விசத்தை அமுது என்றால் ஆயிரம் பொற்காசுகள்


சாவர்க்கர் 9 ஆண்டுகளில் 6 முறை பிரிட்டீ ஷாருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதினார். இந்தியாவை அடி மைப்படுத்திய பிரிட்டீஷாரிடம் இருந்து ஓய்வூதியம் பெற்ற ஒரே ‘போராளி’ சாவர்க்கர் மட்டுமே! சாவர்க்கரின் வாழ்வை ஆய்வு செய்த நிரஞ்சன் தக்லேயின் கூற்றுப்படி, கைது செய்யப்பட்ட சாவர்க்கர் 1911 ஜூலை 11 ஆம் தேதி அந்தமானுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சென்ற ஒன்றரை மாதங்களுக்குள் அதாவது ஆகஸ்ட் 29 ஆம் தேதியன்று அவர் தனது முதல் மன்னிப்புக் கோரிக்கையை எழுதினார். அதன்பிறகு 9 ஆண்டுகளில், அவர் 6 முறை மன்னிப்புக் கடிதங்களை எழுதினார்.

மாதந்தோறும் நான்கு கைதிகள் வரை தூக்கிலிடப் பட்ட, மரணதண்டனை வழங்கப்பட்ட இடத்திற்கு கீழே அடைக்கப்பட்டிருந்த சாவர்க்கரை அது பாதித்தி ருக்கலாம். சாவர்க்கர் சகோதரர்கள் சிறைச்சாலை க்கு எதிராக கிளர்ச்சி செய்ய எங்களை ரகசியமாக தூண்டிவிடுவார்கள். ஆனால் எங்களுடன் வெளிப் படையாக இணைந்து கொள்ளச் சொன்னால் பின் வாங்கிவிடுவார்கள். 15 நாட்களுக்கு ஒருமுறை கைதிகளின் எடை அளவிடப்படும். சாவர்க்கர் செல்லு லார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, 112 பவுண்டுகள் எடை இருந்தார். இரண்டரை ஆண்டுக ளுக்குப் பிறகு, சர் ரெஜினால்ட் கிரீடோக்கிடம் அவர் நான்காவது முறை மன்னிப்புக் கேட்டபோது, அவரது எடை 126 பவுண்டுகளாக அதிகரித்திருந்தது. அதாவது அவர் சிறையில் தண்டனை அனுபவித்தக் காலத்தில் அவரது எடை 14 பவுண்டுகள் அதிகரித்தி ருந்தது. காரணம் ஜெயிலர்கள் அவர்களுக்குக் காட்டிய சலுகைகள்.

தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இறங்கி வந்த சாவர்க்கர் தன் மீது கருணை காட்டுமாறும், தன்னை இந்தியாவில் உள்ள ஏதேனும் ஒரு சிறைக்கு அனுப்புமாறும் அவர் அரசாங்கத்திடம் கோ ரிக்கை விடுத்திருந்தார். பதி லுக்கு, அவர் எந்தவொரு நிலை யிலும் அரசாங்கத்திற்காக பணி யாற்றத் தயாராக இருந்தார். இப்போது வன்முறையின் பாதை யை விட்டுவிட்டதாகவும் சாவர்க் கர் கூறினார். இதன் விளைவாகத்தான், 1919 மே 30 மற்றும் 31ஆம் தேதிகளில் அவருடைய மனைவி மற்றும் தம்பியைப் பார்க்க அந்தமான் சிறையில் இருந்த சாவர்க்கருக்கு அனுமதி வழங்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. பகத்சிங்கிற்கு மன்னிப்புக் கேட்க வாய்ப்பு வழங்கப்பட்ட போதும் அவர் மன்னிப்புக் கேட்க மறுத்து விட்டார். இது அப்போது சர்ச்சைக்குள்ளான போது சாவர்க்கரின் ஆதரவாளர்கள் அவர் மன்னிப்புக் கேட்டதை நியாயப்படுத்தினார்கள்.

