மார்க்சிய மாணவர்களாக, மார்க்சிய-லெனினிய கோட்பாட்டை கருத்துடன் கற்று, அதன் சாராம்சத்தையும் உணர்வையும் புரிந்து கொள்ள சுயகல்வியே மிக முக்கியமானது அதற்கு இந்த அடிப்படை நுால்களை படிப்பது மற்றவர்களுடன் விவாதிப்பது மீண்டும் படிப்பது அதற்கு இந்த புத்தகங்கள் உதவ கூடும்.
1. கம்யூனிசத்தின் கோட்பாடுகள்- ஏங்கெல்ஸ் ₹25.00
1847ல் கம்யூனிஸ்ட் லீக்கீற்காக பிரடெரிக் எங்ககெல்ஸ் அவர்கள் கேள்வி பதில் வடிவத்தில் கம்யூனிச சமூகம் குறித்த அடிப்படையானக் கோட்பாடுகளை விளக்கிய நூல்.முதன் முதலில்1914ஆம் ஆண்டு ஜெர்மன் சமூக ஜனநாயக கட்சியால் நூல் வடிவில் வெளியிடப்பட்டது.இன்றும் கம்யூனிச அடிப்படைகளைக் கற்று கொள்ள மிகவும் பொருத்தப்பாடுடன் திகழும் சிறுநூல்.
2. அரசும் புரட்சியும் – லெனின் ₹150.00
“புரட்சியாளர்கள் ‘அரசு’ என்பதற்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடுகிறார்கள்.பிறகு புரட்சி வென்றபின் அவர்கள் மக்களுக்கான அரசை எப்படி அமைக்கிறார்கள்?இந்த மிகச் சிக்கலான இடத்தை அங்குலம் அங்குலமாக எடுத்து எளிதாக நமக்கு லெனின் விளக்கிச் செல்கிறார்.”
3. கம்யூனிஸ்ட் அறிக்கை (மார்க்ஸ் – ஏங்கல்ஸ்) ₹25.00
அறிவர்ந்த உலகில் அதிகமாக படிக்கப் பெற்ற,விரித்துரைக்கப் பெற்ற நூல் கம்யூனிஸ்ட் அறிக்கை. 1848ஆம் ஆண்டில் இந்த அறிக்கை பேருண்மைகளை விளக்கும் பிரகடனமாகவே வெளியிடப்பட்டது.
4. கற்பனவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும்- ஃபிரடெரிக் எங்கெல்ஸ் – ₹95.00
எங்கெல்ஸ் எழுதிய மிக முக்கியமான பெரிய நூலான ‘டூரிங்கிற்கு மறுப்பு’ என்பதன் ஒரு பகுதியே இந்நூல். அந்த நூலில் அன்று சோசலிசத்தைக் கொச்சைப்படுத்தி மார்க்சியத்திற்கு மாறான, அறிவியலுக்கு மாறான கருத்துகளை பரப்பி வந்த திருவாளர் டூரிங்கிற்கு மறுப்பாக எங்கெல்ஸ் எழுதியதே அந்த நூல்.
5. கனவிலிருந்து அறிவியலாய் சோஷலிசம்: சு.பொ.அகத்தியலிங்கம் ₹60.00
சோசலிசம், கம்யூனிசம் என்ற பதங்கள் மார்க்சும் எங்கல்சும் உருவாக்கியவை அல்ல. மானுட சமூகத்தின் சமத்துவத்திற்கும், சுயமரியாதைக்குமான தாகமும், கனவும் மார்க்சுக்கும் எங்கல்சுக்கும் பல காலம் முன்பே உருவானவையே.