இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய சைக்கிள் பிரச்சார பயணம் புதுச்சேரி, சென்னை, கன்னியாக்குமாரி, கோவை ஆகிய நான்கு மையத்தில் இருந்து, ஏப்ரல் 21 ல் துவங்கி மே 1 வரை நடைபெறுகிறது.
புதுச்சேரி
புதுச்சேரி இலாஸ்பேட்டை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கு மாலை அணிவித்து துவங்கிய சைக்கிள் பிரச்சார பயணகுழுவிற்கு, இந்திய ஜனநாய வாலிபர் சங்கத்தின் தமிழ்மாநில துணைச்செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் தலைமை தாங்கினார். தமிழ்மாநில துணைத்தலைவர் கே.பி.ஜோதிபாசு, மாநில செயற்குழு உறுப்பினர் டி.கிருஷ்ணன், புதுச்சேரி பிரதேச தலைவர் பாஸ்கர்,செயலாளர் ஆனந்த், மாநிலக்குழு உறுப்பினர் லீலாவதி, நிர்வாகிகள் சஞ்சய்சேகரன், ரஞ்சித்குமார், ராஜ்குமார் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட வாலிபர்கள் பிரச்சாரா பயணத்தில் பங்கேற்றுள்ளனர். தொடர்ந்து இப்பயணக்குழு புதுச்சேரி நகரம், முருங்கப்பாக்கம், கரிகலாம்பாக்கம், பாகூர் ஆகிய பகுதிகளில் சைக்கிள் பிரச்சாரம் நடைபெற்றது.
நாகை மாலி,எம்.எல்.ஏ.,
இளைஞர்களுக்கு வேலைகொடு என்ற முழக்கத்தை முன்வைத்து நடைபெறும் சைக்கிள் பிரச்சார பயணக்குழுவை துவக்கி வைக்கும் பொதுக்கூட்டம் புதன்கிழமை இரவு (ஏப்-20) நடைபெற்றது. புதுச்சேரி சுதேசி பஞ்சாலை எதிரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு டிஒய்எப்ஐ பிரதேச தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். பயணக்குழுவை துவக்கி வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு சட்டமன்ற கட்சி தலைவர் நாகை மாலி,எம்.எல்.ஏ., சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.
அவர் பேசியதாவது
உலகத்திலேயே அதிக இளைஞர்கள் உள்ள நாடான நம் நாட்டில் இளைஞர்களின் சக்தியை இன்றைய ஆட்சியாளர்களால் சீரழிக்கப்படுகிறது. எனவே தான் இளைஞர்களுக்கு வேலைகொடு என்ற சைக்கிள் பிரச்சாரத்தை இந்திய ஜனநாய வாலிபர் சங்கம் துவக்கியுள்ளது. இன்றைக்கு பிற்போக்குதனமான அரசு மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முகமூடியாக மோடி உள்ளார். மோழி வாரி மாநிலங்களை ஏற்று கொள்ளதாவர்கள்தன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு. ஒரே மொழி,ஓரே நாடு என்ற ஒற்றை கலாச்சாரம் இன்றைக்கு நம் மீது தினிக்கபடுகிறது.
திட்டகமிஷனை கலைத்தவர்கள், இந்திய விவசாயத்தை கார்ப்பரேட் கையில் கொடுப்பதற்கான வேலைதான் வேளான் சட்டம். எனவே தான் அதை எதிர்த்து ஒட்டு மொத்த விவசாயிகளும் போராடினார்கள். 700 க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தின் போது இறந்த போதும், போராட்டத்தை கைவிடவில்லை.இருதியில் விவசாயிகளுக்கு எதிரான வேளான் சட்டம் திரும்பபெறப்படும் என்ற அறிவிப்பை மோடி வெளியிட்டார்.
ஜவஹர்லால் நேரு ஒரு முதலாலித்துவ குடும்பத்தை சேர்ந்தராக இருந்தாலும் பொதுத்துறை நிறுவனங்களை தேச உடமையாக்கியவர். அப்படிப்பட்ட தேசத்தின் சொத்தான பொதுத்துறை நிறுவனங்களை இன்றைக்கு கார்ப்பரேட் கையில் கொடுக்கப்படுகிறது. பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கான இடஒதுக்கீடு பெற்று வந்த நிலை இருந்தது. தற்போது அதுவும் மோடி அரசின் கொள்கைகளால் பரிக்கப்பட்டுள்ளது.
இப்படி இந்திய நாட்டையே கார்ப்ரேட் கையில் கொடுக்கும் மோடி அரசை கண்டித்தும், பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும். இளைஞர்களுக்கு வேலை கொடு என்ற முழக்கத்தை முன்வைத்து இளைஞர்கள் இந்த இயக்கத்தை துவக்கியுள்ளனர். விடுதலை போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த புதுச்சேரியில் இருந்து துவங்கியுள்ள இயக்கம் இந்தியா முழுவதும் பரவசெய்யும் என்றார்.
முன்னதாக மேடையில் நாகை மாலி,எம்.எல்.ஏ., சங்கத்தின் சங்கத்தின் தமிழ்மாநில துணைச்செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் தலைமையிலான சைக்கிள் பயணக்குழுவை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
சைக்கிள் பிரச்சார பயணக்குழு தலைவரும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்மாநில துணைச்செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் பயணக்குழுவிற்கு தலைமை தாங்கி பேசியதாவது.
இன்றைக்கு 150 கோடி மக்களின் வளத்திற்கு பயன்படுத்தக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களை ஆட்சியாளர்கள் பயன்படுத்த முன்வரவில்லை. நாட்டின் வளங்களையும்,பொதுத்துறை நிறுவனங்களையும் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்த்து வருகிறார்கள். ஆண்டுக்கு 2 கோடிபேருக்கு வேலை கொடுப்போம் என்று வெத்து அறிவிப்பு செய்த பிரதமர் மோடி, இருக்கின்ற வேலைவாய்ப்புகளை பரித்துள்ளார். பொதுத்துறை நிறுவனங்களை கூவி கூவி அதானிக்கும், அம்பானிக்கும் விற்கிறார்கள். வேலை கொடு என்று இளைஞர்கள் பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்தால், பகோடா விற்று பிழைத்து கொள்ளுங்கள் என்று ஏளனம் செய்கிறார். பிரதமர் மோடியின் முகத்திரை நாட்டு மக்களுக்கு அம்பலபடுத்தவும், பொதுத்துறைகளை பாதுகாக்க வேண்டும். இளைஞர்களுக்கு வேலை கொடு என்ற முழக்கத்தை முன்வைத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இந்த சைக்கிள் பிரச்சார பயணத்தை துவக்கியுள்ளது. 3000 கிலோ மீட்டர் நடைபெறும் பயணம் இருதியாக மே 1 ஆம் தேதி திருச்சியில் மாபெரும் பொதுக்கூட்டத்துடன் பயணம் முடிவடைகிறது என்றார்.