இது யுத்த தந்திரத் திட்டம் என்றனர். சாவர்க்கர் தனது சுயசரிதையில், “நான் சிறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தால், இந்தியாவுக்கு கடிதம் அனுப்பும் உரிமையை என்னிடம் இருந்து பறித்திருப்பார்கள்” என்று தெரிவித்திருக்கிறார். இறுதியில் பகத்சிங் தூக்கிடப்பட்டார், சாவர்க்கர் விடுதலையானார். ஆங்கிலேயர்கள் அவருக்கு ஓய்வூதியமாக மாதம் அறுபது ரூபாய் வழங்கி னார்கள். அவருக்கு மாத ஓய்வூதியம் கொடுக்கும் அளவிற்கு ஆங்கிலேயருக்கு அவர் என்ன சேவை செய்தார்? அவருக்கு ஓய்வூதியம் கொடுக்கப்பட்ட காரணம் என்ன என பல கேள்விகள் எழுகின்றன. அதேபோல், இப்படிப்பட்ட ஓய்வூதியத்தைப் பெற்ற ஒரே நபர் சாவர்க்கர் மட்டுமே என்பதும் குறிப்பிடத் தக்கது” என்கிறார் நிரஞ்சன் தக்லே.

75ஆவது சுதந்திர தின விழாவையொட்டி இந்து மகா சபா என்கிற அமைப்பு ஒரு விளம் பரத்தை வெளியிட்டுள்ளது. 9 ஆம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்திபரிசு வழங்குவதாக அறிவித்தி ருக்கிறது. பாரத சுதந்திரத்தின் தந்தை வீர சாவர்க் கர் என்பது தலைப்பு. இந்திய விடுதலைப்போராட்டத் தில் எள்ளளவும் பங்கேற்காத ஒரு அமைப்பு இந்து மகா சபா. சாவர்க்கர் ஒருமுறை கைது செய்யப்பட்டு அந்தமான் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு மன்னிப்புக் கடிதங்கள் எழுதி கொடுத்துவிட்டு அதன் பிறகு விடுதலைப்போராட்டக் காலம் முழு வதும் விலகியே இருந்தவர். சொல்லப்போனால், விடு தலைப்போராட்ட காலத்தில் இந்து-இஸ்லாமியர்-கிறித்தவர் என்று இந்திய மக்கள் ஒற்றை மனிதனாய் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடிக் கொண்டி ருக்கிற போது அவர்களுக்கு ஆதரவாக இந்திய மக்க ளின் ஒற்றுமையை சிதைப்பதில் கண்ணாக இருந்து செயல்பட்டவர். இப்படி ஒருவரை சுதந்திரத்தின் தந்தை என்று சொல்வது செக்கிழுத்த சிதம்பரனார், சிறை யில் தொழுநோயாளியாக்கப்பட்ட சுப்பிரமணிய சிவா, மூவர்ணக் கொடியை கீழே விழுந்து விடாமல் ஆங்கில போலீசாரின் அடிகளை வாங்கி உயர்நீத்த திருப்பூர் குமரன் உள்ளிட்ட லட்சக்கணக்கான விடு தலைப்போராட்ட வீரர்களை அவமானப்படுத்துவதும், கேலி செய்வதும் ஆகும். செந்நீர் சிந்திப் பெற்ற சுதந்திரத்தை அதற்கு வெந்நீர் ஊற்றியவர்கள் தான் சொந்தக்காரர்கள் என்று நிறுவும் முயற்சியில் நாட்டின் விடுதலைப்போராட் டத்தில் விலகி நின்று வேடிக்கை பார்த்த அமைப்புகள் தங்களை சொந்தக்காரர்களாக நிறுவ முயற்சிப்பது அந்தப் போராட்டத்தில் உயிர்நீத்தவர்கள், சிறை சென்றவர்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்த வர்களை அவமானப்படுத்தும் செயலாகும்.

