“தோழர் ஹோ சி மின் மற்றும் வியட் நாம் கம்யூனிஸ்ட் கட்சியால் தலைமை தாங்கப்பட்டு, முதலில் பிரான்ஸ் மற்றும் ஜப்பானுக்கு எதிராகவும் இறுதியாக அமெரிக்காவிற்கு எதிராகவும் நடைபெற்ற காலனி எதிர்ப்புப் போராட்டத்தின் வெற்றி சென்ற நூற்றாண்டில் உலக வரலாற்றில் நடைபெற்ற உத்வேகம் அளித்திடும் இயக்கமாகும். சுரண்டலுக்கு எதிராகவும், ஒடுக்குமுறைக்கு எதிராகவும் ஒன்று பட்ட மக்கள் முன்னே, துணிந்தவிட்ட மக்கள் முன்னே, எவ்விதமான அடக்கு முறைகளும் தூள் தூள் தூளாகும் என் பதை மெய்ப்பித்த இயக்கமாகும்.
1960களிலும் 70களிலும் வியட்நாம் யுத்தத்திற்குத் தலைமை தாங்கிய ஹோ சி மின் என்னைப் போன்று ஏராளமான இலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகத்தையும் உற்சாகத்தையும் அளித்தார். ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்திலும், பின்னர் கம்யூனிசத் திற்காகவும் எங்களை அர்ப்பணித்துக் கொள்ள ஆதர்சமாக இருந்தார்.
சுமார் 150 ஆண்டுகள் காலனியாதிக் கத்தின் நுகத்தடியில் இருந்த ஒரு நாட் டிலிருந்து வந்தவன் என்ற முறையில், காலனிகளின் சுரண்டல் மற்றும் காலனி எஜமானர்களின் ஒடுக்குமுறைகள் எப் படி இருக்கும் என்பதெல்லாம் நாங்கள் புரிந்துகொண்டிருக்கிறோம். சோசலிசத் திற்கான போராட்டத்துடன் காலனியா திக்கப் பிரச்சனைகளையும் சரியாக இணைத்து, காலனியாதிக்கத்திலிருந்த நாடுகளில் விடுதலைக்கான பாதை யைச் சரியாக அமைத்துத்தந்த கம்யூனிஸ்ட் தலைவர்களின் மத்தியில் தோழர் ஹோ சி மின் முதலாவதாவார்.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், மார்க்சியம்-லெனினியம் குறித்து சரியான புரிதல் இல்லாத சமயத்தில், காலனி எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான சரியான தத்துவார்த்தத் திசைவழி தெரியாது தோழர் ஹோ சி மின்னும் தத்தளித்துக் கொண்டிருந்தது உண்மை. ஆனால், காலனியாதிக்கம் தொடர்பாக லெனினது ஆய்வுக் குறிப்புகளைப் படித்தபின்னர், இன்ப அதிர்ச்சிக்கு ஆளான தோழர் ஹோ சி மின், ‘‘இதுவே எமக்குத் தேவை, விடுதலைக்கான பாதை இதுவே’’ என்று உரத்துக் கூறினார்.
மார்க்சிய-லெனினியத்தை முழுமையாகப் புரிந்துகொண்டதன் பின்னணியில் வியட்நாமின் துல்லியமான நிலைமைகளை லெனினிய அடிப்படையில் ஆய்வு செய்து, காலனி எதிர்ப்புப் போராட்டத்திற்கான போர்த்தந்திரத்தையும் நடை முறை உத்திகளையும் தோழர் ஹோ சி மின் வடித்தெடுத்தார். தோழர் ஹோ சி மின்னின் பாரம்பரியத்தின் மிக முக்கிய அம்சங்களில், இது ஒன்று.
அடுத்த முக்கிய அம்சம், இதனை அடைவதற்காக புரட்சிகரமான கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டியதும், அதன் கீழ் மக்களை முழுமையாக அணிதிரட்டியதுமாகும். மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்ந்த மக்களுக்கு மார்க்சிய-லெனினியத்தின் அடிப்படைக் கூறுகளை விளக்கியதோடு மட்டுமல்லாமல், புரட்சித்தத்துவத்தின் அடிப்படையில் ஸ்தாபனத்தையும் உருவாக்கினார். கட்சியின் ஒற்றுமைக்கு அவர் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தார். மத்தியக்குழுவிலிருந்து அடிப்படைக் கிளைகள் வரை, கண்ணின் மணி போன்று கட்சியின் ஒற்று மையைக் கட்டிக்காத்திட வேண்டும் என்றார். இம்முயற்சியில் கட்சிக்குள் வந்த வலது, இடது திரிபுகளுக்கு எதிராகப் போராட கொஞ்சம்கூட தயங்க வில்லை. ஹோ சி மின் வறட்டுத் தத்துவ வாதத்திற்கும் எதிரானவர். அவர் நடைமுறை மூலமாகத் தத்துவத்தைச் செழு மைப்படுத்தினார், தத்துவத்தின் மூலமாக நடைமுறையை உருக்குபோன்று மாற் றினார்.
