புதுச்சேரி மாநிலத்தில் தொடர்ந்து 14 ஆண்டுகளாக காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவருகிறது. தற்போது தி.மு.க ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து வருகிறது.
மாநில அரசின் செயல்பாடு காரணமாக காமராஜர் கல்வி உதவி; நிதி நிறுத்தப்பட்டுள்ளது. ரேஷனில் 6 பொருட்கள் மானிய விலையில் வழங்குவது கைவிடப்பட்டுள்ளது. ஊனமுற்றோற்கான, இலவச அரிசி ஓராண்டாக வழங்கப்படவில்லை. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்க வேண்டிய சீறுடை பல பள்ளிகளில் வழங்கப்படவிலை. இப்படியாக சமுக நலத் திட்டங்கள் சில நிறுத்தப்படுவதும், வெட்டி சுருக்குவதும் காங்கிரஸ் ஆட்சியில் நடக்கிறது. மேலும் சமுக நலத்திட்டங்கள் பாரபட்சமாகவும் வழங்கப்படுகிறது.
மின்சாரா வெட்டு, விலைவாசி உயர்வு, வேலைநியமன முறைகேடுகள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர் விரோத கொள்கை, வீட்டுமனை உள்ளிட்டு அரசு நலத்திட்டங்கள் பரபட்சமாக வழங்குவது, கல்வி, பொதுசுகாதாரம், போக்குவரத்து, சாலை, குடிநீர், கழிநீர்வடிகால் போன்ற மக்களின் அடிப்படை பிரச்சனைகளில் அரசின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளன. மக்களின் கருத்து என்ன ? அரசு நலத்திட்டங்கள் முறையாக மக்களுக்கு பாராபட்சமின்றி சென்று சேர்கிறதா ? கடுமையான விலைவாசி உயர்விற்கு எதிரான மக்களின் எதிர்வினைகள் என்ன ? அவர்களின் அடிப்படை கோரிக்கைகள் என்ன ? போன்ற கேள்விகளை மக்களிடம் சந்தித்து ஒரு முழுமையான கள ஆய்வு ஒன்றை மக்கள் கோரிக்கை மாநாட்டை முன்னிட்டு நடத்துவது என்ற அடிப்படையில் முழுக்க முழுக்க மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் மக்களை மட்டுமே சந்தித்து இந்த ஆய்வு செய்யப்பட்டது குறிப்பிடதக்கது. முதல் கட்டமாக 4 தொகுதிகளில் ஒரு தொகுதியில் 40 வீடுகள் இரண்டு கிராமங்கள் என்ற அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பங்கு பெற்ற குடும்பங்கள் 160
மொத்த கேள்விகள்-20
தொகுதிகள்: 1.லாஸ்பேட்டை 2.முத்தியால்பேட்டை 3.திருபுவனை 4.பாகூர்
கேள்விகள்
1. உங்களுக்கு கிடைக்கும் அரசு இலவச திட்டங்கள்
என்ற கேள்விக்கு இலவச அரிசி திட்டம் 67 % பேர் பெறுவதாகவும் அதற்கு அடுத்தப்படியாக இலவச கேஸ் திட்டம்: 43 % பேர் பெறுவதாகவும் இலவச வீட்டுலோன் வெறும் 4 % இலவச குடும்பங்கள் மட்டுமே பெற்று உள்ளது கவனிக்கதக்கது காரணம் பெறும் பாலும் இந்த பகுதி குடும்பங்கள் வாடகையிலும் பொறம்போக்கு இடங்களிலும்,பெரும்பாலும் கூட்டுப்பட்டா இருப்பதும், காரணமாக இருக்கின்றன.
2. மேற்கண்ட திட்டங்கள் பெற எவ்வளவு செலவு செய்தீர்கள் எப்படி பெற்றீர்கள்
என்ற கேள்விக்கு அலைந்து திரிந்தால் கிடைக்கிறது என்று 57% குடும்பங்களும். அரசியல் ஆதாயத்திற்கு கிடைக்கிறது என்று 15% குடும்பங்களும், பணம் கொடுத்தால் கிடைக்கிறது என்று 13 % குடும்பங்களும், விடுதேடி வருகிறது என்று 10 % குடும்பங்களும் தெரிவித்துள்ளன.
3. உங்கள் பிள்களுக்கு படித்தவுடன் வேலை கிடைக்கிறதா?
என்ற கேள்விக்கு இல்லை என்று 86 % குடும்பங்களும், ஆம் என்று 4 % குடும்பங்களும்
4. அதிகரித்துவரும் விலைவாசி உயர்வு உங்களை பாதிக்கிறதா?
மிக மோசமாக பாதிக்கிறது என்று 87% இல்லை என்று 3%
5. விலைவாசி உயர்வுக்கு காரணம் என்ன?
ஆளும் அரசாங்கம் தான் என்று 83 %
பற்றாக்குறை/வறட்சி 7 %
வியாபாரிகள் 9 %
6. விலைவாசி உயர்வை தடுக்க அரசு செய்ய வேண்டியது என்ன?
பொது விநியோக திட்டத்தை பலப்படுத்துவது 45 %
பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது 30 %
ஊக வணிகத்தை தடை செய்யவேண்டும் 25 %
7. விலைவாசி உயர்வு பாதிப்பை எவ்வாறு சமாளிக்கிறீர்கள்
மலிவான உணவு பொருட்கள் வாங்குகிறோம் 40 %
ஆடம்பர செலவுகள் குறைத்து விட்டோம் 32 %
பணம் சேமிப்பதை நிறுத்தி விட்டோம் 32 %
சாப்பாட்டு அவைகுறைத்து விட்டோம் 39 %
ஒருவேளை உணவை குறைத்துவிட்டோம் 15 %
கேபிள் டி.வி இணைப்பை துண்டித்து விட்டோம் 8 %
8. விலைவாசி உயர்வை அரசால் கட்டுப்படுத்த முடியுமா ?
முடியும் என்று 92%
முடியாது 8%
9.பொதுவினியோக முறையில் கொடுக்கும் இலவச அரிசி தரமானதாக உள்ளதா?
ஆம் 10%
இல்லை 90%
10. எந்த அரசியல் கட்சிகள் விலைவாசி உயர்வுக்கு எதிராக உண்மையாக போராடுகின்றன.
கம்யூனிஸ்டு சிபிஎம் 73%
காங்கிரஸ் 13 %
திமுக 3%
அதிமுக 2%
பாமக 2%
விசிக 1%
இதர 6 %