சாவர்க்கர் வீர சாவர்க்கர் ஆன கதை

இந்த சாவர்க்கரைப் பற்றி ‘பாரிஸ்டர் சாவர்க்க ரின் வாழ்க்கை கதை’ என்கிற புத்தகம் 1926இல் வெளி யிடப்படுகிறது. எழுதியவரின் பெயர் சித்ரகுப்தர் என்று அச்சிடப்பட்டிருக்கிறது. அந்த புத்தகத்தில் தான் முதன் முதலாக அவரை அசகாய சூரன், ஆகப்பெரும் கதா நாயகன் என்று புகழ்ந்து எழுதப்பட்டிருக்கிறது. மேலும், சாவர்க்கர் “ஒரு பிறவிக் கதாநாயகன், விளைவுக ளைக் கண்டு கடமையை தவிர்ப்போரை அருவெறுத்து ஒதுக்குபவர், தவறாகவோ, சரியாகவோ ஒருமுறை அரசமைப்பு அநியாயமானது என்ற முடிவுக்கு வந்து விட்டால் அந்த தீமையை கருவறுக்கும் வரை ஓயவே மாட்டார். அவர் பல அபாரத் திறமைகளை கொண்டவராக விளங்குகிறார். அவரது சமயோ ஜித புத்திக்கு இணையேதுமில்லை. எதற்கும் அஞ்சாத தைரியம் கொண்டவர். ஒன்றை அடைய வேண்டு மென்று நினைத்துவிட்டால் அதை அடைந்தே தீர வேண்டும் என்கிற தளரா தன்னம்பிக்கை கொண்ட வர்.” என்றும் இது மாதிரியும் ஏராளமாக அந்த புத்த கத்தில் புகழ்மாலை சூட்டப்பட்டுள்ளது. இறுதியாக, “அவரது தைரியத்தையும், சமயோஜித புத்தியையும் கொண்டாடாதவன் எவரேனும் இருக்க முடியுமா என்று புகழ்ந்திருக்கிறார் சித்ரகுப்தர். இந்த புகழ்ச்சிக்கு பின்னர் தான், சாவர்க்கர் என்பதை சிலபேர் வீர சாவர்க்கர் என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.

தன்னைத் தானே புகழ்ந்த…

அவரது இறப்பிற்கு பின் 21 வருடம் கழித்து 1987இல் அந்த புத்தகத்தின் இரண்டாவது பதிப்பு வெளி வந்தது. அந்த பதிப்பை வெளியிட்டவர்கள் சாவர்க்க ரின் எழுத்துக்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுக் கொண்டிருக்கும் வீர சாவர்க்கர் பிரகாசன் என்கிற பதிப்பகம்தான். அந்த பதிப்பின் முன்னுரையில் தான் சித்ரகுப்தர் என்பவர் வேறுயாருமல்ல, சாவர்க்கர் தான் என்று உண்மையை வெளிப்படுத்தியிருக்கி றார்கள். உலகத்தில் வேறு எங்காவது இத்தனை வெட்கங்கெட்ட முறையில் வேறு எந்த மனிதராவது தன்னைத் தானே இப்படி புகழ்ந்து எழுதியிருப்பானா? அதுவும் புனை பெயரில் மறைந்து கொண்டு. அதுவும் ஆறுமுறை மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்துவிட்டு மகாசூரரைப் போல தன்னைத் தானே யானை, சிங்கம், புலி என்று குறைந்தபட்ச நாணயம் உள்ள எந்த மனிதனும் எழுதியிருப்பானா? அதுவும் ஒரு முறை ஜெயிலுக்கு போய் விட்டு, ஜெயிலுக்குபோன ஓரிரு மாதங்களிலேயே ஆங்கிலேயர்களுக்கு தாயே, தயாபரமே, கருணை காட்டு என்று ஒப்பாரி வைத்து விட்டு கொஞ்சமும் கூச்சமில்லாமல் நாடு அடிமைப் பட்டுக் கிடந்த காலம் முழுவதும் போராடிக் கொண்டி ருந்த மக்களை பிளவுபடுத்திக் கொண்டே இருந்த மனிதர் தனக்குத் தானே தட்டிக் கொடுத்திருக்கும் கேவலமான செயலை உலகத்தில் வேறு எங்கும் கண்டி ருக்கவே முடியாது. இப்படித்தான் சாதா சாவர்க்கர் புனை பெயரில் ஒரு கதை எழுதி வீர சாவர்க்கர் என்று தன்னை நிலைநாட்டி கதையை உலாவ விட்டார்.

ஓய்வூதியமா? கைமாறா?

