் காப்பாற்றுவோம். நமது சகமனிதனின் கடுந்துயரை மூலதனமாகக் கொண்டு நம்மை பணக்காரர்களாக்கிக் கொள்ளும் இந்தச் செயல் அசிங்கமானது என்று புரிய வைப்போம். நம்மைத் தற்போது சுரண்டுவது போல் தொடர்ந்து இந்த அரசியல்வாதிகள் சுரண்டாமல் இருக்க நாமே அமைப்புரீதியாக திரள்வேம்…..

தோழர் செல்வா அவர்கள் நார்மன் குறித்து அறிமுக காணொளி 👇

நார்மன் குறித்து 1977ல் எடுக்கப்பட்ட திரைப்படம் பார்க்க 👇 https://youtu.be/9zi9ioWR-s8?si=8ZL5qGI_FMm58qJv

Leave a Reply