பொதுவுடமையைப் போற்றுதல்

பொதுவுடமையைப் போற்றுதல்
– பெர்டால்ட் ப்ரெக்ட்

இது நியாயமானது. உனக்குப் புரியும்.
இது எளிமையானது.
நீ சுரண்டல்வாதி இல்லை;
அதனால் நீ புரிந்து கொள்வாய்.
இது உனக்கு நன்மை பயக்கும்; கவனித்துப் பார்.
முட்டாள்கள் இதனை முட்டாள்தனம் என்பர்.
கயவர்கள் இதனைக் கயமை என்பர்.
சுரண்டல்வாதிகளோ இதனைக் குற்றம் என்கிறார்கள்.
ஆனால் நாம் அறிவோம்,
குற்றம் அனைத்தையும் இது தீர்த்துக் கட்டும்.
இது பைத்தியக்காரத்தனம் அல்ல.
பைத்தியகாரத்தனம் அனைத்துக்கும் முடிவு இதுவே.
இது குழப்பம் அன்று.
இதுவே தெளிவு.
செயல்படுத்தக் கடினமாக இருக்கும்
மிக எளிமையான செயல் இது.

In Praise of Communism

by Bertolt Brecht

It is reasonable. You can grasp it. It’s simple.
You’re no exploiter, so you’ll understand.
It is good for you. Look into it.
Stupid men call it stupid, and the dirty call it dirty.
It is against dirt and against stupidity.
The exploiters call it a crime.
But we know:
It is the end of all crime.
It is not madness but
The end of madness.
It is not chaos,
But order.
It is the simple thing
That’s hard to do.

Leave a Reply