கொடுங்கோல் ஆட்சி தொடர்கிறது

1975 ஜூன் 25ஆம் தேதியான இன்றுதான் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு, பின்னர் அது 19 மாதங்கள் வரை நீடித்தது. இன்று அதன் 47ஆம் ஆண்டுதினமாகும். அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்டது சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிகவும் மோசமான (Emergency) இருண்ட அத்தியாயமாகும். 1971ஆம் ஆண்டு அபரிமிதமான பெரும்பான்மையுடன் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த இந்திரா காந்தி மிக விரைவிலேயே மக்களின் அதிருப்திக்கு ஆளானார். அது குஜராத்தில் நவ நிர்மாண் இயக்கமாகவும் மற்றும் நாடு முழுதும் ஜேபி இயக்கமாகவும் பல்வேறு வடிவங்களில் வெடித்துக் கிளம்பியது.

இக்காலத்தில்தான் 17 லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் 1974 மே ரயில்வே வேலை நிறுத்தப் போராட்டமும் நடைபெற்றது. இந்திரா காந்தி அரசாங்கமும், காங்கிரஸ் கட்சியும் அதிகரித்துவரும் மக்களின் எதிர்ப்பினை ஒடுக்குமுறை மூலம் சமாளிக்க முயன்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இதர இடதுசாரி சக்திகளுக்கு எதிராக மேற்கு வங்கத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட அரைப் பாசிச அராஜகத்தின் விளைவாக இந்திராகாந்தியின் “முற்போக்கு முகமூடி’’ ஏற்கனவே கிழிந்து, அவரது சுயரூபம் வெளி உலகத்திற்குத் தெரியத் துவங்கிவிட்டது. அவசரநிலைப் பிறப்பிக்கப்பட்ட தற்கான உடனடிக்காரணம்,

அரசாங்கத்திற்கு ஜேபி இயக்கம் பிரதிநிதித் துவப்படுத்திய எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு அதிகரித்துக் கொண்டிருந்ததும், மக்களவைக்கு இந்திராகாந்தி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்ப ளித்ததுமாகும். சுற்றிவளைக்கப்பட்டு, மூலைக்குத் தள்ளப்பட்டதாக உணர்ந்த இந்திரா காந்தி உள்நாட்டு அவசர நிலையைத் திணிப்பதன் மூலம் இதனை முறியடித்திடத் தீர்மானித்தார். அவசரநிலைப் பிரகடனம் செய்யப் பட்டதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தலைவர்களும் முன்னணி ஊழியர்களும் தடுப்புக் காவலின் கீழ் கைது செய்யப்பட்டார்கள், சிவில் உரிமைகள் நசுக்கப்பட்டன. பத்திரிகைகள் தணிக்கை செய்யப்பட்டன. அரசாங்கத்தை விமர்சிக்கும் அனைத்து அரசியல் நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டன.

`மிசா’ என்கிற உள்நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம் என்பதன் கீழ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றுக்கணக்கான தலைவர்களும், முன்னணி ஊழியர்களும் கைது செய்யப்பட்டார்கள். இந்திரா காந்திக்குப் பிரதமராகத் தொடர்வதற்கு ஏற்பட்ட ஆபத்து இத்தகைய கொடூரமான நடவடிக்கையை எடுப்பதற்கு உடனடிக் காரணமாக இருந்த அதே சமயத்தில், இதை மட்டுமே காரணம் என்று கருதினோமானால் அது பிழையாகும். எதேச்சதிகாரத்தை நோக்கிய பாதையில் அவசர நிலை உச்சகட்ட நடவடிக்கையாகும்.