இந்திய விடுதலைப்போராட்டத்தில் எண்ணற்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் சிறைக்கு போனார்கள், குண்டடிபட்டார்கள், குடும்பத்தை இழந்தார்கள், இவர்களுக்கெல்லாம் இந்திய அரசு ஓய்வூதியம் வழங்க முன்வந்த போது இது என் தாய் நாடு, தாய் நாட்டை ஒருவன் அடிமைப்படுத்தி வைத்திருக்கி றான், தாய்நாட்டை விடுவிக்க தன் உயிரை ஈந்தா வது போராடுவது ஒவ்வொரு குடிமகனின் கடமை. கடமையைச் செய்வதற்கு கைமாறு பெற முடியுமா? அது ஓய்வூதியம் என்று பெயர் வைத்தாலும் தாய்க்குச் செய்யும் கடமைக்கு சம்பளம் பெறுவதாகும். அதை ஏற்கமாட்டோம் என்று கம்பீரமாக மறுதலித்தார்கள். ஆனால், சாவர்க்கரின் கதை என்ன?.

விடுதலைப்போராட்டத்தின் தந்தை என்று இவர்கள் தலைப்பிட்டிருக்கும் அந்த சாவர்க்கர் அந்தமான் சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு ஒரு துரும்பைக் கூட ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக எடுத்துப் போடாதவர். அதன் காரணமாக பிரிட்டிஷ் அரசாங்கம் அவருக்கு மாதம் ரூ.60 ஓய்வூதி யம் வழங்கி வந்திருக்கிறது. இந்த சாதா சாவர்க்கர் அதையும் பெருமையோடு வாங்கி பிழைப்பு நடத்திக் கொண்டு இருந்திருக்கிறார். இந்திய அரசு வழங்கிய ஓய்வூதியத்தை மறுதலித்த கம்யூனிஸ்ட்டுகள் எங்கே, அடிமைப்படுத்தியிருந்த இங்கிலாந்து கொடுத்த பணத்தை வாங்கி அதில் உடல் வளர்த்த சாவர்க்கர் எங்கே?. இவரை விடுதலைப்போராட்டத்தின் தந்தை என்று சொல்வது, உண்மையான விடுதலைப் போராட்ட வீரர்களையும், இந்திய மக்களையும் அவமா னப்படுத்தும் செயல் இல்லையா?.

விடுதலைப்போராட்ட வீரரா?

இளம்பருவத்தில் தேச விடுதலைப்போராட்டத்தில் இணைத்துக் கொண்டு சிறை சென்றோர் அதன்பிறகு அதையே தங்கள் வாழ்க்கையாக கொண்டோர் லட்சக்கணக்கானோர் இருக்கிறார்கள். அதேசமயம், ஆரம்பத்தில் விடுதலைப்போராட்டம் என்பது இலை விரித்து வைக்கப்பட்ட விருந்து என்று எண்ணி அதில் கலந்து கொண்டு விட்டு, சிறையை பார்த்ததும் இனிமேல் இந்த பக்கம் தலைவைத்து படுக்கக் கூடாது என்று ஓடியோரும் உண்டு. சங்பரிவார் கூட்டத்தின் ஒவ்வொரு நபரும் இப்படித்தான் இருந்திருக்கிறார் கள் என்பது வரலாறு. வாஜ்பாயும் அப்படித்தான், சாவர்க்கரும் அப்படிதான். அதில் ஒன்றும் பிரச்சனை யில்லை. அவர்கள் மன உறுதி, அவர்களின் தேச பக்தி அவ்வளவு தான் என்று விட்டுவிட்டு போய் விடலாம். ஆனால், இந்த சூரர்கள், வரலாறு மறந்தி ருக்கும் என்று கருதி தங்களை விடுதலைப்போராட்ட வீரர்களாக வரிந்து நிறுவிக்கொள்ள ஏராளமான முயற்சிகளை செய்கிறார்கள்.

இந்த சாவர்க்கர் சிறைப்பட்டதும் ஆறுமாத காலத்திற்குள்ளேயே மன்னிப்புக் கோரி இங்கிலாந்து மகாராணிக்கு எழுதிய கடிதங்கள் வரலாற்றின் பக்கங்களில் இந்தியர்களுக்கு அழியாக் கறையாக, நீங்காப் பலியாக நிலைபெற்று இருக்கிறது. தன்னை அடிமைப்படுத்திய நாட்டு அரசிடம் ஒரு சிரமத்திலி ருக்கும் குழந்தை தன்னுடைய பெற்றோர்களிடம் இல்லாமல் வேறு யாரிடம் கருணையை எதிர்பார்த்து நிற்கும் என்றெல்லாம் கடிதம் எழுதியவர் இவர். அதாவது, இவருக்கு இந்தியாவை விட இங்கிலாந்து தான் தாய்நாடோ என்று எண்ணும் அளவிற்கு கடிதங்க ளை எழுதிக் குவித்தவர் இவர். இப்படி ஒரு மனித ரை வீரத் தந்தை என்று போற்றுவது, அப்படிப் போற்றினால் ஆயிரக்கணக்கான ரூபாய் பரிசு தருகிறேன் என்று சொல்வது அப்பட்டமான மோசடி. இந்து மகா சபா அதைத் தான் செய்திருக்கிறது.

