பிரஞ்சியரின்  ஆட்சியில் புதுச்சேரி (1816-1954) கால வரிசை

புதுச்சேரியில் பிரஞ்சியர் காலூன்றிய வரலாறு

ஐரோப்பாவிலிருந்து பல நாட்டவர்கள், இந்தியாவில் வந்திறங்கி வாணிகம் செய்வதைக் கண்ட பிரஞ்சியர்களும், அம்முயற்சியில் இறங்கத் தொடங்கினர். அவர்களுக்கு 1664- இல் முகலாய மன்னர் ஒளரங்கசீப்பின் ஒப்புதல் கிடைத்தது. அதன்படி சூரத் நகரில் ஒரு முறை சுங்கத் தீர்வை செலுத்திவிட்டு, பிரஞ்சுக்காரர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் வியாபாரம் செய்து கொள்ளலாம் என்றும், அதுபோல் இந்தியாவில் எங்கிருந்தும் பொருள்களை வாங்கித் தம் நாட்டிற்கு எடுத்துச் செல்லலாம் என்றும் அனுமதி பெற்றனர் (ஞானு தியாகு. 1998). அதனால் பிரஞ்சு வர்த்தகக் கம்பெனி மேற்கில் சூரத் நகரிலும், கிழக்கில் மசூலிப்பட்டினத்திலும் தங்கள் வர்த்தகத்தைத் தொடங்கியது.

அப்பொழுது பீஜப்பூர் சுல்தான் தன் கட்டுப்பாட்டிலிருந்த புதுச்சேரியிலும் வர்த்தகக் கம்பெனியைத் தொடங்குமாறு பிரஞ்சியர் களுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் அது நிறைவேறுவதற்குள் சுல்தானின் ஆட்சி நலிவுற்றது.

இந்நிலையில் சோழமண்டலக் கடற்கரைப் பகுதியில்
வாணிகம் செய்வதற்குப் பொருத்தமான இடத்தைத் தேடிக்
கொண்டிருந்த பிரஞ்சுக் கப்பற்படைத் தளபதி ப்ளான்கே த லா ஹே (Blanquet de la Haye), கோல்கொண்டா சுல்தானின் கட்டுப்பாட்டிலிருந்த மயிலாப்பூரை (San Thome) 1672 சூலை 25-இல் முற்றுகையிட்டார். இச்செய்தியை அறிந்த தென்னிந்தியச் சிற்றரசர்கள், பிரஞ்சுக்காரர்களுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்த துடன், அவர்களின் நட்பைப் பெறவும் விரும்பினர் (இப்படித்தான் நம்மவர்கள் வாழ்வதைக் கண்டு பொறாத நம்மவர்களே, பிற நாட்டாரிடம் வலிய சென்று அடிமைப்படத் தொடங்கினார்). இந்தியாவிற்கு வந்து வாணிகம் செய்து கொண்டிருப்பவர்களில் பிரஞ்சு நாட்டவரே வீரமும் வலிமையும் கொண்டவர்கள் என்றெண்ணிய வலிகொண்டா புரம் ஆட்சியராகிய ஷெர்கான் லோடி, புதுச்சேரியில் வர்த்தக மையத்தை அமைத்துக் கொள்ளலாம் என்ற செய்தியைப் பிரஞ்சுக்காரர்களுக்கு அனுப்பினார் (வலிகொண்டாபுரம் என்பது வாலிகண்டபுரம் என்பதன் திரிபாகும். இது சென்னை – திருச்சிப் பாதையில் பெரம்பலூருக்கு முன்னதாக உள்ளது. அப்பொழுது புதுச்சேரி, ஷெர்காள் லோடியின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்தது) த லாஹேயின் மயிலாப்பூர் முற்றுகை நேரத்தில், அவர்களுக்குத் தேவையான தளவாட உதவிக்கும், போர்வீரர்களின் உணவுத்தேவைக்கும் மயிலாப்பூருக்கு அருகிலேயே மற்றுமொரு பாதுகாப்பான இடம் தேவைப்பட்டது. அதற்குப் பொருத்தமாகப் பக்கத்திலிருந்த புதுச்சேரியைப் பயன் படுத்திக்கொள்ள விரும்பினர். உடனே த லாஹேயின் உதவியாளார் பெலான்ழே த லெஸ்ப்பினே (Bellanger de l’Espinay), ஷெர்கான் லோடியைச் சந்தித்துப் புதுச்சேரியில், வர்த்தக மையத்தை (Comptoir français en Inde) நிறுவ அனுமதி பெற்றார். அவரிடம் பெற்ற அனுமதியின்படி 1673 பிப்ரவரி 4-இல் லெஸ்ப்பினே தலைமையில் வந்த பிரஞ்சுக்காரர்கள், புதுச்சேரியில் வந்திறங்கினர் (தாவீதன்னுசாமி. 2010).

