01. வரலாறும் வர்க்க உணர்வும் மரபார்ந்த மார்க்சியம் என்றால் என்ன.. உள்ளிட்ட கட்டுரைகளின் தொகுப்பு- ஜார்ஜ் லூகாஸ் \ தமிழில்: கி.இலக்குவன் ₹ 380/-
ஜார்ஜ் லூயிஸ்: 1885 – 1971
ஹங்கேரியைச் சேர்ந்த மார்க்சிய தத்துவ அறிஞர், எழுத்தாளர், இலக்கிய விமர்சகர். சிறிது காலமே நீடித்த பேலாகுன் (Bela Kun) தலைமையிலான கம்யூனிச ஆட்சியில் பண்பாடு மற்றும் கல்வி அமைச்சராகப் (commissar) வகித்தார். மார்க்சிய அழகியல் வழிமுறைகளில் ஒன்றை வகுத்தது இவரது முக்கிய பங்களிப்புகளில் அடங்கும். இவரது அழகியல் மனிதம் சார்பான சிந்தனைப் போக்கினை உயர்த்திப் பிடித்தது. தொழில் சமுதாயத்துக்குள் நிகழும் அந்நியமாதல் போக்கு குறித்த மார்க்சின் கோட்பாட்டுக்கு விளக்கமளித்தது. “மரபார்ந்த மார்க்சியம் என்பது எது?” உள்ளிட்ட அவரது உலகப் புகழ்பெற்ற மார்க்சிய இயக்கவியல் குறித்த கட்டுரைகள் இந்த நூல் தமிழில் முதன்முறையாக தோழர் கி. இலக்குவனின் சரளமான மொழிபெயர்ப்பில் வந்திருக்கிறது.
02. பொதுவுடமை என்றால் என்ன ~ The ABC of Communism
நிகோலாய் புக்காரின் இவ்ஜெனி புரோயோ பிராஷென்ஸ்கி
தமிழில்: கி.இலக்குவன் ₹ 260/-
மாமேதை லெனின் அவர்களால் உருவாக்கப்பட்ட போல்ஷ்விக் கட்சியின் ஆரம்பகாலத் தோழர்களான புகாரின், புரோயோ பிராஷென்ஸ்கி ஆகியோரால் எழுதப்பட்டு, உலகம் முழுவதும் ‘பொதுவுடமை என்றால் என்ன?’ என்பதைக் கற்றுத் தருவதற்கான துவக்கநிலை பாடப் புத்தகமாக பல்லாண்டுகாலமாக பயன்பட்ட நூல்..
மகத்தான ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு நிகழ்வுகளின் பகுதியாக, செவ்வியல் நூல்களின் வரிசையில் The ABC of Communism என்று ஆங்கிலப் பெயரில் வெளிவந்த நூலின் முதல் தமிழ் மொழிபெயர்ப்பு. காலம் உருண்டோடி இருந்தாலும் அடிப்படைகள் மாறவில்லை என்பதால் இன்றைக்கும் பொதுவுடமை குறித்து வாசிக்க முயலும் ஒருவர்க்கு பயன் மிகு துவக்க நூல் இது…
03. புரட்சிப் பெருநதி- சு.பொ.அகத்தியலிங்கம் ₹ 150/-
புரட்சி என்பது எல்லாவிதமான சுரண்தலையும், சமுதாயம் மற்றும் நாட்டின் ஒடுக்குமுறையின் எல்லா வடிவங்களையும் ஒழிப்பதற்கான தோராட்டமாகும். அறிவியல், தொழில் நுட்பம், பண்பாடு ஆகியவற்றின் மிகப்பெரிய சாதனைகள் உழைப்பாளி மக்களின் உயர்வுக்குத் தொண்டாற்றவேண்டும். அவர்களுடைய வாழ்வை அதிகப் பொருளும் அதிகச் சுவையும் உள்ளதாக்கவேண்டும் என்பதற்கான போராட்டமே புரட்சி!
சோவியத் புரட்சியின் வீரிய மிக்க வெற்றி, போர்க்களத்தில் இரத்தமும் வியர்வையும் சிந்தி ஈட்டியது மட்டுமல்ல; ஆம்! சமூக வாழ்க்கை முழுவதையும் மனிதநேயம் மிக்கதாய் மாற்றி அமைக்க இடைவிடாது தொடர்ந்த முயற்சியுமாகும்…
04. மார்க்சியத்தின் ~ வரலாற்று வளர்ச்சியின் சில சிறப்பியல்புகள்.- மாமேதை லெனின். விலை ₹ 80/-
மார்க்சியம் உயிரற்ற வறட்டுச் சூத்திரம் அல்ல; இறுதி முடிவாக்கப்பட்டுவிட்ட, முன்கூட்டியே தயார் செய்து வைக்கப்பட்டுவிட்ட, மாற்றத்துக்கு இடமில்லாது இறுகிவிட்ட போதனை அல்ல அது. செயலுக்கான உயிருள்ள வழிகாட்டி அது; சமுதாய வாழ்க்கை நிலைமைகளில் ஆச்சரிப்படத்தக்க அளவில் திடுதிப்பென நிகழ்ந்த மாறுதல்களை இக்காரணத்தால் நிச்சயமாய் மார்க்சியம் பிரதிபலித்துக் காட்டவே செய்யும். ஆழ்ந்த சிதைவிலும், ஒற்றுமையின்மையிலும், பல வகைப்பட்ட ஊசலாட்டங்களிலும், சுருங்கச் சொன்னால் மார்க்சியத்துக்கு உள்ளேயே ஒரு மிகத் தீவிரமான நெருக்கடியிலும் இந்த மாறுதல் பிரதிபலித்துக் காட்டப்பட்டது…
நவீன தாராளமய பொருளாதாரக்கொள்கை அனைத்து துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடுமையான பாதிப்புகளையும் உருவாக்கியுள்ளது. தொழில், விவசாயம் மற்றும் நகர்ப்புற நடுத்தர மக்கள் ஆகிய தளங்களில் மேற்கண்ட கொள்கை அமலாக்கத்தால் பாதிப்புக்குள்ளான தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், நடுத்தர, நகர்ப்புற மக்கள் போன்ற உழைக்கும் மக்களின் வாழ்க்கை வாழ்வாதாரம் போன்ற பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு மூன்று வல்லுநர் குழுக்களை அமைத்தது. இக்குழுக்கள் அளித்த அறிக்கையே இந்நூல்.