ஆளும்கட்சி எதிர்கொண்ட சவால்களிலிருந்து அதுமீள்வதற்கு வழிதெரியாமல் விழிபிதுங்கிக் கொண்டிருந்தது. 1967 பொதுத்தேர்தலுக்குப் பின்னர் ஒரு கட்சி ஆதிக்கம் வீழ்ச்சியடையத் தொடங்கியதை அடுத்து, அரசியல் ஸ்திரமின்மை அதிகரித்துக் கொண்டிருந்தது. இவை அனைத்தும் முதலாளித்துவ ஜனநாயகத்தின் மீதே தாக்குதலைத் தொடுக்கக்கூடிய அளவிற்குப் பங்களிப்பினைச் செலுத்தின. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1972இல் நடத்திய 9ஆவது அகில இந்தியமாநாட்டில்தான் முதன்முதலாக இத்தகைய ஒரு கட்சி எதேச்சதிகார ஆபத் துக்கு எதிராக எச்சரித்தது. இவ்வாறு எச்சரித்த முதல் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிதான். அவசரநிலை, ஆழமாகியிருந்த நெருக்கடியைத் தீர்த்திட மேலும் எதேச்சதி காரமான முறையில் செல்வதற்காக அரசமைப்புச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்தது. அவசரநிலைக் காலத்தில் நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட அரசமைப்புச்சட்ட 42 ஆவது திருத்தமானது அரசாங்கம் நீதித்துறை மற்றும் நாடாளுமன் றத்திற்கு இடையிலான அதிகாரவரம் பெல்லையை மாற்றுவதற்கு வகை செய்தது. எடுத்துக்காட்டாக, இதில் ஒரு திருத்தமானது, நாடாளுமன்றத்தில் திருத்தப்படும் அரசமைப்புச் சட்டத் திருத்தம் எதையும் நீதிமன்றம் மறு ஆய்வு செய்ய முடியாது என்பதாகும்.

அரசியல் அமைப்பு முறையில் எதேச்சதிகார அம்சங்களை அறிமுகப்படுத்திட அரசுத்தரப்பில் மேற்கொள்ளப் பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்தன. ஏனெனில், மக்கள் அவசர நிலையை நிராகரித்தனர், ஜனநாயகத்தின் மீதான தாக்குதலைச் சகித்துக்கொண்டு அதனுடன் இணைந்துசெல்ல மறுத்தனர். அவசரநிலை, சிவில் உரிமைகளை ரத்து செய்தது மட்டுமல்ல, கட்டாயக் குடும்பக்கட்டுப்பாடு முயற்சிகள், நகர்ப் புறங்களில் இருந்த ஏழை மக்களின் குடிசைகள் தரைமட்டமாக்கப்பட்டது மற்றும் அதிகார வர்க்கத்தினரின் தான்தோன்றித்தனமான ஆணைகள் மூலமாக மக்கள் மீது மிகவும் கொடூர மான முறையில் தாக்குதல்கள் தொடுக் கப்பட்டன.

இந்திராகாந்தி 1977 மார்ச் சில் தன்னுடைய எதேச்சதிகார ஆட்சியை சட்டப்பூர்வமானதாக்கிட தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையுடன் அவசரநிலையை ரத்து செய்தார். ஆனால், தேர்தலில் மக்கள் இந்திரா காந்திக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் மீண்டும் எழமுடியாத அளவிற்கு மரண அடி கொடுத்து அவர்களைப் படுதோல்வி அடையச்செய்து விட்டார்கள். அவசர நிலைப் பிரகடன நாற்பதி ஏழாம் ஆண்டு தினம் அனுசரிக்கப்படும் சூழலில், இந்தியாவில் மீண்டும் அவசரநிலைப் பிரகடனம் செய்யப் படும் நிலை வருமா என்று ஒரு கேள்வி விவாதத்தின்போது முன்வந்தது. இந்தக் கேள்வி தவறான முறையில் முன்னிறுத்தப்படுகிறது. இந்திய அரசியலமைப்பு முறையில் எதேச்சதிகார அச்சுறுத்தல் மீண்டும் வருமா?

