அம்பலப்படுத்தும் 2022-ஆம் ஆண்டிற்கான உலக பட்டினிக் குறியீடு
2022-ஆம் ஆண்டிற்கான உலக பட்டினி குறியீட்டில் (GHI) இந்தியா, இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான இடத்தைப் பெற்றுள்ளது. ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் பட்ட மொத்தம் 121 நாடுகளில், அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்க தேசம், நேபாளம், இலங்கை உள்ளிட்ட நாடுகளைக் காட்டிலும் பின்தங்கி- இந்தியா 107 ஆவது இடத் தையே பிடித்துள்ளது. அயர்லாந்தைச் சேர்ந்த ‘கன்சர்ன் வேர்ல்ட்வைட்’ (Concern World wide) அமைப்பும், ஜெர்மனியைச் சேர்ந்த ‘வெல்ட் ஹங்கர் ஹில்ப்’ (Welt Hunger Hilfe) அமைப்பும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் உலக பட்டினிக் குறியீட்டை (Global Hunger Index -GHI) வெளியிட்டு வருகின்றன. 5-வயதுக்கு கீழுள்ள குழந்தைகள் சத்துணவு குறைபாட்டால் தங்கள் உயரத்திற்கு ஏற்ற எடை இல்லா மல் இருத்தல், வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாமல் இருத்தல், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் உயிரிழப்பு ஆகிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், கடந்த 2021-ஆம் ஆண்டு, ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 116 நாடுகளில் இந் தியா 101-ஆவது இடம் என்ற மோசமான இடத்தைப் பெற்றது. முந்தைய 2020-ஆம் ஆண்டில், இப்பட்டியலில் 94-ஆவது இடத்திலேயே இந்தியா இருந்த நிலையில், அதைக் காட்டி லும் 2021-இல் மோசமான நிலைக்குப் போனது. உலகில் மிக மோசமான பட்டினிக் கொடுமை நிலவும் 31 நாடுகளின் பட்டியலில் இந்தியா இருப்பதாக அப் போது கூறப்பட்டது. இந்தியாவிற்கும் கீழே பப்புவா நியூ கினியா, ஆப்கானிஸ்தான், நைஜீரியா, காங்கோ போன்ற 15 நாடுகள் மட்டுமே இருந்தன. அத்துடன் அண்டை நாடுகளான மியான்மர் (71-ஆவது இடம்), நேபாளம் (76-ஆவது இடம்), வங்கதேசம் (76-ஆவது இடம்), பாகிஸ்தான் (92-ஆவது இடம்) ஆகியவை இந்தியா வை விட முன்னேறிய நிலையில் இருந்தன.
இந்நிலையில், 2022-ஆம் ஆண்டிற்கான புதிய உலக பட்டினிக் குறியீட்டை (Global Hunger Index -2022), ‘கன்சர்ன் வேர்ல்ட்வைட்’ (Concern Worldwide), ‘வெல்ட் ஹங்கர் ஹில்ப்’ (Welt Hunger Hilfe) அமைப்புகள் தற்போது வெளியிட்டுள்ளன. இதில், 2020, 2021-ஆம் ஆண்டு களைக் காட்டிலும் மேலும் மோச மான இடத்திற்கு இந்தியா போயிருக்கிறது. பட்டினி தொடர்பான தரவு கள் கிடைக்கப் பெற்ற 121 நாடுகளில் இந்தியா 107 என்ற இடத்திற்கு சென் றுள்ளது. ஊட்டச்சத்துக் குறைபாடு, குழந்தை எடை வளர்ச்சி , குழந்தை வளர்ச்சி குறைவு மற்றும் குழந்தை இறப்பு விகிதம் ஆகியவை காரணி களாக எடுத்துக் கொள்ளப்பட்டு 100 சதவிகிதத்திற்கு மதிப்பெண்கள் கணக்கிடப்படுவது வழக்கம். இதில், ‘ஜீரோ மதிப்பெண் பட்டினியின்மைக்கான அளவுகோலாக எடுத்துக் கொள்ளப்பட்டு, பட்டினி அதிகமாக இருக்கும் நாடுகளுக்கு 100 மதிப்பெண்கள் வரை வழங் கப்படும். இதனடிப்படையில், 2022-ஆம் ஆண்டில் இந்தியா 29.1 மதிப்பெண் களைப் பெற்றுள்ளது. 2014-இல் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த ஆண்டில் 28.2 மதிப்பெண்கள் என்ற அளவில் இருந்த நிலையில், தற்போது 29.1 சதவிகிதம் என்ற அளவிற்கு பட் டினி அதிகரித்துள்ளது.
தொடரும் ஊட்டச்சத்து பற்றாக்குறை
இந்தியாவில் குழந்தைகள் உரிய எடையில்லாமல் இருப்பது 2014-ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்தபோது 15.1 சதவிகிதமாக இருந்தது. இது 2022-இல் 19.3 சதவிகிதமாக அதிகரித் துள்ளது. இதேபோல ஊட்டச்சத்து பற்றாக் குறை, 2018-2020இல் 14.6 சதவிகித மாக இருந்தது, 2019-2021இல் 16.3 சத விகிதமாக உயர்ந்துள்ளது. உலகளவில் ஊட்டச்சத்துக் குறை பாடு உள்ள 828 மில்லியன் (சுமார் 82 கோடியே 80 லட்சம்) மக்களில் இந்தி யாவில் மட்டும் 224.3 மில்லியன் (சுமார் 22 கோடியே 40 லட்சம்) மக்கள் உள்ளனர். வயதுக்கு ஏற்ற உயரம் இல்லா மல் இருத்தல், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் உயிரிழப்பு பிரிவில் மட்டும் இந்தியா சற்று மேம்பட்டுள் ளது. வயதுக்கு ஏற்ற உயரம் இல் லாமை, 2014-இல் 38.7 சதவிகிதமாக இருந்த நிலையில், தற்போது அது 35.5 சதவிகிதமாக குறைந்துள்ளது. அதேபோல குழந்தை இறப்பு விகித மும் 4.6 சதவிகிதத்தில் இருந்து 3.3 சத விகிதமாகக் குறைந்துள்ளது.