தோழர் ஹோ சி மின்னின் மற்றுமொரு மகத்தான பண்பு அவர் மக்களுடன் கொண்டிருந்த மாபெரும் பிணைப்புதான். தலைவர்கள் உட்பட அனைத்து முன்னணி ஊழியர்களும் மக்களுடன் வாழவேண்டும், மக்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும், மக்களுக்காகச் சேவை செய்திட வேண்டும், அவர்கள் உணர்வு மட்டத்தை வளர்த்தெடுத்து அவர்களுக்குத் தலைமை தாங்கவேண்டும் என்று அடிக்கடி ஹோசிமின் கூறுவார். இவ்வாறு அவர் மக்களிடம் வைத்திருந்த அபரிமிதமான நம்பிக்கைதான் புரட்சிகரப் போராட்டத்தின் அனைத்துக் கட்டங்களிலும் அவருக்கு வெற்றிகளை உத்தரவாதமாக்கின.
ஹோ சி மின் தன் வாழ்நாள் முழுதும் தன் உடலாலும் உள்ளத்தாலும் நாட்டிற்காகவும், புரட்சிக்காகவும், மக்களுக்காக வும் உழைத்தார். ஹோ சி மின் முன்னணி ஊழியர்களின் புரட்சிகர ஒழுக்கத்திற்கும், புரட்சிகர மாண்பிற்கும் அதிக அழுத்தம் கொடுத்தார். “நல்ல நடத்தையுடனும் நல்லொழுக்கத்துடனும் உள்ள முன்னணி ஊழியர்களிடம் மக்கள் மிகுந்த மரியாதையுடனும் நேசத்துடனும் இருப்பார்கள்,” என்று ஹோ சி மின் கூறுவார்.
அவர் மூன்று எதிரிகளை அடையாளம் காட்டினார்.
“முதலாளித்துவமும் ஏகாதிபத்தியமும் மிகவும் ஆபத்தான எதிரிகள். … மூன்றாவது எதிரி, தனிநபர்வாதம் ஆகும். இவர், மேலே குறிப்பிட்ட இரு எதிரிகளின் கூட்டாளியாவார் என்று ஹோ சி மின் கூறினார். “இத்தகைய மூன்று எதிரிகளுக்கும் எதிராக உறுதியுடன் போராடுவதிலேயே புரட்சிகர நல்லொழுக்கம் அடங்கியிருக்கிறது” என்று தோழர் ஹோ சி மின் கூறினார்.
சமூகத்தை புரட்சிகரமாக மாற்றிய மைக்கும் போராட்டத்தில் தோழர் ஹோ சி மின் கற்றுத்தந்துள்ள புரட்சிகரப் பாரம்பரியங்கள் நமக்கு வழிகாட்டட்டும். “ஒவ்வொருவரும் போர்முனையிலும், பொருளாதார முனையிலும், அரசியல் அல்லது கலாச்சார முனையிலும் போராளிகளாக மாற வேண்டும்” என்று ஹோ சி மின் அன்று விடுத்த வேண்டுகோள், ஏகாதிபத்தியத்தின் தாக்குதலின் கீழ் உள்ள மூன்றாம் உலக நாடுகளில் வாழும் நம் ஒவ்வொருவருக்கும் இன்றைக்கும் பொருந்தக்கூடியதேயாகும். நம் முன் உள்ள பணி எளிதானதோ அல்லது மென்மையான மலர்ப்பாதையோ அல்ல என்பது உண்மைதான். தோழர் ஹோ சி மின் சொன்னதுபோன்று, “எதுவும் எளிதானது மல்ல, அதேபோன்று எதுவும் கடின மானதுமல்ல.” இவ்வாறு அவரது தத்து வார்த்த வெளிச்சத்தில் உறுதியான நம் பிக்கையுடன், வர்க்கமற்ற சமுதாயத்தை அமைப்பதற்கான போராட்டத்தில் நம்மை நாம் இணைத்துக்கொள்வோம். -சீத்தாராம் யெச்சூரி