புதுச்சேரியில் அவர் வந்திறங்கிய சுமார் ஓராண்டிற்குப் பிறகு சென்னையிலிருந்த த லாஹே, லெஸ்ப்பினேவிற்கு உதவியாளராகப் பிரான்சுவா மர்த்தன் (François Martin) என்பாரை அனுப்பி வைத்தார். அவர் 60 பிரஞ்சுப் படை வீரர்களுடன் புதுச்சேரியில் 1674 சனவரி 15-இல் வந்திறங்கினார் (A.Ramasamy. 1987).

இவ்வாறு லெஸ்ப்பினேவிற்கு உதவியாளராக வந்த பிரான்சுவா மர்த்தனே, பிற்காலத்தில் புதுச்சேரியில், பிரஞ்சியர்களின் வர்த்தக நிறுவனத்தை நிலைநிறுத்தியவர் என்பதும், புதுச்சேரியில் பிரஞ்சு ஆட்சிக்கு வித்திட்டவர் என்பதும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளாகும்.சென்னையில் மயிலாப்பூரை முற்றுகையிட்ட த லாஹே, பின்னர் அம்முயற்சியைக் கைவிட்டுப் பிரான்சுக்குத் திரும்பினார். ஆனால் புதுச்சேரிக்கு வந்த லெஸ்ப்பினே மட்டும் புதுச்சேரியிலேயே தங்கி வர்த்தகத்தைத் தொடர்ந்தார்.

லெஸ்ப்பினேவிற்குப் பிறகு, பிரஞ்சு அரசால் அனுப்பப்பட்ட பரோன் (M.Baron), புதுச்சேரி பிரஞ்சு வர்த்தக நிலைய இயக்குநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். பரோன் நிர்வாகத்தின்கீழ் மர்த்தன் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டு வந்தார். அந்நிலையில், சூரத்திலுள்ள பிரஞ்சு வர்த்தக நிலையத்தின் தலைமை இயக்குநராக இருந்த கரோன் (Caron) காலமானார். அதனால் புதுச்சேரியிலிருந்த பரோன் சூரத்துக்கு மாற்றப்பட்டார். அவர், தன்னிடம் உதவியாளராக இருந்த மர்த்தனிடம், புதுச்சேரி பிரஞ்சு வர்த்தக நிலைய பொறுப்பினை 1675 மே 05-இல் ஒப்படைத்துவிட்டு, சூரத்திற்குச் சென்றார் (மேலது).

© ழான் பெப்பின் (1617)

பெலான்ழே தெ லெஸ்ப்பினே (1673)

© பரோன் (1674?)

© பிரான்சுவா மர்த்தன் (1675)

இவ்வாறு புதுச்சேரியில் பிரஞ்சியர்களின் நிலையான ஆட்சிக்குக் கால்கோள் நாட்டும் பொறுப்பு பிரான்சுவா மர்த்தனிடம் வந்தது.