இந்தியாவை முந்திய அண்டை நாடுகள்
அதேநேரம், கடந்த ஆண்டு களைப் போலவே, இந்தாண்டும் அண்டை நாடுகள் இந்தியாவை விட சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளன. பொருளாதார சீர்குலைவுக்கு உள்ளான நிலையிலும், 2022-ஆம் ஆண்டிற்கான உலக பட்டினிக் குறியீட்டில், இலங்கை இந்தியாவை விட 43 இடங்கள் முன்னிலை பெற்று- 64ஆவது இடத்தை பெற்று உள்ளது. நேபாளம் 81 இடத்தையும், வங்க தேசம் 84 இடத்தையும் பிடித்துள்ளன. பாகிஸ்தான் கூட 100 இடங்களுக்குள் ஒன்றாக, 99-ஆவது இடத்தைப் பெற் றுள்ளது. தெற்காசியாவில், இந்தியாவை விட மோசமான இடத்தில் உள்ள நாடாக, தலிபான்கள் ஆட்சி செய்யும் ஆப்கானிஸ்தான் (109-ஆவது இடம்) மட்டுமே உள்ளது. இந்த வித்தியாச மும் கூட வெறும் 2 இடங்கள்தான். உலக அளவில், 44 நாடுகள் ‘தீவிரமான’ அல்லது ‘ஆபத்தான’ நிலையில் உள்ள நாடுகளாக வரை யறுக்கப்பட்டு உள்ளது. இந்த பட்டிய லில் 2-ஆவது ஆண்டாக இந்தியா இடம்பெற்றுள்ளது.
மோடியின் 8 ஆண்டுகளும் பட்டினி அதிகரிப்பு
இந்தியாவில் பட்டினிக் கொடுமை திடீரென அதிகரித்து விட வில்லை என்றும், மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பின், கடந்த 7 ஆண்டுகளாகவே மோச மான பட்டினி குறியீட்டில்தான் இந் தியா பயணித்து வருகிறது என்றும் உலகப் பட்டினிக் குறியீடு (Global Hunger Index) கடந்த 2021ஆம் ஆண்டு அறிக்கையில் தெளிவுபடுத்தி இருந்தது. உலக பட்டினிக் குறியீட்டில் 2011-இல் 67-ஆவது இடத்திலும் (122 நாடு களில்) 2012இல் 65-ஆவது இடத்தி லும், (120 நாடுகளில்) 2013-இல் 63-ஆவது இடத்திலும் (120 நாடுகளில்), 2014-இல் 55-ஆவது இடத்திலும் (120 நாடுகளில்) இந்தியா இருந்தது.
இதுவே 2015-ஆம் ஆண்டில் மோடி ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் 80-ஆவது இடத்திற்குச் சென்ற இந்தியா (117 நாடுகளில்), 2016-இல் 97-ஆவது இடம் (118 நாடுகளில்), 2017-இல் 100-ஆவது இடம் (119 நாடு களில்), 2018-இல் 103-ஆவது இடம் (132 நாடுகளில்), 2019-இல் 102-ஆவது இடம் (117 நாடுகளில்), 2020- இல் 94-ஆவது இடம் (107 நாடு களில்), 2021-இல் 101-ஆவது இடம் (116 நாடு களில்) என்று மோசமான இடத்தை நோக்கி நகர்ந்து, தற்போது 2022-இல் 107-ஆவது இடத்தை (121 நாடு களில்) அடைந்துள்ளது. இதன்மூலம் மோடி ஆட்சியின் 8 ஆண்டுகளிலும் இந்தியா பட்டினிப் பாதையில் வேக மாக பயணிப்பதற்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆனால், உலகளாவிய பட்டினிக் குறியீட்டிற்கான ஆய்வுமுறை அறி வியல்பூர்வமற்றது என்று இந்தியா தொடர்ந்து இந்த புள்ளிவிவரங்களை மறுத்து வருகிறது என்பது குறிப்பி டத்தக்கது.
சிறப்பான இடத்தில் சீனா, துருக்கி
உலகப் பட்டினிக் குறியீட்டில், 5 மதிப்பெண்களுக்கு கீழே பெற்று, சீனா, துருக்கி மற்றும் குவைத் உள்பட பதினேழு நாடுகள் கடந்த முறை பட்டினி ஒழிப்பில் சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தன. அந்த நாடுகள், 2022-ஆம் ஆண்டிலும் தங்களின் முன்னிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளன. பட்டினி குறைவான நாடுகள் என்ற இடத்தைப் பெற்றுள்ளன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) > ஆவணங்கள் > சிறப்புக் கட்டுரைகள் > இந்திய மக்களை பட்டினியில் தள்ளிய பாஜக அரசு
இந்திய மக்களை பட்டினியில் தள்ளிய பாஜக அரசு
posted on