இந்தியாவைப் பிரிக்க

சங்பரிவாரத்தினர், இஸ்லாமியர்கள் இந்தியா வைப் பிரித்துக் கொண்டு போய்விட்டார்கள் என்று தொடர்ச்சியாக கூப்பாடு போட்டுக் கொண்டேயி ருக்கிறார்கள். இந்தியாவில் முகமது அலி ஜின்னா விற்கு முன்னதாக இருநாடுகள் கோட்பாட்டை முன்வைத்தவர் இந்த சாதா சாவர்க்கர் தான். இதுஒருபுறமிருக்க 1942இல் அப்போதிருந்த காங்கிரஸ் தலைமையிலான பிரதேச அரசுகளை எல்லாம் ஆங்கிலேயர்கள் கலைத்துவிட்டார்கள்.

இதுதான் சாக்கு என்று இந்த கூட்டம் வங்காளம், சிந்து, பஞ்சாப், வடமேற்கு மாகாணம் ஆகிய பகுதி களில் முஸ்லீம் லீக்கோடு கூட்டு மந்திரி சபையில் பங்கேற்றார்கள். இதில் முக்கியமான விசயம் என்ன வென்றால் இந்து மகா சபா தலைவர்களில் ஒருவராக இருந்த சியாம பிரசாத் முகர்ஜி வங்காளத்தின் முஸ்லீம் லீக், இந்து மகா சபா அமைச்சரவையில் நிதியமைச்ச ராக இருந்தார். அப்போது இந்து மகா சபாவை தலைமை தாங்கி வழி நடத்தியவர் இந்த சாவர்க்கர். வேடிக்கை என்னவென்றால் அந்த பிரதேச சட்டமன்றத்தில் இந்தியாவை, இந்தியா – பாகிஸ்தான் என்று இருநாடுகளாக பிரிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சியாம பிரசாத் முகர்ஜி எதிர்த்து வாக்களிக்கவில்லை. ஏன் இந்த தீர்மானம் என்று கொந்தளிக்கவும் இல்லை. பதவியில் ஒட்டிக் கொள்வதற்காக அமைதி காத்தார். அதன்பிறகும் அமைச்சராகவே தொடர்ந்தார். இதுஒருபுறமிருக்க, இப்படி பதவியில் ஒட்டிக் கொண்டிருந்ததை அதன் தலைவராக இருந்த சாதா சாவர்க்கர் அது ஒரு நடைமுறை அரசியல் என்று நியா யப்படுத்தி தனது சீட கோடிகளுக்கு விளக்கம ளித்தார். சுராவர்த்தி என்பவர் அப்போது வங்காளத்தின் பிரிமியராக இருந்தவர். அவரைச் சமாளிப்பதற்கு காங்கிரஸ்காரர்களால் முடியவில்லை. ஆனால், சியாம பிரசாத் முகர்ஜி திறமையாக சமாளித்தார் என்று பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பது ஏதோ புனித காரியம்போல நியாயப்படுத்தி பேசியவர் இதே சாதா சாவர்க்கர் தான். இவர்களைப் பொறுத்தமட்டில் பதவி, அதிகாரம் ஆகியவற்றிற்காக எதையும் செய்யக் கூடியவர்கள் என்பதை அவர்களின் வரலாறு நிரூபித்துக் கொண்டே இருக்கிறது.