பிரஞ்சியரின் நிலையான ஆட்சியில் புதுச்சேரி (1816-1954)

ஐரோப்பாவில் இரண்டாவது பாரீசு ஒப்பந்தம் (Treaty of Paris II) 30.05.1814-இல் ஆங்கிலேயர்களுக்கும் பிரஞ்சுக்காரர்களுக்கும் ஏற்பட்டது. அவ்வொப்பந்தப்படி, சூரத், மசூலிப்பட்டினம் போன்ற வர்த்தக மையங்களெல்லாம் ஆங்கிலேயர்கள் எடுத்துக் கொண்டு. புதுச்சேரி, காரைக்கால், மாகே, யேனாம், சந்திரநாகூர் ஆகிய ஐந்து பகுதிகள் மட்டும் பிரஞ்சியர்களிடம் திருப்பிக் கொடுக்கப்பட்டன. மேலும்,

“பிரஞ்சுக்காரர்கள் எந்தக் குடியேற்றங்களிலும் கோட்டைகள் கட்டக்கூடாது என்றும், நகரைச் சுற்றிப் பாதுகாப்பிற்கான மதிற்சுவர் எதனையும் எழுப்பக்கூடாது என்றும், சட்டம் ஒழுங்குக்குத் தேவையான படைவீரர்களுக்கு மேல் வீரர்களை வைத்துக்கொள்ளக் கூடாது என்றும், இந்தியாவில் ஆங்கிலேயரின் மேலாண்மையைப் பிரஞ்சுக்காரர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும்” நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. 1817-இல் சுங்க வரியில்லாத் துறைமுகமாக (Free Port) அறிவிக்கப்பட்டது.

அரசு அச்சகம் தொடங்கப்பட்டது

1824-இல் ஆங்கிலேயர்களால் இடிக்கப்பட்ட புதுச்சேரி நகரைச் சுற்றி எழுப்பப்பட்டிருந்த கோட்டை மதிற்சுவர் இருந்த இடத்தில், கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு எனும் நான்கு புல்வார்கள் (Boulevard) ஸ்பின்னாஸ் (Spinasse) என்ற பொறியாளரால் உருவாக்கப்பட்டன. அவை 24 மீட்டர் அகலமுடையதாகவும் இரண்டு பக்கமும் வரிசையாக மரங்களையுடையதாகவும் அமைக்கப்பட்டன. அது 1827-இல் முடிக்கப்பட்டது.

1826-இல் சாவடிக்குப் பக்கத்திலிருந்த பெரிய கடை எதிர்ப்பக்கத்திற்கு (தற்பொழுதைய இடத்திற்கு) மாற்றப் ) (25.11.1826).

1827-இல் பெரிய வாய்க்கால், நேரு வீதியைத் தாண்டி வடக்கு நோக்கி நீட்டிக்கப்பட்டது.

01.02.1827-இல் இலவச ஆரம்பப் பள்ளிக்கூடமும் (École Primaire)

12.02.1827-இல் பெண்களுக்கான பள்ளிக்கூடமும் (Pensionnat de Jeunes demoiselles) தொடங்கப் பட்டன. क (French Library, now known as Romain Rolland Library) திறக்கப்பட்டது.

1828-இல் தாழ்த்தப்பட்டவர்களுக்கான பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது.

முதல் நூற்பாலை (சவானா மில் தற்பொழுதைய சுதேசி காட்டன் மில்) தொடங்கப்பட்டது.

1835-இல் கலங்கரை விளக்கு கட்டப்பட்டது.

அதே ஆண்டில் நகரின் நான்கு சுற்றுச் சாலைகளிலும், மரங்கள் நடப்பட்டுப் பராமரிக்கப்பட்டன.

1836-இல் புதுச்சேரி கலங்கரைவிளக்கு திறந்து வைக்கப்பட்டது (10.05.1836).

1842 பிப்ரவரி 7-இல் வெளியிடப்பட்ட ஓர் அரசு ஆணையின் படி, நகரின் தெருக்களெல்லாம் நேர்ப் படுத்தப்பட்டன. மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.

1849- (13.02.1849). வர்த்தகசபை தோற்றுவிக்கப்பட்டது

1852-இல் தியாகு முதலியாரால் பெரியக்கடை மணிக்கூண்டு வழங்கப்பட்டது.

1853- கடற்கரைச் சாலையையொட்டிச் செங்கல்லாலான தடுப்புச்சுவர் கட்டப்பட்டது (அச்செங்கல் தடுப்புச் சுவர், சமீப காலம் வரை, மக்கள் அதன் மீது உட்கார்ந்து காற்று வாங்கும் கட்டைச் சுவராக இருந்தது. அதுதான் தற்பொழுது புதுப்பிக்கப்பட்ட தடுப்புக்கட்டையாகவும், அதன் கிழக்கில் கருங்கற்கள் கொட்டப்பட்டு, மணல்மேடிட்டு நடைபாதையாகவும் மாற்றப்பட்டுள்ளது).