அவசரநிலை சகாப்தம் நாட்டை விழுங்கி உள்ளது.ஒருவர் தனது கருத்தை தெரிவித்தால் கைதாக நேரிடும் என்ற அச்சம் 1975 இல் நிலவியதை போன்றே இன்று அச்ச மான சூழல் நாட்டைச் சூழ்ந்துள்ளது. 1975 அவசரநிலைக் கால ஆட்சியில் காவல்துறையினர் நள்ளிரவில் வீடுகளின் கதவைத் தட்டி கைதுசெய்தனர். அன்றைய அவசரநிலை ஆட்சியின் கருவியாக காவல்துறை இருந்தது.இன்று ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசியப் புலனாய்வு நிறுவனம் (என்ஐஏ) உபாவில் கைதான வர்களை விசாரிக்கும் கருவியாக உள்ளது. தேசிய புல னாய்வு நிறுவனத்தால் குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கப் படுபவர்கள் பிணையில் வெளிவரவே முடிவதில்லை. இந்த வழக்குகள் ஒரு அவசர உணர்வுடன் விசாரிக்கப்படுவதில்லை. இதுபோன்ற அநீதியான நெடுங்கால சிறை வாசம் ஒன்றே நாட்டில் அச்சமான சூழலை நிலை நிறுத்துவதற்கு போதுமானது.எதேச்சதிகார ஆட்சியைக் கொண்டுவரக் கூடிய விதத்தில் அவசரநிலை அதிகாரங்களை அன்றைக்குப் பிரயோகித்ததுபோல் இன்றைக்குப் பிரயோகிக்க முடியாது எனினும், எதேச் சதிகாரம் இதர வடிவங் களில் நம் ஜனநாயக அமைப்பு முறையை அச்சுறுத்தக்கூடும். நாற்பது ஏழு ஆண்டுகளுக்கு முன் அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்ட சமயத்தில் அதற்கான அடிப்படைக் காரணங்களாக அமைந்தவை, அரசியலமைப்பு முறையின் நெருக்கடி பொருளாதார நிலைமையில் அதிருப்தி மற்றும் ஸ்திரமற்ற தன்மை ஆகியவைகளாகும். இப்போதும்கூட எதேச்சதிகாரம் தலைதூக்குவதற்கான இக்காரணிகள் அனைத்தும் நன்கு கனிந்திருக்கின்றன. நவீன தாராளமயக் கொள்கைகளின் விளைவுகள், இந்துத்துவா மதவெறி சக்திகள் தலை தூக்கி இருப்பது, அரசியல் கட்சிகளின் தரம் தாழ்ந்திருப்பது,

அரசு அமைப்புகள் அனைத்துமே அரிக்கப்பட்டுக் கிடப்பது – இவை அனைத்தும் சேர்ந்து எதேச்சதிகாரம் சூல்கொண்டிருப்பதை முன்னறிவிக்கின்றன. 1978 ஏப்ரலில் ஜலந்தரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 10ஆவது அகில இந்திய மாநாட்டில் எதேச்சதிகாரம் குறித்து கட்சி எச்சரித் திருப்பதை நினைவுகூர்க. “பெரு முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்கள் நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் நிலை தொடரும் வரை எதேச்சதிகாரத்தின் ஆபத்து இருக்கும்; ஓர் அரசியல் சேர்மானமோ அல்லது வேறொன்றோ தங்கள் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக சர்வாதிகாரத்தை நிறுவிட முயற்சிகளை மேற்கொள்ளும்,’’ என்று கட்சி எச்சரித்திருந்தது.

எதேச்சதிகார ஆட்சியைக் கொண்டுவரக் கூடிய விதத்தில் அவசரநிலை அதிகாரங்களை அன்றைக்குப் பிரயோகித்ததுபோல் இன்றைக்குப் பிரயோகிக்க முடியாது எனினும், எதேச் சதிகாரம் இதர வடிவங் களில் நம் ஜனநாயக அமைப்பு முறையை அச்சுறுத்தக்கூடும். நாற்பது ஏழு ஆண்டுகளுக்கு முன் அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்ட சமயத்தில் அதற்கான அடிப்படைக் காரணங்களாக அமைந்தவை, அரசியலமைப்பு முறையின் நெருக்கடி பொருளாதார நிலைமையில் அதிருப்தி மற்றும் ஸ்திரமற்ற தன்மை ஆகியவைகளாகும். இப்போதும்கூட எதேச்சதிகாரம் தலைதூக்குவதற்கான இக்காரணிகள் அனைத்தும் நன்கு கனிந்திருக்கின்றன. நவீன தாராளமயக் கொள்கைகளின் விளைவுகள், இந்துத்துவா மதவெறி சக்திகள் தலை தூக்கி இருப்பது, அரசியல் கட்சிகளின் தரம் தாழ்ந்திருப்பது,

