














புதுச்சேரி அழகு கலை ஒப்பனை மற்றும் சிகையலங்கார கலைஞர்கள் நலச்சங்கம் (சி.ஐ.டி.யு) சார்பில் ‘போதையில்லா புதுச்சேரி… பெருமைமிகு புதுச்சேரி…’ என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியின் தொகுப்பு:
* நாள்: மார்ச் 7, வெள்ளி மாலை
* இடம்: கம்பன் கலையரங்கம், புதுச்சேரி
* தலைமை: சங்கத்தின் செயலாளர் ஜானகி
* வழிநடத்துதல்: சி.ஐ.டி.யு மாநிலத் தலைவர் பிரபராஜ்.
நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள்:
* தந்தை பெரியார் சிலை முன்பு போதை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி.
* பெண்கள் இருசக்கர வாகன பேரணி.
* பள்ளி, கல்லூரி மாணவர்களின் போதையில்லா புதுச்சேரி ஓவியக் கண்காட்சி.
* ஒப்பனைக் கலைஞர்களின் மாநில வாரியான கலாச்சார உடை அலங்கார ராம்ப் வாக்.
* போதையில்லா புதுச்சேரி சிறப்பு கருத்தரங்கம்.
* போதையில்லா புதுச்சேரி சிறப்பு பாடல் வெளியீடு.
* போதையினால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்த மருத்துவர் மாருதி ராவ் உரை.
* போதையில்லா புதுச்சேரி சிறப்பு நாடகம்.
* சங்கத்தின் இலச்சினை வெளியீடு.
* வரவேற்பு நடனம், சிறப்பு நாடகம், பாடல் வெளியீடு, கருத்தரங்கம்.
* போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசளிப்பு.
சிறப்பு நிகழ்வுகள்:
* போதை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை சி.ஐ.டி.யு மூத்த தலைவர் கே.முருகன் தொடங்கி வைத்தார்.
* பெண்கள் இருசக்கர வாகன பேரணியை சி.ஐ.டி.யு மூத்த நிர்வாகி ஜி.ராமசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
* ஓவிய கண்காட்சியை சி.ஐ.டி.யு துணைத் தலைவர் என்.கொளஞ்சியப்பன் தொடங்கி வைத்தார்.
* கருத்தரங்கத்தை சிஐடியு மாநில பொதுச் செயலாளர் தோழர்.சீனிவாசன் தொடங்கி வைத்தார்.
* சிறப்பு பாடலினை ஜனநாயக மாதர் சங்க அ.இ.து.தலைவர் தோழர்.சுதா சுந்தரராமன் வெளியிட்டார்.
* ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ் மாநில தலைவர் தோழர்.சுகந்தி கருத்துரை வழங்கினார்.
* நாடகத்தினை தோழர் வந்தனா மற்றும் அனைத்திந்திய ஜனநாயகம் மாதர் சங்கத்தின் நகர கமிட்டி தோழர்கள் அரங்கேற்றினார்.
* ஒப்பனை போட்டிக்கு சென்னை சேர்ந்த மேக் அப் ஆர்ட்டிஸ்ட் விஜய் STYLISH திலோத்தமா நடுவராக பங்கேற்றார்.
* சிறந்த குறும்படத்திற்கான ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது.
பங்கேற்பாளர்கள்:
* பள்ளி, கல்லூரி மாணவர்கள்
* பொதுமக்கள்
* அழகு கலை நிபுணர்கள்
ஒருங்கிணைப்பாளர்கள்:
* நிர்வாகிகள் பிரவீனா, பவானி, லதா, சுப்ரியா, கலையரசி, வி.ராஜலட்சுமி, எம்.ராஜலட்சுமி, ஆனந்த்.
* மாநில குழு உறுப்பினர்கள் ஷண்முகம், அமுதவல்லி, காசியம்மாள், மகேஸ்வரி, சரஸ்வதி, கலைவாணி, கவிதா, கே.புவனேஸ்வரி, எம்.புவனேஸ்வரி, சரண்யா, லலிதா, ஐ.லதா, அகிலா தோழர் வந்தனா.
நிகழ்ச்சியில் அரங்கம் முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. வருகை தந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.