வீரத்தந்தையின் தீண்டாமை

சாவர்க்கர் ஏதோ இந்துக்களின் பிரதிநிதி போல சங்பரிவாரம் தம்பட்டம் அடித்துத் திரிகிறது. ஆனால் தீண்டத்தகாதவர்கள் குறித்து அவர் பலமுறை அவர்கள் அப்படி இருப்பதற்கு படைக்கப்பட்டவர்கள் என்று தொடர்ச்சியாகப் பேசி வந்திருக்கிறார். 1923இல் இந்துத்துவா என்கிற தலைப்பில் அவர் எழுதிய புத்தகத்தில் சாதியை நியாயப்படுத்தி அது இயற்கை யின் விளைவு. ஒரு தேசத்தை உருவாக்குவதற்கு அடிப்படை என்று எழுதியிருக்கிறார். 1939இல் இந்து மகாசபை மாநாட்டில் அப்போது பிரபலமாக பேசப் பட்ட தீண்டத்தாகதவர்கள் கோவிலில் நுழைவதை அனுமதிக்கும் சட்டம் சம்பந்தமாக சாவர்க்கர் “நாங்கள் அப்படியொரு சட்டத்தை முன்மொழிய மாட்டோம், வேறுயாராவது அப்படியொரு சட்டம் கொண்டு வந்தால் அதை ஆதரிக்க மாட்டோம். தீண்டத்தகாத வர்கள் இந்துக்கள் அல்லாதவர்கள், ஒரு கோவிலில் தற்போது எந்த இடம் வரை அனுமதிக்கப்படுகிறார்க ளோ அந்த இடத்திற்கு மேல் தாழ்த்தப்பட்டவர்கள் செல்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று இந்து மகா சபை மாநாட்டில் உறுதியளித்தார். மீண்டும் 1941 ஜூன் 20ஆம் தேதி அவர் கீழ்க்கண்டவாறு தனது நிலையை தெளிவுபடுத்தினார்.

“நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இந்து மகா சபா எந்த காலத்திலும் தீண்டத்தகாதவர்கள் கோவி லுக்குள் நுழைவதற்கோ அல்லது கோவிலின் புனிதங்க ளை மாசுபடுத்துவதற்கோ அனுமதிக்கும் எந்த சட்டத்தையும் ஆதரிக்காது. இந்து மகா சபையை பொறுத்தமட்டில் நமது சனாதன சகோதரர்களின் கருத்தை சீர்திருத்தம் செய்வதற்காக கொண்டு வரப்படும் எந்தவொரு தனிநபர் சட்டத்தையும் ஆதரிக்க மாட்டோம். இதோடு மட்டுமின்றி மனுஸ்மிருதி தான் இந்து சட்டம், மனுஸ்மிருதி தான் அடிப்படை” என்று பேசியிருக்கிறார். இப்படி பட்டியலினத்தவர்களுக்கும், பெண்களுக்கும் எதிரான சாதி வெறியையும், ஆணாதிக்க வெறியையும் தங்கள் கொள்கையாக கொண்டுள்ள ஒரு அமைப்பின் தலைவர் என்கிற முறையில் சமூக ஒடுக்குமுறையை உறுதியாக ஆதரித்து நின்ற மனிதர் சாவர்க்கர்.

எனவே இவரை விடுதலைப்போராட்டத்தின் தந்தை என்று அழைப்பதோ, வீர சாவர்க்கர் என்று அழைப்பதோ, அவர் விடுதலைப்போராட்ட வீரர் என்று அழைப்பதோ அப்பட்டமான மோசடியாகும். எனவே, தமிழக மாணவச் செல்வங்களுக்கு நமது அன்பான வேண்டுகோள் விடுதலைப்போராட்டத்திற்கு எதிரான தேசத்தின் நலன்களுக்கு எதிரான, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவன் வாக்குக்கு எதிரான, நாமார்க்கும் குடியல்லோம் என்ற நமது வீர மரபுக்கு எதிரான எல்லா அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு மனிதரை நா வண்மையை காட்டுவதற்காகவோ, பரிசைப் பெறுவதற்காகவோ விடுதலைப்போராட்டத்தின் தந்தை என்று பேச இந்துமகா சபா அழைத்திருப்பதை புறக்க ணிக்க வேண்டும். கண்டிக்க வேண்டும். இந்நாட்டின் எதிர்கால வழிகாட்டிகள் என்கிற முறை யில் நஞ்சை அமுதென்று பேசச்சொன்னால் பேச மறுத்து நிற்கும் இயல்பான தார்மீக திமிர் பிடித்த மாணவர் சமூகம் இதை நிறைவேற்ற வேண்டும். நிறைவேற்றும்.

தோழர் கே. கனகராஜ்

Leave a Reply