அரசு அமைப்புகள் அனைத்துமே அரிக்கப்பட்டுக் கிடப்பது – இவை அனைத்தும் சேர்ந்து எதேச்சதிகாரம் சூல்கொண்டிருப்பதை முன்னறிவிக்கின்றன. 1978 ஏப்ரலில் ஜலந்தரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 10ஆவது அகில இந்திய மாநாட்டில் எதேச்சதிகாரம் குறித்து கட்சி எச்சரித் திருப்பதை நினைவுகூர்க. “பெரு முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்கள் நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் நிலை தொடரும் வரை எதேச்சதிகாரத்தின் ஆபத்து இருக்கும்; ஓர் அரசியல் சேர்மானமோ அல்லது வேறொன்றோ தங்கள் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக சர்வாதிகாரத்தை நிறுவிட முயற்சிகளை மேற்கொள்ளும்,’’ என்று கட்சி எச்சரித்திருந்தது.

நவீன தாராளமயம்
அரசாங்கம் மேற் கொண்டுவந்த பல்வேறு துறைகளை – உற்பத்தி சார்ந்த துறைகளை மட்டுமல்ல, கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை சேவைகளைக்கூட சந்தைசக்திகளிடமும் பெரும் வர்த்தகநிறுவனங்களிடமும் ஒப்படைத்து விட்டது. இது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஏற்றத்தாழ்வையும், சமத்துவமின்மையையும் ஏற்படுத்தி இருக்கிறது. அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்துள்ள ஊழல் மக்களின் ஜனநாயக அடிப்படை உரிமைகளையே அரித்துவிட்டது. நவீன தாராளமயம், சந்தை சக்திகளை மக்களுக்கும் மக்களின் உரிமைகளுக்கும் மேலானவைகளாக மாற்றியிருப்பதோடு, ஜனநாயகத்தை மிகவும் சுருக்கி, மிகவும் குறுகிய வரை யறைக்குள் கொண்டுவந்துவிட்டது. பெரும் மூலதனம் அரசியலமைப்புக்குள் ஊடுருவி, அனைத்துப் பெரிய முதலாளித்துவ கட்சிகளையும் தங்களின் பண பலத்திற்குக் கீழ்ப்படிந்து நடக்கும் ஏவலாட்களாக மாற்றி இருக்கிறது. இது நாடாளுமன்ற அமைப்புமுறையையும் அரித்துக் கொண்டிருக்கிறது. தற்போது ஆளும் கட்சியாக விளங்கும் பாஜக முழுமையாக ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்குக் கட்டுப்பட்டு, அதன் கட்டளைப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது அரசாங்கத்தின் அனைத்து அமைப்புகளின் கீழும் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிநிரலையும் அதன் நபர்களை யும் அறிமுகப்படுத்துவதற்கு வழி யேற்படுத்தித் தந்திருக்கிறது. இது, நம் அரசமைப்புச் சட்டம் வகுத்துத் தந்துள்ள மதச்சார்பற்ற ஜனநாயகக் கொள்கைகளுக்கு விரோதமான, தன்னுடைய அரைப்பாசிச சித்தாந்தத் தையும் லட்சியங்களையும் முன் னெடுத்துச்செல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறது.