இதே ஆண்டில் அரசு பொது மருத்துவமனை திறக்கப் பட்டது.

1855- பல முறை இடிக்கப்பட்ட கப்பூசியர் மாதாக்கோவில் தற்பொழுதைய இறுதியான வடிவத்தில் கட்டி முடிக்கப்பட்டது.

1856-இல் தெருக்களுக்குப் புதியபெயர்கள் இடப்பட்டன. வீடுகளுக்கு எண்கள் கொடுக்கப்பட்டன.

1857-இல் சுண்ணாம்பாற்றின்மீது பாலம் கட்டப்பட்டது.

1863- மருத்துவ கல்லூரி (École de Médecine) தோற்றுவிக்கப்பட்டது.

© 1863-இல் முத்தரையர்ப்பாளையத்திலிருந்து நகரில் இரண்டு இடங்களுக்குக் குடிநீர் கொண்டுவரப்பட்டது (យ ប (Opp. To Ananda Rangapillai House), அரசுப் பூங்கா (Aayi Mandapam) எனும் இரண்டு இடங்களுக்குக் கொண்டு வரப்பட்டது).

1864-இல் அரியாங்குப்பம் ஆற்றின்மீது கட்டப்பட்டது. பாலம்

1866-இல் கோட்டை இருந்த இடத்தில் பூங்கா (Place de Napoleon-III) தொடங்கப்பட்டது.

கப்பல்களிலிருந்து சரக்குகளை ஏற்றி இறக்குவதற்கான துறைமுகம் (Pont Debarcadère – Pier) கட்டப்பட்டது.

1870-இல் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட கோட்டை இருந்த இடத்தில் ஆளுநர் மாளிகைக்கு முன்பாகத் துய்ப்லெக்ஸ் சிலையுடன் கூடிய பூங்கா அமைக்கப்பட்டது (Place de Napoleon III, Later called Place de la République – தற்பொழுது பாரதி பூங்கா என அழைக்கப்படுகிறது).

1873-இல் இந்தோ – சீனா வங்கி (தற்பொழுதைய யு.கோ. வங்கி) நிறுவப்பட்டது.

1877-2 (02.05.1877). கலவைக் கல்லூரி தொடங்கப்பட்டது

1879-இல் புதுச்சேரி புகைவண்டி நிலையம் பக்கிங்காம் பிரபு முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது (15.12.1879).

1886-இல் புஸ்ஸி வீதியில் சின்ன கடை திறக்கப்பட்டது.

1892-இல் கெப்ளே ஆலை (தற்பொழுதைய பாரதி ஆலை) திறக்கப்பட்டது.

1898-இல் ரோடியர் மில் (தற்பொழுதைய A.F.T. Mill) திறக்கப்பட்டது.

1898-இல் காரைக்கால்- பேரளம் இருப்புப் பாதை திறக்கப்பட்டது (14.03.1898).

1907-இல் அரியாங்குப்பத்திலிருந்த சாராய ஆலை புதுச்சேரி கடற்கரை சாலைக்கு மாற்றப்பட்டது.

1908-இல் முத்தரையர்ப்பாளையத்து நீர் புதுச்சேரி நகரம் முழுவதும் விநியோகிக்கப்பட்டது.

1909-இல் புதுச்சேரி நகரின் முக்கியப்பகுதிகளுக்கு முதன் முதலாக மின்சாரம் விநியோகிக்கப்பட்டது.

1911-இல் முக்கியமான சில சாலைகளுக்குப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

1923-இல் கப்ஸ் கோயில் எதிரில் ழான் தார்க் சிலை நிறுவப்பட்டது.

இவ்வாறு பிரஞ்சியரின் நிலையான நீண்ட ஆட்சியில் (138 ஆண்டுகள்) புதுச்சேரி நகரம் முழுமை பெற்றது. பின்னர் 1954 நவம்பர் 1-இல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது

Leave a Reply