’அக்னிபத்’ திட்டத்தை கண்டித்து CPIM சார்பில் புதுச்சேரி முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள்!

தேச பாதுகாப்புக்கு எதிரான, இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் அக்னிபத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி புதுச்சேரி முழுவதும் சிபிஎம் சார்பில் மக்கள் திரள் போராட்டம்.

வணக்கம். இந்தியாவிலேயே அதிகமாக வேலை இல்லாமல், வாழ்வாதாரம் இன்றி பரிதவித்து நிற்கும் இளைஞர்கள் நிறைந்த மாநிலம் நமது புதுச்சேரி. மத்திய பிஜேபி அரசின் மோசமான திட்டங்களால் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் வேலையின்மை ஏற்பட்டு இருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் உள்ள முப்படைகளுக்கும் தேவையான ராணுவ வீரர்களை தேர்வு செய்யாமல் முதல் கட்ட தேர்வு மட்டும் நடத்திவிட்டு அடுத்தக்கட்ட தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான புதுச்சேரி இளைஞர்கள் உட்பட காத்து இருக்கும் போது, பன்னாட்டு, இந்திய முதலாளிகளுக்கு ஆதரவாக நமது தேச பாதுகாப்பு மிக்க இராணுவத்துறையையே படிப்படியாக விற்றுவிடும் நிலையில், மத்திய பாஜக தலைமையிலான மோடி அரசு அக்னிபத் திட்டம் என்ற பெயரில் ராணுவ வீரர்களையே காண்ட்ராக்ட் முறையில் பணியில் அமர்த்த திட்டமிட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது.

Image

பாஜக அரசின் இந்த முடிவு, மிக மோசமான இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கின்ற அக்னிபத் திட்டத்தை ரத்து செய்ய கோரியும், புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் பிஜேபி அரசின் தேர்தல் வாக்குறுதிப்படி காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்யாமல் அனைத்து அரசுத் துறைகளிலும் ஒப்பந்த அடிப்படையிலும் காண்ட்ராக்ட் முறையிலும் ஊழியர்களை நியமித்து இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் புதுச்சேரி அரசை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ளைஞர்கள், மாணவர்கள், மற்றும் பொதுமக்கள் பங்கேற்புடன் நாளை 20 .06 .2022 திங்கட்கிழமை புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம்நடத்தப்பட இருக்கிறது. எனவே இந்த தேச பக்த போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டுகிறோம்.

தோழமை உள்ள .
ஆர். ராஜாங்கம்.
பிரதேச செயலாளர், CPIM

Leave a Reply