தோல்வியடைந்த ஜனநாயகத்தின் தூண்கள்

ஒன்றிய அரசானது, அரசியல் சட்டப்படியான நான்கு ஜனநாயகத் தூண்களுக்குள் செயல்பட வேண்டியதை உறுதிப்படுத்த வேண்டியவைகள் ஊடகம், குடிமைச் சமூகம் மற்றும் நீதித்துறை ஆகும். ஆனால், இன்றைய அறிவிக்கப்படாத அவசர நிலை ஆட்சியில் இந்நிறுவ னங்கள் யாவும் படுமோசமாகத் தோல்வி அடைந்துவிட்டன. அதிலும் அரசியல் சட்ட மீறல்கள் நடைபெறும் போது நீதித்துறை மௌனம் சாதிக்கிறது.அரசியல்சட்ட முக்கியத் துவமிக்க பிரச்சனைகளை விசாரித்து முடிவெடுப்பதில் நீதித்துறை தோல்வி அடைந்துவிட்டது. இதுவரையிலும் , அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து, குடியுரிமை திருத்தச் சட்டத்தின் அரசியல் சட்டப்பூர்வமான செல்லுபடித் தன்மை மற்றும் தேர்தல் பத்திரங்கள் போன்ற அவசர அவசிய பிரச்சனைகளைப் பற்றி இதுவரை யில் விசாரிக்கவில்லை.

இந்துத்துவா அமைப்புகள் அரசாங்கத்தின் அனைத்துவிதமான ஆதரவுடனும் மதச் சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகள் மீதும் அவர்கள் புனித மெனக் கருதும் மாண்புகளின்மீதும் வன் முறையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. இவ்வாறு, எதேச்சதிகாரம் நம் சமூக மற்றும் கலாச்சார அமைப்புகளுக்குள் நுழைந்து கொண்டிருப்பது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நவீன தாராளமயச் சந்தை அடிப் படைவாதம் மற்றும் இந்துத்துவா ஆகிய இரண்டின் கலவையானது எதேச்சதிகாரம் விரும்பும் உணவாகி இருக்கிறது. இது மிகவும் ஆபத்தான ஒன்று. ஒரு பக்கத்தில், தொழிற்சங்கங்களை தொழிலாளர் நலச் சட்டங்களில் மோசமான அளவில் திருத்தங்களைக் கொண்டுவந்து பலவீனப்படுத்த நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. மறுபக்கத்தில், நாடாளுமன்ற மாண்புகளையே காலில்போட்டு மிதித்துத் துவைத்து ஓரங் கட்டிவிட்டு அவசரச் சட்டங்கள் மூலம் சந்தை-சார்பு சட்டங்களை நிறைவேற்றத் துடித்துக்கொண்டிருக்கிறது. இதற்குச்சரியான உதாரணம், நிலம் கையகப் படுத்தலுக்காக அச்சட்டத்தில் அது கொண்டுவந்துள்ள மாற்றங்களாகும். மக்களவையில் பெரும்பான்மை இருப்பதைப் பயன்படுத்தி, மோடி அரசாங்கம் நாடாளுமன்றத்தை அவமதிக்கும் காரியங்களைத்தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அடுக்கடுக் காக அவசரச்சட்டங்கள், மாநிலங் களவையை இழிவாய்க் கருதும் முயற்சி, பிரதமரின் கைகளில் அனைத்து அதிகாரங்களும் குவிதல் ஆகிய அனைத்தும் ஜனநாயகத்தை அடைத்துவைத்து, மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அமைப்புகள் மூலமாக முக்கியமான முடிவுகளையும் கொள்கை களையும் உருவாக்குவதை ஒழித்துக் கட்டுவதற்காக தாராளமயத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியேயாகும்.

இவ்வாறு, நாம் இன்றைய தினம் எதேச்சதிகாரத்திற்கான காரணிகள் சூழ் கொண்டிருக்கும் நிலையைப் பார்க்கிறோம். இந்நிலையில் நமக்குத் தேவைப்படுவது என்னவெனில், நவீன தாராளமயம், இந்துத்துவா வகுப்புவாதம் மற்றும் எதேச்சதிகாரம் ஆகியவற்றிற்கு எதிராகப் பலமுனைகளிலும் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதேயாகும். இவை அனைத்தும் அடிப்படையில் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து நிற்கின்றன. நாற்பது ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பிறப்பிக்கப்பட்ட அவசர நிலையிலிருந்து சரியான படிப்பினைகளைக் கற்றுக்கொள்வது இப்போது நாம் மேற்கொள்ள விருக்கும் போராட்டங்களுக்கு உறுதுணையாக இருந்திடும்.

Leave a Reply