25.06.2004
பத்திரிக்கைச்செய்தி
புதுவை மாநிலத்தில் உள்ள 9 கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவர்கள், செவிலியர்களை பணியில் ஈடுபடுத்தியுள்ள.சுகாதாரத்துறை அமைச்சர் திரு.வல்சராஜ் அவர்களின் இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. அமைச்சரின் இந்த நடவடிக்கை தனியார்மயத்தை ஊக்குவிப்பதும், சுகாதாரத்தை வணிகமயமாக்குவதாகும்.
கடந்த 40 ஆண்டுகளாக இயங்கிவந்த ஏழை மற்றும் நடுத்தர குடும்ப மாணவிகளுக்கு கிடைத்து வந்த வேலை வபய்ப்புகளை முடக்கும் வகையில் செவிலியர் பயிற்சிப்பள்ளி ழூடப்பட்டுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.அகில இந்திய நர்சிங் கவுன்சில் அனுமதி அளித்தும் செவிலியர் பயிற்சிப்பள்ளியை திறந்து இயக்குவதற்குமாறாக அரசு கவுரவபிரச்சனையாக பார்ப்பதை தவிர்க்கவேண்டுகிறோம்.
நாட்டின் மிக உயர்ந்த பதவியில் உள்ளவர்களுக்கு அளிக்கப்படுகிற தரமான மருத்துவம் சாதாரன ஏழை மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.ஆனால் புதுவை காங்கிரஸ் அரசு சுகாதாரத்தை மேலும் வணிக மயமாக்கி வருகிறது. குறிப்பாக புதுவை அரசு தனியார் மருத்துவக் கல்லூரிகள்,டீளுஊ,நர்சிங் கல்லூரிகள் ஆகியவற்றிற்கு தாராளமாக அனுமதியளித்துள்ளது. மேலும் மேற்படி பயிற்சி மருத்துவர்,செவிலியர்கள் பயிற்சி பெறுவதற்கு அரசு மருத்துவமனைகளை பயன்படுத்துவதற்கான ஏற்பாடாக சுகாதார அமைச்சரின் அறிவிப்பு உள்ளதாக மார்க்சிஸ்ட் கட்சி குற்றம் சாட்டுகிறது.
கிராமப்புற மருத்துவமனைகள் 24 மணி நேரம் இயங்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்துஇல்லை.ஆனால் தனியார் கல்லூரி மருத்துவர்கள்,செவிலியர்களை பணியில் ஈடுபடுத்துகிற போது ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களுக்கு யார் பொறுப்பு.ஏழைமக்களின் உயிர் மலிவானதாக புதுவை அரசு கருதுகிறதா என்று சந்தேகம் எழுந்துள்ளது.மேலும் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள்,செவிலியர்களை புதுவை அரசு சுகாதார மையங்களில் பணியில் ஈடுபடுத்துவது திறமையான மருத்துவர்கள் செவிலியர்களை உருவாக்குவதற்காஅல்லது மருத்துவக்கல்லூரி,நர்சிங்கல்லூரி அனுமதி அளித்த அரசுக்கு செஞ்சோற்றுக்கடன் கழிக்க தனியார் மருத்துவமனைகள் தானாக முன்வந்து அளித்த ஆதரவு நடவடிக்கையா? புதுவை அரசு உண்மையினை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
புதுவை அரசு தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள்,செவிலியர்களை பணியில் ஈடுபடுத்துவதை கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.மேலும் உண்மையில் இந்த அரசுக்கு மக்கள் நலனில் அக்கரை இருக்குமானால் அரசு மருத்துவ கல்லூரியில் பயிற்சி முடித்த, புதுவையைச்சேர்ந்த பயிற்சி முடித்துள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை உடனடியாக சீனியாரிட்டி அடிப்படையில் பணிநியமனம் செய்து 24 மணி நேரமும் இயங்கக்கூடிய மருத்துவமனைகளை உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.மூடியுள்ள செவிலியர் பயிற்சிப்பள்ளி உடனடியாக திறக்க வேண்டும் என்றும், இந்த நியாயமான கோரிக்கைக்காக தொடர்ந்து போராடும் ஊழியர்களின் போராட்டத்தை சுமுகமான முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சி புதுவை அரசை கே;ட்டுக்கொள்கிறது
செவிலியர் கயிற்சிப்பள்ளியை தொடர்ந்து நடத்தக்கோரியும், சுகாதார்துறை தனியார்மய நடவடிக்கைகளை எதிர்த்தும் ஜீலை 2,3 தேதிகளில் பிரச்சாரம், 5 ஆம் தேதி சட்டமன்றம் முன்பு உண்ணாவிரதப்போராட்டம் நடத்துவதென மார்க்சிஸ்ட் கட்சிதீர்மானித்துள்ளது. மேற்படி போராட்டத்திறகு அனைத்து பகுதி மக்களும் ஆதரவளிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இவண்
(இரா.இராஜாங்கம்;)
செயற்குழு உறுப்பினர்